Tamil Star |
- காணாமல் போன சிறுமியை 29 வருடங்களாக தேடும் டொரண்டோ போலீஸ்!
- கனடாவிற்குள் இபோலா பாதித்த நாடுகளில் இருந்து வருவோர்க்கு பரிசோதனை!
- வட கொரியாவின் இளம் அதிபர் கிம் ஜோங் 37 நாட்களாக காணவில்லை?
| காணாமல் போன சிறுமியை 29 வருடங்களாக தேடும் டொரண்டோ போலீஸ்! Posted: 10 Oct 2014 07:13 AM PDT
கனடாவில் 1985ஆம் ஆண்டு காணாமல் போன 8 வயது சிறுமியை டொரண்டோ போலீசார் 29 வருடங்களாக தொடர்ந்து தேடி வருவதாகவும் இதுவரை தொலைந்து போனவர் குறித்து எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தலைநகர் டொரண்டோவில் உள்ள Springwater Township area என்ற பகுதியில் கடந்த 1985ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதி Nicole Morin என்ற 8 வயது சிறுமி தனது தோழியுடன் நீச்சல் குளத்தில் குளிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து டொரண்டோ காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கடந்த 29 வருடங்களாக தொலைந்து போன சிறுமியை தேடிவருவதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை 40 பேர்கள் கொண்ட அதிகாரிகள் இத்தனை வருடங்கள் விசாரணை செய்து வந்தும் சிறுமி குறித்து எந்தவித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டொரண்டோ காவல்துறை வரலாற்றில் இந்த வழக்குதான் மிக அதிக வருடங்கள் தேடிய வழக்கு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடாவிற்குள் இபோலா பாதித்த நாடுகளில் இருந்து வருவோர்க்கு பரிசோதனை! Posted: 10 Oct 2014 07:09 AM PDT
இபோலா பாதித்த நாடுகளில் இருந்து கனடாவுக்குள் பிரவேசிப்போருக்கு அந்த வைரஸ் தொற்றியிருக்குமா என்று பரிசோதிக்கும் நோக்கத்துடன், விமான நிலையங்களில் மேலதிக பரிசோதனைகள் இடம்பெறுமென கனடாவின் சுகாதார அமைச்சர் றோனா அம்றோஸ் (Rona Ambrose) அறிவித்தார். உடல் வெப்பநிலையை ஆராயும் கருவிகள் முதற்கட்டமாக ரொறன்றோ பியர்சன் விமான நிலையத்தில் பயன்படுத்தப்படும். எனவும்,பின்னர் ஏனைய முக்கிய விமான நிலையங்களுக்கும் அது விரிவுபடுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். இபோலாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து பயணம் செய்வோரில் சுமார் 1.5 சதவீதமானவர்கள்தான் கனடாவுக்குப் பயணம் செய்வதாக கருதப்படுகிறது. மேற்கு ஆபிரிக்காவில் இதுவரை 3900 பேர் இபோலா காரணமாக மரணமானார்களென உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| வட கொரியாவின் இளம் அதிபர் கிம் ஜோங் 37 நாட்களாக காணவில்லை? Posted: 10 Oct 2014 12:31 AM PDT
இளம் அதிபர், கிம் ஜோங் உன் தலைமையிலான வட கொரியாவில் ராணுவப் புரட்சி நடைபெறுவதாகவும், அதிபர் உடல் நிலை சரியில்லாமல் போனதை அடுத்து அங்கு உள்நாட்டு குழப்பம் நடைபெறுவதாகவும், தென் கொரியாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன. அந்த தகவலுக்கேற்பதான் அந்த நாட்டில் பல சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, வட கொரியாவில், தொடர்ந்து மூன்று அரசு நிகழ்ச்சிகளில் அதிபர் கிம் ஜோங் உன் கலந்து கொள்ளவில்லை. அதையடுத்து, அவரின் உடல் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. எபோலோவால் தாக்கப்பட்டிருக்கலாமா, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாமா என்பது போன்ற யூகங்கள் அங்கு பரவியுள்ளன. 37 நாட்களாக அதிபர் பொது இடங்களில் காணப்படவில்லை என்றபோதிலும், அவர் நலமாக இருப்பதாக மட்டும், வட கொரியாவின் அரசு தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பி வருகிறது. இந்த நிலையை பயன்படுத்தி பகைநாடான தென்கொரியா, தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற அச்சமும் வட கொரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



