மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அபூர்வ வெளிநாட்டு புறாக்களை கடத்திய வாலிபர் கைது
- மத்திய பிரதேசத்தில் பெண்ணைக் கொன்று பாதி சடலத்தை விட்டுச்சென்ற புலி
- கேரளா செல்லும் பிரதமர் மோடிக்கு கொலைமிரட்டல்
- மராட்டியத்தில் பா.ஜனதா மந்திரிசபை: துணை முதல்வர் பதவியை குறி வைக்கும் சிவசேனா
- திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவ விழா 19–ந்தேதி தொடங்குகிறது
- நடைப்பயிற்சியில் மும்பையை முந்திய டெல்லி
- திருவனந்தபுரம் அருகே குழந்தையை கொன்று தாய் தீக்குளித்து சாவு
- திருவனந்தபுரம் அருகே ஆதிவாசி பெண்ணிடம் சில்மிஷம்: காங். பிரமுகர் மகன் கைது
- கலாச்சார காவலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் 2-ம் தேதி முத்தத் திருவிழா
- அரியானாவில் சுரங்கப்பாதை தோண்டி வங்கியில் நகை-பணம் கொள்ளை
- கருப்பு பணம் பதுக்கியவர்கள் யார்-யார்?: சுப்பிரமணியசாமி பேட்டி
- திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தாயை சுட்டுக் கொன்ற மகன் கைது
- திருப்பதி கோவிலில் மின்சாரம் தாக்கி பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு: தேவஸ்தானம்
- நாடு முழுவதும் நீரிழிவு நோயாளிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை: ஜிதேந்திர சிங் தகவல்
- இந்தியா-வியட்நாம் இடையே எண்ணெய் வள ஆய்வுக்கான ஒப்பந்தம் கையெழுத்து
- காங்கிரசில் உள்ள போலி உறுப்பினர்களை நீக்க ராகுல் காந்தி உத்தரவு
- டெல்லியில் ஆட்சி அமைக்க பா.ஜனதாவுக்கு ஆர்வம் இல்லை: தேர்தலை சந்திக்க முடிவு
- கருப்பு பண விவகாரத்தில் இந்தியாவுடன் கருத்து வேறுபாடு: சுவிட்சர்லாந்து அரசு அதிகாரி தகவல்
- ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறியதாக கெஜ்ரிவால் மீது பா.ஜனதா வழக்கு
- மகாராஷ்டிர முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு: வெள்ளிக்கிழமை பதவியேற்கிறார்
| திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அபூர்வ வெளிநாட்டு புறாக்களை கடத்திய வாலிபர் கைது Posted: 28 Oct 2014 11:15 PM PDT கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக தங்கம் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் தமாம் நாட்டில் இருந்து திருவனந்தபுரம் வந்த ஜெட்ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணியின் உடமைகள் மீது |
| மத்திய பிரதேசத்தில் பெண்ணைக் கொன்று பாதி சடலத்தை விட்டுச்சென்ற புலி Posted: 28 Oct 2014 11:11 PM PDT மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மஜிபூர் கிராமத்தை சேர்ந்த 22 வயது பெண்ணை கொன்ற புலி அவரது சடலத்தை பாதி தின்ற நிலையில் விட்டு சென்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் கடந்தவாரம் இரண்டு புலி தாக்கிய சம்பவம் நடந்துள்ள நிலையில், கிராம மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் புலி |
| கேரளா செல்லும் பிரதமர் மோடிக்கு கொலைமிரட்டல் Posted: 28 Oct 2014 11:02 PM PDT திருவனந்தபுரம் தம்பனூரில் கேரள மாநில பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் உள்ளது. இங்கு மாநில செய்தி தொடர்பாளராக இருக்கும் வி.வி.ராஜேசுக்கு ஒரு மர்ம கடிதம் வந்தது. கடிதத்தை பிரித்துப் பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அதில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இங்கிலாந்து நாட்டின் தொண்டு நிறுவன ஊழியர் டேவிட் ஹெயின்ஸ் என்பவரை கொல்லும் முன்பு அவர் முகமூடி |
| மராட்டியத்தில் பா.ஜனதா மந்திரிசபை: துணை முதல்வர் பதவியை குறி வைக்கும் சிவசேனா Posted: 28 Oct 2014 11:00 PM PDT மராட்டியத்தில் பாரதீய ஜனதா மந்திரிசபையில் சிவசேனா கட்சி துணை முதல்–மந்திரி பதவியும், 13 மந்திரி பதவியும் கேட்கிறது. மராட்டியத்தில் சட்ட மன்ற தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பா.ஜனதா ஆட்சி அமைக்கிறது. மெஜாரிட்டிக்கு இன்னும் 23 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவைப்படுவதால் சிவசேனா ஆதரவை நாடியுள்ளது. அங்கு கூட்டணி மந்திரி சபை அமைப்பதா? தனித்து ஆட்சி அமைப்பதா? |
| திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவ விழா 19–ந்தேதி தொடங்குகிறது Posted: 28 Oct 2014 10:55 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடக்கிறது. அதே போல் கார்த்திகை மாதத்தில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும். |
| நடைப்பயிற்சியில் மும்பையை முந்திய டெல்லி Posted: 28 Oct 2014 10:40 PM PDT நடைப்பயிற்சி குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் டெல்லி மக்கள் மும்பை நகர மக்களை விட அதிக எண்ணிக்கையில் நடைப்பயிற்சி செய்வதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. பெருநகரங்களில் வசிக்கும் மக்களின் நடைப்பயிற்சி மேற்கொள்ள காரணம் என்ன?, அவர்கள் எவ்வளவு நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள்?, |
| திருவனந்தபுரம் அருகே குழந்தையை கொன்று தாய் தீக்குளித்து சாவு Posted: 28 Oct 2014 10:35 PM PDT திருவனந்தபுரம் அருகே பாலோடை சேர்ந்தவர் ரோயி. ஜீப் டிரைவர். இவரது மனைவி ராணி (வயது 30). ரோயி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு நேற்று மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீடு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. ஜன்னல்களும் மூடப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் அவர் கதவை தட்டியும் கதவு திறக்கப்படாததால் இது பற்றி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று கதவை |
| திருவனந்தபுரம் அருகே ஆதிவாசி பெண்ணிடம் சில்மிஷம்: காங். பிரமுகர் மகன் கைது Posted: 28 Oct 2014 10:32 PM PDT திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாத்துறை குட்டிச்சல் பகுதியில் அகஸ்தியர் மலை உள்ளது. இங்கு ஏராளமான ஆதிவாசிகள் வசித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் இந்த ஆதிவாசி குடியிருப்பை சேர்ந்த பெண்கள் பங்கேற்று விட்டு |
| கலாச்சார காவலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் 2-ம் தேதி முத்தத் திருவிழா Posted: 28 Oct 2014 09:41 PM PDT இந்திய கலாச்சாரத்தை இளம் தலைமுறையினர் சீரழித்து வருவதாக குற்றம்சாட்டும் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சமீபத்தில் கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள ஒரு புதிய ஓட்டலை அடித்து, உடைத்து, துவம்சப்படுத்தினர். அந்த ஓட்டலில் இளம்வயது ஆண்களும், பெண்களும் ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்டதால், நாங்கள் தலையிட நேர்ந்தது என தாக்குதல் நடத்தியவர்கள் தெரிவித்தனர். |
| அரியானாவில் சுரங்கப்பாதை தோண்டி வங்கியில் நகை-பணம் கொள்ளை Posted: 28 Oct 2014 09:15 PM PDT அரியானா மாநிலம் சோனேபட் மாவட்டத்துக்கு உட்பட்ட கோகனா பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி ஒன்று அமைந்துள்ளது. குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளதால், இந்த வங்கியில் 35 ஆயிரம் பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். |
| கருப்பு பணம் பதுக்கியவர்கள் யார்-யார்?: சுப்பிரமணியசாமி பேட்டி Posted: 28 Oct 2014 08:10 PM PDT கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் யார்-யார் என்பது குறித்து பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி நிருபர்களிடம் கூறியதாவது:- கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கும், கருப்பு பணம் தொடர்பான ஆணையத்துக்கும் ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் |
| திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தாயை சுட்டுக் கொன்ற மகன் கைது Posted: 28 Oct 2014 08:02 PM PDT வடகிழக்கு டெல்லியில் உள்ள கோகுல்புரி பகுதியை சேர்ந்தவர், கம்லேஷ்(54). இவரது கணவர் பிரபல நிதி நிறுவனம் ஒன்றில் பாதுகாவலராக பணியாற்றி வருகின்றார். இந்த தம்பதியரின் மகனான குல்தீப்(32), வேலைக்கு செல்லாமல் வீணாக ஊரைச் சுற்றி, பொழுதைக் கழித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற குல்தீப், இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. |
| திருப்பதி கோவிலில் மின்சாரம் தாக்கி பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு: தேவஸ்தானம் Posted: 28 Oct 2014 05:27 PM PDT திருவள்ளூரை சேர்ந்த லட்சுமி (வயது 35), தனது கணவர் மற்றும் ஒன்றரை வயது மகன் மகேசுடன் நேற்று முன்தினம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனத்துக்காக வரிசையில் நின்றிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கியதால், லட்சுமியும், குழந்தை மகேசும் பரிதாபமாக உயிரிழந்தனர். |
| நாடு முழுவதும் நீரிழிவு நோயாளிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை: ஜிதேந்திர சிங் தகவல் Posted: 28 Oct 2014 05:04 PM PDT நாடு முழுவதும் நீரிழிவு நோயாளிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் கூறினார். டெல்லியில் இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- |
| இந்தியா-வியட்நாம் இடையே எண்ணெய் வள ஆய்வுக்கான ஒப்பந்தம் கையெழுத்து Posted: 28 Oct 2014 04:18 PM PDT அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள வியட்நாம் பிரதமர் நிக்யூன் டான் டங் நேற்று, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இதில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரத்தை மேம்படுத்துவது, வியட்நாமின் கடற்பாதுகாப்புக்காக போர்க்கப்பல்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன. |
| காங்கிரசில் உள்ள போலி உறுப்பினர்களை நீக்க ராகுல் காந்தி உத்தரவு Posted: 28 Oct 2014 03:59 PM PDT மராட்டியம், அரியானா மாநில சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின்னர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி அகில இந்திய பொதுச் செயலாளர்கள், மாநில தலைவர்கள் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கட்சியின் அமைப்பு ரீதியான தேர்தல் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். |
| டெல்லியில் ஆட்சி அமைக்க பா.ஜனதாவுக்கு ஆர்வம் இல்லை: தேர்தலை சந்திக்க முடிவு Posted: 28 Oct 2014 02:22 PM PDT டெல்லியில் தனிப்பெரும் கட்சியாக உள்ள பாரதீய ஜனதாவை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கவர்னருக்கு ஜனாதிபதி அறிக்கை அனுப்பியுள்ளதாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தெரிவித்தது. இதுதொடர்பாக பா.ஜனதா கட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, ''பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்கக்கோரும் அழைப்பை ஏற்க |
| கருப்பு பண விவகாரத்தில் இந்தியாவுடன் கருத்து வேறுபாடு: சுவிட்சர்லாந்து அரசு அதிகாரி தகவல் Posted: 28 Oct 2014 12:42 PM PDT வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் முறைகேடாக பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ள 8 தொழில் அதிபர்களின் பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது. |
| ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறியதாக கெஜ்ரிவால் மீது பா.ஜனதா வழக்கு Posted: 28 Oct 2014 11:10 AM PDT ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் இணையத்தளம் மூலம் பாரதீய ஜனதா கட்சி மீது சில குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பா.ஜனதா கட்சியின் டெல்லி மாநில தலைவர் சதீஷ் உபாத்யாய், நிருபர்களை சந்தித்து விளக்கினார். |
| மகாராஷ்டிர முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு: வெள்ளிக்கிழமை பதவியேற்கிறார் Posted: 28 Oct 2014 07:05 AM PDT மகாராஷ்டிர மாநிலத்தில், பா.ஜனதா முதல்–மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள தேவேந்திர பட்னாவிஸ் 31-ம் தேதி பதவியேற்க உள்ளார். 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 122 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது. அங்கு தனித்து ஆட்சி அமைக்க 145 தொகுதிகள் தேவை. ஆட்சி அமைக்க பா.ஜனதாவுக்கு இன்னும் 23 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், 63 இடங்களில் வெற்றி பெற்ற சிவசேனா கட்சி ஆதரவு அளித்துள்ளது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |