Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


புறந்தள்ளும் காய்கறிகளில் உண்டு எல்லையற்ற பலன்கள்!

Posted: 16 Oct 2014 04:09 AM PDT

vegetable

vegetableஇன்றைய நவீன உலகில், உணவு கூட சத்தின்றி மாறியுள்ளது. இதனாலேயே பல்வேறு நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறது. இதில், பெரும்பானவர்களுக்கு உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனாலேயே பல டாக்டர்கள், காய்கறிகளை அதிகளவில் உணவில் சேர்க்க வலியுறுத்துகின்றனர். ஆனாலும், பலரும் சத்தில்லாத காய்கறிகளை மட்டுமே உணவில் சேர்க்கின்றனரே தவிர, சத்தான காய்கறிகளை புறந்தள்ளி விடுகின்றனர். நாம் புறம்தள்ளும் காய்கறிகளில், சத்துகள் மட்டுமல்ல; பல நோய்களுக்கு மருத்துவ சக்தியும் உள்ளது. அந்த வகையில், சில காய்கறிகளும் அதில் உள்ள குணங்களும்: கத்திரிக்காய் பொதுவாக கத்திரிக்காய் என்றாலே பலருக்கு பிடிப்பதில்லை. சிலருக்கு இது எட்டி காயாக கூட இருக்கலாம். ஆனால், இதில் அரிய குணங்கள் இருப்பது யாருக்கும் தெரியாது. ஆனால், இதை தரம் பிரித்து உண்பதிலும் கவனம் இருப்பது அவசியம் கத்திரிக்காயில் பல வண்ணங்கள் உண்டு, என்றாலும் அனைத்திலும் உள்ள சத்துக்கள் ஒன்றுதான். பிஞ்சு கத்திரிக்காய் சமைப்பதற்கு ஏற்றது. முற்றின கத்திரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி, சிரங்கை ஏற்படுத்தும். இதில், தசைக்கும், ரத்தத்திற்கும் உரம் தரும் வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால், வாயு, பித்தம், கபம் போகும். அதனால்தான், பத்தியத்துக்கு இக்காயை பயன்படுத்துகின்றனர். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டால் நல்ல பலன் கிடைக்கும். அவரைக்காய் அவரையிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரை பிஞ்சு நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இது சூட்டுடம்புக்கு மிகவும் ஏற்றது. ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் உகந்தது. மேலும், இதில் உள்ள நார் சத்து உடலை வலுவாக்கும் என்பதுடன், அதிக எடை உள்ளவர்கள் இதை உட்கொண்டால், உடம்பு இளைக்கவும் உறுதுணை புரியும். வெண்டைக்காய் பொதுவாக வெண்டைக்காயை மூளை வளர்ச்சிக்கு ஏற்றது என்று குறிப்பிடுவது உண்டு. ஆனால், இதன் சுபாவம் குளிர்ச்சி தருவது. இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலை பதப்படுத்தும். இதில் வைட்டமின் சி, பி உயிர்சத்துக்கள் உள்ளன. இதை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டை தணிக்கும். உஷ்ண இருமலை குணமாக்கும். வெண்டைக்காய் விந்துவை கட்டி போகத்தின் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டை பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினமும் வெறும் வயிற்றில் உண்டால், மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்படும். உடம்பில் வாயு உள்ளவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தும் என்பதில் கவனம் தேவை. புடலங்காய் நீர் சத்து மிகுந்த காய்களில் இதுவும் ஒன்று. சற்று நீரோட்டமுள்ள காய். சூட்டுடம்புக்கு ஏற்றது. உடம்பின் அலைச்சலை போக்கும். தேகம் தழைக்கும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த கபங்களால் ஏற்படும் திரிதோஷத்தை போக்கும். வயிற்று பொருமல், வயிற்று பூச்சி இவற்றை போக்கும். இதை உண்டால் காமத்தன்மை பெருகும். கொத்தவரங்காய் சிறுநீரகத்தை பெருக்கும் தன்மை கொண்டது. இது சூடு தன்மை கொண்டது. இதை தொடர்ந்து உண்டால் சீதம் போக வாய்ப்புண்டு. இது பித்தவாத கடுப்பு, கபம் இவற்றை உண்டாக்கும். அதனால் இது பத்தியத்திற்கு உகந்தது அல்ல. இதன் கெட்ட குணங்களை போக்க இத்துடன் தேங்காய் பருப்பு, இஞ்சி, சீரகம் சேர்த்து சமைக்க வேண்டும். வாழைத்தண்டு வாழையை பொறுத்தவரை அடி முதல் நுனி வரை அனைத்தும் மக்களுக்கு பயன்தரக்கூடியது. அதிலும், வாழைத்தண்டு மக்களுக்கு மிகவும் உகந்தது. இதில், நார் சத்து அதிகளவில் உள்ளது. பித்தத்தை தணிக்க கூடியது. சூடு ஏற்படுத்தும் தன்மை இதற்கு உண்டு என்றாலும், சிறுநீரை பெருக்கும். வாழைத்தண்டு பச்சடி உடம்பின் உஷ்ணத்தை போக்கும். வாத பித்தம், உஷ்ணம் முதலியவற்றை தணிக்கும். கபத்தை நீக்கும். இதை உண்டால் குடலில் சிக்கிய முடி, தோல், நஞ்சு ஆகியவை நீங்கும். வாரத்திற்கு ஒரு முறையாவது இதை உண்ணுவது நல்லது. தேங்காய் உப்பு இல்லாத பண்டம் குப்பையிலேயே என்பதை போல், தேங்காய் இல்லாத சமையலும் சுவைக்காது. கேரள மக்கள் உணவில் அதிகளவில் சேர்த்து கொள்ளும் தேங்காயில் பல நன்மைகள் உண்டு. தமிழகத்தில் கூட சமையலுக்கு மிகவும் பயன்படுகிறது. இதில், ஏ, பி வைட்டமின்கள் சிறிதளவு உண்டு. இது குடல் புண்ணையும் ஆற்றும். இதனால், தாது விளையும். தேங்காய் வழுக்கையில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் மூலச்சூட்டை மாற்றும். சுரைக்காய் உடல் சூட்டை தணிப்பதுடன், குளிர்ச்சி தன்மை கொண்டது. இது சிறுநீரை பெருக்கும் தன்மை கொண்டது. உடலை உரமாக்கும். மலச்சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால், பித்த வாயுவை உண்டுபண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால், அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தை போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும் இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மை இழந்தவர்கள், திரும்ப பெறுவர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்தூர் ஓபன் டென்னிஸ் : கால் இறுதியில் மைனேனி!

Posted: 16 Oct 2014 03:57 AM PDT

uneni

uneniஇந்தூர் ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, இந்திய வீரர் சாகேத் மைனேனி தகுதி பெற்றார். மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்று வரும் இந்த தொடரின் 2வது சுற்றில் 7ம் நிலை வீரர் கிம்மர் கோப்பிஜன்சுடன் (பெல்ஜியம்) நேற்று மோதிய மைனேனி 1-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். இரண்டாவது செட்டில் ஈடுகொடுத்து விளையாடிய அவர், கிம்மரின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து 6-3 என்ற கணக்கில் வென்று பதிலடி கொடுத்தார். இதைத் தொடர்ந்து, கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு வீரர்களும் தங்கள் சர்வீசில் புள்ளிகளைக் குவித்ததால் ஆட்டம் இழுபறியாக நீடித்தது. கடுமையாகப் போராடிய மைனேனி 1-6, 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். உலக தரவரிசையில் மைனேனி 451வது இடத்திலும், கிம்மர் 202வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் சாகேத் மைனேனி - சனம் சிங் ஜோடி 6-3, 6-3 என்ற நேர் செட்களில் சக இந்திய ஜோடியான பவேஷ் கவுர் ஆதித்யா திவாரி ஜோடியை வீழ்த்தியது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சென்னையின் எப்.சி அபார வெற்றி: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து!

Posted: 16 Oct 2014 03:51 AM PDT

chennai-FC

chennai-FCஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில், எப்சி கோவா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்சி அணி அபாரமாக வென்றது. பதோர்தா, நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் சென்னையின் எப்சி அணி வீரர் பல்வந்த் சிங் 32வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்து, ஐஎஸ்எல் தொடரில் கோல் போட்ட முதல் இந்திய வீரர் என்ற பெருமையை தட்டிச் சென்றார். ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் கிடைத்த பிரீ கிக் வாய்ப்பில் எலனோ புளூமர் அற்புதமாக கோல் அடிக்க, சென்னையின் எப்சி அணி 2-0 என முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து, தாக்குதலை தீவிரப்படுத்திய கோவா அணி, 65வது நிமிடத்தில் கிரிகோரி அடித்த கோல் மூலமாக 1-2 என முன்னிலையை குறைத்தது. மேற்கொண்டு கோல் அடிக்க இரு அணி வீரர்களும் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. பரபரப்பான ஆட்டத்தின் முடிவில், சென்னையின் எப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

வாழ்க்கையில் இப்படி ஒரு ரிஸ்க் அவசியம் தானா?

Posted: 16 Oct 2014 03:37 AM PDT

Italian-Teenager-willing-to-risk-his-life-for-a-thrill

Italian-Teenager-willing-to-risk-his-life-for-a-thrill

This posting includes an audio/video/photo media file: Download Now

தம்பி Love Propose பண்ற வயசாடா இது?

Posted: 16 Oct 2014 03:31 AM PDT

Grant-proposing--to-Demi-Lovato-on-stage

Grant-proposing--to-Demi-Lovato-on-stage

This posting includes an audio/video/photo media file: Download Now

முன்புற கேமரா கொண்ட Iberry Auxus அவுரா A1 ஸ்மார்ட்போன் ரூ.9,990 விலையில் அறிமுகம்!

Posted: 16 Oct 2014 03:24 AM PDT

Auxus-A1

Auxus-A1iberry நிறுவனம் புதன்கிழமை அன்று இந்தியாவில் Auxus அவுரா A1 ஸ்மார்ட்போனை ரூ.9,990 விலையில் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஈபே இந்தியாவில் வியாழக்கிழமை முதல் தொடங்கி விற்பனை செய்யப்படுகிறது. இரட்டை சிம் கொண்ட Auxus அவுரா A1 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 540x960 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஒரு 5 இன்ச் qHD கொரில்லா கிளாஸ் மற்றும் ஸ்போர்டிங் OGS தொழில்நுட்பம் மூலம் மூடப்பட்டிருக்கும் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இதில் ARM மாலி 450MP மற்றும் ரேம் 1GB உடன் இணைந்து ஒரு 1.4GHz அக்டா கோர் மீடியாடெக் MTK6592 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்ஃபோனில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. Auxus அவுரா A1 ஸ்மார்ட்போன் பின்புற கேமராவில் படப்பிடிப்புக்காக முழு HD தீர்மானம் வீடியோ, அத்துடன் ஃபேஸ் ரெகக்னைசேஷன், ஆட்டோ ஃபோகஸ் ஆதரவு, HDR, பனோரமா, ரியல் டைம் ஃபில்டர்ஸ் மற்றும் மற்ற செயல்பாடுகளையும் கொண்டுள்ளது. ஸ்மார்ட்ஃபோனில் microSD அட்டை வழியாக 64GB வரை விரிவாக்கக்கூடிய 8GB உள்ளடிக்கிய சேமிப்பு வருகிறது. Iberry Auxus அவுரா A1 ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள் 3 ஜி HSPA +, Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 4.0 மற்றும் ஜிபிஎஸ்/ எ-ஜிபிஎஸ் ஆகியவை அடங்கும். ஸ்மார்ட்ஃபோனில் ஒரு 2800mAh Li அயன் நீக்கக்கூடிய பேட்டரி கொண்டுள்ளது மற்றும் 146x71x7.5mm அளக்கிறது, (பேட்டரியுடன்) 140 கிராம் எடையுடையது. இந்த Iberry Auxus அவுரா A1 ஸ்மார்ட்போன் ஈபே இந்தியாவில் கிடைக்கும். iberry நிறுவனம் ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் 2 புதிய சாதனங்கள் தொடங்கியது - Auxus நோட் 5.5 ஸ்மார்ட்போன் மற்றும் Auxus AX04i டேப்லெட்டை ரூ.13,990 மற்றும் ரூ.6,490 விலையில் அறிவித்தது. Iberry Auxus நோட் 5.5 மற்றும் Auxus AX04i டேப்லெட் இரண்டிலும் ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் இயங்குகிறது. Iberry Auxus அவுரா A1 ஸ்மார்ட்போன் அம்சங்கள்: இரட்டை சிம், 540x960 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஒரு 5 இன்ச் qHD டிஸ்ப்ளே, ARM மாலி 450MP, ரேம் 1GB, 1.4GHz அக்டா கோர் மீடியாடெக் MTK6592 ப்ராசசர், 13 மெகாபிக்சல் பின்புற கேமரா, 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, microSD அட்டை வழியாக 64GB வரை விரிவாக்கக்கூடிய 8GB உள்ளடிக்கிய சேமிப்பு, 3 ஜி HSPA +, Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ்/ எ-ஜிபிஎஸ், ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட், 2800mAh Li அயன் பேட்டரி, 140 கிராம் எடை.  

This posting includes an audio/video/photo media file: Download Now

புயலால் நேபாளத்தில் கனமழை- பனிப்புயலில் சிக்கி இந்தியர் உள்பட 29பேர் பலி!

Posted: 16 Oct 2014 02:45 AM PDT

trekkers-killed-in-nepal-blizzard

trekkers-killed-in-nepal-blizzardநேபாளத்தில் வீசிய திடீர்ப் பனிப்புயலில் சிக்கி, அங்கு மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த ஒரு இந்தியர் உட்பட 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 85 பேரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நேபாளத்தில் உள்ள முஸ்டங்க் மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியில் பல குழுவினர் மலையேற்றப் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வீசிய பனிப்புயலில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். இதில், 9 நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட 24 பேர் பலியானார்கள். மேலும், 19 பேர் காயமடைந்தனர். அதே நேரத்தில் மனான்ங் மற்றும் முஸ்டாங்க் எல்லையில் உள்ள தொரங்க் பாஸ் என்ற இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி நான்கு கனடா நாட்டைச் சேர்ந்தவர்களும், ஒரு இந்தியரும் உயிரிழந்தனர். இதனால் மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆனது. மேலும், பனிப்புயலில் சிக்கி 85 பேர் மாயமானதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணியினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நேபாள ராணுவமும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஆந்திராவைத் தாக்கிய ஹூட் ஹூட் புயலின் தாக்கத்தால் கடந்த சில தினங்களாக நேபாளத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்கு அடுத்தடுத்து பனிப்புயல் மற்றும் பனிச்சரிவு உள்ளிட்ட விபத்துக்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

நீ்ங்க வேலையைப் பாருங்க, நாங்க உங்க கருமுட்டையைப் பாதுகாக்கிறோம்.. ஆப்பிள், பேஸ்புக்!

Posted: 16 Oct 2014 02:37 AM PDT

japanese-women-frozen-egg-cells

japanese-women-frozen-egg-cellsதங்களது பெண் ஊழியர்களின் கருமுட்டையை பாதுகாப்பாக பதப்படுத்தி வைக்க நிதியுதவி செய்யவுள்ளதாம் ஆப்பிள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள். இதன்மூலம் பெண் ஊழியர்கள் தங்களது குழந்தைப் பேற்றை தள்ளிப் போட்டு விட்டு, எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ளலாம் என அவை கூறுகின்றன. வேலையில் அதிக கவனம் செலுத்துவதற்கும், பிள்ளைப் பேறை பின்னால் பார்த்துக் கொள்ளும் வகையிலும் இந்த சலுகையை அளிக்கின்றனவாம் இந்த இரு நிறுவனங்களும். அதாவது தாய்மை முக்கியமல்ல, அதைப் பிறகு கூட பார்த்துக் கொள்ளலாம். முதலில் நன்றாக வேலை பாருங்கள் என்று சொல்லாமல் சொல்கின்றன இந்த இரு நிறுவனங்களும். பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் மகிழ்ச்சிக்காக விடுமுறைக் கொண்டாட்ட சலுகைகள், ரிலாக்ஸாக வேலை செய்யும் சுற்றுச்சூழல் மற்றும் பைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு என பல்வேறு சலுகைகளை வழங்கி குஷி படுத்தி வருகின்றன. அந்தவகையில், முதன்முறையாக பெண் ஊழியர்களின் கருமுட்டையை சேமித்து வைக்க நிதியுதவிசெய்ய சம்மதித்துள்ளது ஆப்பிள் மற்றும் பேஸ்புக். அதன்படி வருடத்திற்கு 500 டாலர் முதல் 10,000 டாலர் வரை இந்த நிறுவனங்கள் பெண் ஊழியர்களுக்கு பணம் தருமாம். பேஸ்புக் நிறுவனம் 20,000 டாலர் வரை பணம் தருகிறதாம். தற்போது கருமுட்டையை பதப்படுத்த பணம் கொடுக்கும் திட்டத்தை தொடங்கியுள்ள இந்த நிறுவனங்கள், விரைவில் இதனை மேலும் விரிவாக்க திட்டமிட்டுள்ளதாம். அதாவது, மகப்பேறுக்கான விடுமுறையை அதிகரித்தல், குழந்தையின்மைக்கான சிகிச்சை போன்றவை அவற்றில் அடக்கமாம். இத்திட்டத்திற்கு பெண் ஊழியர்கள் அனைவரிடமிருந்தும் இதுவரை சம்மதம் கிடைக்கவில்லையாம். ஆனபோதும், சில பெண் ஊழியர்கள், இது பாலின வேறுபாட்டை மறந்து குடும்பத்திற்காக உழைப்பதற்கு உதவும் என பாராட்டுகின்றனராம். இப்படி நிறுவனங்கள் ஊழியர்களை சொகுசாக வைத்து அவர்களிடமிருந்து வேலையைப் பிழிந்தெடுப்பது புதிதல்ல. கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அலுவலகத்திலேயே மசாஜ், லாண்டரி சேவை உள்ளிட்டவற்றை செய்து கொடுக்கிறது. விட்டால், நீ்ங்க அப்படியே வேலையைப் பாருங்க, நாங்க முதுகு தேய்த்துக் கூட குளிப்பாட்டி விட்டுர்றோம் என்று கூறுவார்கள் போலயே!

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™