Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி!

Posted: 28 Oct 2014 03:07 PM PDT

ஈரானில் கற்பழிக்க முயன்றவரை கொலை செய்ததற்காக தூக்கிலிடப்பட்ட ரெய்ஹெனே ஜப்பாரி எனும் பெண் தனது தாய்க்கு இறுதியாக உருக்கமான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார். குரல் செய்தியாக பதிவு செய்யப்பட்டிருந்த ரெய்ஹெனே ஜப்பாரியின் செய்தியில், 'அன்புள்ள ஷோலே, நான் எனது வாழ்க்கையின் இறுதி பக்கத்தை அடைந்துவிட்டேன் என்பதை நீயாகவே ஏன் எனக்கு தெரிவிக்கவில்லை. இந்த விஷயம் எனக்கு தெரியவேண்டுமென உனக்கு தோன்றவில்லையா? நீ சோகமாக இருப்பது என்னை எவ்வளவு வெட்கப்பட செய்கிறது என்பது உனக்கு தெரியுமா? அன்று இரவு ...

இனிமேல் எங்களை நாங்களே வீடியோ எடுத்த்க்கொள்ளுவோம்..

Posted: 28 Oct 2014 02:35 PM PDT

இனிமேல் எங்களை நாங்களே வீடியோ எடுத்த்க்கொள்ளுவோம்.
உங்களுடைய உதவி எங்களுக்கு தேவையில்லை.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஏன் ...ஏன் ....என்னுயிரே ?

Posted: 28 Oct 2014 11:02 AM PDT

ஏன் ...ஏன் ....என்னுயிரே ?

என்ன ஆச்சு ?

இன்றைய பதிவுகள் 1 மணி 30 நிமிடம் அதிகமாகவே காட்டுகின்றனவே ?

ரமணியன்

நல்லவைக்குத் தடையில்லை!

Posted: 28 Oct 2014 10:58 AM PDT

ஓர் இஸ்லாமியத் துறவி இருந்தார். அவர் ஆண்டவனின் பெரும் பக்தர். நாள் ஒன்றுக்கு, ஐந்து முறை தவறாமல் வழிபாடு செய்வார். ஒருநாள் அவருக்கு ஏற்பட்ட களைப்பால் தூங்கிவிட்டார். வழிபாட்டு நேரம் வரவே யாரோ அவரைத் தட்டி எழுப்பினார்கள். "எழுந்திரு! வழிபாட்டுக்கு நேரமாகிவிட்டது!' என்று நினைவு படுத்தினார்கள். துறவி எழுந்து உட்கார்ந்தார். தம்மைத் தட்டி எழுப்பியவருக்கு நன்றி கூறி, "அன்பரே! உங்கள் இந்த உதவிக்கு என்ன கைமாறு செய்தாலும் பற்றாது. என் வழிபாட்டு நேரம் தவறி இருந்தால் என்ன ஆகியிருக்கும், ஆமாம் தங்கள் ...

அக்கா

Posted: 28 Oct 2014 10:51 AM PDT

அம்மா என்று சொன்னபோது
எனக்கு அதிகம் அர்த்தம் புரியவில்லை,
நான் குழந்தை என்பதாலோ என்னவோ?

ஆயினும் என்னை உன் நெஞ்சில் புதைத்து
அழாதே தம்பி என்று சொன்னபோது
உணர்கிறேன் நான் அம்மாவின் பாசத்தை!!

முதல் குழந்தை பெண்னெனில்
இரண்டாம் குழந்தைக்கு இரு தாய்,
உணர்கிறேன் அக்கா உன் அன்பில்...

கறுப்பு பணம் பதுக்கிய அனைவரின் பெயரையும் நாளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Posted: 28 Oct 2014 10:17 AM PDT

புதுடெல்லி, அக். 28- வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் மூவரை பற்றிய விவரங்களை மத்திய அரசு நேற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இப்பட்டியலில் 800 பேர் இடம்பிடித்திருந்த நிலையில் 136 பேர் கொண்ட பட்டியலை மத்திய அரசு நேற்று அளிக்கும் என்று கூறப்பட்ட நிலையில், மூன்று பேர் கொண்ட பட்டியலை மட்டும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, வெளிநாடுகளில் பணம் பதுக்கியவர்களை காப்பாற்ற எதற்காக நீங்கள் தடுப்பு குடையை உருவாக்குகிறீர்கள் ...

முக்கியமான பிரச்சனை

Posted: 28 Oct 2014 10:16 AM PDT

முக்கியமான பிரச்சனை  1. பெற்றோர்கள் முன் உள்ள முக்கியமான பிரச்சனை , குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி . குழந்தைகளை டி (Tea ) விற்க அனுப்பி , அவர்களை   Modi மாதிரி உருவாக்கலாம் அல்லது  IIT இக்கு அனுப்பி  , கேஜ்ரிவால் மாதிரி உருவாக்கலாம்  அல்லது  வெளி நாட்டுக்கு அனுப்பி ,ஒன்றும் பண்ண முடியா ராகுல் காந்தி ஆக்கலாம்  2. விபரீத எண்ணங்கள்  சரியான பெண்ணை பின் தொடர்ந்து , ராபர்ட் வதேரா வாகஆக்கலாம்  அல்லது  தவறான பெண்ணை பின் தொடர்ந்து , விஜய் மல்லியா ஆகலாம்  அல்லது  பல பெண்களை பின் தொடர்ந்து ...

ஷிவானிஸ்ரீ - புகைப்படங்கள்!

Posted: 28 Oct 2014 10:14 AM PDT

இதுவரை நான் மட்டும் ரசித்து வந்த இந்த குட்டி தேவதையின் புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்!

தமிழ் மாத பெயர்கள் சூரிய மாதம் மற்றும் சந்திர மாதம்

Posted: 28 Oct 2014 10:05 AM PDT

சூரிய மாதங்கள் --தமிழில் மேடம் , விடை , ஆடவை , கடகம் மடங்கல் கன்னி , துலை, நளி சிலை சுறவம் கும்பம் , மீனம் . சந்திர மாதங்களை நாம் அறிவோம் சித்திரை , வைகாசி , ஆனி, ஆடி , ஆவணி , புரட்டாசி , ஐப்பசி கார்த்திகை , மார்கழி , தை , மாசி , பங்குனி . இன்றும் கேரளாவில் மாதங்களின் பெயர்கள் ராசியின் பெயரால் தான் விளிக்கபடுகின்றன . உதாரணம் மேஷம் மாசம் சித்திரை , ரிஷபா மாசம் வைகாசி துலா ...

தொள தொள ஆடை அணியும் பெண்களே...!

Posted: 28 Oct 2014 10:03 AM PDT

தயிரில் இவ்வளவு நன்மைகளா?

Posted: 28 Oct 2014 09:29 AM PDT

சிலர் வேண்டாம் என்று ஒதுக்கும் தயிரில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின்களும், புரதச் சத்துக்களும் அடங்கியுள்ளன. உடலுக்கு ஏற்ற அருமருந்து தயிர், குளிர்ச்சியை தருவதுடன், எளிதில் ஜீரணம் ஆகிவிடும். தயிரில் முக்கியமான வைட்டமின், புரதம் ஆகிய சத்துகள் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ பிளேவின் என்ற வைட்டமின் 'பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது. சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. அல்சர் பிரச்னையில் இருந்து தப்பித்துக் ...

குட்டிக்கனவுகள் பகுதி - 1

Posted: 28 Oct 2014 09:23 AM PDT

குடைக்குள் குழந்தை !
மழைக்கு வருத்தம் :
முத்தம் கொடுக்க முடியவில்லையே :
முகத்தைப் பார்க்கமுடியவில்லையே என்று .
குடைக்கோ மகிழ்ச்சி :
மொத்தமும் தன்னோடு என்பதால்..
யுத்தம் தொடர்கிறது ...

இன்னும் கனவு காண்போம் .,


மழலைக் காவலர்!

Posted: 28 Oct 2014 07:41 AM PDT

"அம்மா, என் பள்ளிக்கூடத்தின் வாசலில் என்னை மாதிரி ஒரு பையன் தினமும் அவன் அப்பாவுடன் செருப்பு தைத்துக் கொண்டிருக்கிறான். அவன் ஏன் படிக்கப் போகாமல் வேலை செய்து கொண்டிருக்கிறான்?' 8 வயது மகனின் எதிர்பாராத கேள்விக்கு "அவனும் உழைத்தால்தான் அந்தக் குடும்பத்தினர் சாப்பிடமுடியும்' என்ற பதிலை தந்தார் அந்தத் தாய்."அப்படியானால் அவன் படித்து வேறு வேலைக்கு போகவே முடியாதா?' என்ற அடுத்த கேள்விக்கு அம்மாவால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. விதிஷா என்பது போபால் நகரிலிருந்து 50 கி.மீ. தொலைவிலுள்ள சின்னஞ்சிறிய ...

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்!

Posted: 28 Oct 2014 07:29 AM PDT

ஒரு காலத்தில் ஓட்டை சைக்கிளில் பயணித்த ஊருக்குள் காரில் போகும்போது குமாரின் மனதில் இனமறியாத சந்தோஷம். அருகில் ஆசை மனைவியும் இருந்ததால் மகிழ்ச்சி இரட்டிப்பானது. நீண்ட நாள்களுக்குப்பின் அவனது நண்பனின் மகனுடைய திருமணத்தில் கலந்து கொள்ள சொந்த ஊருக்கு வந்திருக்கின்றான். நண்பன் இறந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆண்டுகள் பல கடந்தாலும் நினைவில் வைத்திருந்து அழைப்பிதழ் அனுப்பியிருந்தாள் நண்பனின் மனைவி. பல வருடங்களுக்குப்பின் ஊருக்கு வந்த போது குமாருக்கு எல்லாமே வித்தியாசமா இருந்தது. முப்போகம் ...

எங்கிருந்தோ வந்தான்!

Posted: 28 Oct 2014 07:16 AM PDT

இரவு மணி ஒன்பது. மாயா க்ளினிக்கின் ஐ.சி.யூ. பிரிவு. அங்குள்ள பணியாளர்களின் டியூட்டி மாறும் நேரம். ஜன்னலோரக் கட்டிலின் அருகே படுத்திருந்த அந்த மூதாட்டி கமலம்மாவின் அருகே நின்றிருந்த சிஸ்டர், இரவு டியூட்டி சிஸ்டரிடம் அவளைக் காட்டி ஏதோ விளக்கம் தந்து கொண்டிருந்தாள். "ஆமா சுகந்தி, ஏற்கெனவே மோசமா இழுத்துக் கிட்டிருந்த கேஸ்தான்! உனக்குத்தான் தெரியுமோ! இன்னிக்கு எட்டு மணிக்கு திடீர்னு சீரியஸ் ஆயிடுச்சு! சீஃப் வந்து பார்த்துட்டுப் போயிட்டாரு. இன்னிக்கு நைட்டு தாங்காதுன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. ...

எத்தனை காலம் தான்!

Posted: 28 Oct 2014 07:12 AM PDT

தெருவில் ஆங்காங்கு கூட்டம் கூடி நின்று குசுகுசுத்தவாறு இருந்தனர். என்னவாய் இருக்கக்கூடும்? தெருவில் எந்த வீட்டிலாவது யாராவது! ஊஹூம்.. அப்படியிருக்கவும் வாய்ப்பில்லையே! ஏன் எனில் அப்படிப்பட்ட வீட்டு வாசலில் ஷாமியானா பந்தல் எல்லாம் தெருவை அடைத்துப் போட்டு, போக்குவரத்தைத் தடை செய்து ஏதோ தேசத்தலைவர்கள் மண்டையைப் போட்டு விட்டார் போல அமர்க்களம் பண்ணி, 21 கன் சல்யுட் முழங்காத குறையாக, தாரை, தப்பட்டை முழங்க ஊம் நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்! இல்லையெனில் எவனாவது பட்டப்பகலில் வீடு நுழைந்து எல்லாம் ...

ஊழல் முதல்வர்-குற்றவாளி முதல்வர்; ஜெ., மீது விஜயகாந்த் கடும் தாக்கு !

Posted: 28 Oct 2014 07:00 AM PDT

சென்னை: பால் விலை உயர்வை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமை வகித்து பேசுகையில், ஜெ., மக்களின் முதல்வர் என்று கூறுகிறார்கள் அவர் ஊழலில்தான் முதல்வர், குற்றவாளியில் தான் முதல்வர் என்று கடுமையாக சாடினார்.தமிழகத்தின் சமீபத்திய பால் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், பால் விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும் தே.மு.தி.க., நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கட்சி தொண்டர்கள் பலர் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் விஜயகாந்த் பேசுகையில், ...

விதி

Posted: 28 Oct 2014 06:56 AM PDT

கேடு கெட்ட சமுகம்

Posted: 28 Oct 2014 06:46 AM PDT

1.அடுத்து வரப்போறவங்களை நினைச்சு கழிவறைல தண்ணீர் ஊத்தாத சமூகம்தான் அடுத்த தலைமுறைக்காக இயற்கைய காப்பாத்த போகுதா? 2. மெதுவடைல இருக்கிற மொளகாவ தூக்கி எறியுற அதே சமூகம் தான் மொளகால பஜ்ஜி போட்டும் சாப்பிடுது 3.எல்லா பண்டிகையையும் சிறப்புநிகழ்ச்சினு டிவில நாள்புல்லா விளம்பரங்களை பாத்து கொண்டாடுற ஒரு மாதிரியான சமூகம் நம்மளோட சமூகம் தான் 4.சக மனிதன் சீக்குல இருந்தா கூட கவலைப்படாத இந்த சமூகம்தான் சிட்டுக்குருவியின் அழிவைப்பத்தி கவலைப்படுது 5.பணக்காரன் தப்பு செய்து மாட்டிக்கொண்டால் கடந்துவிடும் ...

யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள் 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த 'பளீச்' பேட்டி!

Posted: 28 Oct 2014 06:35 AM PDT

சென்னை : 'தமிழக தலைவர்களின் கண்டனங்களும், தீர்மானங்களும், இலங்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இலங்கை அரசை கண்டித்து, தமிழகத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்படும் போது, தங்களுக்கான உரிமைகள் கிடைப்பது தள்ளிப் போவதாகவே, அங்குள்ள தமிழர்கள் கருதுகின்றனர்' என, தமிழகம் வந்துள்ள இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் இதழியல் கருத்தரங்குசென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையுடன், இலங்கை, யாழ்ப்பாண பல்கலையின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையம் இணைந்து, ...

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா - நடிகைகள் புகைப்படம் - தொடர் பதிவு

Posted: 28 Oct 2014 06:09 AM PDT


-
நயன்தாரா

விட்டுல பொண்ணு தேட ஆரம்பிச்சுட்டாங்க . . . .வாழ்வே சுகம் தான் இனி . . . .

Posted: 28 Oct 2014 06:07 AM PDT

பெயர்:வெ.கணேஷ்
சொந்த ஊர்:தூத்துக்குடி
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:என் தொலைநோக்கு பார்வை
பொழுதுபோக்கு:கலந்துரையாடல்
தொழில்:மென்பொருள் இளநிலை ஆய்வாளர்
மேலும் என்னைப் பற்றி: பிறர் நலனுக்கு அக்கறை கொண்டு உதவும் சிறு பழக்கம்.எந்த நேரமும் லூசு போல சிரிப்பு . . . . .அவளவுதான். . . விட்டுல பொண்ணு தேட ஆரம்பிச்சுட்டாங்க . . . சுகம்தான் இனி . . . . இந்த இனிய தருணத்தில் உங்களுடன் இணைகிறேன்...

அரளிச்செடி ...

Posted: 28 Oct 2014 05:53 AM PDT

- எங்கும் எளிதாகக் கிடைக்கும் அரளிச்செடி! அதிக முயற்சி ஏதும் இல்லாமலேயே பல்கிப் பெருகும் இயல்புடையது. இதனுடைய இலையையோ, வேரையோ யாரும் மருத்துவ நோக்கில் யாரும் பயன் படுத்த மாட்டார்கள், பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அவை கடுமையான நச்சுத்தன்மை வாய்ந்தவை. அரளிச்செடியின் மலரை மட்டுமே அதுவும் வெளிப் பயன் பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். அரளிப் பூவை அரைத்துக் கந்தகத்துடன் கலந்து தொடர்ந்து தடவி வந்தால் கிரந்தி, குழிப்புண், குஷ்டம் போன்றவற்றை விரைவில் குணமாகும். இதனை தக்க முறைப்படி ...

ஆசை அதிகம்

Posted: 28 Oct 2014 05:50 AM PDT

அன்றோ கார்காலம்,
மழைத்துளிகளுக்கு பயந்து கொஞ்சமும்,
மனதிற்குள் ஆசைகள் அதிகமுமாய்
ஒரு குடைக்குள் நீயும் நானும்

குறிப்பு:எனது fb பக்கத்திலும் இதை போட்டுளேன் நண்பர்களே

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் நமக்கு உணவு பாதுகாப்பு அளிக்குமா?

Posted: 28 Oct 2014 05:07 AM PDT

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் நமக்கு உணவு பாதுகாப்பு அளிக்குமா? மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான கள பரிசோதனையை மத்திய அரசு அனுமதித்து உத்தரவிட்ட போது, நான் அதை எதிர்த்து 'தினமலர்' நாளிதழில் கட்டுரை எழுதி இருந்தேன். அந்த கருத்தை ஆதரித்தும், எதிர்த்தும் எனக்கு பல கடிதங்களும், மின்னஞ்சல்களும் வந்தன. கருத்தை எதிர்த்தவர்களில் பெரும்பாலானோர் பிரதானமாக மூன்று கேள்விகள் எழுப்பி இருந்தனர்; 1. பெருகிவரும் மக்கள் தொகைக்கு மரபணு மாற்று தொழில்நுட்பம் இல்லாமல் உணவளிக்க முடியுமா? 2. இயற்கை விவசாயத்தால் ...

ஒரு கனவான் தன் பேமிலியை அறிமுகப்படுத்துகிறார்...!

Posted: 28 Oct 2014 05:02 AM PDT

கோலங்கள் - புகைப்படம்

Posted: 28 Oct 2014 04:59 AM PDT

சிரிக்கலாம் வாங்க..! நகைச்சுவைப் பதிவுகள்

Posted: 28 Oct 2014 03:51 AM PDT

நம்ப ஊரு ஆளு செத்து மேலோகம் போறாரு , அங்க இருக்கிற சித்திர குப்தன் , " .இங்க இருக்கிற ருல்ஸ் பிரகாரம் , நீ ரெண்டு கேள்விக்கி பதில் சொன்னியின்னா உனக்கு சொர்கத்துல ஜாலிய இருக்கிரத்துக்கு நாங்க அனுமதிப்போம்" . ன்னு சொல்றாரு .. சரிங்க கேளுங்க ன்னு நம்பாளு சொல்றாரு , அதுக்கு சித்திர குப்தன், முதல் கேள்வி :- ஒரு வாரத்துல இருக்கிற நாட்கள்ல " T " ல ஆரம்பிக்கிறது எது ? இரண்டாவது கேள்வி :-ஒரு வருசத்துக்கு எத்தினை SECONDS இருக்கு ? கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் நம்ப ஊரு ஆளு யோசிச்சு சரிங்க நான் ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -110)

Posted: 28 Oct 2014 03:01 AM PDT

krishnaamma wrote:பாலாஜி wrote:வெற்றிகரமான 100வது படம் படம் எண் -100 அரம்பிச்சுடாருயா ஆரம்பிச்சுட்டாரு...................இங்க வந்தும் இந்த போன் ஐ பேசணுமா?............... என்ன wedding day dinner வேண்டி இருக்கு     அதானே ... நல்ல கேளுங்க .... சிறப்பான வசனம் (வி.பொ .பா)   

நிலக்கடலை உண்போம்... நீடித்து வாழ்வோம் !

Posted: 28 Oct 2014 02:58 AM PDT

நிலக்கடலை... கடலை, மல்லாக்கொட்டை, மணிலாக் கொட்டை என பல்வேறு பெயர்களில் தமிழகத்தில் அழைக்கப்படும் உணவுப் பொருள். இதை தொடர்ச்சியாக உண்பதால் வாழ்நாள் நீடிக்கும் என்பது பலரும் அறியாத ஒன்று. மாறிவிட்ட வாழ்க்கை முறையால், பன்னாட்டு உணவுக் கம்பெனிகளின் கடைவிரிப்பால் நம் மரபுசார்ந்த உணவுப் பொருளான நிலக்கடலையைக் கைவிட்டவர்கள் நம்மில் அதிகம் என்றால் அது மிகை இல்லை. குறிப்பாக நிலக்கடலை எண்ணையை முற்றிலும் புறக்கணித்து விட்டோம் என்றே சொல்லலாம். சமையல் எல்லாமே ரீபைண்ட் ஆயில்தானே! பாதாம், ...

சனி பகவானை வழி படும் நேரம்

Posted: 28 Oct 2014 02:52 AM PDT

எல்லாநாளும் சனீஸ்வரரை வணங்கலாம் திருநள்ளாறு க்ஷேத்ரம் சனிபகவானுடன், தர்ப்பாரண்யேஸ்வரர் உள்ளிட்ட மூர்த்திகளையும் கொண்டது. இங்கு சனிக்கிழமை மட்டும் தான் வழிபட வேண்டும் என்று சிலர் தவறாக வழிகாட்டுகின்றனர். இதனால் பக்தர்கள் கால்கடுக்க நின்று, சில நிமிடம் மட்டுமே சனிபகவானை தரிசனம் செய்யும் நிலை ஏற்படுகிறது. ராகுகாலத்தில் ராகுவை வழிபடுவதைப் போன்றே சனிபகவானை, சனிஹோரை நேரத்தில் வழிபடலாம். இதன்படி ஞாயிறு காலை 10-11, மாலை 5-6, திங்கள் காலை 7-8, செவ்வாய் பகல் 11-12, இரவு 6-7, புதன் காலை 8-9, வியாழன் ...

2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி

Posted: 28 Oct 2014 01:45 AM PDT

- 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்குடன் தொடர்புடைய மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சார்பில் அவரது மகள் செல்வி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. - இந்த மனுவை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது, தயாளு அம்மாள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அமரேந்திர சரண் முன்வைத்த வாதம்: - "வயோதிகம், ஞாபக மறதி நோய் போன்றவற்றால் ...

பேஸ்புக் வராமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்..!

Posted: 28 Oct 2014 01:31 AM PDT


நடப்பது எல்லாம் நன்மைக்கே!

Posted: 28 Oct 2014 01:28 AM PDT

பயிற்சிகள் செய்யாத தேகம் பாழ்பட்டுப் போகிறது உழைக்காத தேகம் உலுத்துப் போகிறதுநடக்காத தேகம் நலிவடைந்து போகிறது. இதை நாம் அனுமதிக்கலாமா? நமது உடல், நோய்ப்பறவைகளின் வேடந்தாங்கல் ஆகலாமா? கூடவே கூடாது. 'அழகு' என்பது யாது?: நடை பயிற்சியால் நமது உடலில் ரத்த ஓட்டம் சீராகி திசுக்களை மேம்படுத்துகிறது. உடலில் திசு இறுக்கப் பிடிப்பை உருவாக்கும் 'லேக்டிக்' அமிலம் வெளியேற்றப்படுகிறது. சுறுசுறுப்பு அதிகமாவதுடன், நமது மெட்டபாலிசம், உணவு தன் மயமாதல், ஜீரணம் சிறப்படைகிறது. நடப்பது கால்களுக்கு, உடலுக்கு, ...

பொட்டலம் - ஒரு பக்க கதை

Posted: 28 Oct 2014 01:27 AM PDT

கிராமத்திலிருந்து அண்ணன் மணியைப் பார்க்க வந்திருந்த சத்யா. அவருடைய மளிகைக் கடைக்கு விஜயம் செய்தான். - அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய செய்தித் தாள்களை ஒவ்வொன்றாக உருவி, கூம்பு வடிவத்தில் லாவகமாக மடித்து. அவைகளில் பலவகையான மளிகைச் சாமான்களைப் போட்டு, சணல் நூலால் கட்டி வாடிக்கையாளர்களுக்கு மணி கொடுத்துக் கொண்டிருந்ததை அவன் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். கடையில் சற்று கூட்டம் குறைந்தவுடன், தன் சந்தேகத்தை அண்ணனிடம் வெளிப்படுத்தினான். - "சென்னையின் முக்கியப் பகுதியில் ...

பேய் ஒண்ணு செத்து மனுஷனா அலையுது...!

Posted: 28 Oct 2014 12:47 AM PDT

திரை விமர்சனம் » பூஜை

Posted: 27 Oct 2014 10:22 PM PDT

படம் : பூஜை நடிகர் : விஷால் நடிகை : ஸ்ருதிஹாசன் இயக்குனர் :ஹரி ஹரி இயக்கத்தில், தாமிரபரணி படத்திற்கு பிறகு விஷால் நடித்திருக்கும் திரைப்படம், விஷால்-ஸ்ருதிஹாசன் முதன்முதலாக ஜோடி சேர்ந்திருக்கும் படம், விஷால் சொந்தமாக தயாரித்திருக்கும் படம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு தீபாவளி விருந்தாக வந்திருக்கும் படம் தான் ''பூஜை''. கோயம்புத்தூரில் பெரிய பெரிய பிஸினஸ் எல்லாம் செய்யும் பெரிய குடும்பத்து வாரிசு, வாசு எனும் விஷால். ஆனால் ஒருசின்ன மனவருத்தத்தில் குடும்பத்தை பிரிந்து காய்கறி மார்க்கெட்டில் ...

தியானத்தில் ஊறும் எறும்பு - கார்த்திக் நேத்தா

Posted: 27 Oct 2014 06:40 PM PDT


-
நன்றி: ஆனந்த விகடன் - 10-9-14


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™