Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


முதல் பிறந்த நாளைக் கொண்டாடும் ஷிவானிக்கு உங்கள் ஆசிகளை வழங்குங்கள்!

Posted: 26 Oct 2014 02:18 PM PDT

இன்று தனது முதல் பிறந்த நாளைக் கொண்டாடும் ஷிவானிக்கு உங்கள் ஆசிகளை வழங்குங்கள்!

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி

Posted: 26 Oct 2014 09:48 AM PDT

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில் ரமணி 01. காஞ்சி முனிவரின் ஹாஸ்யம் (இணைக்குறள் ஆசிரியப்பா) எப்போதும் பூஜை எல்லாமே உபதேசம் தப்பாத விரதங்கள் என்றில்லை துறவிக்கு. நகைச்சுவை இழையும் கேலியும் கிண்டலும் நகையென மின்னும் தகைசால் தெய்வீகத் துறவி ஜகத்குரு காஞ்சி மஹானின் பேச்சிலே. மராட்டிய மாநில மூதூர் ஒன்றில் விராட்டுரு முனியின் வீதியோர முகாம். யானைமேல் அமர்ந்து நாலுபேர் சாலைவழிப் போவதைப் பார்த்தார் பெரியவர். அவர்களை உடனே அழைத்து உசாவினார்: இவர்ந்து யானைமேல் எங்குச் செல்கிறீரோ? நாங்கள் ...

சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red

Posted: 26 Oct 2014 09:37 AM PDT

சிவப்பு விளக்குப் பகுதிக்கு சிறை தள்ளப்பட்ட பெண்ணின் இரும்பு பெட்டியிலிருந்து, அலறலுடன் எழுதப்பட்ட சிகப்புக் காகிதங்கள் அழாமல் பேசுகிறது...!:-( நான் கோழை அல்ல..!! வீரவசனம் பேசிய நானோ புழுவாக வாழ்ந்திருக்கிறேன், உடல் முழுக்க அவமானம் உயிரை எரிக்கிறது..!:-( விலைமகள் அல்ல நான்..!! வலிகளை சொல்ல முடியாமல் வாய் மூடி நிற்கிறேன், என் முகத்தை என்னால் எதிர்கொள்ள முடியாத ஆறாத ரணம் என்னுள்.!:-( கற்பை இழக்காத நோயாளி நான்.!:-( ரத்த திட்டுகளோடு யாரும் என்னை இனி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்..! இருந்தாலும் ...

நிர்வாணம்...!! -Mano Red

Posted: 26 Oct 2014 09:32 AM PDT

யாருமில்லா தனிமையில் அவள் நிர்வாணமாகி இருந்தாள், யாருமே இல்லை அது நிர்வாணமும் இல்லை.... இப்படியாக முடிகிறது ஒரு கவிதை..!! உடை நீங்குவது தான் நிர்வாணமெனில், மானமென்னும் உடை நீங்கி உயிர் போவதற்கு என்ன அர்த்தம்..?? நிர்வாணமென்பது அசிங்கத்தில் இல்லை, அடிபணிந்து அசிங்கப்பட்டு நிற்கையில் நிர்வாண நிலை புரியும்..!! உடுக்கை இழந்தவனின் கையறுநிலையில் இடுக்கண் கலைந்தால் நிர்வாணம் மூடி விடுமா..? இலைமறை காய் மறைவெல்லாம் இன்னலில் தென்படுமா..?? அவமானத்தில் அவலமாய் நிற்கும் ...

கொக்க கோலா பிரவுன் கலருடா, எங்கக்கா பொண்ணு அதே கலருடா’...

Posted: 26 Oct 2014 09:18 AM PDT

கத்தி படத்தில் கொக்க கோலா நிறுவனம் தமது கிராமத்தில் உள்ள நிலத்தடி நீரை எடுக்க எதிர்ப்புத் தெரிவித்துப் போராடுபவராக நடித்துள்ளார் விஜய். இந்நிலையில் விஜய் கொக்க கோலா நிறுவனத்தின் விளம்பர தூதராக இருந்து 'ஏய் தோழா, குடி கொக்க கோலா,' எனக் கோக் குடிக்கத் தூண்டியது, பெரும் தொகை பெற்றுக்கொண்டு அதன் ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டது உள்ளிட்ட விவரங்களுடன் அவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய்ப் பரவி வருகின்றன. விஜய் நடித்த பத்ரி படத்தில் விளம்பர நிகழ்ச்சி களுக்கு கொக்க ...

சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் ராம்கோபால் வர்மா…

Posted: 26 Oct 2014 09:13 AM PDT

- டுவிட்டரில் ஏதேனும் பரபரப்பு செய்திகளை வெளியிட்டு, சர்ச்சையில் சிக்கி வரும் இயக்குனர் ராம்கோபால் வர்மா, தற்போது, சாவித்ரி என்ற பெயரில், ஒரு தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். - சமீபத்தில், இப்படத்தின் போஸ்டர்களை அவர் ஆந்திராவில் வெளியிட்டிருந்தார். அதில், பத்து வயது மாணவன் ஒருவன், தன் வகுப்பு ஆசிரியையின் தொப்புளை, வக்கிரமாக பார்ப்பது போன்று ஒட்டப்பட்டிருந்ததால், ஆந்திராவிலுள்ள மாதர் சங்கங்கள், அப்படத்துக்கு எதிராக கொடி பிடித்துள்ளன. - அத்துடன், அப்படத்தை தடை செய்யக் ...

நிலக்கடலை உண்போம்... நீடித்து வாழ்வோம் !

Posted: 26 Oct 2014 09:03 AM PDT

நிலக்கடலை... கடலை, மல்லாக்கொட்டை, மணிலாக் கொட்டை என பல்வேறு பெயர்களில் தமிழகத்தில் அழைக்கப்படும் உணவுப் பொருள். இதை தொடர்ச்சியாக உண்பதால் வாழ்நாள் நீடிக்கும் என்பது பலரும் அறியாத ஒன்று. மாறிவிட்ட வாழ்க்கை முறையால், பன்னாட்டு உணவுக் கம்பெனிகளின் கடைவிரிப்பால் நம் மரபுசார்ந்த உணவுப் பொருளான நிலக்கடலையைக் கைவிட்டவர்கள் நம்மில் அதிகம் என்றால் அது மிகை இல்லை. குறிப்பாக நிலக்கடலை எண்ணையை முற்றிலும் புறக்கணித்து விட்டோம் என்றே சொல்லலாம். சமையல் எல்லாமே ரீபைண்ட் ஆயில்தானே! பாதாம், ...

பழைய கார் வாங்குவது லாபமா? எதை வாங்கலாம்? என்ன கவனிக்க வேண்டும்?

Posted: 26 Oct 2014 09:03 AM PDT

யூஸ் பண்ணலாமா? நகர எல்லைகள் விரிவடைந்துகொண்டே போகும் நிலையில், இப்போது கார் என்பது மிகவும் அத்தியாவசியம். புது கார் வாங்கும் அளவுக்கு பட்ஜெட் இல்லை; காசு இருந்தாலும் பலருக்கு சின்ன கார் வாங்கப் பிடிக்கவில்லை. அதனால், யூஸ்டு கார் மார்க்கெட்டில் ஸ்டைலான, அதே சமயம் அதிக வசதிகள்கொண்ட பெரிய கார் வாங்கும் எண்ணம் பரவ ஆரம்பித்திருப்பதுதான், இப்போது யூஸ்டு கார் மார்க்கெட்டைத் தூக்கி நிறுத்தியிருக்கிறது. யூஸ்டு கார் வாங்க வேண்டும் என்றால், எங்கே வாங்குவது? யாரை நம்புவது? கார் வாங்கும் முன் என்னென்ன ...

சர்க்கரை கூடுதலுக்கு விடிவு

Posted: 26 Oct 2014 08:52 AM PDT

வெள்ளை இளவரசி - முகமூடி வீரர் மாயாவி தோன்றும் காமிக்ஸ் .

Posted: 26 Oct 2014 08:40 AM PDT

ராணி காமிக்ஸ் - வெள்ளை இளவரசி காமிக்ஸை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/7e8ccwcr77f2c4g/Vellai+Ilavarasi.pdf

ஜப்பானைத் தொடர்ந்து ருமேனியாவில் ஸ்ரீதேவியின் இங்கிலீஷ் விங்கிலீஷ்!

Posted: 26 Oct 2014 05:43 AM PDT

இந்திப்பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திய ஸ்ரீதேவி, பின்னர் ஜானவி, குஷி என்ற இரண்டு மகள்களை பெற்றெடுத்து அவர்களை வளர்ப்பதற்காக தனது முழு நேரத்தையும் செலவிட்டு வந்தார். ஆனால், அவர்கள் 15 வயதை கடந்து விட்ட பிறகு மீண்டும் ஸ்ரீதேவியின் கவனம் சினிமா பக்கம் திரும்பியது. பாலிவுட்டில் உள்ள பல டைரக்டர்களிடம் தனக்கு பொருத்தமான கதையை கேட்டு வந்த ஸ்ரீதேவிக்கு, கெளரி ஷிண்டே என்ற பெண் இயக்குனர் சொன்ன இங்கிலீஷ் விங்கிலீஷ் கதை பிடித்து விட அந்த படத்தில் ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (320)

Posted: 26 Oct 2014 04:21 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

IP அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே சொந்தம் ? இல்லையா ?

Posted: 26 Oct 2014 12:36 AM PDT

IP  அட்ரஸ் ஒரு கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ?இல்லையா ? ரெண்டு நாட்களாக எனது மடிகணினியில் ,கீழ்கண்டவாறு , அறிவிப்பு வருகிறது . "Windows has detected an IP address conflict " Another computer on this network with same IP address as this computer . Contact  your network administrator for help resolving this issue . More details available in  windows system event log ." பொதுவாக ஒவ்வொரு கணினிக்கும் ஒரு தனிப்பட்ட IP அட்ரஸ் இருக்கும் அல்லவா . வெவ்வேறு  பிரௌசர் மூலம் கணினி திறந்தால் இந்த குழப்பம் ...

பாடம் - ஒரு பக்க கதை

Posted: 25 Oct 2014 11:38 PM PDT

இணைய குற்றங்கள் !

Posted: 25 Oct 2014 11:21 PM PDT

1.குறுந்தகவல்களை மொத்தமாக பலருக்கு ஒரே சமயத்தில் அனுப்ப, இலவச எஸ் எம் எஸ் சேவை தரும் தளங்கள் உள்ளன. அவற்றில் நம் எண்ணைப் பதிந்துவிட்டால், அவர்கள் ஒரு பாஸ்வேர்டு தருவார்கள். அதன் பின் கம்ப்யூட்டரில் அந்த தளத்தில் பாஸ்வேர்டை உள்ளிடுவதன் மூலம், தகவலை அனைவருக்கும் ஒரே சமயத்தில் அனுப்பலாம். சரி இதில் ஒரு முடிச்சு உள்ளது. அதாவது, உங்கள் செல்ஃபோன் ஐந்து நிமிடங்கள் என்னிடம் இருந்தால், உங்கள் மொபைல் எண்ணை அந்த தளத்தில் பதிந்துவிட்டு, உங்கள் மொபைலுக்க்கு அவர்கள் அனுப்பும் பாஸ்வேர்டை குறித்துக் ...

கூவி அழைக்குது பார் – (கவிதை) – மரபின் மைந்தன் முத்தையா

Posted: 25 Oct 2014 11:14 PM PDT

- நிலவின் கிரணம் பருகும் விழிகள் நட்சத்திரங்கள் எண்ணட்டும் ஒளிரும் கதிரின் விடியல் பொழுதில் உலகில் நுழைந்து வெல்லட்டும் - மலரும் அரும்பில் மதுவின் புதையல் மனமே வாழ்வும் அது போலே உலரா உறுதி உனக்குள் இருந்தால் உயர்வுகள் எல்லாம் மனம்போலே! - பரவிக் கிடக்கும் இயற்கை அழகைப் பருகும் மனதில் பலம் கூடும் புரவிக் குளம்பின் ஒலியை நொடியின் நகர்வில் உணர்ந்தால் விசைகூடும் - அருவிக் குளியல் போன்றது வாழ்க்கை அரைகுறை நாட்டம் போதாது குருவிக் கிருக்கும் குறுகுறுவேகம் நமக்கேன் ...

மனித மனம்! - (கவிதை) - ஜோதிபாரதி

Posted: 25 Oct 2014 11:08 PM PDT

- இதயம் இமயத்தை விட உயரமானது! இந்து மகா சமுத்திரத்தை விட ஆழமானது... உலக அதியங்களை விட அற்புதமானது! - மனித இதயங்கள் இருக்கும் இடங்களால் வேறுபட்டாலும் இயக்கங்களால் ஒன்றுபடுகின்றன! - ஒருவரின் இதயத்தில் இடம் பிடித்தவர் மற்றவருக்கு பிடிப்பதில்லை! - பாசம் சில வேளைகளில் வேஷங்களாய் பரிணமிக்கும் போதும் மோசமென முட்டித் தள்ளிவிடாமல் கருணை கலந்து மீண்டும் இதயம் நேசக்கரம் நீட்டும்! - ஏங்கியழும் குழந்தையை எங்கேனும் கண்டால் ஏனென்று அழும் காரணத்தை இதயம் கேட்கும்! - சொந்த பந்தங்களால் பந்தாடப்படும் ...

இந்த வார சினிமா துளிகள்

Posted: 25 Oct 2014 11:00 PM PDT

* அரண்மனை படத்தில் ஹன்சிகாவின் ஆவேச நடிப்பைப் பார்த்து ஒரு இயக்குனர், அவரை மையப் படுத்தி, ஒரு ஆக் ஷன் கதையை தயார் செய்து கொண்டிருக்கிறார். - ============================================ = - * விஜயசேதுபதியுடன் நடித்துவரும், வசந்தகுமாரன் படம் என் மார்க்கெட்டை புரட்டிப்போடும் என்கிறார் பிந்துமாதவி - ==================================================== - - லட்சுமிமேனனுக்கு செல்லவிருந்த இரண்டு பட வாய்ப்புகளை கைப்பற்றி, அவருக்கு பலத்த அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ஸ்ரீதிவ்யா. - ———————————————-

சமந்தாவுக்கு அக்காவான சினேகா!

Posted: 25 Oct 2014 10:57 PM PDT

- தற்போது தமிழில் படமே இல்லாத சினேகா தெலுங்கில் அல்லுஅர்ஜுன் மற்றும் சமந்தா நடிக்கும் ஒரு படத்தில் சமந்தாவுக்கு அக்கா வேடத்தில் நடிக்கிறார் -. இதற்கு முன் பிரகாஷ்ராஜ் நடித்த, உலவச்சாறு பிரியாணி என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்த சினேகா, 'இனி, இதுபோன்ற அக்கா, அண்ணி வேடங்கள் கிடைத்தாலும் நடிக்கத் தயார்…' என்று அறிக்கை விட்டிருக்கிறார். - அதேசமயம், 'நான் நடிப்பதற்கு, 'நச்'சென்று ஒரு நாலு சீனாவது இருக்க வேண்டும்…' என்று கோடிட்டு காண்பித்துள்ளாராம் - — எலீசா – வாரமலர்

இமான் இசையில் பாலிவுட் இசையமைப்பாளர்

Posted: 25 Oct 2014 10:55 PM PDT

- - மைனா படத்திற்கு பின், கோலிவுட்டில் பேசப்படும் இசையமைப்பாளராகி விட்டார் இமான். அதோடு தான் இசையமைக்கும் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை பின்னணி பாட வைத்து வருகிறார். - ஜில்லாவில் விஜய்யை பாட வைத்தவர், என்னமோ ஏதோ படத்தில் ஸ்ருதிஹாசனையும், பாண்டியநாடு படத்தில் ரம்யா நம்பீசனையும், வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சிவகார்த்திகேயனையும் பாட வைத்தார். - அதையடுத்து, இப்போது ரோமியோ ஜூலியட் படத்துக்காக பாலிவுட்டின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவரான, விஷால் ...

பொய் - ஒரு பக்க கதை

Posted: 25 Oct 2014 10:53 PM PDT

பாமரர் தேவாரம்

Posted: 25 Oct 2014 09:25 PM PDT

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™