மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை: திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
- பீகாரில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 5 தலித் பெண்கள் கற்பழிப்பு
- நீதிபதி சந்திரசேகராவை வீடியோ எடுத்த 2 பேர் கைது
- சபரிமலை, மாளிகைபுரத்தம்மன் கோவிலுக்கு புதிய மேல்சாந்திகள் வருகிற 18–ந்தேதி தேர்வு
- மனைவியின் புகாரில் இருந்து கணவனை காப்பாற்ற ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் கைது
- பிரதமர் மோடியுடன் ஃபேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஸுக்கெர்பெர்க் சந்திப்பு
- டெல்லி: ஓடும் ஆட்டோவை விட்டு குதித்து காமுகர்களிடம் இருந்து தப்பிய கல்லூரி மாணவி
- நோபல் பரிசை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன் கைலாஷ் சத்யார்த்தி பேட்டி
- சென்னையில் தேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் அமைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல்
- பி.எஸ்.எல்.வி.-சி26 ராக்கெட் 16-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது: இஸ்ரோ தகவல்
- நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்திக்கு ஜனாதிபதி, சோனியா வாழ்த்து
- மோடியின் வானொலி பேச்சு, தேர்தல் நடத்தை விதியை மீறிய செயல் அல்ல: தேர்தல் கமிஷன் முடிவு
- பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு எந்த பணியும் வழங்கவில்லை: டி.ஜி.பி. ககன்தீப் தகவல்
- ஹூட் ஹூட் புயல் எச்சரிக்கை: நாளை மறுநாள் 38 ரெயில்கள் ரத்து
- மகாராஷ்டிரா-அரியானாவில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் பா.ஜனதா: கருத்துக்கணிப்பில் தகவல்
- ஓம்பிரகாஷ் சவுதாலாவின் ஜாமின் ரத்து: சிறைக்கு திரும்ப ஐகோர்ட் உத்தரவு
- நோபல் அமைதிப்பரிசு பெறும் சத்யார்த்தி-மலாலாவுக்கு மோடி பாராட்டு
- சுனந்தா புஷ்கர் மரணத்தில் தெளிவான விசாரணை தேவை: மா.கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
- ரூ.3 கோடி ஹெராயினை கடத்திய பத்தாம் வகுப்பு மாணவன் கைது
- டெல்லி: வீட்டில் சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி
| இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை: திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல் Posted: 10 Oct 2014 10:47 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் கடந்த 4–ந்தேதி முடிவடைந்தது. இருந்தபோதிலும் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறையாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் நேற்று குவியத் தொடங்கினர். பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. தர்ம தரிசனத்துக்கு 28 மணி நேரம் ஆனது. |
| பீகாரில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 5 தலித் பெண்கள் கற்பழிப்பு Posted: 10 Oct 2014 10:45 PM PDT பீகார் மாநிலம் போஜ்பூர் அருகில் உள்ள துமாரியா கிராமத்தைச் சேர்ந்த 5 தலித் பெண்கள் பக்கத்து கிராமமான குர்முரி என்ற இடத்துக்கு பழைய இரும்பு சாமான்களை அங்குள்ள கடையில் விற்கச் சென்றனர். பின்னர் மாலை நேரத்தில் 5 பெண்களும் ஆண் துணையின்றி தங்களது கிராமத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தனர். இதை கவனித்த பழைய இரும்பு கடை உரிமையாளரான நீல் நிதிசிங் மற்றும் அவரது நண்பர்கள் 2 |
| நீதிபதி சந்திரசேகராவை வீடியோ எடுத்த 2 பேர் கைது Posted: 10 Oct 2014 10:26 PM PDT கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி ஏ.வி.சந்திரசேகரா. இவர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதியாவார். நேற்று முன்தினம் இவர் பெங்களூரில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டில் பணிகள் முடிந்து வீட்டுக்கு காரில் புறப்பட்டார். 'லால்பாக்' சாலையில் கார் சென்ற போது ஒரு இன்னோவா கார் அவரை பின் தொடர்ந்து வந்தது. அதில் அமர்ந்திருந்த ஒருவர் நீதிபதி |
| சபரிமலை, மாளிகைபுரத்தம்மன் கோவிலுக்கு புதிய மேல்சாந்திகள் வருகிற 18–ந்தேதி தேர்வு Posted: 10 Oct 2014 10:18 PM PDT கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாக்கள் தொடங்க இருக்கிறது. அதற்கு முன்பு கோவிலுக்கு புதிய மேல்சாந்திகள் நியமிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மேல்சாந்திகள் யார்? என்பதை கண்டறிவதற்கான |
| மனைவியின் புகாரில் இருந்து கணவனை காப்பாற்ற ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் கைது Posted: 10 Oct 2014 10:08 PM PDT மராட்டிய மாநிலம், பன்வேல் தாசில் சுகாப்பூரைச் சேர்ந்த ஒரு தம்பதியர் இடையே சில தினங்களுக்கு முன்னர் குடும்பத் தகராறு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மனைவி கணவரின் மீது நவி மும்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரித்த போலீஸ்காரரான பத்மாகர் நாகா பட்டில், 'இவ்வழக்கில் உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க 15 ஆயிரம் ரூபாய் தந்தால் உங்களை விடுவிக்கிறேன். |
| பிரதமர் மோடியுடன் ஃபேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஸுக்கெர்பெர்க் சந்திப்பு Posted: 10 Oct 2014 08:42 PM PDT பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கின் நிறுவனரும், மிக குறுகிய காலத்தில் உலகின் இளம்வயது கோடீஸ்வரர் ஆனவருமான மார்க் ஸுக்கெர்பெர்க் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று மாலை சந்தித்துப் பேசினார். இந்தியாவை எண்ணியல் (டிஜிட்டல்) மயமாக்கும் பிரதமர் மோடியின் எதிர்கால திட்டத்துக்கு தனது ஃபேஸ்புக் நிறுவனம் எவ்வகையில் எல்லாம் |
| டெல்லி: ஓடும் ஆட்டோவை விட்டு குதித்து காமுகர்களிடம் இருந்து தப்பிய கல்லூரி மாணவி Posted: 10 Oct 2014 08:27 PM PDT டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி ஒருவரை பஸ்சினுள் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்த ஒரு கும்பல், அவரை ஓடும் பஸ்சில் இருந்து கீழே தள்ளியதில், வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்றும் பலனின்றி அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். டெல்லியை ஒட்டியுள்ள தொழில் நகரமான நொய்டாவில் நேற்று அதே பாணியில் ஆட்டோவில் தனியாக சென்ற கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த காமுகர்களிடம் இருந்து கற்பையும், உயிரையும் காப்பாற்றிக் கொள்ள ஓடும் |
| நோபல் பரிசை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன் கைலாஷ் சத்யார்த்தி பேட்டி Posted: 10 Oct 2014 05:25 PM PDT 2014–ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்திக்கு கிடைத்துள்ளது. அவர் இந்த விருதை பாகிஸ்தானிய சிறுமி மலாலாவுடன் சேர்ந்து பெறுகிறார். தெற்கு டெல்லியில் வசிக்கும் கைலாஷ் சத்யார்த்திக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ள தகவல் கிடைத்ததும் அவருடைய அடுக்குமாடி |
| சென்னையில் தேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் அமைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் Posted: 10 Oct 2014 04:47 PM PDT சென்னையைச் சேர்ந்த வி.வசந்த குமார் என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பொதுமக்களின் வசதிக்காக மேல் முறையீட்டு நீதிமன்றங்களை நிறுவக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், இதன் மூலம் சுப்ரீம் கோர்ட்டின் வேலைப்பளுவை குறைக்கலாம் என்றும், அந்த மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏதாவது |
| பி.எஸ்.எல்.வி.-சி26 ராக்கெட் 16-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது: இஸ்ரோ தகவல் Posted: 10 Oct 2014 04:24 PM PDT இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் இயற்கை சீற்றம், இயற்கை இடர் மேலாண்மை, கடல்சார் கண்காணிப்பு, நில போக்குவரத்து ஆகியவற்றை கண்காணிக்க ஜி.பி.எஸ். தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தும் வகையில் 7 செயற்கைகோளை விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஏ செயற்கை கோளும், கடந்த ஏப்ரல் மாதம் 4-ந் |
| நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்திக்கு ஜனாதிபதி, சோனியா வாழ்த்து Posted: 10 Oct 2014 01:25 PM PDT அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் கைலாஷ் சத்யார்த்திக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- இந்தியாவின் மிகப்பெரிய மக்கள் சமுதாயத்துக்காக குழந்தை தொழிலாளர் போன்ற பலவித சமுதாய பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் அவர் ஆற்றிய பங்களிப்புக்கு அங்கீகாரமாக இந்த பரிசு கருதப்படுகிறது. |
| மோடியின் வானொலி பேச்சு, தேர்தல் நடத்தை விதியை மீறிய செயல் அல்ல: தேர்தல் கமிஷன் முடிவு Posted: 10 Oct 2014 12:03 PM PDT பிரதமர் நரேந்திர மோடி முதன் முதலாக நாட்டு மக்களுக்கு கடந்த 3-ந் தேதி வானொலி மூலம் உரை ஆற்றினார். அப்போது அவர், "நாம் ஒரு அடி முன்னேறினால் நாடு 125 கோடி அடி முன்னேறும்" என்றும், "அனைவரும் கதர்த்துணி வாங்க வேண்டும். நீங்கள் கதர்த்துணியை வாங்கும்போது ஒரு ஏழையின் வீட்டில் தீபாவளி விளக்கு எரியும்" என்றும் கூறினார். |
| பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு எந்த பணியும் வழங்கவில்லை: டி.ஜி.பி. ககன்தீப் தகவல் Posted: 10 Oct 2014 11:44 AM PDT சொத்துகுவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அவர் கடந்த மாதம் (செப்டம்பர்) 27-ந் தேதியில் இருந்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஜெயலலிதாவை பார்க்க தினமும் தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க. |
| ஹூட் ஹூட் புயல் எச்சரிக்கை: நாளை மறுநாள் 38 ரெயில்கள் ரத்து Posted: 10 Oct 2014 10:57 AM PDT அந்தமான் அருகே உருவாகியுள்ள புயலுக்கு ஹூட் ஹூட் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த புயல் விசாகப்பட்டினத்தின் தென் கிழக்கே 550 கிலோமீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த புயல், (நாளை மறுநாள்) அதாவது 12 ஆம் தேதி காலையிலேயே |
| மகாராஷ்டிரா-அரியானாவில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் பா.ஜனதா: கருத்துக்கணிப்பில் தகவல் Posted: 10 Oct 2014 09:05 AM PDT மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநில சட்டசபைத் தேர்தல் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இரு மாநிலங்களிலும் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பா.ஜனதா |
| ஓம்பிரகாஷ் சவுதாலாவின் ஜாமின் ரத்து: சிறைக்கு திரும்ப ஐகோர்ட் உத்தரவு Posted: 10 Oct 2014 07:40 AM PDT ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் 10 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற அரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா (வயது 79) உடல்நலக் குறைவை காரணம் காட்டி ஜாமின் பெற்றிருந்தார். டெல்லி திகார் சிறையில் இருந்து வெளியில் வந்த அவர், தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். |
| நோபல் அமைதிப்பரிசு பெறும் சத்யார்த்தி-மலாலாவுக்கு மோடி பாராட்டு Posted: 10 Oct 2014 07:23 AM PDT அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியாவின் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானின் மலாலா ஆகியோருக்கு பிரதமரி மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானின் மலாலா ஆகியோருக்கு |
| சுனந்தா புஷ்கர் மரணத்தில் தெளிவான விசாரணை தேவை: மா.கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் Posted: 10 Oct 2014 03:23 AM PDT மத்திய முன்னாள் மந்திரி சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக தற்போது அறிக்கை வெளியிட்டுள்ள டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனை, 'சுனந்தாவின் உடலின் பல உறுப்புகளில் விஷம் பரவி இருந்ததே மரணத்துக்கு காரணம்' என்று குறிப்பிட்டுள்ளது. சுனந்தாவே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது, யாராவது அவருக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டனரா? |
| ரூ.3 கோடி ஹெராயினை கடத்திய பத்தாம் வகுப்பு மாணவன் கைது Posted: 10 Oct 2014 02:52 AM PDT மேற்கு வங்காள மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள ஹெராயினை கடத்திய பத்தாம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். அருகாமையில் உள்ள வங்காள தேச எல்லையில் இருந்து முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பஹராம்பூர் பகுதியின் ராஜ்ஷாஹி வழியாக குழந்தை உணவுப் பொருட்களுடன் மறைத்து ஹெராயின் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், குழந்தை உணவுப் பொருட்களுடன் மறைத்து 3 கிலோ ஹெராயினை கடத்தி வந்த லால்கோலா பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் இஸ்மாயில் ஷேக் என்பவனை நேற்று கைது செய்தனர். |
| டெல்லி: வீட்டில் சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி Posted: 10 Oct 2014 02:27 AM PDT தெற்கு டெல்லியின் ஜஸோலா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் அந்த வீட்டில் இருந்த 6 பேர் பலியாகினர். இன்று காலை சுமார் 11.30 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் 3 குழந்தைகள், 3 பெண்கள் என மொத்தம் 6 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியானதாக மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |