Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


நீதிமன்றத்தில் இளைஞர் தற்கொலை முயற்சி

Posted: 30 Oct 2014 02:05 PM PDT

சென்னையில் நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாக்கு வங்கிக்காக ஒற்றுமையைச் சீர்குலைக்க முயற்சி: மோடி அரசு மீது சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

Posted: 30 Oct 2014 02:04 PM PDT

வாக்கு வங்கி அரசியலுக்காக நாட்டு மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் முயற்சியில் நரேந்திர மோடி அரசு ஈடுபட்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டினார்.

கூடங்குளத்தில் மேலும் 4 அணு உலைகளுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Posted: 30 Oct 2014 02:01 PM PDT

கூடங்குளத்தில் புதிதாக மேலும் 4 அணு உலைகளை அமைக்க அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அனுமதி வழங்கியதை எதிர்த்துத் தொடரப்பட்ட பொது நல வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.v

மருந்துகளின் நச்சுத்தன்மை ஆராய்ச்சி: ஸ்ரீ ராமச்சந்திராவுக்கு சான்றிதழ்

Posted: 30 Oct 2014 02:00 PM PDT

மருந்துகளின் முன்நிலை நச்சுத்தன்மை குறித்து ஆராயும் மருந்தாக்கவியல், மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்துக்கான (Centre for Toxicology and Developmental Research -CEFT) மத்திய அரசின் நல் ஆய்வக செயல்முறை சான்றிதழை சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீதான வழக்குகள் வாபஸ்: நீதிமன்றத்தில் அரசாணை தாக்கல்

Posted: 30 Oct 2014 01:58 PM PDT

கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது தொடுக்கப்பட்ட 213 வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிலையங்களில் கடைகள் நடத்த ஒப்பந்தப்புள்ளி

Posted: 30 Oct 2014 01:57 PM PDT

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வணிகத்துக்கான இடம் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாகவும், அதற்காக 3,095 சதுர மீட்டர் காலியிடம் தயாராகி வருவதாகவும் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

நா.மகாலிங்கத்தின் வாழ்க்கை இளையோருக்கு வழிகாட்டும்: அப்துல் கலாம் புகழாரம்

Posted: 30 Oct 2014 01:53 PM PDT

காந்தியவாதி பொள்ளாச்சி நா. மகாலிங்கத்தின் வாழ்க்கை நம் ஒவ்வொருவருக்கும் குறிப்பாக, இளையோருக்கு வழிகாட்டும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் புகழாரம் சூட்டினார்.

போலி என்கவுன்ட்டர் வழக்கு: ஆஜராக விலக்கு கோரி அமித் ஷா மனு தாக்கல்

Posted: 30 Oct 2014 01:30 PM PDT

குஜராத் போலீஸாரால் சொராபுதீன் ஷேக், துளசிராம் பிராஜபதி ஆகியோர் போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கோரி, மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தார்.

சுவாமி மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்க இடைக்காலத் தடை

Posted: 30 Oct 2014 01:30 PM PDT

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.

"பெண்ணின் தனிப்பட்ட தகவல்களை கணவர் கோரினாலும் தர இயலாது'

Posted: 30 Oct 2014 01:29 PM PDT

ஒரு பெண்ணின் சம்பளப் பிடித்தம் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை கணவரே கேட்டாலும் வெளியிட முடியாது என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) தெரிவித்துள்ளது.

ஜாமா மசூதி துணை இமாம் பதவியேற்பு விழா: நவாஸ் ஷெரீஃபுக்கு அழைப்பு; மோடிக்கு அழைப்பில்லை

Posted: 30 Oct 2014 01:29 PM PDT

நாட்டின் மிகப்பெரிய மசூதியான ஜாமா மசூதியின் துணை இமாமாக தனது மகன் பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்ள, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு தற்போதைய இமாம் சையது அகமது புகாரி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அழைப்பு விடுக்கவில்லை.

ஐஏஎஸ் அதிகாரி அரவிந்த் மாயாராம் மீண்டும் இடமாற்றம்: மத்திய அரசு நடவடிக்கை

Posted: 30 Oct 2014 01:28 PM PDT

ஐஏஎஸ் உயரதிகாரி அரவிந்த் மாயாராம் கடந்த 15 நாள்களில் அடுத்தடுத்து வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது மத்திய அரசு வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஸா காங்கிரஸூக்கு தேர்தல் மூலம் தலைவரை நியமிக்க மேலிடம் முடிவு

Posted: 30 Oct 2014 01:26 PM PDT

காங்கிரஸ் கட்சியில் மாநில அளவிலான அனைத்துப் பதவிகளையும் உள்கட்சித் தேர்தல் நடத்தி அவற்றை நிரப்ப கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.

வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் "முரண்பாடு': அமைச்சர் ஸ்மிருதி இரானியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சந்திப்பு

Posted: 30 Oct 2014 01:25 PM PDT

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை ஆர்எஸ்எஸ் சார்புடைய அமைப்புகளும் பாஜக தலைவர்களும் சந்தித்து, நாட்டில் வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் காணப்படும் முரண்பாடுகள் குறித்து விவாதித்தனர்.

கேரளத்தில் 700 மதுக் கூடங்களை மூட நீதிமன்றம் ஒப்புதல்

Posted: 30 Oct 2014 01:24 PM PDT

கேரள மாநிலத்தில் ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்குக் கீழ் இயங்கும் ஹோட்டல்களில் உள்ள 700 மதுக் கூடங்களை (பார்) மூடுவதற்கு அந்த மாநில உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

வைகோ - ஸ்டாலின் சந்திப்பு: கட்சித் துரோகம் இல்லையா? மு.க.அழகிரி கேள்வி

Posted: 30 Oct 2014 01:14 PM PDT

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, மு.க.ஸ்டாலின் சந்தித்தது கட்சித் துரோகம் இல்லையா என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கேள்வி எழுப்பினார்.

மீனவர்கள் போராட்டம்: ரயில்கள் ரத்து

Posted: 30 Oct 2014 01:13 PM PDT

மீனவர்கள் போராட்டம் காரணமாக ராமநாதபுரம்- ராமேசுவரம் இடையே வியாழக்கிழமை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

வாக்குறுதி தவறி விட்டார் ராஜபட்ச: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

Posted: 30 Oct 2014 01:12 PM PDT

மரண தண்டனை விதிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்களையும் விடுதலை செய்வோம் என்று சொல்லிய ராஜபட்ச, இப்போது வாக்குறுதி தவறிவிட்டதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

பேருந்துக்கு தீ வைப்பு, ரயில் தண்டவாளம் சேதம்

Posted: 30 Oct 2014 01:11 PM PDT

ராமேசுவரம் மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையைக் கண்டித்து தங்கச்சிமடம் பகுதியில் மறியல், கடையடைப்பு நடந்தது. அரசுப்பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது. ரயில் தண்டவாளமும் சேதப்படுத்தப்பட்டது.

இலங்கையில் மீனவர்களுக்கு மரண தண்டனை: தமிழகத் தலைவர்கள் கண்டனம்

Posted: 30 Oct 2014 01:09 PM PDT

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்

இலங்கைத் தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

Posted: 30 Oct 2014 01:07 PM PDT

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக, சென்னையில் இலங்கை தூதரகத்துக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

கன்னியாகுமரியிலிருந்து காரில் நாடு முழுவதும் பயணம்: மகாராஷ்டிர மருத்துவரின் புதிய முயற்சி

Posted: 30 Oct 2014 01:05 PM PDT

கன்னியாகுமரியிலிருந்து கார் மூலம் இந்தியா முழுவதும் 18 ஆயிரத்து 200 கி.மீ. சாதனைப் பயணத்தை மகாராஷ்டிர மாநிலம், ஜலகோன் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் சவுத்ரி (53) வியாழக்கிழமை தொடங்கினார்.

ராமதாஸ் இல்லத் திருமண விழாவில் கருணாநிதி

Posted: 30 Oct 2014 01:00 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார்.

ராஜேந்திர சோழன் ஆயிரமாவது ஆண்டு விழா: கருத்தரங்கம், பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். முடிவு

Posted: 30 Oct 2014 12:56 PM PDT

ராஜேந்திர சோழன் அரியணை ஏறியதன் ஆயிரமாவது ஆண்டு விழாவை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாட ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) முடிவு செய்துள்ளது.

இந்த நாளில் அன்று (31.10.1985); ஏழாவது திட்ட முதலீடு; கூடுதல் நிதி திரட்ட யோசனை

Posted: 30 Oct 2014 12:50 PM PDT

செய்ய வேண்டியது அதிகம்...

Posted: 30 Oct 2014 12:47 PM PDT

உலக வங்கி கடந்த புதன்கிழமை வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், தொழிலை சிக்கல் இல்லாமல் நடத்திச் செல்வதற்கு உகந்த நாடுகளின் தரவரிசையில் மொத்தம் உள்ள 189 நாடுகளில் இந்தியா 142-ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

சாஸ்திரி - சிரிமாவோ ஒப்பந்தத்தின் ரணம்

Posted: 30 Oct 2014 12:46 PM PDT

இலங்கையில் 9,75,000 இந்திய வம்சா வளியினர், பிரஜா உரிமை இல்லாமல், நாடற்றவர்களாக நாதியற்று இருந்த காலத்தில், இதற்கு ஒரு தீர்வு காண வேண்டுமென்பதற்காக, சாஸ்திரி - சிரிமாவோ ஒப்பந்தம் போடப்பட்டது.

நழுவுகிறது வாய்ப்பு!

Posted: 30 Oct 2014 12:45 PM PDT

கடந்த மாதம் நடைபெற்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இந்த முடிவுகள் காட்டும் புள்ளிவிவரங்கள், தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. முதல் தாள், இரண்டாம் தாள் இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்கள் 89 பேர் மட்டுமே!

கருப்புப் பணம்: அரசின் நிலையும் சட்ட முறையும்

Posted: 30 Oct 2014 12:42 PM PDT

கருப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியலை வெளியிடாத மத்திய அரசை அக்டோபர் 28-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விளாசித்தள்ளிய விதம், நூறு சவுக்கடி அல்லது நூறு வெங்காயம் சாப்பிடுவது எனும் ஏதாவதொரு தண்டனையைப் பெற வேண்டிய நபர், இரண்டையும் ஏற்க நேரிட்ட கதையாக இருக்கிறது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

Posted: 30 Oct 2014 12:39 PM PDT

பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 12-ஆம் தேதியும் தொடங்கும் என பள்ளிக் கல்வி இயக்ககம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் பொதுவான தேர்வாக நடைபெறும் இந்த் தேர்வுகளை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூட்டணி ஏற்பட்டால் மகிழ்ச்சி: கருணாநிதி, வைகோ

Posted: 30 Oct 2014 12:39 PM PDT

மதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டால் மகிழ்ச்சி அடைவேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

தில்லியில் ஆட்சி அமைக்கும் விவகாரம்: நவம்பர் 11 வரை அவகாசம் வழங்கியது உச்ச நீதிமன்றம்

Posted: 30 Oct 2014 12:33 PM PDT

தில்லியில் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் முடிவெடுக்க பிரதேச துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கு உச்ச நீதிமன்றம் நவம்பர் 11-ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. மேலும், இது தொடர்பாக "ஆம் ஆத்மி' கட்சி தொடர்ந்த வழக்கையும் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலைமையாசிரியர்கள் நியமனம்

Posted: 30 Oct 2014 12:32 PM PDT

தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகள் உள்பட 248 பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பணியிடங்கள் வியாழக்கிழமை நிரப்பப்பட்டன.

ரூ.47,000 கோடியை திருப்பிச் செலுத்த சஹாராவுக்கு உத்தரவிட வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் "செபி' மனு

Posted: 30 Oct 2014 12:31 PM PDT

நீதிமன்ற உத்தரவுப்படி முதலீட்டாளர்களுக்கு அளிக்க வேண்டிய ரூ.47,000 கோடியை குறிப்பிட்ட கால வரம்புக்குள் திருப்பியளிக்குமாறு சஹாரா குழுமத்துக்கு உத்தரவிடுமாறு, உச்ச நீதிமன்றத்தை பங்குப் பரிவர்த்தனை வாரியம் (செபி) கோரியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை ரூ. 2.50 குறைகிறது?

Posted: 30 Oct 2014 12:29 PM PDT

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 வெள்ளிக்கிழமை (அக்.31) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என்று தெரிகிறது. இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

"பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் கர்நாடகம் தோல்வி'

Posted: 30 Oct 2014 12:22 PM PDT

கர்நாடகத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதிலும், பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதிலும் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வியடைந்துள்ளதாக அந்த மாநில பாஜக மகளிரணி குற்றம்சாட்டியது.

இலங்கை நிலச்சரிவு: மோடி இரங்கல்

Posted: 30 Oct 2014 12:22 PM PDT

இலங்கையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.

கருப்புப் பணம்: பிரச்னை எழுப்புகிறவர்களே பாதுகாக்கிறார்கள்- வெங்கய்ய நாயுடு

Posted: 30 Oct 2014 12:21 PM PDT

"கருப்புப் பண விவகாரத்தில் பிரச்னை எழுப்புகிறவர்கள்தான், உண்மையில் வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கியுள்ளவர்களைப் பாதுகாக்கிறார்கள்' என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான வெங்கய்ய நாயுடு குற்றம்சாட்டினார்.

மேற்கு வங்க மோதல் சம்பவம்: உண்மையைக் கண்டறியச் சென்ற பாஜக குழுவினர் கைது

Posted: 30 Oct 2014 12:20 PM PDT

மேற்குவங்க மாநிலம், பீர்பூம் மாவட்டத்திலுள்ள மக்ரா கிராமத்தில் திரிணமூல் காங்கிரஸ்-பாஜக தொண்டர்கள் இடையேயான மோதல் குறித்து ஆய்வு நடத்த வியாழக்கிழமை சென்ற பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையிலான மூவர் குழுவினரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

"ஒற்றுமை ஓட்டம்': பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

Posted: 30 Oct 2014 12:16 PM PDT

நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் மறைந்த சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் விதமாக, தில்லியில் "ஒற்றுமை ஓட்டம்' நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை காலை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

ஹெலிகாப்டர் பேரம்: கெய்தான் ஜாமீன் மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 30 Oct 2014 12:11 PM PDT

ஹெலிகாப்டர் பேர வழக்கில் கைதாகியுள்ள தொழிலதிபர் கௌதம் கெய்தானின் ஜாமீன் மனு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், அமலாக்கப் பிரிவு இயக்ககத்துக்கும் தில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கருப்புப் பணம்: முழுப் பட்டியலை வெளியிட துணிச்சல் இருக்கிறதா? பாஜகவுக்கு திக்விஜய் சிங் கேள்வி

Posted: 30 Oct 2014 12:10 PM PDT

வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களின் முழுப் பட்டியலை வெளியிடுவதற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு துணிச்சல் இருக்கிறதா? என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பினார்.

இந்திரா காந்தியின் தியாகத்தை மோடி அரசு புறக்கணிக்கிறது: சசி தரூர் கண்டனம்

Posted: 30 Oct 2014 12:09 PM PDT

மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் தியாகத்தை நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு புறக்கணிக்கிறது என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் குற்றம்சாட்டினார்.

இரோம் ஷர்மிளா மீதான வழக்கு: முன்னாள் அதிகாரி சாட்சியம்

Posted: 30 Oct 2014 12:08 PM PDT

பிரபல மனித உரிமை ஆர்வலர் இரோம் ஷர்மிளா மீதான தற்கொலை முயற்சி வழக்கில், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஜி.எல்.மேத்தா, தில்லி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சாட்சியம் அளித்தார்.

வன்முறையில் இறந்தவர்களுக்கான நிவாரணம் ரூ. 5 லட்சமாக அதிகரிப்பு

Posted: 30 Oct 2014 12:07 PM PDT

வகுப்புக் கலவரம், தீவிரவாதிகள் தாக்குதல் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகையை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் பாஜக அரசு இன்று பதவியேற்பு: புறக்கணிக்க சிவசேனை முடிவு

Posted: 30 Oct 2014 12:05 PM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக தலைமையிலான புதிய அரசு வெள்ளிக்கிழமை பதவியேற்கிறது. இந்த நிகழ்ச்சியில் சிவசேனைக் கட்சியினர் பங்கேற்க மாட்டார்கள் எனத் தெரிகிறது.

பொருளாதாரத் தடைகளை உடனடியாக நீக்க ஈரான் வலியுறுத்தல்

Posted: 30 Oct 2014 12:01 PM PDT

அணு ஆராய்ச்சி நிறுத்தம் தொடர்பான உடன்படிக்கைக்கு முன்னதாக, தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை உடனடியாக முற்றிலும் நீக்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியிருக்கிறது.

பாகிஸ்தான் அரசை எதிர்த்து வந்த காத்ரி கனடாவுக்குத் திடீர் பயணம்

Posted: 30 Oct 2014 12:00 PM PDT

பாகிஸ்தான் அரசு விலக வலியுறுத்தி தனது ஆதரவாளர்களுடன் கடந்த இரண்டு மாதங்களாகத் தலைநகரை முற்றுகையிட்ட பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் கட்சித் தலைவர் தாஹிருல் காத்ரி, திடீரென தனது போராட்டத்தைக் கைவிட்டு கனடா சென்றுள்ளார்.

பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்: 6 பயங்கரவாதிகள் சாவு

Posted: 30 Oct 2014 12:00 PM PDT

பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த பழங்குடியினப் பகுதியில், குடியிருப்பு ஒன்றின் மீது அமெரிக்க ஆளில்லா விமானம் வியாழக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது சுவீடன்: இஸ்ரேல் கடும் எதிர்ப்பு

Posted: 30 Oct 2014 11:59 AM PDT

பாலஸ்தீனத்தை, தனி நாடாக சுவீடன் அங்கீகரித்துள்ளது.

இலங்கை நிலச் சரிவில் புதைந்த 192 பேர் பலியானதாக அச்சம்

Posted: 30 Oct 2014 11:57 AM PDT

இலங்கையில், பலத்த மழை காரணமாக புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலச் சரிவில் புதையுண்ட 192 தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் உயிரிழந்திருப்பார்கள் என அஞ்சப்படுகிறது.

"பி-நோட்' மூலம்  ரூ. 2.22 லட்சம் கோடி முதலீடு

Posted: 30 Oct 2014 11:55 AM PDT

வெளிநாடுகளிலிருந்து முதலீடு செய்வதற்கான பங்கெடுப்புக் குறிப்புகள் (பார்ட்டிஸிபேட்டரி நோட் அல்லது பி-நோட்) மூலம் இந்திய நிதிச் சந்தையில் ரூ. 2.22 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் செப்டம்பர் மாதத்தில் நடைபெற்றதாக இந்திய பங்கு-பரிவர்த்தனை வாரியம் (செபி) வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது. இதன் விவரம்:

மாருதி சுஸூகி லாபம் 28% அதிகரிப்பு

Posted: 30 Oct 2014 11:53 AM PDT

இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகியின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 28 சதவீதம் அதிகரித்து, ரூ. 862.54 கோடியாக உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏசிசி நிறுவனத்தின் காலாண்டு லாபம் ரூ.192 கோடி

Posted: 30 Oct 2014 11:51 AM PDT

சிமென்ட் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஏசிசி நிறுவனத்தின் ஜூலை-செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 62 சதவீதம் அதிகரித்து, ரூ. 192.60 கோடியாக உள்ளது என்று அந்நிறுவனம் கூறியது.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வருவாய் ரூ. 14,888 கோடி

Posted: 30 Oct 2014 11:47 AM PDT

தனியார் துறையில் இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி இரண்டாம் காலாண்டில் மொத்த வருவாயாக ரூ. 14,888.95 கோடியைப் பெற்றிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

90 ஆண்டுகளுக்கு பிறகு: ஆஸ்திரே-யாவுக்கு எதிராக தொடர்ந்து 3 சதம்; யூனிஸ் கான் சாதனை

Posted: 30 Oct 2014 11:42 AM PDT

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தானின் யூனிஸ் கான், அஸôர் அலி இருவரும் சதம் அடித்தனர்.

ஐஎஸ்எல்: கேரளத்துக்கு முதல் வெற்றி

Posted: 30 Oct 2014 11:39 AM PDT

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் சச்சின் உரிமையாளராக உள்ள கேரள அணி, 2-1 என்ற கோல் கணக்கில் புணேயை வீழ்த்தி, இந்தத் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

களத்துக்கு வெளியே...

Posted: 30 Oct 2014 11:38 AM PDT

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) தொடரில் அங்கம் வகிக்க வேண்டும், சொந்தமாக ஒரு கால்பந்து அணியை வாங்க வேண்டும் என்பது என் விருப்பம்.

லோகேஷ் ராகுல் சதம்: தெற்கு மண்டலம் முன்னிலை

Posted: 30 Oct 2014 11:36 AM PDT

மத்திய மண்டல அணிக்கு எதிரான துலீப் டிராபி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் இறுதிச் சுற்றில், லோகேஷ் ராகுல் சதம் அடிக்க, தெற்கு மண்டலம் அணி முன்னிலை பெற்றுள்ளது.

உலக பில்லியர்ட்ஸ்: பங்கஜ் அத்வானி சாம்பியன் மூன்றாவது முறையாக இரு பிரிவுகளிலும் பட்டம்

Posted: 30 Oct 2014 11:36 AM PDT

உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரின் டைம் ஃபார்மட்டில், இந்தியாவைச் சேர்ந்த இளம் வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டம் வென்றார்.

ரோகித், மணீஷ் பாண்டே சதம்: இந்தியா "ஏ' வெற்றி

Posted: 30 Oct 2014 11:35 AM PDT

இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ரோகித் சர்மா, மணீஷ் பாண்டே சதம் அடித்து கை கொடுக்க, இந்திய "ஏ' அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தூய்மை இந்தியா திட்டம்: பிறந்த நாளில் தொடங்குகிறார் கமல்ஹாசன்

Posted: 30 Oct 2014 10:52 AM PDT

தூய்மை இந்தியா திட்டத்தின் முதல் கட்டப் பணியை நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறார்.

36 ஆண்டுகளுக்குப் பிறகு 136 அடியை எட்டும் முல்லைப் பெரியாறு அணை

Posted: 30 Oct 2014 10:49 AM PDT

கடந்த 36 ஆண்டுகளுக்குப் பிறகு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடிக்கு மேல் தேக்க இருப்பதால், தமிழக விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம்

Posted: 30 Oct 2014 10:48 AM PDT

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் 7-ஆம் நாளான வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. மூலவர் சுப்பிரமணிய சுவாமி தங்கக் கவசத்தில் அருள்பாலித்தார்.

மீண்டும் 100 அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்

Posted: 30 Oct 2014 10:45 AM PDT

நிகழாண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை மாலை 100 அடியை எட்டியது. கர்நாடகம், தமிழகத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், அதன் துணை நதிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது.

தேவரின் கனவை நனவாக்கியது திமுகதான்: மு.க.ஸ்டாலின்

Posted: 30 Oct 2014 10:43 AM PDT

தேவரின் கனவை நனவாக்கியது திமுகதான் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் மரியாதை: அமைச்சர்கள் பங்கேற்பு

Posted: 30 Oct 2014 10:36 AM PDT

ராமநாதபுரம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வியாழக்கிழமை மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தமிழகம் முழுவதும் டெல்டா மாவட்டங்களில் யூரியா தட்டுப்பாடு: விவசாயிகள் கடும் அவதி

Posted: 30 Oct 2014 08:08 AM PDT

கடலூர் மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் காவிரி டெல்டா மாவட்டங்களில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை பெய்து நின்று போய் இருக்கும் நேரத்தில் சம்பா நெற் பயிர்களுக்கு யூரியா

பசும்பொன்னில் போட்டி போட்டு அன்னதானம்

Posted: 30 Oct 2014 07:46 AM PDT

பசும்பொன் தேசிய கழகம் சார்பில், நிறுவன் என்.வெள்ளைச்சாமி தேவர் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானத்தை, தமிழக முதல்வர் ஓ.பன்னீ்ர் செல்வம் துவக்கி வைத்து பாராட்டினார். ப

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து  ஞானதேசிகன் ராஜினாமா

Posted: 30 Oct 2014 07:35 AM PDT

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஞானதேசிகன் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து அவர் கூறுகையில், கட்சியில்

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற பெண் சாவு: போலி மருத்துவர் கைது

Posted: 30 Oct 2014 07:30 AM PDT

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற உயிரிழந்ததை அடுத்து, அந்த மருத்துவமனையில் பணியாற்றிய போலி மருத்துவரை

கூட்டணிக்காக திமுகவுடன் ஆயுள்கால ஒப்பந்தம் போடவில்லை: தொல்.திருமாவளவன் பேட்டி

Posted: 30 Oct 2014 07:23 AM PDT

திமுக கூட்டணியில் தொடர்ந்து இருப்போம் என அக்கட்சியுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆயுள்கால ஒப்பந்தம் போடவில்லை என்று

விருதுநகரில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

Posted: 30 Oct 2014 07:21 AM PDT

விருதுநகர் மாவட்ட பகுதிகளில் உள்ள மதுபான கடைகளுக்கு தேவர் ஜயந்தி விழாவை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விருதுநகர் கட்டையாபுரம் பகுதியில் மதுப்பாட்டில்களை அனுமதியின்றி

மீனவர்களுக்கு தூக்கு தண்டனை: கடும் அதிர்ச்சி அளிப்பதாக மோடிக்கு பன்னீர் செல்வம் கடிதம்-மேல் முறையீடு செய்வதாக வெளியுறவுத்துறை உறுதி

Posted: 30 Oct 2014 06:47 AM PDT

கடந்த 2011ம் ஆண்டு மீன்பிடித்துக்கொண்டிருந்த தங்கச்சிமடத்தைச் சேர்ந்த லாங்லெட், பிரசாத், அகஸ்டஸ், எமர்சன், வில்சன் ஆகிய 5 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால்

எம்.எல்.வி நினைவு இசை நிகழ்ச்சி - நேரலை

Posted: 30 Oct 2014 06:00 AM PDT

சென்னை ஆர்கே கன்வன்ஷன் செண்டர் நடத்தும் டாக்டர் எம்.எல்.வசந்தகுமாரி நினைவு இசை நிகழ்ச்சியின் நேரலை

ரூ.100 கோடி வசூலை நெருங்கும் கத்தி...

Posted: 30 Oct 2014 05:55 AM PDT

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியன்று பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே வெளியானது கத்தி.

திமுக நிர்வாகி வீட்டில் 40 பவுன், ரூ.1 லட்சம் திருட்டு

Posted: 30 Oct 2014 05:45 AM PDT

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே திமுக நிர்வாகி வீட்டில் 40 பவுன் நகைகள், ரூ.1லட்சம் வியாழக்கிழமை திருட்டு போனது.

மீனவர்கள் தூக்கு விவகாரத்தில் வாக்குறுதியை மீறிவிட்டார் ராஜபட்ச; அரசு நடவடிக்கை எடுக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted: 30 Oct 2014 05:20 AM PDT

கடந்த ஆண்டு தேவர் குருபூஜை விழாவுக்கு நான் வந்திருந்தேன். அப்போது, இங்கே இந்தியப் பிரதமராக மோடி வர வேண்டும் என மனதார பிரார்த்தனை செய்துகொண்டேன். அது இப்போது பலித்திருக்கிறது. அதற்காக இந்த முறை நன்றி செலுத்தினேன்.

காஞ்சி காமாட்சி

Posted: 30 Oct 2014 05:18 AM PDT

காஞ்சிபுரத்திலுள்ள காமாட்சியம்மன் சந்நிதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் குங்குமப் பிரசாதத்தை உடனேயே

மஞ்சள் ஆடையில் பெருமாள்

Posted: 30 Oct 2014 05:17 AM PDT

திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் சாலையில் ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் பெருமாள் கோயில் குரு பரிகாரத்திற்கு உகந்த தலம்.

மூன்றுமுக சக்தி

Posted: 30 Oct 2014 05:16 AM PDT

விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அம்பர் மாகாளம் தலத்தில் சக்தி தேவி மூன்று முகங்களுடன்

மீனவர்களுக்கு தூக்கு தண்டனை: தங்கச்சிமடத்தில் தண்டவாளங்கள் தகர்ப்பு- தொடரும் பதற்றம்

Posted: 30 Oct 2014 05:16 AM PDT

போதைப்பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டி தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு உயர்நீதிமன்றம்

காட்சியளித்த ஈசன்

Posted: 30 Oct 2014 05:15 AM PDT

சென்னை கோயம்பேட்டில் அறம் வளர்த்த நாயகி உடனுறை குறுங்காலீஸ்வரர்

முருகனுக்கே முதல் பூஜை

Posted: 30 Oct 2014 05:14 AM PDT

விநாயகருக்கு முதல் பூஜை செய்வதே எங்கும் உள்ள நடைமுறை! ஆனால்

நல்லது செய்ய காலம் பார்க்காதீர்கள்!

Posted: 30 Oct 2014 05:13 AM PDT

இயேசு வாழ்ந்த காலத்தில், ஓய்வு நாளில் யாரும் எந்த வேலையும் செய்யக்கூடாது என்று ஒரு சட்டம் இருந்தது.

ஸ்ரீ யாக்ஞவல்கியர் ஜெயந்தி மகோத்சவம்

Posted: 30 Oct 2014 05:12 AM PDT

ஸ்ரீ யாக்ஞவல்கியர் சிறந்த யோகீஸ்வரர்! இவர் சுக்லயஜுர் வேதத்தை காயத்ரி தேவியின்

இளைஞர் கொலை எதிரொலி: வீரவநல்லூரில் 4,000 வாழைகள் வெட்டி சேதம்- போலீஸ் குவிப்பு

Posted: 30 Oct 2014 05:12 AM PDT

வீரவநல்லூர் கோட்டை வாசல்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சுரேஷ் (30). கூலித் தொழிலாளியான இவர் புதன்கிழமை கொலை செய்யப்பட்டார். கடந்த 2013 இல் வெள்ளபாண்டி கொலை செய்யப்பட்டதற்கு

புத்தாண்டு பூத்தது

Posted: 30 Oct 2014 05:11 AM PDT

ஹிஜ்ரி 1436 ஆம் ஆண்டு 26.10.2014 இல் பிறந்தது. ஹிஜ்ரி பிறந்த பின்னணியை முன்னோக்கி நன்னோக்கத்தோடு வரவேற்போம் பூக்கும் புத்தாண்டை.

வளம் தரும்  துளசி வழிபாடு

Posted: 30 Oct 2014 05:10 AM PDT

விஷ்ணுவுக்கு உகந்தது துளசி. துளசிக்கு பிருந்தை என்ற பெயரும் உண்டு. அதோடு விஷ்ணுபிரியா

பெண் குழந்தைகள் மீதான பாலியல் பலாத்காரங்களை தடுப்பதில் காங்கிரஸ் அரசு தோல்வி: பாஜக குற்றச்சாட்டு

Posted: 30 Oct 2014 05:10 AM PDT

பாலியல் பலாத்காரங்களை தடுக்க தவறிய காங்கிரஸ் அரசை கண்டித்து பெங்களூரு, ஆனந்த்ராவ் சதுக்கத்தில் காந்திசிலை எதிரே வியாழக்கிழமை பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி

அபாயம் வராமல் இருக்க உபாயம்!

Posted: 30 Oct 2014 05:09 AM PDT

றையும்விட, தன்னிகரில்லாத - மிக உயர்ந்த குறிக்கோளுக்குரிய பேரின்பப் பெருஞ் சொல்லை ஆர்வமுடன் இடைவிடாது சொல்லிக்கொண்டே...

குபேர யோகம் தரும் குடை விநாயகர்!

Posted: 30 Oct 2014 05:08 AM PDT

நாகை மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், 105 மாணலூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவாலயம் மிகவும் தொன்மை வாய்ந்தது

சங்கடங்கள் போக்கும் சங்கட் மோர்ச்சன்!

Posted: 30 Oct 2014 05:07 AM PDT

காசியில் உள்ள சங்கட் மோர்ச்சன் அனுமன் ஆலயம் பலவகைகளிலும் பெருமை வாய்ந்தது

அரனுக்கு அன்னாபிஷேகம்!

Posted: 30 Oct 2014 05:05 AM PDT

அபிஷேகப்பிரியர் சிவன்! அலங்காரப் பிரியர் விஷ்ணு! இந்த முதுமொழிக்கு ஏற்ப சிவாலயங்களில் நடைபெறும் பூஜைகளில் அபிஷேகமே முதல் இடம் பெறுகிறது.

ரயிலில் ரேசன் அரிசி கடத்தல்: போலீஸார் பறிமுதல்

Posted: 30 Oct 2014 05:00 AM PDT

காதல் தகராறில் முதியவர் வெட்டிக்கொலை

Posted: 30 Oct 2014 04:35 AM PDT

திருக்கழுகுன்றத்தை அடுத்த கொள்ளமேடு கிராமத்தில் காதல் தகராறு காரணமாக முதியவர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இருதரப்பினர் மோதிக் கொள்வதை தடுக்கும் வகையில் அப்பகுதியில்

தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை வழங்கிய இலங்கை நீதிமன்றம்: இந்திய அரசு தலையிட வைகோ வலியுறுத்தல்

Posted: 30 Oct 2014 04:33 AM PDT

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும், இதில் உடனே இந்திய அரசு தலையிட வேண்டும் என்றும் மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தங்கச்சிமடம் மீனவர்கள் போராட்டம்

Posted: 30 Oct 2014 04:25 AM PDT

ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்லெட், பிரசாந்த் ஆகிய 5 பேரும் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு,போதை

மதுரையில் தேவர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை பல ஆயிரம் பேர் பால்குடம்-முளைப்பாரி ஊர்வலம்

Posted: 30 Oct 2014 04:24 AM PDT

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு, மதுரையிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித்

தமிழக மீனவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்: மத்திய அரசு

Posted: 30 Oct 2014 04:07 AM PDT

ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்லெட், பிரசாந்த் ஆகிய 5 பேரும் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு,போதை


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™