Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பெங்களூரு சிறையில் ஜெயலலிதா 8வது நாள்: யாரையும் சந்திக்க தொடர்ந்து மறுப்பு

Posted:

பெங்களூரு : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு, இன்றுடன் எட்டு நாட்களாகிறது. ஜெயலலிதாவை சந்திக்க, லோக்சபா துணை சபாநாயகர், தமிழக அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் நேற்று வந்திருந்தனர். ஆனால், யாரையும் சந்திக்க ஜெயலலிதா மறுத்து விட்டார்.ஜெயலலிதாவை சிறை யில் அடைத்து நேற்றுடன் ஏழு நாட்களாகிவிட்டது. இன்று எட்டாவது நாள். நேற்று, தமிழகத்திலிருந்து வருகை தந்த வி.ஐ.பி.,க்களின் எண்ணிக்கை அதிகஅளவில் இருந்தது. அனுமதி இல்லை:லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி, ...

தேசத்தின் வளர்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு: ரேடியோவில் தன்னம்பிக்கை உரையாற்றி அசத்தல்

Posted:

புதுடில்லி: ''நாட்டில் உள்ள, 125 கோடி மக்களும், தங்களிடம் உள்ள பலத்தையும், திறமையையும் உணர்ந்து, அவற்றை நாட்டின் முன்னேற்றத்துக்காக பயன்படுத்த வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி, ரேடியோ மூலமாக, நாட்டு மக்களுக்கு நேற்று அழைப்பு விடுத்தார்.பா.ஜ., மூத்த தலைவரான நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்றதில் இருந்து, பல முன் மாதிரியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஏழை மக்களும் வங்கி சேவையை பயன்படுத்தும் வகையில், 'ஜன்தன்' என்ற பெயரில், மக்கள் வங்கி கணக்கு திட்டத்தை ஏற்கனவே துவக்கி வைத்தார். அடுத்த கட்டமாக, காந்தி ஜெயந்தி தினமான நேற்று முன்தினம், 'தூய்மையான ...

தமிழகத்தில் ஜிஹாதி பயங்கரவாதம்: மோகன் பாகவத் எச்சரிக்கை

Posted:

நாக்பூர்: ''தமிழகத்தில், ஜிஹாதி பயங்கரவாத செயல்கள் அதிகரித்து விட்டன; அதை தடுக்க மாநில அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர், மோகன் பாகவத் கூறினார்.மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள, ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில், விஜயதசமியை ஒட்டி நேற்று நடந்த நிகழ்ச்சியில், மோகன் பாகவத் ஆற்றிய உரை: 'மங்கள்யான்' செயற்கைக்கோளை, செவ்வாய் கிரக சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்திய இந்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு கவுரவம் ஏற்படுத்தும் விதத்தில் பதக்கங்கள் குவித்து வரும் ...

சிறையில் வசதியை எதிர்பார்க்காத ஜெ.: கூடுதல் டென்ஷனுடன் கர்நாடகா முதல்வர்

Posted:

பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பரப்பன அக்ரஹாரா சிறையில் இருப்பதால், அவருக்கு ஏற்பட்டுள்ள டென்ஷனை விட, கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு கூடுதல் டென்ஷன் ஏற்பட்டுள்ளது.சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பது தெரிந்த உடனேயே, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, மாநில உள்துறை ஆலோசகர் கெம்பய்யா, மாநில டி.ஜி.பி., பச்சாவ், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி உட்பட உயர் அதிகாரிகளை வரவழைத்தார். அவர்களிடம், ஆலோசனை நடத்திய முதல்வர், சில உத்தரவுகளை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டார்.அவை...* ...

ஜெயலலிதாவுக்கு வழங்கியது மகத்தான தீர்ப்பு: கருணாநிதி

Posted:

சென்னை: 'அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு வழங்கியது மகத்தான தீர்ப்பு; நீதி நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு கோர்ட் அளித்த தீர்ப்பு, நிச்சயம் மகத்தான தீர்ப்பு; நீதி நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. கோர்ட் மீதான நம்பிக்கை உறுதிபடுத்தப்பட்டு இருக்கிறது. ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், தீர்ப்பு கூறப்பட்ட பின் அ.தி.மு.க.,வினர் ஈடுபட்டு வரும் வன்முறை நடவடிக்கைகளால் ஏற்பட்ட இழப்பீடு தொகையை, அந்த கட்சியின் தலைமையிடமிருந்து வசூலிக்க ...

நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கும் அ.தி.மு.க: அவமதிப்பு வழக்கு போடும் தி.மு.க.,

Posted:

சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை அடைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, தமிழகம் முழுவதும், அ.தி.மு.க.,வினர் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.கடும் வாசகம்: குறிப்பாக, இரண்டு விஷயங்களை முன்வைத்து அவர்கள், தங்கள் எதிர்ப்பை பதிவு செய்கின்றனர். சொத்து குவிப்பு வழக்கை முன்னின்று நடத்திய தி.மு.க.,வுக்கு எதிராகவும், வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி மைக்கேல் டி.குன்ஹாவுக்கு எதிராகவும், கடுமையான வாசகங்களுடன் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். சென்னை மற்றும் வேலூர் மாநகராட்சிகளிலும், இந்த தீர்ப்பை ...

தமிழகத்தில் ஆளுங்கட்சி போராட்டம்: கண்காணிக்கிறது மத்திய உளவுத்துறை

Posted:

ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதித்த பின், தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் விமர்சனங்கள் குறித்து, மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தகவல் சேகரித்து வருகின்றனர்.அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தரப்பட்ட தீர்ப்பின் எதிரொலியாக, தமிழகத்தில் கடையடைப்பு, உண்ணாவிரதம், பஸ் எரிப்பு, கண்ணாடி உடைப்பு சம்பவங்கள் தொடர்கின்றன. வர்த்தகர்கள், பல்வேறு சங்கங்கள் தனித்தனியாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றன. மறைமுக நிர்ப்பந்தம் காரணமாகவும் போராட்டங்கள் தொடர்வதாகவும் புகார் ...

கொள்ளை லாபம் சம்பாதித்து பங்கு போடும் முதலாளித்துவம்

Posted:

சமீபத்தில் நடந்த தேர்தலின் போதும், அதன் பின்னரும் அரசியல் கட்சித் தலைவர்களும், அதிகாரிகளும், 'குரோனி கேப்பிட்டலிசம்' என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகிக்கின்றனர். 'குரோனி' என்பதன் பொருள், அகராதியில் நட்பு என்று சொல்லப்படுகிறது. 'குரோனி கேப்பிட்டலிசம்' என்றால் என்ன? இதை சமீப காலத்தில் உபயோகிக்க காரணம் என்ன?நம் நாட்டில், 'குரோனி கேப்பிட்டலிசம்' எந்த அளவில் உள்ளது, அரசியல்வாதிகள் ஏன் இந்த வார்த்தையை உபயோகிக்கின்றனர்? அரசு தொழிற்துறையில் இறங்கினால், லஞ்சம் தான் ஏகமாக பரவுகிறது. 'தனிப்பட்ட தொழில் முனைவோர், இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த முறையில் ...

சென்னையில் ஒரு மணி நேரம் மின் தடை: அரசிடம் அனுமதி கோர மின் வாரியம் முடிவு

Posted:

மற்ற மாவட்டங்களில், பல மணி நேரம் மின் தடையை தவிர்க்க, சென்னையில், சுழற்சி முறையில் ஒரு மணி நேரம் மின் தடை செய்வதற்கு, தமிழக அரசிடம் அனுமதி கோர, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தில், கடந்த, 2008 முதல், மின் பற்றாக்குறை நிலவுகிறது. இதை சமாளிக்க, குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கு, பல்வேறு மின் கட்டுப்பாட்டு முறைகள் அமல்படுத்தப்பட்டன.3,500 மெகாவாட் பாதிப்பு: அதன்படி சென்னையில், காலை, 8:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, சுழற்சி முறையில், இரண்டு மணி நேரம்; மற்ற பகுதிகளில் நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை, மின் தடை செய்யப்பட்டது. ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™