Tamil News | Online Tamil News |
- தீபாவளிக்கு வாழ்த்து முதல்வர் தெரிவிக்காதது ஏன்?
- அழியும் நிலையில் அரிய பொக்கிஷங்கள்!
- பட்டாசு விபத்தில் மடியும் மனித உயிர்கள்: 15 ஆண்டுகளில் 353 பேர் பலியான பரிதாபம்
- சகாயம் குழு கிரானைட் ஊழல் விசாரணையை துவக்க தாமதம் ஏன்: அக்.,28 ல் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
- அனைத்து சுகோய் விமானங்களின் சேவையும் நிறுத்தம்: கோளாறு கண்டறிந்த பிறகு இயக்க விமானப்படை முடிவு
- எல்.கே.ஜி., படித்த 3 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்: பெங்களூரில் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்
- முதல்வர் பதவியை குறிவைக்கும் கட்காரி அந்தர் பல்டியின் அதிர வைக்கும் பின்னணி
- ராணுவத்தினருக்கு விசேஷ கூடாரங்கள் வாங்கியதில் ஊழல்: முந்தைய காங்., அரசின் ரூ.22 கோடி முறைகேடு அம்பலம்
- பா.ஜ., மேலிடத்திற்கு சிவசேனா தலைவர் உத்தவ் தூது: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க ஒரே ஒரு நிபந்தனை
- கனடா பார்லிமென்டில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு
| தீபாவளிக்கு வாழ்த்து முதல்வர் தெரிவிக்காதது ஏன்? Posted: தீபாவளியை முன்னிட்டு, தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க., சார்பில், வழக்கமாக வெளியிடப்படும் வாழ்த்துச் செய்தி, இந்த தீபாவளிக்கு வெளியாகவில்லை.அ.தி.மு.க., சார்பில், அதன் பொதுச் செயலரும், தமிழக அரசின் சார்பில், முதல்வரும் வாழ்த்து செய்திகளை வெளியிடுவர். பொதுச் செயலர் மற்றும் முதல்வர் ஆகியோர், இதுவரை ஒருவராகவே இருந்ததால், ஜெயலலிதாவின் வாழ்த்து செய்தி மட்டும் வெளியாகும்.தற்போது, முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும், அ.தி.மு.க., பொதுச்செயலராக ஜெயலலிதாவும் உள்ளனர். அதனால், இருவரும், தனித்தனியாக தீபாவளி வாழ்த்து செய்திகளை வெளியிடுவர் என்ற, எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், ... |
| அழியும் நிலையில் அரிய பொக்கிஷங்கள்! Posted: ஆன்ட்ராய்டு போனும் கையுமாக அலையும் இன்றைய இளைய தலைமுறையினர், 'வாட்ஸ் அப்'பில் தகவல் பரிமாறி; பேஸ் புக்கில் லைக் போட்டு; மதியம் பீட்சாவும், பர்கரும் கடித்து ருசித்து; நடுநிசி வரை கொண்டாட்டங்களில் களித்து; வார இறுதியில் 'அவுட்டிங்' சென்று... என, இன்றைய நவீன உலகின் வசதி, வாய்ப்புகளை அனுபவித்து லயிக்கின்றனர்.நாம் இந்நிலைக்கு வரும் வரை தந்தை, தாத்தா, பாட்டன், பூட்டன்களுக்கு சோறு போட்டு தலைமுறைகளை காப்பாற்றிய, அக்கால விவசாயிகள், எந்த மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தனர்; அப்போது, என்ன வசதிகள் இருந்தன என்பதையும் அறிந்து கொள்வது அவசியம்...நம் முன்னோர்கள் ... |
| பட்டாசு விபத்தில் மடியும் மனித உயிர்கள்: 15 ஆண்டுகளில் 353 பேர் பலியான பரிதாபம் Posted: விருதுநகர் : விருதுநகர், சிவகாசி பகுதி பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல், சட்டவிரோதமாக செயல்பட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், கடந்த 15 ஆண்டுகளில் நடந்த 218 வெடிவிபத்துக்களில் 353 பேர் பலியாகி உள்ளனர். இதில் பாரபட்சம் காட்டாமல் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, தொடர் உயிர்பலியை தவிர்க்க முடியும் .விருதுநகர் மற்றும் சிவகாசி சுற்றுப்பகுதிகளில் 800க்கு மேற்பட்ட பெரிய, சிறிய பட்டாசு ஆலைகள் உள்ளன. நாக்பூர் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை (பெசோ) மற்றும் டி.ஆர்.ஓ.,லைசென்ஸ் பெற்று இவை இயங்குகின்றன. ஏராளமான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக ... |
| Posted: மதுரை: தமிழகத்தில் நடந்து வரும் கிரானைட் ஊழல் குறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் தலைமையிலான குழுவில் இடம் பெறும் அதிகாரிகள் பட்டியலை அரசு வெளியிடவில்லை. தாமதம் ஏன்? என்பது குறித்து அக்.,28 ல் அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கனிம வளங்கள் தனிநபர் சிலரால் சுரண்டப்பட்டு வருவதால் அரசுக்கு ரூ.பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு வருவது குறித்து அப்போதைய மதுரை கலெக்டர் சகாயம், அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.கிரானைட் குவாரிகளுக்கு 'சீல்'இவரையடுத்து கலெக்டர் அன்சுல்மிஸ்ரா, மதுரையில் ... |
| அனைத்து சுகோய் விமானங்களின் சேவையும் நிறுத்தம்: கோளாறு கண்டறிந்த பிறகு இயக்க விமானப்படை முடிவு Posted: புதுடில்லி: இந்திய விமானப்படையில் இடம்பெற்றுள்ள, சுகோய் 30 போர் விமானங்கள் அனைத்தும் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் அந்த விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதை அடுத்து, இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.விபத்திற்கான காரணம் கண்டறியப்பட்ட பிறகு, நிறுத்தப்பட்டுள்ள, 200 விமானங்களையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்திய விமானப்படையில், 200, சுகோய் 30 விமானங்கள் உள்ளன. இந்த விமானங்களில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறால், 2009ல் இருந்து இது வரை, ஐந்து மிகப்பெரிய விபத்துகளில் விமானிகள் பலர் இறந்துள்ளனர்; விமானங்களும் எரிந்து ... |
| Posted: பெங்களூரு : பெங்களூரு ஜாலஹள்ளி கிராஸில் உள்ள, 'ஆர்ச்சிட் இண்டர்நேஷனல்' பள்ளியில் எல்.கே.ஜி., படித்து வந்த, 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. சம்பவத்துக்கு, எதிர்ப்பு தெரிவித்து, பள்ளியின் முன் பெற்றோர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.பெங்களூரு தும்கூரு ரோட்டில், ஜாலஹள்ளி கிராஸில், ஆர்ச்சிட் இண்டர்நேஷனல் பள்ளி உள்ளது. இதில், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளியின் அழகிய கட்டிடம், இதமான சூழ்நிலை, அமைதியான இடம் என, பார்ப்பவர்களூக்கு, பள்ளியின் மீது ... |
| முதல்வர் பதவியை குறிவைக்கும் கட்காரி அந்தர் பல்டியின் அதிர வைக்கும் பின்னணி Posted: நாக்பூர் : மத்திய அமைச்சரும், பா,ஜ., மூத்த தலைவருமான நிதின் கட்காரியின் ஆதரவாளர்கள், அவரை, மகாராஷ்டிராவின் முதல்வராக்க வேண்டும் என, திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளனர். மாநில அரசியலில் தனக்கு விருப்பமில்லை எனக்கூறி வந்த நிதின் கட்காரி, திடீரென முதல்வர் பதவியை குறிவைத்து காய் நகர்த்துவதன் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.பா.ஜ.,வின் மூத்த தலைவர்களில் ஒருவரான நிதின் கட்காரி, 58, தற்போது, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த இவர், முன்னர், ... |
| Posted: புதுடில்லி : காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி காலத்தில், எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்காக, விசேஷ பாதுகாப்பு கூடாரங்கள் வாங்கியதில், மத்திய அரசில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.இந்த ஊழலில் தொடர்புடைய, மத்திய உளவுப்பிரிவு மற்றும் மத்திய கேபினட் செயலகத்தின் சில அதிகாரிகளிடம், சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. அத்துடன், தனியார் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.அண்டை நாடான சீனாவுடன், 1962ல் ஏற்பட்ட போரில், இந்தியா தோல்வி அடைந்தது. எல்லையில், ... |
| பா.ஜ., மேலிடத்திற்கு சிவசேனா தலைவர் உத்தவ் தூது: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க ஒரே ஒரு நிபந்தனை Posted: மும்பை : மகாராஷ்டிராவில், யாருடைய ஆதரவுடன் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும் என்பது தொடர்பான, 'சஸ்பென்ஸ்' நீடித்து வரும் நிலையில், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா தன் நிலையிலிருந்து இறங்கி வந்துள்ளது. அந்தக் கட்சியைச் சேர்ந்த இரு தலைவர்கள், உத்தவ்வின் தூதுவர்களாக, டில்லியில், பா.ஜ., மூத்த தலைவர் மாத்தூரை சந்தித்துப் பேசி உள்ளனர். அப்போது, பா.ஜ.,வுக்கு ஆதரவு தர, ஒரே ஒரு நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மகாராஷ்டிராவில், சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 288 இடங்களில், பா.ஜ., 122 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், பெரும்பான்மைக்கு, 145 ... |
| கனடா பார்லிமென்டில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு Posted: ஒட்டவா: கனடா பார்லிமென்டிற்குள் நடந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் மர்ம நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் சிலர் காயமடைந்தார். பார்லிமென்ட் வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சண்டை நடந்தது. இரண்டு இடங்களில் துப்பாக்கிச்சூடு நடந்தது என கனடா நாட்டு போலீசார் உறுதி செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் மர்ம நபர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை ஒருவர் தான் நடத்தினாரா என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை. இன்னும் சிலர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 23,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |