மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- தெலுங்கானா மந்திரிசபை 22–ந் தேதி விஸ்தரிப்பு: கவர்னருடன் சந்திரசேகரராவ் ஆலோசனை
- விசாகப்பட்டினம் அமெரிக்க தொழில் நுட்பத்துடன் அழகிய நகரமாக உருவாக்கப்படும்: சந்திரபாபு நாயுடு
- தரிசனத்துக்கு அனுமதி மறுப்பு: திருப்பதியில் பக்தர்கள் மறியல்
- வணிகர் சங்க பேரமைப்பு சென்னையில் 31-ந்தேதி ஆர்ப்பாட்டம்
- தூய்மை இந்தியா திட்டத்தில் சானியா
- இந்தியா முழுவதும் நவம்பர் 12–ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
- ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: தேசிய பாதுகாப்பு படை தலைவர் எச்சரிக்கை
- எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபம் எதிரொலி: டீசல் விலை லிட்டருக்கு ரூ.3½ குறைய வாய்ப்பு
- நொய்டாவில் பள்ளிக்கூட சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி: 25 பேர் படுகாயம்
- ஜெயலலிதா ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
- மத்திய அரசின் புதிய பொருளாதார ஆலோசகராக அரவிந்த் சுப்பிரமணியன் நியமனம்
- நிர்வாண படங்களை வெளியிட்டதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதாநாயர் பரபரப்பு புகார்
- கெடு பிடியால் ஊழியர் தற்கொலை: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு செருப்படி
- 3-வது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விண்ணில் ஏவப்பட்டது
- அதிசக்தி வாய்ந்த நாடான இந்தியாவை யாரும் மிரட்டமுடியாது: சீனாவுக்கு ராஜ்நாத் சிங் பதிலடி
- சிறுவர்கள் மாயமான விவகாரம்: சத்தீஷ்கர்–பீகார் தலைமை செயலாளர்கள் ஆஜராக உத்தரவு
- தீவிரவாதிகள் தாக்குதல்: காஷ்மீரில் குண்டு வெடித்து 2 ராணுவ வீரர்கள் படுகாயம்
- மேற்கு வங்காளத்தில் வெடிகுண்டு தயாரித்த போது வெடித்துச் சிதறியதால் 3 பேர் படுகாயம்
- புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார்
- ஆந்திராவில் புயல் தாக்கிய பகுதியில் அழுகி கிடக்கும் கால்நடைகள்: துர்நாற்றத்தால் மக்கள் அவதி
| தெலுங்கானா மந்திரிசபை 22–ந் தேதி விஸ்தரிப்பு: கவர்னருடன் சந்திரசேகரராவ் ஆலோசனை Posted: 16 Oct 2014 10:44 PM PDT தெலுங்கானா முதல்– மந்திரி சந்திரசேகரராவ் கவர்னர் நரசிம்மனை நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்தது. தெலுங்கானா சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தீபாவளிக்கு பிறகு கூடுகிறது. பட்ஜெட் பற்றி சந்திரசேகரராவ் கவர்னரிடம் விவாதித்ததாக கூறப்படுகிறது. மேலும் ஐகோர்ட்டு கட்டிட பிரிவினை, மின்சார தேவை, புதிய ரேசன் கார்டு வினியோகம், நெசவாளர்களுக்கான கடன் திட்டம் போன்றவை குறித்தும் |
| விசாகப்பட்டினம் அமெரிக்க தொழில் நுட்பத்துடன் அழகிய நகரமாக உருவாக்கப்படும்: சந்திரபாபு நாயுடு Posted: 16 Oct 2014 10:29 PM PDT வங்க கடலில் உருவான 'ஹூட் ஹூட்' புயல் கடந்த 12–ந்தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது. புயலில் கோர தாக்குதலில் விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், வடக்கு கோதாவரி ஆகிய 4 மாவட்டங்கள் பெரும் சேதத்துக்குள்ளானது. பல்லாயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள், டெலிபோன் கோபுரங்கள் அனைத்தும் சரிந்து விழுந்தது. இதனால் மின்சாரம், குடிநீர் உள்பட |
| தரிசனத்துக்கு அனுமதி மறுப்பு: திருப்பதியில் பக்தர்கள் மறியல் Posted: 16 Oct 2014 10:04 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கம் போல் அதிகமாக இருந்தது. தினமும் 7 ஆயிரம் பக்தர்களுக்கு 50 ரூபாய் கட்டணத்தில் சுதர்சன தரிசன டிக்கெட் வழங்கப்படும். அந்த டிக்கெட்டில் தரிசன நேரம் ஒதுக்கப்படும். |
| வணிகர் சங்க பேரமைப்பு சென்னையில் 31-ந்தேதி ஆர்ப்பாட்டம் Posted: 16 Oct 2014 08:52 PM PDT தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநில நிர்வாகிகளும் டெல்லியில் ஒன்றுகூடி வணிகர்கள் சந்தித்து வரும் பல்வேறு ஆபத்துகள் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது. |
| தூய்மை இந்தியா திட்டத்தில் சானியா Posted: 16 Oct 2014 08:11 PM PDT இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பிரதமர் நரேந்திர மோடியின் 'தூய்மை இந்தியா' திட்டத்தில் இணைந்துள்ளார். இதையொட்டி அவரும், அவரது தந்தை இம்ரானும் ஐதராபாத்தில் ரோட்டை சுத்தம் செய்தனர். இந்த காட்சியை சானி |
