Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பானங்கள் ! ..........................பாதாம் பால் !

Posted: 27 Oct 2014 12:04 PM PDT

இந்த திரி இல் நாம் அன்றாடம் குடிக்கும் பலவிதமான டீ, காப்பி எப்படி போடுவது என்பது பற்றியும் மற்றும் பாதாம் பால், மசாலா பால் போன்ற பிற பானங்களை தயாரிக்கும் விதங்கள் பற்றியும் பார்க்கலாம் புன்னகை

வெந்நீரின் மஹாத்மியம் !

Posted: 27 Oct 2014 11:01 AM PDT

வெந்நீர் குடித்தால் என்னென்ன உபாதைகள் தீருமென்று தன் அனுபவத்தை வைத்துச் சொல்கிறார் குமுதம் சினேகிதி வாசகி மகாலட்சுமி யாருக்காவது சமையல் சுத்தமாக தெரியாவிட்டால், ''அவளுக்கு நல்லா வெந்நீர் போட வரும்…'' என்று நம்மில் பலர் நக்கல் அடிப்பதுண்டு. உண்மையில் நாம் வெந்நீரின் மகிமை தெரியாமல்தான் அப்படி கிண்டல் செய்திருக்கிறோம். இதோ பாருங்கள்… வெந்நீரால் எத்தனை பலன்கள் என்று! ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை…. ...

அரபிக் கடலில் உருவான நிலோபர் புயல்: 31–ந் தேதி குஜராத்தில் கரையை கடக்கிறது!

Posted: 27 Oct 2014 10:05 AM PDT

புதுடெல்லி, அக். 27– ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை கடந்த 12–ந் தேதி ஹூட் ஹூட் புயல் தாக்கியது. இதில் அந்த நகரம் பெருத்த சேதத்துக்கு உள்ளானது. இந்த நிலையில் மற்றொரு புயல் உருவாகி உள்ளது. அரபிகடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுவடைந்து உள்ளது இந்த புயலுக்கு நிலோபர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் மும்பையில் இருந்து 1270 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் இன்று அதிகாலை நிலவரப்படி ...

பேஸ்புக் ரகளை.

Posted: 27 Oct 2014 09:59 AM PDT

"ரவி இருக்காங்களா....?" "இல்லீங்க....அவரு நேத்து நைட்டுதான் இறந்து போனாரு....." "ஓ...மை காட்....!" "ஆமா...நீங்க யாருங்க...?" "ரவியும் நானும் ஒரு வருசமா நல்ல பிரண்ட்ஸ்... ஃபேஸ்புக் மூலமாத்தான் நண்பரானோம்....போன வாரந்தான் நேர்ல சந்திப்போம்னு சொல்லி அட்ரஸ்ஸ குடுத்தாரு...அதுக்குள்ளே இப்படி ஆகிடுச்சே...ச்சே..." "என்னது ப்ரண்ட்ஸா.....இப்படியொரு அழகான பொண்ணு ப்ரண்டா இருக்குறதா...தாத்தா சொல்லவே இல்லையே...." "என்னது தாத்தாவா.....????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!"

லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில்

Posted: 27 Oct 2014 09:55 AM PDT

நேற்று பரிக்கல் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் சென்று வந்தோம். அந்த கோவிலை பற்றிய தகவல்களை நம் ஈகரை உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கமே இந்த பதிவு. இங்கு நாங்கள் செல்வது இரண்டாவது முறையாகும். இந்த கோயில் விழுப்புரத்தில்,  பரிக்கல் என்ற சிற்றூரில் இருக்கிறது. கிட்டத்தட்ட 1000 வருடங்களுக்கு மேற்பட்ட மிகப்பழமையான கோயிலாம். இக்கோயிலின் மூலவர் லக்ஷ்மி நரசிம்மர் மற்றும் கனகவல்லி தாயார். பெருமாள் கிழக்கு பார்த்து அமர்ந்துள்ளார். அவரது இடப்பக்கம் தாயார் மடியில் உட்கார்ந்துள்ளார். ...

உலகை பார்க்காமல் உலகையே திரும்பி பார்க்க வைத்து சாதித்த பெண்ணை உளமார பாராட்டுவோம் !!!

Posted: 27 Oct 2014 09:31 AM PDT

அமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் ஒருவர் ஒரு முறை பேசினாலே வாழ்க்கையில் பாக்கியம் பெற்றவர் ஆவார் ஆனால் பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி ஒரு முறைக்கு இரு முறை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐநாவில் பேசியுள்ளார் அவர் யார் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறதா... சென்னை கனரா பாங்கின் நிறுவனர் நாள் விழாவினை முன்னிட்டு சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா ப்ரீடம் ட்ரஸ்ட் டாக்டர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது. மேடைக்கு அழைக்கப்பட்டவர்களில் சுவர்ணலட்சுமி பலரது கருத்தையும் கவர்ந்தார். சென்னை ...

இணையதளத்தில் 6,250 ரூபாய்க்கு பெண் குழந்தை விற்பனை !

Posted: 27 Oct 2014 09:24 AM PDT

இணையதளம் மூலமாக பெண் குழந்தையை பணம் கொடுத்து வாங்கிய குற்றத்திற்காக சம்மந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலி நாட்டில் இணையதளம் மூலம் பிறந்து இரு நாட்களே ஆன பெண் குழந்தையை 6,250 ரூபாய்க்கு வாங்கிய நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வெரோனிகா என்ற 18 வயது பெண், பிறந்து இரு நாட்களே ஆன தனது பெண் குழந்தையை ஜுவான் கார்லோஸ் என்ற நபருக்கு 102 டாலர்களுக்கு விற்றதாக கூறப்படுகிறது. இதில் வெரோனிகாவின் கணவர் தன் குழந்தையை யாரோ ...

ஆண் துணையின்றி முட்டையிட்டு, குட்டி ஈன்ற உலகின் மிகப்பெரிய மலைப்பாம்பு !

Posted: 27 Oct 2014 09:23 AM PDT

அமெரிக்க மிருகக்காட்சி சாலையில் உலகின் மிகப்பெரிய மலைப்பாம்பு ஆண் துணையின்றி முட்டையிட்டு குட்டி ஈன்றது. அமெரிக்காவில், கென்டுக்கி பகுதியில் லூயிஸ்வில்லி என்னும் மிருகக்காட்சி சாலை உள்ளது. 20 அடி நீள்முள்ள, 11 வயதுடைய இந்தப் பாம்பிற்கு 'தெல்மா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுவே உலகில் நீளமான பாம்பாக கருதப்படுகிறது. இந்தப் பாம்பு கடந்த 2012 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் 61 முட்டைகள் இட்டது. பிறகு இந்த 'தெல்மா' பாம்பு ஆண் துணையின்றி இருந்து வந்தது. தற்போது இது முட்டையிட்டு குட்டி ஈன்றுள்ளது ...

சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது!

Posted: 27 Oct 2014 09:19 AM PDT

"நான் அடிக்கடி யூரின் போறேன். அடிக்கடி என்றால் 5 நிமிடம், 10 நிமிடங்களுக்கு ஒருமுறை போகிறேன். போனால் நான்கு ஐந்து சொட்டுதான் வருகிறது. சிறுநீர் வராவிட்டாலும் வருவது போல் உணர்வு ஏற்படுகிறது. நிம்மதியாக இருக்க முடியவில்லை. இரவு நேரத்தில் இது மிகவும் அதிகமாக இருக்கிறது. சில சமயங்களில் சிறுநீர் கழித்துவிட்டு, பாத்ரூமை விட்டு வெளியே வருவதற்குள் மீண்டும் சிறுநீர் போக வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. இந்த இரவு நேர இன்னல்களால் என் தூக்கம் தொலைந்ததும் இல்லாமல் வீட்டில் உள்ள அனைவரின் தூக்கத்தையும் கெடுத்துவிடுகிறேன். ...

ரியல் பிளேயர் ரில் டவுன்லோட்

Posted: 27 Oct 2014 09:02 AM PDT

ரியல் பிளேயர் ரில்  டவுன்லோட் செய்யும் பொது script  error என்று வருகிறதே ஏன்

மொபைல் சிம் கார்டுடன் ஆதார் எண் இணைக்க மத்திய அரசு திட்டம் !

Posted: 27 Oct 2014 08:54 AM PDT

மொபைல் சிம் கார்டுடன் தனிப்பட்ட அடையாள எண் அல்லது ஆதார் எண்ணை இணைக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு யோசித்து வருகிறது. இது குறித்து மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் ஆர்.எஸ்.சர்மா கூறியபோது, "தனிநபர் அடையாள எண்ணுடன் சிம் கார்ட் எண்ணை இணைக்கும் வகையில் தொழில்நுட்பத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்" என்றார். இந்த யோசனையானது, தகவல் பெறுவதிலும், பரிமாற்றங்களிலும் ஒருவரை அடையாளப்படுத்திக் கொள்ள மொபைல் போன்கள் மிக மிக முக்கியப் பங்கினை வகிக்கிறது. ...

இன்டெர்நெட் விஷமம்; பீதியில் நடிகைகள்!

Posted: 27 Oct 2014 08:12 AM PDT

ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகள் அனைவரும் பீதியில் உறைந்து போயுள்ளனர். முன்னணி நடிகைகள் சிலரின் நிர்வாண புகைப்படங்கள், இன்டர்நெட்டில் வரிசை கட்டி வெளியாவது தான் இதற்கு காரணம். அமெரிக்காவை சேர்ந்த பிரபல மாடல் அழகி காரா டெல்விஜ் மற்றும் நடிகை அன்னா கென்ட்ரியா ஆகியோரை தொடர்ந்து, மற்றொரு பிரபல நடிகை ஜெனீபர் லாரன்சின் நிர்வாண புகைப்படங்களும் சமீபத்தில் இன்டெர்நெட்டில் வெளியாகியுள்ளன. அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல; ஜெனீபரின், 55 அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதனால், வெளியில் தலை காட்ட முடியாமல், ...

வழிபாட்டின் பலன் யாருக்கு?

Posted: 27 Oct 2014 08:09 AM PDT

தேவையின் பொருட்டு கடவுளை துதிப்போருக்கும், பக்தி செலுத்துவோருக்கும் கடவுள் ஒரு நாளும் காட்சி அளிப்பதில்லை. எவன் ஒருவன் களங்கமற்ற மனதுடன், இறைவன் குறித்து ஏகாந்த சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறானோ, அவன் வழிமுறைகள் தவறு என்றாலும், அவனுக்கு, ஜோதிமயமான இறைவன் அவன் வேண்டிய உருவில் காட்சி தந்து அருளுகிறார். இதற்கு உதாரணமாக, சோழநாட்டைச் சேர்ந்த சனந்தனரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையே எடுத்துக் கொள்ளலாம். தன் இள வயதிலேயே நரசிம்ம மந்திர உபதேசம் பெற்றவர் சனந்தனர். இவர் ஒரு முறை, காட்டில் தியானத்தில் ...

என் கணவருக்கு ரொம்பத்தான் பேராசை...!

Posted: 27 Oct 2014 07:43 AM PDT

-- - 1) குறைஞ்ச விலை செருப்பு கடிக்குதுன்னா, விலை உயர்ந்த செருப்பு வாங்கிக்க வேண்டியதுதானே..? - அது கையைக் கடிக்குமே...! - --பால.கோவிந்தராஜ் - --------------------------------------------- - வாமிட் வர்ற மாதிரி இருக்குது, ரமேஷ்..! - நான ஓடிப்போய் மாத்திரை வாங்கிட்டு வரவா டார்லிங்...? - வேண்டாம் ரமேஷ், நீ போனா வரமாட்டே...! - --வி.ரேவதி - ---------------------------------------------- - என் கணவருக்கு ரொம்பத்தான் பேராசை...! - ஏன் என்ன பண்ணினார்...? - வாழ்நாள்ல ஒரு நாளாவது, ...

பட்டாம்பூச்சிகளின் இரவு - என் கவிதை நூல்

Posted: 27 Oct 2014 07:25 AM PDT

ஈகரை உறவுகளின் அன்பில் முகிழ்த்த வாழ்த்துகளுடன்
விரைவில் என் கவிதை நூல் வெளியாக உள்ளது.

கணவரிடம் ஏண்டி எப்பப் பார்த்தாலும் சண்டை பிடிக்கிறே...?

Posted: 27 Oct 2014 07:12 AM PDT

- உன் கணவரிடம் ஏண்டி எப்பப் பார்த்தாலும் சண்டை பிடிக்கிறே.? - மாமியார் கூட இலை...யாரிடம்தான் சண்டை போடுவதாம்...? - --கே.விஜ'லட்சுமி - ---------------------------------------------------- - உங்க வெயிட்டான பொருட்களை தூக்க கூடாது..! - அதை அவள் தூக்கிறது இல்லே டாக்டர். கழுத்து, காது கை என்று போட்டிருக்காள்...இதை விட வெயிட்டான ஜாமான்கள் எங்கள் வீட்டில் கிடையாது...! - --ஆர்.கே.லிங்கேசன் - ------------------------------------------------ - தலைவர் நடிகைங்க கலந்து கொள்கிற கூட்டங்களில் கலந்து ...

GULF EMPLOYMENT WEBSITES

Posted: 27 Oct 2014 07:08 AM PDT



வளைகுடா நாடுகளில் வேலை தேடுவோருக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறன்

குழந்தை மனம்!

Posted: 27 Oct 2014 07:05 AM PDT

வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்த அப்பா முத்துவின் பின்னால் சிணுங்கியபடி நின்று கொண்டிருந்தாள் ரோஜா. ''சொன்னா கேளும்மா... அங்க கல்லும், மண்ணுமா கிடக்கும். அப்பா வேலைக்குப் போனா, திரும்ப பொழுது சாஞ்சுடும்; நீ அங்க வந்து என்னா செய்யப் போறே...'' என்றான் முத்து. ''ஸ்கூல் லீவு தானேப்பா... அங்க வந்தா எனக்கு பொழுது போகும்... ப்ளீஸ்ப்பா... நானும் வரேன்.'' காபி கொண்டு வந்த அகிலா, மகள் கணவனிடம் கெஞ்சுவதைப் பார்த்து, ''இன்னைக்கு ஒருநாள் தானே போனாப் போகுது கூட்டிட்டு போங்க,'' என்றவள், ''ரோஜா... அங்க ...

சங்கர மயக்கம்!

Posted: 27 Oct 2014 06:58 AM PDT

'ஈஸ்வரா...' கணேச குருக்களிடமிருந்து நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது. கோவில் காரியங்களை எல்லாம் முடித்து விட்டு அப்போது தான் அவர் வந்திருந்தார். வயதான உடம்பு, தலையில் கட்டுக் குடுமி, நெற்றி நிறைய திருநீரு, மார்பில் தவழும் பூணூல், இரண்டு காதுகளிலும் சிவப்புக்கல் கடுக்கன் போட்டு, சதா சர்வகாலமும் கடவுளே கதியென்று கிடக்கும் கணேச குருக்கள், அந்தக் காராமணிக் குப்பத்தில் ரொம்ப பிரசித்தம். காராமணிக் குப்பத்தில் உள்ள ஒரே கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில் தான். கோவில் சின்னது; ஆனால், கீர்த்தி மிக்கது. ...

மொபைல் போன் அடிமைகளுக்கு, சீனாவில் சிறப்பு நடைபாதை!

Posted: 27 Oct 2014 06:40 AM PDT

மொபைல் போனுக்கு அடிமை ஆகிறவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாத்ரூம் போகும்போது, நடக்கும்போது, பஸ்சில் செல்லும்போது என, எங்கு சென்றாலும், மொபைல் போனில் பேசுவது அல்லது மெசேஜ் டைப் செய்வது, பலருக்கு வாடிக்கையாகி விட்டது. சீனாவின், சோங்குயிங் என்ற நகரம், சுற்றுலாவுக்கு பெயர் பெற்றது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து, இங்கு ஏராளமானோர் வருவது வழக்கம். இங்கு, மொபைல் போனில் பேசியபடி அல்லது மெசேஜ் அனுப்பியபடி, நடந்து கொண்டே சென்ற பலர், விபத்தில் சிக்கினர். இதனால், சுற்றுலா ...

நம் வாழ்வில் கவனிக்க வேண்டியவைகள்... ( கோ.பாசு..)

Posted: 27 Oct 2014 06:14 AM PDT

பிறந்த நட்சத்திரத்திலும், திதியிலும், வாரத்திலும், மாசத்திலும் செய்யக்கூடிய சுப காரியம்..... உழவு செய்ய , விதை விதைக்க , விருந்துசெய்ய , தர்மம் செய்ய ,ஆடை ஆபரணம்பூண, கோடி உடுக்க , வியாபாரம் செய்ய உத்தமம். மேற்படியில் செய்யக்கூடாதவைகள்....... எண்ணையிட, மனைவியுடன் சேர, விவாகம் செய்ய, யாத்திரைபோக, மருந்து கொள்ள சவரம் செய்து கொள்ளக்கூடாது. வீடு குடி புக ஆகாத மாதங்கள்..... ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி, பங்குனி. புராணப்படி காரணம் > மகாபலி இராஜ்ஜியம் ...

என் வீட்டு கிச்சனில் நான்தான் ராணி - டிப்ஸ் - தொடர் பதிவு

Posted: 27 Oct 2014 06:02 AM PDT

-

பொழுது விடிஞ்சாச்சு ரமேஷ்...பெட் காபி போட்டு கொண்டு வா...!

Posted: 27 Oct 2014 05:57 AM PDT

- பொழுது விடியாமலே இருந்துட்டா தேவலாம்னு தோணுது, டார்லிங்...! - ஏற்கனவே பொழுது விடிஞ்சாச்சு ரமேஷ்...எழுந்து போய் பெட் காபி போட்டு கொண்டு வா...! - --வி.ரேவதி - ---------------------------------------------- - என் வீட்டுக்காரர் கதை எழுத ஆரம்பிச்சதிலிருந்து வீட்டுல பயங்கர கூட்டம்..! - ரசிகர் கூட்டமா.? - இல்லை, பழைய பேப்பர் வியாபாரிகள் கூட்டம்..! - --சித்ரா அனந்தகுமார் - ---------------------------------------------- - மன்னர் திடீரென ஈட்டி, கேடயத்தை சுத்தம் செய்ய சொல்றாரே? ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -108)

Posted: 27 Oct 2014 05:52 AM PDT

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ...

என் கவிதையை முழுமையாக்குபவள்

Posted: 27 Oct 2014 05:47 AM PDT

நாம் எப்படி கோவிலுக்கு செல்கிறோம்?

Posted: 27 Oct 2014 04:20 AM PDT

"ஆடு காண், போகுது பார்...' என்றார் ஒரு சித்தர். அப்படி என்றால் என்ன? ஆடு போகுது, அதைப் பார் என்று சொன்னாரா? இல்லை. சித்தர்கள் சொல்வ தெல்லாம் மக்களின் நன்மைக்குதான். ஆடு என்றால் புண்ணிய தீர்த்தங்களில் நீராடு; காண் என்றால் புண்ணிய ஸ்தலங்களுக்குப் போய், பகவானை தரிசனம் செய் என்று அர்த்தம். இப்படிச் செய்வதை, "போகுது பார்' என்றனர். போகுது பார் என்றால், புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து, கோவில்களுக்கு சென்று, பகவானை தரிசனம் செய்தால், பாவங்கள் தொலையும் என்று பொருள் கூறினர். நமக்கு அதில் ...

ராகுல் பிரதமாரவதைப் பார்க்கணும் எசமான்...! - நகைச்சுவை

Posted: 27 Oct 2014 02:09 AM PDT

அரபிக் கடலில் "நிலோஃபர்' புயல்

Posted: 27 Oct 2014 12:53 AM PDT

- அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் "நிலோஃபர்' புயலாக வலுவடைந்துள்ளது. அரபிக் கடலில் கடந்த சில நாள்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக ஞாயிற்றுக்கிழமை வலுவடைந்துள்ளது. இந்தப் புயலுக்கு "நிலோஃபர்' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயரை பாகிஸ்தான் சூட்டியுள்ளது. "நிலோஃபர்' என்ற அரேபிய மொழி சொல்லுக்கு "அல்லி மலர்' என்று பொருள். இந்தப் புயல் மும்பையில் இருந்து 1,270 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. ...

360 டிகிரி - பொது அறிவு தகவல் _ (தினமணி0

Posted: 27 Oct 2014 12:05 AM PDT

- அப்படியா? -  கோகோ கோலா பானம், 1886ஆம் ஆண்டில் டாக்டர் ஜான் பெம்பரட்ன் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. -  அமெரிக்காவில் ஒரு லட்சத்தை நூறுஆயிரம் என்பார்கள். -  ஆசிரியர்கள், மாணவர்கள் எதிரிலும், டாக்டர்கள், நோயாளிகள் எதிரிலும் புகைப்பிடிக்கக் கூடாது என்று சட்டம் உள்ள நாடு ரஷ்யா -  ஸ்நூக்கர் விளையாட்டில் 22 பந்துகள் பயன்படுத்தப் படுகின்றன. -  ஆயிரம் ஆண்டுகளாக "பாப்கார்ன்' உலகில் இருந்து வருகிறது. -  ஜப்பான்நாட்டு தேசிய கீதம் நான்கே வரிகளையும், கிரீஸ் ...

இந்தக் காதல்...

Posted: 26 Oct 2014 11:48 PM PDT

"ஆதார்' அட்டை: மத்திய அரசின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்

Posted: 26 Oct 2014 11:46 PM PDT

"ஆதார்' அட்டை விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. இந்த அட்டைக்கு முழு ஆதரவைத் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம், இது பயனாளிகளுக்கு எந்த நேரத்திலும், எங்கும், எப்போதும் அங்கீகாரத்தை எளிதாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆதார் அட்டை பின்தங்கிய மக்கள், வங்கி வசதி உள்ளிட்ட உரிய சேவைகளைப் பெற உதவியாக இருக்கும். ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஒருவர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™