Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கிரானைட் முறைகேடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட்...கண்டிப்பு

Posted:

சென்னை:கனிம குவாரிகளை ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை நியமித்து, பிறப்பித்த உத்தரவை, மறுஆய்வு செய்யக் கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் நிராகரித்துள்ளது. மேலும், வழக்குச் செலவுத் தொகையாக, 10 ஆயிரம் ரூபாயை, தமிழக அரசுக்கு விதித்துள்ளது. நான்கு நாட்களில், சகாயத்துக்கு தேவையானவற்றை அரசு செய்து கொடுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை கலெக்டராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், 2011 மார்ச் முதல், 2012 மே வரை பணியாற்றியபோது, மேலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள், கிரானைட் கற்களால் ...

கறுப்பு பண முதலைகள் பட்டியல் முழுவதையும் கொடுங்க:மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted:

புதுடில்லி:''இந்தியாவில், முறைகேடாக சம்பாதித்த பணத்தை, வெளிநாடுகளில் பதுக்கியுள்ள இந்தியர்கள் பட்டியலை, முழுமையாக வெளியிடுவதில், உங்களுக்கு என்ன சிரமம் உள்ளது; அவர்களை காப்பாற்ற, நீங்கள் ஏன் முயற்சிக்கிறீர்கள்...'' என, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தத்து, ''முழு பட்டியலையும், நாளை (இன்று) காலை, கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்,'' என, அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.விசாரணை:ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில், கறுப்புப் பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்கள் குறித்து, விசாரணை நடத்தக் கோரி, பிரபல வழக்கறிஞர் ...

டில்லியில் ஆட்சி அமைக்கும் விஷயத்தில் பா.ஜனதா...குழப்பம்..! கவர்னர் மற்றும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

Posted:

புதுடில்லி :'டில்லியில், பா.ஜ., கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கலாம்' என, அம்மாநில துணை நிலை கவர்னர் நஜீப் ஜங்கிற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்' என, உச்ச நீதிமன்றத்தில் நேற்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.அதேநேரத்தில், 'ஜனநாயகத்தில், ஜனாதிபதி ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்க முடியாது. டில்லியில் புதிய அரசு அமைக்கும் விஷயத்தில், துணை நிலை கவர்னரும், மத்திய அரசும் விரைவாக செயல்படாதது சரியல்ல' என, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், டில்லியில் ஆட்சி அமைக்கும் விஷயத்தில், பா.ஜ., குழப்பமான நிலையில் இருப்பதாகவே ...

மகாராஷ்டிராவின் முதல் பா.ஜ., முதல்வராக பட்நாவிஸ் தேர்வு:வரும் 31ம் தேதி பதவியேற்கிறார்

Posted:

மும்பை:மகாராஷ்டிரா பா.ஜ., வின் சட்டசபை கட்சித் தலைவராக, தேவேந்திர பட்நாவிஸ், 44, நேற்று தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அந்த மாநிலத்தின், முதல் பா.ஜ., முதல்வராக, வரும் 31ம் தேதி பதவியேற்கிறார்.மகாராஷ்டிராவில், இம்மாதம் 15ம் தேதி, சட்டசபைத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், மொத்தமுள்ள, 288 இடங்களில், 122 இடங்களைப் பிடித்து, தனிப்பெரும் கட்சியாக பா.ஜ., உருவானது. ஆனால், பா.ஜ., பிடித்த இடங்கள், பெரும்பான்மைக்கு குறைவு என்பதால், உதிரி கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடனோ அல்லது சிவசேனா ஆதரவுடனோ, ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அரசுக்கு ஆதரவு தருவது ...

ஊழல்களை கண்டுபிடிக்க ரகசிய ஆட்கள் : ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் பகீர் தகவல்

Posted:

சென்னை :''தமிழகத்தில், இன்றும் விஞ்ஞான ரீதியாக, ஊழல்கள் நடந்து வருகிறது. இதை, ஆதாரபூர்வமாக கண்டுபிடிக்க, ரகசியமாக ஆட்களை நியமித்து உள்ளேன். தேவைப்படும்போது, இந்த தகவலை வெளியிடுவேன்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.ஆவின் பால் விலை உயர்வை, திரும்பப் பெற வலியுறுத்தி, தே.மு.தி.க., சார்பில், சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம், நேற்று நடந்தது.நஷ்டத்தை ஈடுகட்டஆர்ப்பாட்டத்துக்கு தலைமை ஏற்று, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:ஒவ்வொரு குடும்பத்திலும், பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துகின்றனர். இந்நிலையில், ஒரு லிட்டர் ...

தேர்தல் அதிகாரி மாற்றம் தி.மு.க.,வுக்கு வெற்றி

Posted:

''தமிழக தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டது, தி.மு.க.,வுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி,'' என திருவாரூரில் ஸ்டாலின் தெரிவித்தார்.திருவாரூர் மாவட்டத்தில், தி.மு.க., பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலர் பூண்டி கலைச்செல்வன் தலைமையில் நேற்று முன்தினம், நடந்தது.கூட்டத்தில், ஸ்டாலின் பேசியதாவது:தி.மு.க., ஆய்வு கூட்டத்தின்போது கட்சி சாராத ஒரு மாணவனிடம் கருத்து கேட்டபோது, 'சமச்சீர் கல்விக்குக் காரணமான தி.மு.க., தான் எப்போதும், மக்கள் ஆட்சியாக இருக்கும்' என்றார். இளைஞரணியினர், 144 தடை உத்தரவு காரணமாகத்தான் லோக்சபா தேர்தலில், தி.மு.க., தோல்வியுற்றது என்று ...

கனிமொழியை சந்திக்க மோடி மறுப்பு

Posted:

ராஜ்யசபா தி.மு.க., தலைவர் கனிமொழி எம்.பி.,யை, பிரதமர் மோடி சந்திக்க நேரம் ஒதுக்க மறுப்பதால், காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு, தி.மு.க., அறிவித்த நிதியை அளிக்க முடியாமல் தவிக்கிறது.காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்கு, அனைத்துத் தரப்பி னரும் உதவ வேண்டும் என, பிரதமர் மோடி வேண்டு கோள் விடுத்திருந்தார்.நேரில் வழங்க...:இதையடுத்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி, செப்., 13ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ''பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று, காஷ்மீர் வெள்ள பாதிப்புக்கு உதவ, பிரதமர் நிவாரண நிதிக்கு, தி.மு.க., சார்பில், 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும். ராஜ்யசபா ...

வடகிழக்கு மாநிலங்களை புறக்கணித்தால் மீண்டும் ஒரு கார்கில் போர் உருவாகும்

Posted:

புதுடில்லி ;''அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளவில்லை என்றால், கார்கில் போர் போன்ற மிகப் பெரிய அபாயம் ஏற்படும்,'' என, மாநில பழங்குடியின மக்கள் நலத்துறை அமைச்சர், காலிகோ புல் தெரிவித்துள்ளார்.டில்லியில், மாநில பழங்குடியின மக்கள் நலத்துறை அமைச்சர்களின் கூட்டம், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்றனர். அதில் பேசிய, அருணாச்சல பிரதேச மாநில பழங்குயின மக்கள் நலத்துறை அமைச்சர், காலிகோ புல், தங்கள் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து ...

ஸ்ரீரங்கத்தில் தேர்தல் கூடாது டில்லியில் புதிய கோரிக்கை?

Posted:

'சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடக ஐகோர்ட்டில், மேல்முறையீடு செய்திருப்பதால், அந்த முடிவு தெரியும்வரை, ஸ்ரீரங்கம் தொகுதியில், இடைத்தேர்தல் நடத்தக் கூடாது' என்று, தலைமைத் தேர்தல் கமிஷனில், அ.தி.மு.க., சார்பில் கோரிக்கை வைத்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்களான, கிருஷ்ணமூர்த்தி மற்றும் ராஜாராமன் ஆகிய இருவரும், நேற்று, தலைமைத் தேர்தல் கமிஷனுக்கு சென்று, ஒரு மனு அளித்தனர். அதில், 'சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, ஜெயலலிதா பதவியிழந்து, ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனாலும், ஸ்ரீரங்கம் தொகுதியில், தேர்தல் நடத்துவது குறித்த ...

பயங்கரவாத முகாம்களை அழிக்க உடனடி நடவடிக்கை: ராஜ்நாத் சிங் உத்தரவு

Posted:

புதுடில்லி:மேற்கு வங்கத்தில் இயங்கி வரும் ஜமாத்-உல்-முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் முகாம்களை அழிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.ஜமாத்-உல்-முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 20 முதல் 30 குழுக்கள் நாடு முழுவதும் பரவியிருப்பதாக பர்த்வானில் விசாரணை மேற்கொண்டு வரும் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, மேற்கு வங்கம், அசாம், தென் பகுதிகளில் பயங்கரவாதிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.மேற்கு வங்க மாநிலம், பர்த்வான் மாவட்டத்தில் உள்ள இல்லத்தில் கடந்த 2-ஆம் தேதி ...

உ.பி,.யில் அகிலேஷ் - முலாயம் மோதல்

Posted:

லக்னோ:சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், 80 தொகுதிகளை கொண்ட உ.பி.,யில், இரண்டு இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆறு இடங்களில் ஆளும் சமாஜ்வாதி கட்சியும், ஒரு இடத்தில், பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான அப்னா தளமும், 71 தொகுதிகளில், பா.ஜ.,வும் வெற்றி பெற்றது. இந்த அசுரத்தனமான வெற்றிக்கு, மோடியின் செல்வாக்கு ஒரு காரணமாக இருந்த போதிலும், ஆளும் சமாஜ்வாதி அரசு மீதான அதிருப்தி தான் முக்கிய காரணமாக உள்ளது.முறைகேடு:இதனால், ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற விரும்பும் முதல்வர் அகிலேஷ் யாதவ், சில மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்தார். முதற்கட்டமாக, இணை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™