| இந்தியா முழுவதும் நவம்பர் 12–ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் Posted: 16 Oct 2014 05:26 PM PDT ஊதிய மறுஆய்வு கோரி இந்தியா முழுவதும் வருகிற நவம்பர் மாதம் 12–ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதில் 8 லட்சம் பேர் கலந்துகொள்கிறார்கள். இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க (ஏ.ஐ.பி.இ.ஏ.) பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:– |
| ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: தேசிய பாதுகாப்பு படை தலைவர் எச்சரிக்கை Posted: 16 Oct 2014 05:00 PM PDT தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி.) தலைவர் ஜெயந்த் சவுத்ரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா ஆகிய 2 தீவிரவாத இயக்கங்களும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன. அவர்கள் கோவா போன்ற சுற்றுலாதலங்கள், பெங்களூர் போன்ற பெருநகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் பாகிஸ்தான் ஆதரவு |
| எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபம் எதிரொலி: டீசல் விலை லிட்டருக்கு ரூ.3½ குறைய வாய்ப்பு Posted: 16 Oct 2014 03:04 PM PDT பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. டீசல் விலையை பொறுத்தவரை, அதன் உற்பத்தி விலை நஷ்டத்தை ஈடுகட்டும்வரை, மாதந்தோறும் 50 காசுகள் விலை உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாதந்தோறும் 50 காசுகள் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. |
| நொய்டாவில் பள்ளிக்கூட சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி: 25 பேர் படுகாயம் Posted: 16 Oct 2014 12:53 PM PDT டெல்லி அடுத்த நொய்டா செக்டரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நேற்று 40 மாணவ, மாணவிகள் பாடம் படித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அருகில் புதிதாக கட்டப்பட்டு இருந்த சுவர் ஒன்று திடீரென இடிந்து மாணவர்கள் மீது விழுந்தது. உடனே அலறி அடித்துக்கொண்டு அனைவரும் பள்ளிக்கூடத்தை விட்டு |
| ஜெயலலிதா ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Posted: 16 Oct 2014 11:39 AM PDT பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த மாதம் 27-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை |
| மத்திய அரசின் புதிய பொருளாதார ஆலோசகராக அரவிந்த் சுப்பிரமணியன் நியமனம் Posted: 16 Oct 2014 11:22 AM PDT மத்திய அரசு நிதித்துறையின் புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக அரவிந்த் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டு, இன்று பதவி ஏற்றார். இவர் இந்திய பொருளாதார நிபுணர் ஆவார். டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரி, ஆமதாபாத் ஐ.ஐ.எம். ஆகியவற்றில் பட்டம், முதுகலை பட்டம் பெற்று, தொடர்ந்து இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றார். |
| நிர்வாண படங்களை வெளியிட்டதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதாநாயர் பரபரப்பு புகார் Posted: 16 Oct 2014 04:07 AM PDT கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவர் சரிதா நாயர். இவரது மோசடிக்கு காங்கிரஸ் பிரமுகர்கள் துணை போனதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். அதற்கேற்ப சரிதாநாயரும் காங்கிரஸ் எம்.பி. அப்துல்லா குட்டி மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இந்தநிலையில் சரிதாநாயரின் நிர்வாண படங்கள் வாட்ஸ்–அப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில நிமிடங்கள் |
| கெடு பிடியால் ஊழியர் தற்கொலை: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு செருப்படி Posted: 16 Oct 2014 03:32 AM PDT கர்நாடகத்தைச் சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ்.அதிகாரி ரேஷ்மி மகேஷ். இவர் சமீபத்தில் மைசூரில் உள்ள ஆட்சி நிர்வாக பயிற்சி மைய டைரக்டர் ஜெனரல்லாக மாற்றப்பட்டார். அவர் அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் கெடுபிடியாக நடந்து கொண்டார். அடிக்கடி திடீர் சோதனை நடத்தி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். இதனால் அவர் மீது ஊழியர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில் |
| 3-வது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விண்ணில் ஏவப்பட்டது Posted: 16 Oct 2014 02:44 AM PDT இயற்கை பேரிடர், கடல் வழிப்பாதை கண்காணிப்பு, சாலை போககுவரத்து கண்காணிப்பு மற்றும் இயற்கை பேரிடர் மேலாண்மை போன்ற பணிகளுக்காக 7 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். (இண்டியன் ரீஜினல் நேவிகேசன் சாடிலைட் சிஸ்டம்) என்ற பெயரில் செயற்கைக் கோள்கள் தயாரிக்கப்பட்டு விண்ணில் செலுத்தி நிலை நிறுத்தப்பட்டு வருகின்றன. |
| அதிசக்தி வாய்ந்த நாடான இந்தியாவை யாரும் மிரட்டமுடியாது: சீனாவுக்கு ராஜ்நாத் சிங் பதிலடி Posted: 16 Oct 2014 01:27 AM PDT இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட நெடுங்காலமாக எல்லைப்பிரச்சினை இருந்து வருகிறது. குறிப்பாக, அருணாசலபிரதேசம், தனது தன்னாட்சி பகுதியான தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா கூறுகிறது. ஆனால் அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். இதேபோன்று அந்தப் பகுதியில் |
| சிறுவர்கள் மாயமான விவகாரம்: சத்தீஷ்கர்–பீகார் தலைமை செயலாளர்கள் ஆஜராக உத்தரவு Posted: 16 Oct 2014 01:16 AM PDT சத்தீஷ்கர் மற்றும் பீகார் மாநிலங்களில் அடிக்கடி சிறுவர்கள் மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டு வந்தன. அவர்கள் கதி என்னவென்று தெரியாததாலும் அவர்களை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபடக்கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நாடு |
| தீவிரவாதிகள் தாக்குதல்: காஷ்மீரில் குண்டு வெடித்து 2 ராணுவ வீரர்கள் படுகாயம் Posted: 16 Oct 2014 01:15 AM PDT காஷ்மீர் மாநிலத்துக்குள் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் பலர் ஏற்கனவே ஊடுருவி பதுங்கி இருக்கிறார்கள். அவர்கள் மூலம் ராணுவ நிலைகள் மீது மிகப் பெரிய தாக்குதல் நடத்தப் போவதாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் அடிக்கடி மிரட்டியபடி உள்ளனர். இந்த நிலையில் இன்று வடக்கு காஷ்மீர் பகுதியில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் எல்லை பாதுகாப்புப் படை ராணுவ வீரர்கள் சிலர் ரோந்து |
| மேற்கு வங்காளத்தில் வெடிகுண்டு தயாரித்த போது வெடித்துச் சிதறியதால் 3 பேர் படுகாயம் Posted: 16 Oct 2014 12:46 AM PDT மேற்கு வங்காள மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சிலர் ரகசியமாக நாட்டு வெடி குண்டுகள் தயாரித்துக் கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு நாட்டு வெடி குண்டு திடீர் என்று வெடித்துச் சிதறியது. இதில் அங்கு குண்டு தயாரித்துக் கொண்டு இருந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். |
| புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார் Posted: 16 Oct 2014 12:13 AM PDT ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை இருக்கும். நான் கலெக்டராவேன்... டாக்டராவேன்... என்ஜினீயர் ஆவேன்... என்று சிறு வயதிலேயே குழந்தைகள் மனதில் வளர்ந்து கொள்ளும் ஆசைக்கு ஏற்ப பெரியவனாக வளர்ந்து சாதிக்கிறார்கள்... அப்படித்தான் சாதிக்குக்கும் போலீஸ் கமிஷனராகி சாதிக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் விதி...? |
| ஆந்திராவில் புயல் தாக்கிய பகுதியில் அழுகி கிடக்கும் கால்நடைகள்: துர்நாற்றத்தால் மக்கள் அவதி Posted: 15 Oct 2014 11:52 PM PDT ஆந்திராவை தாக்கிய 'ஹூட்ஹூட்' புயலால் விசாகப்பட்டினம், விஜய் நகரம், ஸ்ரீகாகுளம் ஆகிய மாவட்டங்கள் பெரும் சேதத்துக்குள்ளானது. புயலில் அனைத்து மின்கம்பங்களும் சாய்ந்து விட்டது. இதனால் மின்சாரம் இல்லாமல் மாவட்டங்கள் இருளில் மூழ்கி உள்ளது. மின்சார விநியோகம் சீராக இன்னும் பல நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்சாரம் இல்லாததால் குடிநீர் விநியோகம் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |