Tamil News | Online Tamil News |
- சிம் கார்டு வாங்க ஆதார் அட்டை : மத்திய அரசு தீவிர பரிசீலனை
- கேரளா, தமிழகத்தில் தற்கொலை அதிகம்: பீகார், உ.பி.,யில் மிக குறைவு
- வெளிநாட்டு வங்கியில் எனக்கு கணக்கு இல்லை :'மாஜி' அமைச்சர் பிரீனித் கவுர் மறுப்பு
- வடிகால் வசதி இல்லாததால் வயல்களில் தண்ணீர்: சம்பா பயிர்கள் மிதக்க இதுவே காரணம்!
- கொடைக்கானல் பாதையில் மண்சரிவு: 10 இடங்களில் ரோடு காணவில்லை: மரணத்தின் பிடியில் ஏழு பேர் மீண்டனர்
- பா.ஜ., அணியின் முதல்வர் வேட்பாளர் - விஜயகாந்த் கனவு பலிக்குமா?
- மக்களை கசக்கி பிழிவது வாடிக்கை: அ.தி.மு.க., அரசு மீது கருணாநிதி காட்டம்
- மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் நமக்கு உணவு பாதுகாப்பு அளிக்குமா?
- சோனியா மருமகன் வாத்ராவுக்கு நெருக்கடி முற்றுகிறது: நில பேரம் நடத்திய நிறுவனத்திற்கும் சிக்கல்
- பிரதமர் மோடியின் தளபதி யார்? டில்லி வட்டாரங்களில் திடுக் தகவல்கள்
- கறுப்பு பணம் பதுக்கிய தொழில் அதிபர்கள் பட்டியல் வெளியீடு அரசியல்வாதிகள் பெயர் இல்லாததால் ஏமாற்றம்
- தயாளுவை விடுவிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்ததால் கருணாநிதி 'அப்செட்': ரூ.200 கோடி பணம் கைமாறிய வழக்கில் விசாரணை உறுதி
| சிம் கார்டு வாங்க ஆதார் அட்டை : மத்திய அரசு தீவிர பரிசீலனை Posted: புதுடில்லி : 'புதிதாக, 'சிம்' கார்டு வாங்குவோர், ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாமா' என, மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும், தொலை தொடர்புத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.மொபைல் போன்களில் பயன் படுத்தப்படும், 'சிம்' கார்டுகளை, புதிதாக வாங்குவோர், தற்போது, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் போன்றவற்றை அடையாள ஆவணமாகத் தருகின்றனர். இந்த ஆவணங்களை, சம்பந்தப்பட்ட தொலை தொடர்பு நிறுவனங்கள் சரிபார்த்த பின், குறிப்பிட்ட 'சிம்' கார்டுகள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.இப்படி, ... |
| கேரளா, தமிழகத்தில் தற்கொலை அதிகம்: பீகார், உ.பி.,யில் மிக குறைவு Posted: புதுடில்லி : உலகிலேயே, தற்கொலை அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. அதிலும், கேரளா, தமிழகம், ஆந்திரா போன்ற தென் மாநிலங்களில் தான், நாட்டிலேயே அதிக தற்கொலைகள் நடப்பதாகவும் தெரியவந்துள்ளது.இந்தியாவுக்கு இடம் : உலக சுகாதார நிறுவனம், தற்கொலைகள் அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: வளர்ச்சி குறைந்த நாடுகளை விட, வளர்ச்சி அடைந்த நாடுகளில் தான், அதிக தற்கொலைகள் நிகழ்கின்றன. தற்கொலைகள் அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுடன், இந்தியாவும் ... |
| வெளிநாட்டு வங்கியில் எனக்கு கணக்கு இல்லை :'மாஜி' அமைச்சர் பிரீனித் கவுர் மறுப்பு Posted: புதுடில்லி: ''வெளிநாடுகளில் உள்ள வங்கிகள் எதிலும், எனக்கு கணக்கு இல்லை. நான் கறுப்புப் பணத்தை போட்டு வைத்திருப்பதாக வெளியான தகவல்களில் உண்மையும் இல்லை,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் பிரீனித் கவுர் தெரிவித்துள்ளார்.சுவிட்சர்லாந்து உட்பட, பல வெளிநாட்டு வங்கிகளில், கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ள இந்தியர்கள் குறித்த விவகாரம், தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.இந்நிலையில், மன்மோகன் சிங் தலைமையிலான, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், வெளியுறவுத் துறை இணை அமைச்சராக பதவி வகித்த பிரீனித் கவுரிடம், வெளிநாட்டு வங்கியில், பணம் டிபாசிட் ... |
| வடிகால் வசதி இல்லாததால் வயல்களில் தண்ணீர்: சம்பா பயிர்கள் மிதக்க இதுவே காரணம்! Posted: வடிகால் வசதி ஏற்படுத்தும் பணியை, கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்படுத்தாமல், பொதுப்பணித் துறையினர் கிடப்பில் போட்டதுதான், டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடி பயிர்கள் மிதப்பதற்கு முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில், பெரிய அளவில் தொழிற்சாலைகள் இல்லாததால், விவசாயத்தை சார்ந்தே மக்கள் உள்ளனர்.இரண்டு போக சாகுபடி: இம்மாவட்டங்களில், ஜூன் மாத குறுவை நெல் சாகுபடி, அக்., மாத சம்பா நெல் சாகுபடி ஆகியவை முக்கியமானவை. இந்த இரண்டு போக சாகுபடி மூலம், மாநிலத்தின், நெல் தேவையின் ... |
| கொடைக்கானல் பாதையில் மண்சரிவு: 10 இடங்களில் ரோடு காணவில்லை: மரணத்தின் பிடியில் ஏழு பேர் மீண்டனர் Posted: தேவதானப்பட்டி : தேனி மாவட்டம் தேவதானப்பட்டி- காட்ரோட்டில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் 'டம்டம்' பாறை அருகே நள்ளிரவில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் விழுந்தன. இதனால் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ரோடுகள் அடித்துச்செல்லப்பட்டன. படப்பிடிப்பிற்கு கொடைக்கானல் சென்ற குழுவினரின் வேன் சிக்கியதில் ஏழு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.கொடைக்கானல் செல்வதற்கு பழநி வழியாகவும்; அய்யம்பாளையம், தாண்டிக்குடி வழியாகவும்; வத்தலக்குண்டில் இருந்து தேனி மாவட்டம் காட்ரோடு வழியாகவும் பாதை உள்ளது. காட்ரோட்டில் இருந்து 4 கி.மீ., துாரத்தில் மலையின் எல்லை ... |
| பா.ஜ., அணியின் முதல்வர் வேட்பாளர் - விஜயகாந்த் கனவு பலிக்குமா? Posted: தமிழகத்தில், பா.ஜ., கூட்டணியின், முதல்வர் வேட்பாளராகும் விஜயகாந்தின் திட்டம் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்த, தமிழக பா.ஜ., தரப்பினர், 'விஜயகாந்தின் கனவு பலிப்பதற்கான வாய்ப்பு, குறைவாகவே உள்ளது' என்கின்றனர்.நம்பிக்கை:தே.மு.தி.க.,வின் மாவட்ட செயலர்கள் கூட்டம், கடந்த வாரத்தில், சென்னையில் நடந்தது. அதில், அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசியபோது, '2016 சட்டசபைத் தேர்தலில், தே.ஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக, என்னை தான் முன்னிறுத்துவர்' என, நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.அந்த திட்டத்துடன் அவர், பா.ஜ.,வுடனான நெருக்கத்தையும் ... |
| மக்களை கசக்கி பிழிவது வாடிக்கை: அ.தி.மு.க., அரசு மீது கருணாநிதி காட்டம் Posted: சென்னை: ''அ.தி.மு.க., ஆட்சியில், மின் கட்டணம், பஸ் கட்டணம், பால் விலை உயர்வு என, தொடர்ந்து அறிவித்து, மக்களை கசக்கிப் பிழிவது வாடிக்கையாகி விட்டது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வு, இரண்டு மாதங்களுக்கு, 201 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு, யூனிட் ஒன்றுக்கு 4 ரூபாய் என்பது, 4.60 ரூபாய் என ஆகி விடும். 501 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு, ஒரு யூனிட் ரூபாய் 5.75 என்பதிலிருந்து, 6.60 ரூபாய் என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுவிடும். தற்போது, 500 யூனிட் வரை மட்டுமே, தமிழக அரசு மானியம் வழங்கி ... |
| மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் நமக்கு உணவு பாதுகாப்பு அளிக்குமா? Posted: மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான கள பரிசோதனையை மத்திய அரசு அனுமதித்து உத்தரவிட்ட போது, நான் அதை எதிர்த்து 'தினமலர்' நாளிதழில் கட்டுரை எழுதி இருந்தேன். அந்த கருத்தை ஆதரித்தும், எதிர்த்தும் எனக்கு பல கடிதங்களும், மின்னஞ்சல்களும் வந்தன. கருத்தை எதிர்த்தவர்களில் பெரும்பாலானோர் பிரதானமாக மூன்று கேள்விகள் எழுப்பி இருந்தனர்;1. பெருகிவரும் மக்கள் தொகைக்கு மரபணு மாற்று தொழில்நுட்பம் இல்லாமல் உணவளிக்க முடியுமா?2. இயற்கை விவசாயத்தால் மட்டும் அனைவருக்கும் தேவையான உணவை உற்பத்தி செய்துவிட முடியுமா?3. விவசாயிகளின் ஆதரவு இல்லாமலா, 'பி.டி., பருத்தி'யின் ... |
| சோனியா மருமகன் வாத்ராவுக்கு நெருக்கடி முற்றுகிறது: நில பேரம் நடத்திய நிறுவனத்திற்கும் சிக்கல் Posted: புதுடில்லி : சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா, அரியானாவில் மேற்கொண்ட நில பேரங்கள் குறித்து, விசாரணை நடத்தப்படும் என, அம்மாநிலத்தில், புதிதாக பதவியேற்றுள்ள, முதல்வர் மனோகர் லால்கட்டார் தலைமையிலான, பா.ஜ., அரசு அறிவித்துள்ளது. இதனால், ராபர்ட் வாத்ராவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், ராபர்ட் வாத்ராவின் நில பேரங்களுடன் தொடர்புடைய, டி.எல்.எப்., கட்டுமான நிறுவனமும் சிக்கலில் மாட்டும் சூழ்நிலை உருவாகி உள்ளது.சர்ச்சையான நில பேரம்:காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா. இவருக்கு சொந்தமான நிறுவனம் ஸ்கைலைட் ... |
| பிரதமர் மோடியின் தளபதி யார்? டில்லி வட்டாரங்களில் திடுக் தகவல்கள் Posted: புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மோடியின் அமைச்சரவையில் இடம் பெறாத ஒருவரே, அவரின் நம்பிக்கைக்குரிய நபராக திகழ்வது தெரிய வந்து உள்ளது.கடந்த, ஏப்ரல் - மே மாதங்களில் நடந்த லோக்சபா தேர்த லில், பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தது. முக்கிய தலைவர்கள்:பா.ஜ.,வின் பிரசார பீரங்கியாக செயல்பட்ட நரேந்திர மோடி, பிரதமராக பொறுப் பேற்றார். அவருடன், பா.ஜ., முக்கிய தலைவர்களான, ராஜ்நாத் சிங், அருண் ... |
| கறுப்பு பணம் பதுக்கிய தொழில் அதிபர்கள் பட்டியல் வெளியீடு அரசியல்வாதிகள் பெயர் இல்லாததால் ஏமாற்றம் Posted: புதுடில்லி : வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை, மத்திய அரசு, நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. இதில், மூன்று தொழிலதிபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலில், அரசியல்வாதிகளின் பெயர்கள் இடம்பெறாதது, ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.வரி செலுத்துவதை தவிர்க்கும் வகையிலும், முறைகேடான வழிகளில் சம்பாதித்த பணத்தை பதுக்கும் வகையிலும், ஏராளமான இந்தியர்கள், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள வங்கிகளில், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக, நீண்ட காலமாக கூறப்பட்டு வருகிறது. இந்த கறுப்பு ... |
| Posted: '2ஜி ஸ்பெக்ட்ரம்' முறைகேடு தொடர்பாக, 200 கோடி ரூபாய் அளவுக்கு, பணம் பரிவர்த்தனை நடந்த விவகாரத்தில், அமலாக்கப் பிரிவு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கிலிருந்து, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளுவை விடுவிக்க வேண்டும் என, அவரது மகள் செல்வி தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம், நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. இதனால், கருணாநிதி மற்றும் குடும்பத்தினர் 'அப்செட்' அடைந்து உள்ளனர்.2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், பல்வேறு தொலை தொடர்பு நிறுவனங்களிடமிருந்து, கலைஞர் 'டிவி' நிறுவனத்திற்கு, 200 கோடி ரூபாய் அளவுக்கு பணம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 28,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |