Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'கிளீன்' இந்தியா:நாடெங்கும் தூய்மை திட்டம் ;டில்லியில் துவக்கினார் மோடி

Posted:

புதுடில்லி:மகாத்மா காந்தியின் கனவான 'துாய்மை இந்தியா' திட்டத்தை அவரது பிறந்தநாளான நேற்று டில்லியில்பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அவரே வால்மீகி மந்திர், ராஜ்பாத் பகுதிகளை துடைப்பத்தால் சுத்தப்படுத்தினார்.

மோடியுடன் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இப்பணியில் ஈடுபட்டனர்.திட்டத்தை துவக்கி வைத்து மோடி பேசியதாவது:
தேசத்தந்தை காந்தி துாய்மையான இந்தியாவை காண வேண்டும் என விரும்பினார். அதற்காக அவரது பிறந்தநாளன்று இந்த திட்டம் துவக்கப்படுகிறது. இதற்கென தனியாக திட்டம் தீட்டி யாரும் செயல்படவில்லை. அதற்காக இப்போது பிரத்யேக திட்டம் ...

பொறுப்புடன் செயல்படுகிறார்பிரதமர் மோடிக்கு அத்வானி பாராட்டு

Posted:

ஆமதாபாத்:''பிரதமர், நரேந்திர மோடி மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படுகிறார். ஒட்டுமொத்த நாட்டின் அபிமானத்தை பெற்றுள்ளார். எனினும், வாஜ்பாய் போன்றதொரு பிரதமரை இந்த நாடு இனி பார்க்க முடியாது,'' என, பா.ஜ., மூத்த தலைவரான அத்வானி கூறினார்.குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், பா.ஜ.,வினர் கூட்டத்தில் பங்கேற்ற அத்வானி பேசியதாவது:பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றதும், அவர் எப்படி பிறருடன் பழகப் போகிறார்... எவ்வளவு பெரிய பொறுப்பை அவர் எவ்வாறு ஏற்க உள்ளார் என பலரும் பல விதமாக யோசித்தனர். அதை எல்லாம் தகர்க்கும் விதத்தில், பொறுப்புகளை எல்லாம் தோளில் சுமந்து அருமையாக ...

ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., விளக்கம்

Posted:

பெங்களூரு: ''சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சாதாரண 'செல்'லிலேயே உள்ளார். சொந்த உடையை அணிகிறார். டாக்டர்கள் ஆலோசனைப்படி தினமும் மூன்று வேளை ஜெயலலிதாவுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது,'' என, கர்நாடகா சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெயசிம்ஹா கூறினார்.சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், கடந்த, 27ம் தேதி மாலை, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கர்நாடகா உயர்நீதிமன்றத்தில், அவரது ஜாமின் மனு, நிலுவையிலுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து, ஜெயலலிதா சிலரை சந்தித்தார்என்றும், ...

ஜெ., ஜாமின் மனுவை விசாரிக்கும் நீதிபதி யார்

Posted:

பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜாமின் மனு விசாரணை, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில், நீதிபதி ஏ.வி.சந்திரசேகரா முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீதான விசாரணை, அக்., 7ம் தேதி நடக்கிறது. கர்நாடகா உயர்நீதிமன்றத்திற்கு, தசரா விடுமுறை, செப்., 29ம் தேதியிலிருந்து, அக்., 5ம் தேதி வரை விடப்பட்டுள்ளது. அக்., 6ம் தேதி, 'பக்ரீத்' அரசு விடுமுறை. எனவே, அக்., 7ம் தேதி, ஜெயலலிதாவின் ஜாமின் மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும். இவ்வழக்கு விசாரணை நீதிபதியாக, ஏ.வி.சந்திரசேகரா நியமிக்கப்பட்டுள்ளார். அன்று காலையில் நடக்கும் விசாரணையில், ஜெயலலிதா ...

தீர்ப்புக்கு கருத்து சொல்ல அச்சம்: வீரியம் இழக்கிறதா தி.மு.க.,?

Posted:

சென்னை: ஜெயலலிதா மீது போடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., தன் தரப்பு கருத்தை வெளிப்படுத்தாமல் அமைதியாக இருப்பது, கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக, தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது, வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக, வழக்கு போடப்பட்டு, அவருக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்திருக்கிறது. வழக்கை முதன் முதலில் தாக்கல் செய்தது, பா.ஜ.,வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி. என்றாலும், வழக்கை அப்போதைய தி.மு.க., அரசுதான் எடுத்து ...

நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் ஆளும்கட்சியினர்: விஜயகாந்த் குற்றச்சாட்டு

Posted:

சென்னை: ஜெயலலிதா ஊழல் செய்தார் என நிரூபிக்கப்பட்டதை, திசைதிருப்பி, பொது மக்களிடத்தில், இத்தீர்ப்பு குறித்து ஒரு மாயதோற்றத்தை உருவாக்க அ.தி.மு.க.,வினர் முயற்சி செய்கிறார்கள். இச்செயல்கள் அனைத்தும், நீதிமன்ற அவமதிப்பாகும்'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக, பெங்களூரு கோர்ட் அளித்த தீர்ப்பின் விளைவாக, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அ.தி.மு.க., நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தி ...

தமிழக அரசு அலுவலகங்களில் ஜெ., புகைப்படங்கள் அகற்றம்: புதிய முதல்வர் பன்னீர்செல்வம் படம் வைக்கப்படுமா?

Posted:

தமிழக முதல்வராக, பன்னீர்செல்வம் பொறுப்பேற்று கொண்டதை தொடர்ந்து, அரசு அலுவலகங்களில் இருந்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. இந்த முறையாவது, அரசு அலுவலகங்களில், தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் படங்கள் வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.கடந்த, 2011ம் ஆண்டு, தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அபார வெற்றி பெற்றது; தமிழக முதல்வராக, ஜெயலலிதா பொறுப்பேற்றார். தமிழகம் முழுவதும் உள்ள, அனைத்து அரசு துறை அலுவலகங்களிலும், முதல்வராக பொறுப்பு வகித்து வந்த ஜெயலலிதாவின் புகைப்படம் மாட்டி வைக்கப்பட்டன. செய்தி மக்கள் தொடர்பு துறை ...

செம்மொழி மாநாட்டு செலவில்...'கரைந்தது' வரிப்பணம்:சாலை துப்புரவு வாகனம் என்னாச்சு?

Posted:

கோவை:செம்மொழி மாநாட்டின் போது, ஒரு கோடியே, 13 லட்சம் ரூபாய் மதிப்பில், மாநகராட்சிக்கு வாங்கப்பட்ட சாலை துப்புரவு வாகனங்கள், இப்போது எங்கே என்றே தெரியவில்லை.கடந்த செவ்வாய்க்கிழமையன்று, கோவை மாநகரப்பகுதிகள் அனைத்திலும் கனமழை பெய்து, சாலை முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குளம் போல தண்ணீர் தேங்கி நின்றதால், வாகனங்கள் செல்ல சிரமப்பட்டன; கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது; மழையின்போது, எங்கெங்கோ இருந்த மண்ணையெல்லாம் சாலையில் கொண்டு வந்து சேர்த்தது. அப்போது சேர்ந்த மண், நேற்றைய வெயிலில் காய்ந்து, வாகன போக்குவரத்தால் புழுதியானது. இதனால், ...

ஜெ., ஜாமின் விசாரணை தாமதம்: பள்ளி திறப்பு தள்ளி போகுமா?

Posted:

ஈரோடு: அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமின் மனு விசாரணை தேதி, தள்ளி போனதால், பள்ளி திறக்கப்படும் தேதியும், தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.அ.தி.மு.க., பொது செயலாளர் ஜெயலலிதா, ஜாமின் மனு மீதான விசாரணை, 1ம் தேதியான நேற்று முன்தினம் எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கை விசாரிக்க மறுத்து, 7ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி ஒத்தி வைத்தார். தமிழகத்தில், பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை, செப்., 27ம் தேதி துவங்கி, அக்.,5ம் தேதி வரை விடப்பட்டுள்ளது. வரும், 6ம் தேதி, பள்ளி வழக்கம் போல் திறந்து செயல்படும், என, அறிவிக்கப்பட்டு உள்ளது. உள்ளாட்சி தேர்தலால், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™