Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பா.ஜ., ஆட்சி மகாராஷ்டிராவில் இன்று புது அரசு பதவி ஏற்பு

Posted:

மும்பை:மகாராஷ்டிராவில், தேவேந்திர பட்நாவிஸ், 44, தலைமையிலான, முதல் பா.ஜ., அரசு, இன்று மாலை பதவியேற்கிறது. இன்றைய பதவியேற்பு விழாவில், உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவைச் சேர்ந்த யாரும், அமைச்சர்களாக இடம் பெறவில்லை.அத்துடன், 'பதவியேற்பு விழாவை, சிவசேனா தலைவர்கள் புறக்கணிப்பர்' என, அந்தக் கட்சியின் எம்.பி., வினயக் ரவுத் கூறியுள்ளார். ஆனாலும், இரு கட்சிகள் இடையே, கூட்டணிபேச்சுக்கள் தொடர்வதாக, பா.ஜ., பொதுச்செயலர் ராஜிவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார்.தனிப்பெரும் கட்சி:மகாராஷ்டிராவில், இம்மாதம், 15ம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 288 இடங்களில், 122 ...

சிக்கன நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற மத்திய அரசு...கெடுபிடி

Posted:

புதுடில்லி: நாட்டின் பொருளாதாரத்தை, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல, திடமான நம்பிக்கை கொண்டுள்ள, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அதற்காக பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அவற்றிற்கு உத்வேகம் கொடுக்கும் வகையில், மத்திய நிதியமைச்சகம், மத்திய அரசு ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும், பல சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.மத்திய அரசு அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ள கெடுபிடி உத்தரவுகள்:*நடப்பு நிதியாண்டில், திட்டச் செலவை வெகுவாக குறைக்க வேண்டும்; திட்டமில்லாச் செலவை, குறைந்தபட்சம், 10 சதவீதம் குறைக்க ...

மகன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாக்., பிரதமருக்கு அழைப்பு விடுத்த புகாரி

Posted:

புதுடில்லி:டில்லி ஜும்மா மசூதியின் துணை மதகுருவாக, இப்போதைய தலைமை மதகுரு செய்யது அகமது புகாரியின், 19 வயது மகன் ஷபான் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு அழைப்பு அனுப்பியுள்ள புகாரி, பிரதமர் மோடிக்கு அழைப்பு அனுப்பவில்லை.அடுத்த மாதம் 22ல், நடைபெற உள்ள ஷபான் பதவியேற்பு விழாவில், பா.ஜ., தலைவர்கள், ராஜ்நாத் சிங், ஹர்ஷவர்தன், ஷா நவாஸ் உசேன், விஜய் கோயல் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போன்ற பலருக்கும், அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது; ஆனால், பிரதமர் மோடிக்கு அனுப்பப்படவில்லை.இதுகுறித்து, மதகுரு செய்யது ...

தமிழக மீனவர் 5 பேருக்கு தூக்கு: இலங்கை உத்தரவு

Posted:

இலங்கை சிறையில், 1,092 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் ஐந்து பேருக்கு, துாக்கு தண்டனை விதித்து, கொழும்பு ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.ராமேஸ்வரத்தில் இருந்து, 2011 நவ., 28ல், தங்கச்சிமடம் மீனவர்கள், வில்சன், 40, எமர்சன், 38, அகஸ்டஸ், 39, பிரசாத், 35, லாங்லெட், 19 ஆகியோர், விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்றனர். ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகை சுற்றி வளைத்து, ஐந்து பேரையும் சிறை பிடித்தனர். போதைப்பொருள் (பிரவுன் சுகர்) கடத்தி வந்ததாக வழக்கு பதிந்து, அவர்களையாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.அவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம், தங்கச்சிமடம், ...

கூட்டணிக்கு அச்சாரமிட்டால் மகிழ்ச்சி: மண விழாவில் கருணாநிதி

Posted:

''பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் இல்ல திருமணம், தேர்தல் கூட்டணிக்கு அச்சாரம் ஆக அமைந்தால் மகிழ்ச்சியே,'' என, தி.மு.க., தலைவர் கருணா நிதி தெரிவித்தார்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மகள் வயிற்றுப் பேரன் ப்ரித்தீவன்; பேத்தியும், அன்புமணி மகளுமான சம்யுக்தா ஆகியோர் திருமணம், மாமல்லபுரத்தில் நேற்று காலை 10:00 மணிக்கு நடந்தது.இதில் துணைவி ராசாத்திஉடன் பங்கேற்ற தி.மு.க., தலைவர் கருணாநிதி, மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:என்னை, முன்னாள் முதல்வர் என்று கூறிய மணமக்கள், என்னை, தாத்தா என்று கூறியிருந்தால், மிக பெருமை அடைந்திருப் பேன். எனக்கு உடல் நலக் குறைபாடு இருந்தாலும், ...

நிபந்தனை ஜாமினால் பொது நிகழ்ச்சியை தவிர்த்த ஜெ.,

Posted:

நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளதால், ஜெயலலிதா, போயஸ் கார்டனில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் படத்திற்கு மலர் துாவி, மரியாதை செலுத்தினார்.பசும்பொன் முத்துராமலிங்க தேவரின், 107ம் ஆண்டு ஜெயந்தி விழா, பல்வேறு அமைப்புகள் சார்பில், நேற்று கொண்டாடப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில், முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினர்.சென்னை, நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு கீழே, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு, அ.தி.மு.க., ...

தமிழக அரசு போட்ட அவதூறு வழக்குகள் : இடைக்கால தடை வாங்கினார் சாமி

Posted:

பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமிக்கு எதிராக தொடர்ந்து உள்ள கிரிமினல் அவதுாறு வழக்குகளை விசாரிக்க, உச்ச நீதிமன்றம் நேற்று, இடைக்காலத் தடை விதித்துள்ளது.கடந்த சில வாரங்களுக்கு முன், ஜெய லலிதா, தமிழக முதல்வராக இருந்த போது, பா.ஜ., தலைவர் சுப்பிரமணியன் சாமி, 'இலங்கையில் பிடிபட்ட தமிழக மீனவர்களை ராஜபக் ஷேவிடம் சொல்லி மீட்டேன்; அவர்களின் படகுகளை பிடித்து வைத்துக் கொள்ளவும் சொன்னேன்' என, சொல்லியிருந்தார். இதற்கு எதிராக சாமியை குற்றம்சாட்டி, ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.ெவளியிட்டதால் வழக்கு:இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு, சாமியும் ...

ஞானதேசிகன் ராஜினாமா தகவல் தமிழக காங்கிரஸ் உடையுமா?

Posted:

புதிய உறுப்பினர் அட்டை சம்பந்தமான பிரச்னையில், டில்லி மேலிட உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனிடம், ராஜினாமா கடிதம் பெறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.நாடு முழுவதும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகளை துவக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் டில்லியில் சமீபத்தில் நடந்தது. அதில், சோனியா, ராகுல் படங்கள் கொண்ட உறுப்பினர் அட்டையை மட்டும் வழங்க வேண்டும் என, மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழக காங்கிரஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர் அட்டையில், காமராஜர், மூப்பனார் படங்கள் இடம் பெற்றிருந்தன. ...

இன்று பெரியாறு அணை 136 அடியை எட்டும்

Posted:

கூடலுார்:பெரியாறு அணையில் 35 ஆண்டுகளுக்குப்பின் 13 ஷட்டர்களுக்கு முன் தண்ணீர் தேங்கியது. இன்று 136 அடியை எட்டும் என்பதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கலாம், என கடந்த மே 7ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதை அமல்படுத்தும் வகையில் கடந்த ஜூலை 17ல் சுப்ரீம் கோர்ட் பரிந்துரைத்த மூவர் குழுவினர் அணையை ஆய்வு செய்து அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்களை இறக்கினர். அணையில் 142 அடி தண்ணீர் தேக்கும் வகையில் 35 ஆண்டுகளுக்குப்பின் 13 ஷட்டர்களையும் இறக்கியதால் தமிழக விவசாயிகள் பெரும் ...

கருப்புப் பணம்: 50 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு ஏன் மீட்கவில்லை? வெங்கையா நாயுடு

Posted:

போபால்:கருப்புப் பணத்தை மீட்பது எளிமையானது என்றால், பிறகு ஏன் கடந்த 50 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான அரசு மீட்கவில்லை என்றும் கருப்புப் பண விவகாரத்தில் பிரச்னை எழுப்புகிறவர்கள்தான், உண்மையில் வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கியுள்ளவர்களைப் பாதுகாக்கிறார்கள் என்று பா.ஜ.க., மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான வெங்கையா நாயுடு குற்றம்சாட்டினார்.மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் நேற்று நடந்த பா.ஜ.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட வெங்கையா நாயுடு இவ்வாறு பேசினார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™