Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தொடரும் மழையால் தொற்று நோய் பரவும் அபாயம்

Posted:

சென்னை : தொடர் மழையால், தமிழகம் வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், மழைநீரை அகற்ற போதிய முன்னேற்பாடுகள் இல்லாததால், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, டெங்கு பாதிப்பு உள்ள நிலையில், போர்க்கால அடிப்படையில், தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. 10 நாட்களாக, மழை கொட்டித் தீர்க்கிறது. எதிர்பாராத அளவில் மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழைக்கு, மாநிலம் முழுவதும், 30 பேர் வரை பலியாகி உள்ளனர்.திணறுகிறது:தலைநகர் ...

செயலிழந்த நிர்வாகிகளுக்கு பதவியில்லை! கலங்கடித்த விஜயகாந்த்

Posted:

சென்னை : கட்சிப்பணி செய்வதில் ஆர்வம் இல்லாமல், ஒதுங்கி கிடக்கும் தே.மு.தி.க., நிர்வாகிகளின், பதவிகள் விரைவில் பறிக்கப்படும் என, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், விஜயகாந்த் கூறியுள்ளார்.தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம், சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.இதைதொடர்ந்து, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.இக்கூட்டத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும் பங்கேற்றார்.கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக, மாவட்ட ...

பன்னீர் பதவியில் நீடிக்க கருணாநிதி ஆலோசனை

Posted:

சென்னை : 'அனைத்து கலெக்டர்களையும் அழைத்துப் பேசி, வெள்ள நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; இந்த நடவடிக்கைகளை மக்கள் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தலின்படி செய்வதாக பயப்படாமல், பன்னீர்செல்வம் அறிவித் தால், முதல்வர் பதவி நிலைக்கும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இது தொடர்பான, அவரது அறிக்கை:தமிழகத்தில், ஆட்சி என, ஒன்று இருக்கிறது என்பதை காட்டிக் கொள்வதற்காகவாவது, ஆட்சியினர் பயத்திலிருந்து விடுபட்டு உடனடியாக, கலெக்டர்களை அழைத்து பேசி, தேவையான வெள்ளநிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.மத்திய அரசை எதிர்பார்த்து காத்திருக்காமல், ...

இந்தியாவில் குடும்ப செலவு கம்மி: படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்

Posted:

புதுடில்லி : மிகக்குறைவான வாழ்க்கை செலவு காரணமாக, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் நாடுகளை விட்டு வெளியேறி, இந்தியாவுக்கு வருவது அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.எச்.எஸ்.பி.சி., நிறுவனம், உலகம் முழுவதும் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி, வேறு நாடுகளில் வசிப்பவர்கள் குறித்த ஆய்வை சமீபத்தில் நடத்தியது. இதில், 'இவ்வாறு குடி பெயர்வதற்கான காரணம் என்ன' என்பது குறித்த கேள்வியும் முன் வைக்கப்பட்டது.இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:தங்கள் நாடுகளை விட்டு வெளியேறி, வேறு நாட்டுக்கு செல்ல விரும்புவோரில் பெரும்பாலானோர், ...

கறுப்பு பண முதலைகள் பட்டியல் வெளியிட அசோசேம் கடும் எதிர்ப்பு

Posted:

புதுடில்லி : 'வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை முடக்கியுள்ள இந்தியர்களின் பெயர் பட்டியலை மத்திய அரசு வெளியிடக் கூடாது' என, அசோசேம் எனப்படும், இந்திய வர்த்தக சபை தெரிவித்துஉள்ளது. பதுக்கல்: இந்தியாவில் முறைகேடாக சம்பாதித்த பணத்தை, சில இந்தியர்கள், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் பதுக்கியுள்ளனர். அத்தகைய கறுப்பு பண முதலைகள் குறித்த பட்டியலை, மத்திய அரசு பெற்றுள்ளது; அந்த பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது.இந்நிலையில், அசோசேம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சில நாடுகளுடன் இந்தியா, ...

தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி

Posted:

புதுடில்லி : வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறும் தொண்டு நிறுவனங்கள், 20 ஆயிரம் ரூபாய்க்கு மேலான செலவுகளை, வங்கி காசோலை மற்றும் வரைவோலை மூலம் தான் மேற்கொள்ளப்பட வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற்று இந்தியாவில் செயல்படும் பெரும்பாலான நிறுவனங்கள், மத மாற்றச் செயல்கள், நாட்டுக்கு எதிரான துரோக செயல்கள், நாட்டின் ஏழ்மை நிலையை வெளிநாடுகளில் காட்டி பணம் பெறுதல், உட்கட்டமைப்பு பணிகளுக்கு எதிரான செயல்பாடு போன்றவற்றில் ஈடுபடுவதாக, பலதரப்பிலிருந்தும் குற்றம் சாட்டப்பட்டுள்ளன.நாடு முழுவதும், ...

சொத்து விவரம் சமர்ப்பிக்காத அத்வானி, சோனியா,ராகுல்

Posted:

புதுடில்லி : லோக்சபா எம்.பி.,க்களாக பதவியேற்று, 90 நாட்களுக்குள் தங்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத, 401 பேர் பட்டியலில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் தலைவர்கள், சோனியா, ராகுல் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், லோக்சபா தலைமைச் செயலகத்தில் பெறப்பட்ட இந்த விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:பா.ஜ.,வைச் சேர்ந்த, 209 லோக்சபா எம்.பி.,க்கள், தங்கள் சொத்து விவரத்தை சமர்ப்பிக்கவில்லை. அவர்களில், அத்வானி, சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி, உமா பாரதி முக்கியமானவர்கள். காங்கிரசில், 31 பேர், கணக்கு சமர்ப்பிக்கவில்லை. அவர்களில், ...

ஆதார் அட்டை விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் பல்டி: முழுமையாக செயல்படுத்த மாநில அரசுகளுக்கு கடிதம்

Posted:

புதுடில்லி : 'ஆதார்' அட்டை விவகாரத்தில், மத்திய உள்துறை அமைச்சகம், தன் முந்தைய நிலைப்பாட்டை திடீரென மாற்றியுள்ளது. இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தும்படி, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ள உள்துறை அமைச்சகம், 'ஆதார் அட்டையை, எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் ஏற்க தக்க ஆவணமாக கருதலாம்' என்றும் கூறியுள்ளது.கடந்த, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்தில், 2009ல், ஆதார் அடையாள அட்டை திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காகதனி ஆணையமும் அமைக்கப்பட்டது.பிரத்யேக எண்:மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், ...

பால் விலையேற்றத்தை அடுத்து எதிர்க்கட்சிகள் போர்க்கொடி: தி.மு.க., - தே.மு.தி.க., போராட்டம் அறிவிப்பு

Posted:

சென்னை : ஆவின் பால் விலையேற்றத்திற்கு எதிராக, எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., கட்சிகள் போராட்டத்தையும் அறிவித்துள்ளன.ஆவின் பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையை, தமிழக அரசு நேற்று முன்தினம் அதிரடியாக உயர்த்தியது. நவம்பர், 1ம் தேதி முதல், பசும்பாலுக்கு கொள்முதல் விலையாக லிட்டருக்கு, 5 ரூபாய்; எருமை பால் லிட்டருக்கு, 4 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும். சமன்படுத்திய பாலின் விற்பனை விலை, லிட்டருக்கு, 10 ரூபாய் உயர்த்தப்படும் என, முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்தார்.இந்த விலை உயர்வுக்கு, அரசியல் கட்சிகள் பலவும் ...

திட்ட கமிஷனுக்கு பதிலாக விரைவில் புதிய அமைப்பு

Posted:

புதுடில்லி:மத்திய திட்ட கமிஷனுக்கு பதிலாக, திட்டங்கள் தொடர்பான விஷயங்களை கையாளுவதற்கான புதிய அமைப்பு, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.5 ஆண்டு திட்டம்:மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான நிதியை ஒதுக்குவது, மாநில அரசு திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்குவது, ஐந்தாண்டு திட்டங்களை தயாரிப்பது உள்ளிட்ட பணிகளை, மத்திய திட்ட கமிஷனே இதுவரை செய்து வந்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய போது, திட்ட கமிஷனின் ...

சட்டவிரோத சொத்து சம்பாதிக்கவில்லை: மத்திய ரயில்வே அமைச்சர் உறுதி

Posted:

பெங்களூரு:"எந்த வகையிலும், நான், சட்ட விரோதமாக சொத்து சம்பாதிக்கவில்லை," என, திட்ட வட்டமாக தெரிவித்த, மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடா, பெடரல் வங்கியிலிருந்து கடன் பெற்ற ஆவணங்களை, நிருபர்களிடம் காண்பித்தார்.மங்களூரில், தன் வீட்டில், நிருபர்களிடம், சதானந்த கவுடா கூறியதாவது:பெடரல் வங்கியிலிருந்து, ௮ கோடி ரூபாய் கடன் பெற்று உள்ளேன். பெங்களூரிலுள்ள, கட்டடம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. வாடகைக்கு கொடுத்திருப்பதால், 2 கோடி ரூபாய் டிபாசிட் பெற்று உள்ளேன். பல தொழில்கள் செய்து வருகிறேன்.எந்த வகையிலும், எந்த தொழிலிலும் சட்ட விரோதமாக பணம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™