Tamil News | Online Tamil News |
- ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபைகளுக்கு ஐந்து கட்ட தேர்தல் : நவம்பர் 25ல் துவங்கி, டிசம்பர் 20ம் தேதி முடிவடைகிறது
- மின் கட்டண கருத்து கேட்பு : அரசியல் கட்சிகள் மவுனம்
- 'எல்லா சோதனைகளையும் கடந்து வெற்றி பெறுவேன்'
- பால் கொள்முதல் விலை உயர்வு: வரவேற்பும் எதிர்ப்பும்
- தூய்மை இந்தியா இயக்கம் பிரபலமாக ஊடகங்களே காரணம்: பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
- பா.ஜ.,வின் அதிரடி அரசியலுக்கு சிவசேனா பணிந்தது: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க ஆதரவு
- ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்வு: கொள்முதல் விலையையும் உயர்த்தியது அரசு
- கிரானைட் சுரங்க முறைகேட்டை விசாரிக்க முடியாமல் சகாயம் தவிப்பு: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற அரசு ஒத்துழைப்பு இல்லை
- டீசலைத் தொடர்ந்து சமையல் காஸ் விலை குறையுமா?
- கோவை, நீலகிரி, திருப்பூரில் கொட்டுகிறது மழை
- குழந்தைகள் இறப்பை தடுக்க மோடி வேண்டுகோள்
| Posted: புதுடில்லி : 'ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில், நவம்பர், 25ம் தேதி துவங்கி, டிசம்பர், 20ம் தேதி வரை, ஐந்து கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும். இந்தத் தேர்தலில் பதிவான ஓட்டுகள், டிசம்பர், 23ம் தேதி எண்ணப்படும்' என, தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் நேற்று அறிவித்தார்.6ஆண்டுகள் : ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநில சட்டசபையின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம், ஜனவரி, 19ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால், அங்கு சட்டசபை ... |
| மின் கட்டண கருத்து கேட்பு : அரசியல் கட்சிகள் மவுனம் Posted: மின் கட்டணம் உயர்வு தொடர்பாக நடந்த, கருத்து கேட்பு கூட்டத்தில், அரசியல் கட்சிகள் பங்கேற்காதது, பொதுமக்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு மின் வாரியம், அதிகாரிகளின் நிர்வாக சீர்கேட்டால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதை சரிசெய்ய, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.இதற்காக, சென்னை, உயர் நீதிமன்றம் அருகில் உள்ள, ராஜா அண்ணாமலை மன்றத்தில், கடந்த வெள்ளிக்கிழமை, பொதுமக்கள், கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.இதில், சமூக ஆர்வலர்கள், தொழில் கூட்டமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் ... |
| 'எல்லா சோதனைகளையும் கடந்து வெற்றி பெறுவேன்' Posted: சென்னை : 'தமிழக மக்கள் யாரும், இனிமேல் உயிரை மாய்த்துக் கொள்ளும் செயல் எதிலும் ஈடுபட வேண்டாம்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர், ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:எனக்கு ஏற்பட்டுள்ள துயரத்தை தாங்கிக் கொள்ள முடியாமல், 193 பேர் மரணமடைந்த செய்தி அறிந்து, மன வேதனை அடைந்தேன்.'அவர்களின் குடும்பத்திற்கு, தலா, 3 லட்சம் ரூபாய், நிதியுதவி வழங்கப்படும்' என, கடந்த 19ம் தேதி அறிவித்தேன்.அவர்களோடு, மேலும், 26 பேர் பல்வேறு வழிகளில், தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர் என, தற்போது வந்திருக்கும் தகவல், என்னை பெரும் துயரத்துக்குள்ளாக்கி உள்ளது. அவர்களின் ... |
| பால் கொள்முதல் விலை உயர்வு: வரவேற்பும் எதிர்ப்பும் Posted: சென்னை: ஆவின் பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையை, தமிழக அரசு அதிரடியாக உயர்த்தி உள்ளது. இது குறித்து தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள்:தி.மு.க., தலைவர் கருணாநிதி:ஆட்சிக்கு வந்தால், விலைவாசியை குறைப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில், பால் விற்பனை விலையை, லிட்டருக்கு, 16.25 ரூபாய் உயர்த்தி உள்ளார்.பால் விலை உயர்வால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவர். எனவே, பால் விலை உயர்வை, தமிழக அரசு, உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொதுச்செயலர் ... |
| தூய்மை இந்தியா இயக்கம் பிரபலமாக ஊடகங்களே காரணம்: பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு Posted: புதுடில்லி : ''தூய்மை இந்தியா' இயக்கம் குறித்த விழிப்புணர்வு, மக்களிடையே அதிக அளவில் பரவ, ஊடகங்களே காரணம். இதன்மூலம், ஒவ்வொன்றும் அரசே பொறுப்பு; ஒவ்வொன்றையும் அரசே செய்ய வேண்டும் என்ற, மக்களின் மனநிலை மாறி உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.தீபாவளி பண்டிகையை ஒட்டி, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, டில்லியில் உள்ள பா.ஜ., தலைமையகத்தில், பத்திரிகை யாளர்களுக்காக நேற்று விருந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில், முக்கியமான பத்திரிகைகளில் ஆசிரி யர்கள், பா.ஜ., தொடர்பான செய்திகளை சேகரிக்கும் நிருபர்கள் என, 400க்கும் ... |
| பா.ஜ.,வின் அதிரடி அரசியலுக்கு சிவசேனா பணிந்தது: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க ஆதரவு Posted: மும்பை: மகாராஷ்டிராவில், பிடிவாத போக்குடன் செயல்பட்ட சிவசேனாவை, பா.ஜ., மேலிடம், தன் அதிரடி அரசியல் நடவடிக்கைகள் மூலம் வழிக்கு கொண்டு வந்துள்ளது. 'அமைச்சரவையில் சம பங்கு இல்லை; துணை முதல்வர் பதவி தர மாட்டோம்' என்ற பா.ஜ.,வின் கண்டிப்பான உத்தரவுக்கு பணிந்துள்ள சிவசேனா, பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமைய,ஆதரவு தர முன்வந்துள்ளது.மகாராஷ்டிராவில், 25 ஆண்டுகளாக, பா.ஜ., - சிவசேனா கூட்டணி இருந்து வந்தது. ஆனால், சமீபத்தில், சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தொகுதி பங்கீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, இந்த கூட்டணி முறிந்தது.இரண்டு கட்சிகளும் தனித் தனியாக ... |
| ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்வு: கொள்முதல் விலையையும் உயர்த்தியது அரசு Posted: சென்னை: ஆவின் பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையை, தமிழக அரசு அதிரடியாக உயர்த்தி உள்ளது. நவ., 1ம் தேதி முதல், பசும் பாலுக்கு கொள்முதல் விலையாக லிட்டருக்கு, 5 ரூபாய்; எருமை பால் லிட்டருக்கு, 4 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதேபோல், சமன்படுத்திய பாலின் விற்பனை விலையை, லிட்டருக்கு, 10 ரூபாய் உயர்த்த, அரசு முடிவு செய்துள்ளது.அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, 2011ல் பால் விலை, லிட்டருக்கு, 6.25 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு, மூன்று முறை, கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. இந்த சூழ்நிலையில், முதல்வர் ... |
| Posted: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கிரானைட் மற்றும் கனிம வளம் கொள்ளை குறித்து விசாரிக்க, அரசு ஒத்துழைப்பு அளிக்க, முன் வராததால், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், விசாரணையை துவக்க முடியாமல், தவித்து வருகிறார்.தமிழகத்தில், கிரானைட் மற்றும் கனிம வளம் முறைகேடு குறித்து விசாரிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை நியமிக்க கோரி, சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார்.சிறப்பு அதிகாரி:மனுவை விசாரித்த நீதிபதிகள், கனிம கொள்ளை குறித்து விசாரிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை, சிறப்பு அதிகாரியாக நியமித்தனர்.அவர், விசாரணையை ... |
| டீசலைத் தொடர்ந்து சமையல் காஸ் விலை குறையுமா? Posted: சென்னை : டீசல் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சமையல் காஸ் சிலிண்டர் விலையும் குறையும் எனத் தெரிகிறது.பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் என, மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழகத்தில், 1.65 கோடி சமையல் காஸ் இணைப்புகளும், 25 லட்சம் வர்த்தக காஸ் இணைப்புகளும் உள்ளன.வீட்டு உபயோத்திற்கு, சராசரியாக, 400 ரூபாய் என்ற மானிய விலையில், ஆண்டுக்கு, 12 சிலிண்டர்கள் தரப்படுகின்றன. மானியம் அல்லாத சிலிண்டர் விலை, சராசரியாக, 900 ரூபாயாக உள்ளது. 19 கிலோ எடை கொண்ட, வர்த்தக காஸ் சிலிண்டர், 1,621 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.சர்வதேச ... |
| கோவை, நீலகிரி, திருப்பூரில் கொட்டுகிறது மழை Posted: ஊட்டி ரோட்டில் நிலச்சரிவு: குன்னுார் மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால், பர்லியாறு அருகே ஊட்டி ரோட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.குன்னுார், கோத்தகிரி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்கிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், மேட்டுப்பாளையம் -- குன்னுார் மெயின் ரோட்டில், அதிகாலை வேளையில் பர்லியாறு அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. பாறைகளும், மரங்களும் வேரோடு சரிந்து ரோட்டில் விழுந்தன. குன்னுார் ரோட்டில் போக்குவரத்து தடைபட்டது. எஸ்.ஐ.,க்கள் ராஜபிரபு, சிவக்குமார் மற்றும் ... |
| குழந்தைகள் இறப்பை தடுக்க மோடி வேண்டுகோள் Posted: மும்பை : மும்பையில், முகேஷ் அம்பானியின், 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனம் சார்பில் செயல்பட்டு வரும் பழமையான, 'எச்.என்.ரிலையன்ஸ் பவுண்டேஷன்' மருத்துவமனை, ஏராளமான பொருட ்செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நேற்று நடந்த விழாவில், பிரதமர் மோடி பேசியதாவது: வெளிநாடுகளில் வசிக்கும் மக்களுக்கு கிடைக்கும் மருத்துவ வசதிகளை ஒப்பிடும்போது, நம் நாட்டில் உள்ள ஏழைகளுக்கு, மிகக்குறைவான மருத்துவ வசதி தான் கிடைக்கிறது. மத்திய அரசால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள, 'மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா' திட்டங்களை தீவிரமாக பிரசாரம் செய்வதன் மூலம், ஏழைகளுக்கான ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 26,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |