Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு..

Posted: 02 Oct 2014 02:43 PM PDT

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்வதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் டிவிஏசி எனப்படும் ஊழல் எதிர்ப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது அதிமுக வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம். ஜாமீனில் விடக் கூடாது என்று கூறியதோடு நில்லாமல், ஜெயலலிதா பிரபலமான அரசியல் தலைவர். அவரை இப்போது வெளியே விட்டு விட்டால் மீண்டும் கைது செய்ய முடியாது. அவர் சாட்சிகளைக் கலைக்க முயலலாம் என்றும் டிவிஏசி ...

அலெக்சாண்டரை எதிர்த்துப் புறக்கணித்தவர்

Posted: 02 Oct 2014 02:40 PM PDT

லௌகீகப் பற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்; வயதில் மட்டுமல்ல, ஞானத்திலும் மிகவும் முதிர்ந்தவர், உடல் வளைந்து கூனிக் குறுகி, பிறந்த மேனியராய் ஊரெங்கும்சுற்றித் திரிந்து கொண்டிருந்த அந்த ஞானியின் பெயர் டண்டமிஸ். கிரேக்கர் அப்படி அழைத்தனர், தட்சசீலத்தில் உச்சிக்கு வந்த உக்கிர பாஸ்கரனின் கொளுத்தும் வெயிலில், பாதத்தைப் பொசுக்கும் உஷ்ணத்தையும் உதாசீனப்படுத்தியவாறு நடந்து வந்து கொண்டிருந்தார் அந்த ஞானி. ஓடிவந்த குதிரையொன்று அவரெதிரே ஒட்டி நின்றது. கூனிக் குனிந்திருந்த ஞானி தலையைத் தூக்கிப் ...

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Posted: 02 Oct 2014 02:33 PM PDT

பெங்களூரு: செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம் மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப உள்ளது. இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி, செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ...

மேற்கு ஜெர்மனியும் கிழக்கு ஜெர்மனியும் ஒன்றாக இணைந்த நாள் (அக்.3 -1990)

Posted: 02 Oct 2014 02:15 PM PDT

ஜெர்மனி அல்லது ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு என்பது ஐரோப்பாவின் நடுவில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இந்த ஜெர்மனி நாடு பத்தாம் நூற்றாண்டில் (கி.பி. 962) புனித ரோமானிய பேரரசால் தோற்றுவிக்கப்பட்டதாகும். பின்னர் ஜெர்மனை ஆண்ட சர்வாதிகாரி ஹிட்லர் 1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாவது உலகப் போரில் தோல்வி கண்டார். பிறகு அவர் தற்கொலை செய்து கொண்டார். நேச நாடுகளிடம் ஜெர்மனி சரண் அடைந்தது. ஜெர்மனியை நேச நாடுகள் பங்கு போட்டுக்கொண்டன. மேற்கு ஜெர்மனி என்றும், கிழக்கு ஜெர்மனி என்றும் இரண்டாக பிரிக்கப்பட்டது. ...

உலகச் செய்திகள்!

Posted: 02 Oct 2014 02:04 PM PDT

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

ஜெ - சொத்துக்குவிப்பு வழக்கு! - 17 ஆண்டுகள்... அதிர்வலைகள்!

Posted: 02 Oct 2014 01:52 PM PDT

17 ஆண்டுகளைத் தாண்டியும் தடதடத்துக்கொண்டிருந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா அதிரடியாக முடித்துவைத்துவிட்டார். வழக்கு கடந்துவந்த 17 ஆண்டுகளைப் பற்றிய பருந்துப் பார்வை இது... 1. முட்டாள்கள் தின காமெடி! 1995, ஏப்ரல் 1... அப்போதைய, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி, ஒருசில பத்திரிகையாளர்களை சென்னையில் தனது அலுவலகத்துக்கு வரவழைத்திருந்தார். சுவாமியின் வழக்கமான அரசியல் செய்தியாக இருக்கும் எனச் சென்றவர்களுக்குக் காத்திருந்தது, இந்தியாவுக்கான ...

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Posted: 02 Oct 2014 01:50 PM PDT

ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட போலே (40)  கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய ...

காந்தியவாதி பொள்ளாச்சி நா.மகாலிங்கம் காந்திஜெயந்தி அன்று காலமானார்

Posted: 02 Oct 2014 01:36 PM PDT

கோவை:பிரபல தொழிலதிபரும், காந்தியவாதியுமான பொள்ளாச்சி நா.மகாலிங்கம், சென்னையில் நேற்று காலமானார்; வயது 91.காந்தி ஜெயந்தி தினமான நேற்று, சென்னை, ஏ.வி.எம்., ராஜேஸ்வரி மஹாலில், மாலை ௬.௦௦ மணியளவில், வள்ளலார் குறித்த நிகழ்ச்சி நடந்தது. இதில், பொள்ளாச்சி மகாலிங்கம் பங்கேற்றார். விழா மேடையேற நின்றிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. மறைந்த தொழிலதிபர், பொள்ளாச்சி நா.மகாலிங்கம், சக்தி குழும நிறுவனங்களின் தலைவர். அவருக்கு, 2007ல் பத்ம பூஷண் ...

17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014

Posted: 02 Oct 2014 01:35 PM PDT

நகரம்: இஞ்சியோன், தென் கொரியா குறிக்கோள் வசனம்: பன்மயம் இங்கே ஒளிர்கிறது நிகழ்வுகள்: 36 விளையாட்டுகளில் 439 போட்டிகள் துவக்க விழா : செப்டம்பர் 19 நிறைவு விழா : அக்டோபர் 4 முதன்மை அரங்கம் : இஞ்சியோன் ஆசியட் முதன்மை விளையாட்டரங்கம் 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், அலுவல்முறையாக XVII ஆசியட், செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4, வரை தென் கொரியாவில் இஞ்சியோனில் நடைபெறுகிறது. ஆசியாவில் ஆசிய ஒலிம்பிக் மன்றத்தால் (OCA) கட்டுப்படுத்தப்படும் மிகப்பெரும் பல்விளையாட்டுப் போட்டியாகும். 36 விளையாட்டுகளில் ...

சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள் !

Posted: 02 Oct 2014 12:34 PM PDT

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் புகார் அளித்ததன் மூலம் ஒட்டுமொத்த அதிமுகவினரின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாகியிருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, தனது டுவிட்டர் பக்கத்தில் அதிரடியாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, பெங்களுருவின் பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்குக் கைதி எண் 7402 அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரையும் அவரது ஆதரவாளர்களையும் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து விமர்சித்து ...

நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!

Posted: 02 Oct 2014 12:32 PM PDT

ஈகரையில் புதிய திரியாக `நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்` வலம் வர உள்ளது. இப்பகுதியில் உங்களுக்குத் தெரிந்த எந்த விடயமாக இருந்தாலும் (பயனுள்ள வலைத்தளம், எங்கு உணவு நன்றாக இருக்கும், சிறந்த அலைபேசி மற்றும் அதன் மென்பொருட்கள், மொக்கை மற்றும் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்) அதை இப்பகுதியில் எழுதுங்கள். இந்தத் திரி அனைவருக்கும் பயனுள்ள திரியாக இருக்கும் என்பதால் எழுதப்படும் ஆக்கங்களுக்கான பாராட்டுக்கள், சந்தேகங்கள் மட்டும் பின்னூட்டமாக அமையட்டும். இங்கு யார் வேண்டுமானாலும் எழுதலாம். ...

உங்கள் அன்புத் துணையுடன் உரையாடுங்கள்...!

Posted: 02 Oct 2014 12:15 PM PDT


-

பெரிய ஓட்டல்களில் சாப்பாட்டை சாப்பிடுவது எப்படி...?

Posted: 02 Oct 2014 11:44 AM PDT

- ஓட்டல்களில் அதுவும் பெரிய ஓட்டல்களில் சாப்பாட்டை எப்படி சாப்பிடுவது என்று சில விதிமுறைகள் இருக்கின்றன. அவை: -  கத்தி, முள் கரண்டிகளுடன் சாப்பிடும்போது கத்தியை வலது கையிலும், முள் கரண்டியை இடது கையிலும் பிடித்துக் கொள்ள வேண்டும். -  ஐஸ்கிரீமை கரண்டியால் எடுக்கும்போது உங்கள் பக்கமாக வெட்ட வேண்டும். சூப்பாக இருந்தால் எடுக்கும்போது கை உங்கள் புறத்திலிருந்து எதிர்ப்புறமாகப் போக வேண்டும். -  சூடான பொருளை வாயால் ஊதிச் சாப்பிடக் கூடாது. -  கப்பில் காபி சாப்பிடும்போது அதன் காதைக் ...

அம்மா பவர்கட் திட்டம்...!

Posted: 02 Oct 2014 10:38 AM PDT

40 வருடங்களில் பாதியாய் குறைந்தது உலக விலங்குகள் எண்ணிக்கை !

Posted: 02 Oct 2014 10:33 AM PDT

உலகில் வனவாழ் உயிர்களின் எண்ணிக்கை கடந்த நாற்பது வருடங்களில் பாதிக்கும் அதிகமாகக் குறைந்துவிட்டது என புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. பாலூட்டி விலங்குகள், பறவைகள், நீரிலும் நிலத்திலும் வாழும் விலங்குகள், மீன்கள் போன்றவற்றின் எண்ணிக்கை இதுவரை கருதப்பட்டதை விட மோசமாகக் குறைந்துபோயுள்ளதாக இயற்கைக்கான உலகளாவிய நிதியம் என்ற அமைப்பு கூறுகிறது. இந்த எண்ணிக்கை வீழ்ச்சிக்கு மனிதச் செயல்களே காரணம் என அது குற்றஞ்சாட்டியுள்ளனர். விலங்குகள், வனவாழ் உயிர்கள், பாலூட்டி, பறவைகள், காட்டு யானைகள், ...

படம் வெளியாகும் முன்பே கோடிகளின் மழையில் ஷாருக்கான் !

Posted: 02 Oct 2014 10:20 AM PDT

திறமையோடு தொழிலும் தெரிந்தவர் ஷாருக்கான். சினிமா, விளம்பரம், கிரிக்கெட் அணி என்று கிடைக்கிற சந்திலெல்லாம் கோடிகளை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். வருமானத்தில் இவர் ஹாலிவுட்டின் டாப் ஸ்டார் டாம் க்ரூஸை பின்னுக்கு தள்ளியிருப்பது முக்கியமானது. படம்தோறும் ஷாருக்கானின் பண மழையும் தீவிரம் பிடிக்கிறது. அடுத்து இவரது நடிப்பில் வெளியாகவிருக்கும் படம், ஃபரா கான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஹேப்பி நியூ இயர். ஓம் சாந்தி ஓம் படத்தின் பம்பர் ஹிட்டுக்குப் பிறகு ஃபரா கான், ஷாருக்கான், தீபிகா படுகோன் ...

... பறக்கும்...

Posted: 02 Oct 2014 10:08 AM PDT


... பறக்கும்..

பறக்க கற்கும் வரை
அன்பு அரவணைப்பு
மனதிற்குள் தங்கும் ஈரம் தான்...
பறக்க கற்ற பின்
பறந்து விடும் அன்பும் தூரம் தான்...
பாசமிகு பெற்றோருக்கு
கிட்டும் தெரு ஓரம் தான்..!!

--- நாகினி

வருகிறது ஓ மை காட் படத்தின் இரண்டாம் பாகம் !

Posted: 02 Oct 2014 08:19 AM PDT

அக்ஷய் குமார் தயாரிப்பில் வெளியான ஓ மை காட் இந்தி சினிமாவில் சர்ப்ரைஸ் ஹிட்டாக அமைந்தது. உமேஷ் சுக்லா இயக்கியிருந்த இந்தப் படத்தில் பரேஷ் ராவல் பிரதான வேடத்தில் நடித்திருந்தார். கடவுள் விஷ்ணுவாக சிறப்புத் தோற்றத்தில் அக்ஷய். இதன் தெலுங்கு ரீமேக் தற்போது தயாராகி வருகிறது. சமீபத்தில் பேட்டியளித்த பரேஷ் ராவல் ஓ மை காட் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஸ்கிரிப்ட் தயாராகி வருவதாகவும், இரண்டாவது பாகத்தின் தயாரிப்பில் அக்ஷய்யுடன் தானும் இணையவிருப்பதாகவும் கூறினார். இந்த இரண்டாவது பாகத்தையும் ...

'லவ் ஜிகாத்' என்பது பாஜக, ஆர்எஸ்எஸ் இயற்றிய பிரசாரமா?'

Posted: 02 Oct 2014 08:08 AM PDT

இந்தியாவில் முஸ்லிம்கள் அல்லாத இளம் பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் காதல் வயப்படுத்தி, திருமணம் செய்து, பின்னர் அவர்களைத் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறார்கள் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் லலிதா குமாரமங்கலம் செய்தி ஊடகம் ஒன்றிடம் வெளியிட்டுள்ளமை தொடர்பாக அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டம் தெரிவித்துள்ளது. முஸ்லிம்கள் அல்லாத இளம் பெண்களை இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யும் நோக்கோடு, முஸ்லிம் இளைஞர்கள் போலியாக காதல் செய்து திருமணம் செய்துகொள்வதாக ...

அக்டோபர் 2 - லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் !

Posted: 02 Oct 2014 07:15 AM PDT

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. 3வது இந்தியப் பிரதமர் பதவியில் ஜூன் 9, 1964 – ஜனவரி 11, 1966 முன்னவர் குல்சாரிலால் நந்தா பின்வந்தவர் குல்சாரிலால் நந்தா அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் பிறப்பு அக்டோபர் 2, 1904 முகல்சாரி, உத்தரப் பிரதேசம் இறப்பு ஜனவரி 11, 1966 தஷ்கந்த், சோவியத் ரஷ்யா சமயம் இந்து சமயம் லால் பகதூர் சாஸ்திரி (அக்டோபர் 2, 1904 - சனவரி 11, 1966) இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார். இவர் ஒரு முக்கியமான விடுதலைப் போராட்ட வீரரும் ...

தெரிஞ்சுக்கோங்க!.....ஒலி எழுப்பத் தடை!

Posted: 02 Oct 2014 07:09 AM PDT

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

கண்காணிப்பு கேமராவில் சிக்கவேயில்லை...!

Posted: 02 Oct 2014 06:54 AM PDT

-
அந்த அலுவலகத்தின்
கண்காணிப்பு
கேமராக்களில்
சிக்கவேயில்லை
கழிப்பறையின்
ஓட்டை வாளி..!

-
-----------------------------
>வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்
நன்றி: ஆனந்த விகடன்

நாளில் மட்டுமா ஒற்றுமை? : அக்.2 - காந்தி பிறந்த தினம், காமராஜர் நினைவு தினம்!

Posted: 02 Oct 2014 06:48 AM PDT

வழிகாட்டிகளை விட வாழ்ந்து காட்டிகள் உன்னதமானவர்கள். மகாத்மா காந்தி உயரிய வாழ்ந்துகாட்டியாகத் திகழ்ந்தவர். உலகமே அவரை 'மகாத்மா' என்று கொண்டாடிய போது சுயசரிதை எழுதித் தன் தவறுகளை மக்கள் முன் வைத்த மகான் அவர். உலகின் தலைசிறந்த தலைவர்களுள் முதன்மையானவராய் நம் தேசப்பிதா திகழ்வதன் காரணம், வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடு இல்லாமல் வாழ்ந்தவர் அவர் என்பதே. காந்தி வழியில் வாழ்ந்து காந்தியத்தின் உன்னதத்தை உணர்த்தி 'தென்நாட்டு காந்தி' என்று மக்களால் போற்றப்படும் கர்மவீரர் காமராஜர், மகாத்மா ...

கவனம் - ஒரு பக்க கதை

Posted: 02 Oct 2014 06:41 AM PDT

- - பஸ்ஸில் ஒரே கூட்டம். ஒரு பெண் தன் கைப்பையில் ஜிப்பை போடாமல் பின்பக்கம் தொங்கவிட்டபடி வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். - இன்னொருவன் பேன்ட் பின்பாக்கெட்டில் மணிபர்ஸ் பிதுங்க ஒரு பெண்ணை உரசியபடி தன்னை மறந்திருந்தான். - இது போதாதென்று, என் அருகில் நின்றிருந்தவரோ, தனது சட்டைப் பையில் வைத்திருந்த ஐந்நூறு ரூபாய் நோட்டுகள் அப்பட்டமாய்த் தெரிகிற மாதிரி சட்டை அணிந்திருந்தார். - இப்படிப்பட்ட கூட்டத்தில் எத்தனை கவனமாக இருக்க வேண்டும் என்னும் எண்ணம் சிறுதும் இல்லாமல் என்ன ...

ஒரு ஜென்மமானாலும் அடக்கி வைக்க கூடியது காதல்...!

Posted: 02 Oct 2014 06:36 AM PDT

ஒரு நகைச்சுவை தனிப்பாடல்...

Posted: 02 Oct 2014 06:14 AM PDT

--- ஆற்றங்கரையில் அமர்ந்திருக்கும் விநாயகப் பெருமான் பிரமசாரியாக இருப்பதற்கு காரணம் அவருக்கு யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லையாம்.. அதை விநாயகரிடமே தெரிவிக்கிறார் கவிஞர் - ''உன்னுடைய தந்தை கையில் கபாலம் ஏந்தி பிக்ஷை எடுக்கிறார். உன் மாமன் கிருஷ்ணன் ஒரு வெண்ணை திருடி. உன் தந்தை இருக்குமிடமோ இடுகாடு. உன்னுடைய முகமோ யானை முகம். உன் தம்பியோ காட்டில் வாழும் கடம்பன். உன் அன்னை பார்வதியோ கருமை நிறம் படைத்த நீலி. உனக்கோ பானை வயிறு? - பின்பு யார் பெண் கொடுப்பார்...?'' - "வீரம் ...

வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,

Posted: 02 Oct 2014 06:05 AM PDT



உன்னை அறிந்தால்”

Posted: 02 Oct 2014 05:52 AM PDT

ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்க சென்றனர். அதில் " உங்கள் வளர்ச்சிக்கும் நம் கம்பெனி வளச்சிக்கும் இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்,அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது.அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்" என்று எழுதி இருந்தது. இதை படித்தவுடன் அவர்கள் எல்லாருக்கம் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தது,பிறகு நம் வளர்ச்சிக்கு ...

ஆபாசமான படம்னு தெரியாம குடும்பத்தோட போயிட்டேன்..!

Posted: 02 Oct 2014 05:50 AM PDT

- தலைவருக்கு குழந்தை மனசு...! - அதுக்காக நடைபயணம் போறேன்னுட்டு, நடை வண்டியிலே போறதா..? - -------------------------------- - ஆபாசமான படம்னு தெரியாம குடும்பத்தோட போயிட்டேன்..! - அடடா, அப்புறம்..? - பசங்களெல்லாம், என்னை வெளியே போகச் சொல்லிட்டாங்க..! - -------------------------------------- - கட்சிக்காக தலைவர் நிறைய செய்திருக்கார்...! - ஊழல்தானே...! - --------------------------------------- - அந்தப் பாடலாசிரியரை தலைவர் ஏன் அடிக்கிறார்? - பிரச்சாரப் பாடலில், காசு,பணம், ...

மாணவிகளின் சீருடை விவகாரம்: பயங்கரவாத தாக்குதலில் ஆசிரியர் பலி

Posted: 02 Oct 2014 01:09 AM PDT

பெஷாவர் - பாகிஸ்தான் பள்ளி ஒன்றில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் புதன்கிழமை நிகழ்த்திய கையெறி குண்டுத் தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார். 2 மாணவர்கள் காயமடைந்தனர். பெஷாவர் நகரில் அமைந்துள்ள அந்தப் பள்ளியில் மாணவிகள் அணியும் சீருடைக்கு ஆட்சேபம் தெரிவித்து பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது. குண்டுகளை எறிந்துவிட்டு அந்த பயங்கரவாதிகள் தப்பிச் சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தப் பள்ளியில் பெண்கள் அணியும் மேற்கத்திய சீருடைக்குப் பதிலாக, சல்வார் கமீஸ் ...

வீதியெங்கும் குழந்தையின் அவலக்குரல்......

Posted: 02 Oct 2014 12:14 AM PDT

குப்பைத் தொட்டிகள் இன்று தாயின் புனித கருவறையாக மாறிவிட்டது. தாயின் புனிதக் கருவறை என்று குப்பை தொட்டிகளாகிவிட்டது. காமச் சுகம் கண்ட பாதகத்தியால் நடத்தைப் பிறல்வால் சீர்கெட்டுப் போகிறது சமுகம் விடைதெரியாமல் திக்குத் தடுமாறுகிறது. கசங்கிய காகிதத்தை தூக்கி வீசுவது போல். என்னை ஏன் தூக்கி வீசினாய் தெருவோரம் வரிசை வரிசையாய் உள்ள குப்பைத் தொட்டிகளில் என் போன்ற குழந்தையின் அழுகைச் சப்தம் ஊர் ரெல்லாம் அவலக் குரலாக ஒலிக்கிறது என்ன செய்தோம் தாயே.??? உன் மானம் போய்விடுமோ.??? அல்லது ...

ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!.

Posted: 01 Oct 2014 09:26 PM PDT

ஹியர்போன்…!!
*
அவசர அவசரமாக
பேசிக் கொண்டிருந்தாள்
சற்றே கோபமாய்
அச்சமில்லைாமல்
கேட்டுக் கொண்டிருந்தார்
அருகில் நின்ற மனிதர்.
*
யார் என்ன சொன்னாலும்
யார் கூப்பிட்டாலும்
கேட்பதில்லை?
அவள் காதில்
ஹியர்போன் இருப்பதால்…
*
கடுகடுப்பாக இருந்தவளைச்
கலகலவென
சிரிக்க வைத்தது
செல் பேச்சு.
*

ரயிலில் அச்சடிக்கப்பட்ட முதல் பத்திரிகை

Posted: 01 Oct 2014 05:59 PM PDT

- 15 வயது ஆசிரியர்! உள்ளூர் செய்திகளை சுடச்சுட தருவதற்காக "கிராண்ட் ட்ரங்க் ஹெரால்ட்' என்ற பத்திரிகையைத் தொடங்கினார் தாமஸ் ஆல்வா எடிசன். - அந்தப் பத்திரிகைக்கு அவரே ஆசிரியர், அச்சுக் கோர்ப்பவர், நிருபர், வெளியிடுபவர், விற்பனையாளர் எல்லாம்… - அச்சடிக்கும் எந்திரத்தை ரயிலுக்குள்ளேயே வைத்து அச்சடித்து ஒரு பத்திரிகை விலை 3 செண்ட் வீதம் விற்றார். மாத சந்தா 8 செண்ட் என 300 சந்தாதாரர்களையும் சேர்த்து விட்டார். ஒருசில எழுத்துப் பிழைகள் தவிர பத்திரிகை மிக நன்றாகவே இருப்பதாக லண்டன் டைம்ஸ் பத்திரிகை ...

ராஜ்ய சபாவில் அறிஞர் அண்ணா நகைச்சுவை பேச்சு…

Posted: 01 Oct 2014 05:54 PM PDT

- கைடு! 1962-ஆம் ஆண்டு- அறிஞர் அண்ணா, ராஜ்யசபைக்குத் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். சபையில் ஒருமுறை இந்தித் திணிப்பு பற்றி காரசாரமாக விவாதம் நடந்தது. வட இந்தியத் தலைவர்கள் கட்சி பேதமின்றி இந்தித் திணிப்புக்கு வக்காலத்து வாங்கிப் பேசினார்கள். அண்ணா தமிழின் இலக்கியங்களையும் அவற்றின் பெருமைகளையும் குறிப்பிட்டுப் பேசிவிட்டு, ""இந்தியில் இலக்கியம் என்று பார்த்தால் இரண்டுதான் எனக்குத் தோன்றுகிறது. ஒன்று துளசி இராமாயணம்… மற்றது…." என்று சற்றே நிறுத்தினார். - இரண்டாவதாக ...

ஸ்ரீராமகிருஷ்ணரின் மகாமனம்…

Posted: 01 Oct 2014 05:52 PM PDT

- ஒருநாள் ஸ்ரீராமகிருஷ்ணர், புல்வெளி ஒன்றில் நடந்து சென்று கொண்டிருந்தார். நடந்து போய்க் கொண்டிருந்தவர் திடீரென்று தன்னையும் அறியாமல் திரும்பிப் பார்த்தார். - அப்போது தான் நடந்து வந்த பாதையில் தன் காலின் கீழ் மிதிபட்ட புற்கள் மிகுந்த சிரமத்துடன் தலையை நிமிர்த்தப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டார். இதைக் கண்ட அவரின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துவிட்டது. - மனம் கலங்கிப் போனவர், "அடடா இவற்றுக்கும் உணர்ச்சி இருக்கும் என்பதை உணராமல் இருந்துவிட்டேனே! நம் காலடி பட்டதால்தானே இவை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™