Tamil Star |
- விரைவில் ஜன்னல் இல்லா முதல் விமானம் அறிமுகம்!
- பயங்கரவாத எதிர்ப்பு நிறைவேற்றுக்குழு இலங்கைக்கு விஜயம்!
- புலி ஆதரவாளர்களினால் நாட்டைப் பிரிக்க முடியாது: ஏர்ல் குணசேகர கருத்து
- புடவையுடன் அசத்திய பிரித்தானிய பிரதமர் மனைவி!!
- புதிய மேயராக ஜோன் ரொறி தேர்வு: இத் தேர்தல்களில் போட்டியிட்ட தமிழர்களில் மூவர் வெற்றி !
| விரைவில் ஜன்னல் இல்லா முதல் விமானம் அறிமுகம்! Posted: 28 Oct 2014 08:03 AM PDT
உலகின் முதல் ஜன்னல் இல்லாத விமானம் விரைவில் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று விரைவில் உலகின் முதல் ஜன்னல் இல்லாத விமானத்தை சோதனை ஓட்டம் மூலம் பரிசோதிக்க விருப்பதாகவும், இந்த விமானத்தில் பயணிக்கும் பயணிகள் வெளியே உள்ள காட்சிகளை தெளிவாக பார்க்கும் வகையில் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இவ்வகையான விமானங்களில் ஜன்னல்களுக்கு பதிலாக முழு நீள திரைகள் அமைக்கப்பட்டு அதன் வழியாக பயணிகள் பறக்கும் விமானத்தில் இருந்து வெளியே உள்ள காட்சிகளை பார்க்கலாம். இது குறித்து செயல்முறை கண்டுபிடிப்பு மையம் தெரிவித்துள்ள தகவலில், 'விமானத்திலிருந்து சிறிய ஜன்னல் வழியாக உலகை பார்த்த காலம் போய்விட்டது. வருங்காலத்தில் தயாரிக்கப்படும் விமானங்கள் உலகின் தெள்ள தெளிவான பரந்து விரிந்த காட்சியை பயணிகளுக்கு டிஸ்பிளே தொழில்நுட்பத்தை தயாரித்து வருகிறோம்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பயங்கரவாத எதிர்ப்பு நிறைவேற்றுக்குழு இலங்கைக்கு விஜயம்! Posted: 28 Oct 2014 02:24 AM PDT
ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு நிறைவேற்று குழு இன்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. இந்தக்குழு யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யும் என இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கைக்கு ஏற்ப, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை அனுமதி கேட்டிருந்தது. இதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கமும் வழங்கியுள்ளது. இந்தக்குழு, பயங்கரவாதம் இராணுவத்தினாலும் நீதியினாலும் மாத்திரம் அடக்கப்படமுடியாதது. தீர்க்கமான கலந்துரையாடல்களும் அதற்கு அவசியமானவை என்று வலியுறுத்தியுள்ளது. இந்தக்குழுவுக்கு ஐக்கிய நாடுகளின் சபையின் உதவி செயலாளர் நாயகம் ஜீன் போல் லாபோர்டெ தலைமை தாங்குகிறார். குழுவில் பயங்கரவாத தடு;ப்பு தொடர்பான பல நிபுணர்கள் உள்ளடங்கியுள்ளனர். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் 1624வது யோசனையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த குழுவின் விஜயம் அமைக்கிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| புலி ஆதரவாளர்களினால் நாட்டைப் பிரிக்க முடியாது: ஏர்ல் குணசேகர கருத்து Posted: 28 Oct 2014 02:21 AM PDT
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இருக்கும் வரையில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களினால் நாட்டை பிளவுபடுத்த முடியாது என பிரதி அமைச்சர் ஏர்ல் குணசேகர தெரிவித்துள்ளார். கட்சி, இன, மத மற்றும் மொழி பேதங்களைக் களைந்து அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டால் மட்டுமே நாடு பிளவுபடுவதனை தடுக்க முடியும். சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வளவு தலை தூக்கினாலும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ஆட்சி செய்யும் வரையில் நாட்டில் பிரினவினைவாதம் ஏற்பட வாய்ப்பில்லை. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்க கடுமையான முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த முயற்சிகளை தோற்கடிக்கக் கூடிய சக்தி பொது மக்களுக்கு காணப்படுகின்றது என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். அண்மையில் கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இந்தக் கருத்துக்களை பிரதி அமைச்சர் வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| புடவையுடன் அசத்திய பிரித்தானிய பிரதமர் மனைவி!! Posted: 28 Oct 2014 02:10 AM PDT
இங்கிலாந்தில் புடவை அணிந்து தீபாவளியை கொண்டாடிய பிரதமர் டேவிட் கேமரூன் மனைவி சமந்தா கேமரூன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் தீபாவளி திருநாள் கடந்த வாரம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இங்கிலாந்து நாட்டிலும் 5 நாட்கள் தீபாவளி கொண்டாடப்பட்டது. வெஸ்ட்மின்ஸ்டரில் 5 நாட்கள் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் தனது மனைவி சமந்தா கேமரூடன் கலந்து கொண்டார். இந்துக்கள் பண்டிகையாக தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சமந்தா கேமரூன் புடவை அணிந்து வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 43 வயதான சமந்தா கேமரூன் வண்ணமயமான உடையை அணிந்திருந்தார். சமந்தா கேமரூன் ராயல் புளு நிறத்திலான புடவை அணிந்திருந்தார். புடவை தங்க நிறத்திலான பார்டர் அமைக்கப்பட்டு இருந்தது. சமந்தா கேமரூன் புடவை அணிந்து தீபாவளியை கொண்டாடியது வெளிநாட்டு பத்திரிக்கை, இணையதளங்களில் முக்கிய இடம்பெற்றுள்ளது. மெழுகுவர்த்தியை ஏற்றி தீபாவளி கொண்டாட்டத்தை டேவிட் கேமரூன் – சமந்தா கேமரூன் தொடங்கி வைத்தனர். பின்னர் தீபாவளி வாழ்த்து தெரிவித்த டேவிட் கேமரூன், நாட்டில் உள்ள 8 மில்லியன் இந்துக்களுக்கு தீபாவளி உரையாற்றினார். இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் இந்துக்கள் அனைவரும் தீபாவளியை கோலாகலமாக கொண்டாடினர். சமந்தா கேமரூன் சேலை அணிந்து விழாவை கொண்டாடுவது இது முதல் முறையல்ல. இந்துக்கள் பண்டிகை கொண்டாட்டத்தின்போது எல்லாம் புடவை அணிந்து அசத்தி வருகிறார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| புதிய மேயராக ஜோன் ரொறி தேர்வு: இத் தேர்தல்களில் போட்டியிட்ட தமிழர்களில் மூவர் வெற்றி ! Posted: 28 Oct 2014 02:05 AM PDT
கனடாவின் மிகப்பெரிய நகரமான ரொறொன்ரோவின் அடுத்த மேயராக ஜோன் ரொறி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த வெற்றி ரொறொன்ரோ நகர சபையில் இடம்பெற்ற வோட் சகோதரர்களின் அடிக்கடி- கொந்தளிப்பான ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்துள்ளதை குறிக்கின்றது என கூறப்பட்டுள்ளது. ஜோன் ரொறி ஒரு முன்னாள் றொஜெர்சின் நிர்வாகியும் வானொலி தொகுப்பாளருமாவார். இவர் 40-சதவிகித வாக்குளாக 393,000 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். டக் வோட் 34-சத விதித வோட்டுக்களான 330,000 வாக்குகள் பெற்றுள்ளார். இவர் கடைசி நிமிடத்தில் சகோரதரின் சுகயீனம் காரணமாக அவரின் இடத்தில் போட்டியிட விண்ணப்பித்தார். ரொறொன்ரோ பெரும்பாகத்தில் தெரிவாகியுள்ள பல புதிய மேயர்களில் இவரும் ஒருவராவார். டீசம்பர் மாதம் புதிய மேயர்கள் அனைவரும் பதவி ஏற்பார்கள். பிரம்ரன் மேயராக லின்டா ஜெவ்ரி தெரிவுசெய்யப்பட்டார். Hazel McCallionனின் 36-வருடகால ஆட்சியின் பின்னர் முதலாவது மிசிசாகா மேயராக Bonnie Crombie தெரிவு செய்யப்பட்டுள்ளார். றொப் வோட் மீண்டும் நகர சபைக்கு திரும்ப வந்து தனது கவுன்சிலர் இருக்கையில் அமர்வார். ரொறொன்ரோ நகரசபையில் பல புதிய முகங்களுடன் ஒருவராக ரொறி இருப்பார். முதுபெரும் அரசியல் வாதியான ஜிம் கரிஜியானிஸ் வார்ட் 39-ன் கவுன்சிலராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 2003-ல் டேவிட் மில்லர் 43.26சதவிகித வாக்குளை பெற்று ரொறியை வென்று மேயர் பதவிக்கு வந்தார். அச்சமயம் ரொறி 38.03சதவிகித வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். 11-வருடங்களின் பின்னர் முன்னாள் புறோகிறசிவ் கொன்சவேட்டிவ் தலைவர் பெரும்பான்மை பெற்று தெரிவாகியுள்ளார். இத் தேர்தல்களில் போட்டியிட்ட தமிழர்களில் மார்க்கம் கல்விச் சபைக்கான பிரதிநிதி வொனிற்றா நாதன், மற்றும் ரொறன்ரோ கல்விச்சபைக்கான பிரதிநிதி பார்த்தி கந்தவேல், ஆகியோர் உடன் மார்க்கம் நகராட்சி மன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்களும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |




