Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கிராம கோவில்கள் திருப்பணிக்கு வருமானம் திரட்ட புது வழி பெரிய கோவில்களிடம் வசூலிக்கும் துறை அதிகாரிகள்

Posted:

கிராமப்புற கோவில்களின் திருப்பணிக்காக, அதிக வருமானம் வரும் கோவில்களின் பணத்தை பயன்படுத்துவது, கோவில் செயல் அலுவலர்கள் மற்றும் பக்தர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.தமிழக சட்டசபையில், இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையின் போது, '2014 15ல், கிராமப்புறங்களில் உள்ள, 1,006 கோவில்களுக்கு, திருப்பணி செய்ய, கோவில் ஒன்றுக்கு, 30 ஆயிரம் ரூபாய் வீதம், 5.03 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது. இத்தொகையில், 4.48 கோடி ரூபாயை, நிதிவசதி மிக்க கோவில்களின் உபரி நிதியில் இருந்து, சட்டப்பிரிவு, 36ன் கீழ், நிதிமாற்றம் மூலம், நிதி ஒதுக்கீடு ...

தீவிரமடைகிறது வடகிழக்கு பருவமழை: ஏரிகள், அணைகள் நிரம்புகின்றன

Posted:

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக்கடலில், காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை, கடந்த, 18ம் தேதி துவங்கியது. அந்த மழை, தற்போது தீவிரமடைந்துள்ளதால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த, 24 மணி நேரத்தில், நாகை மாவட்டம் திருப்பூண்டியில், 14; காரைக்காலில், 12 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.மேலும், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ...

சென்னை சென்ட்ரல் இரட்டை குண்டு வெடிப்பில் துப்பு துலங்கியது: ஜமாத் உல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு நிகழ்த்தியது கண்டுபிடிப்பு

Posted:

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த, இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலங்கியுள்ளது. லஷ்கர் இ தொய்பா ஆதரவு பெற்ற, ஜமாத் உல் முஜாகிதீன், இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்புகள், கூட்டாக சேர்ந்து, இந்தச் சதி செயலை அரங்கேற்றி இருப்பதை, தேசிய புலனாய்வு நிறுவனத்தினர் உறுதி செய்துள்ளனர்.மே, 1ம் தேதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின், ஒன்பதாவது நடைமேடையில், பெங்களூரு - கவுகாத்தி விரைவு ரயிலில், இரட்டை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதில், ஆந்திர மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த சுவாதி பலியானார்; 14 பேர் படுகாயம் அடைந்தனர். இது, நாடு ...

பிரியங்காவுக்கு பதவி கொடுங்கள்: காங்கிரசில் மீண்டும் போர்க்கொடி

Posted:

புதுடில்லி: மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை அடுத்து, 'பிரியங்காவுக்கு பதவி கொடுங்கள்; அவரை தீவிர கட்சி பணியில் ஈடுபடுத்துங்கள்' என வலியுறுத்தி, ஏராளமான காங்., தொண்டர்கள், டில்லியில் நேற்று போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான ஓட்டுகள், நேற்று எண்ணப்பட்டன. இரண்டு மாநிலங்களிலுமே, காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.இதையடுத்து, டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன், ஏராள மான கட்சி தொண்டர்கள் திரண்டனர். இதில், பெண்கள் அதிகமாக ...

ஜெ.,வுக்காக இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்

Posted:

சென்னை:'நான் சந்திக்கும் துயரங்களை கண்டு, தாங்கிக் கொள்ள முடியாமல் மரணமடைந்த, 193 பேரின் குடும்பத்தினருக்கு, அ.தி.மு.க., சார்பில், தலா, மூன்று லட்சம் ரூபாய், குடும்ப நல நிதி உதவி வழங்கப்படும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக, ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:என் பொது வாழ்வு, நெருப்பாற்றில் நீந்துவதற்கு ஒப்பானது. பொது நலனுக்காக நம்மை அர்ப்பணித்து வாழ்வது, எத்தகைய இடர்பாடுகளை உடையதாக இருக்கும் என்பதை, அரசியல் வாழ்வில் நுழைந்த நாளில் இருந்து, நன்கு உணர்ந்திருக்கிறேன்.அ.தி.மு.க.,வின் வளர்ச்சி; கட்சி தொண்டர்கள் நலன்; தமிழக ...

ஜெ., ஜாமினில் விடுதலையானதில் வருத்தம் இல்லை: கருணாநிதி

Posted:

சென்னை : 'அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது என்பதற்காக, நான் மகிழ்ச்சி அடையவும் இல்லை; அவர், ஜாமினில் விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்பதற்காக வருத்தப்படவும் தயாராக இல்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இதுதொடர்பான, அவரது அறிக்கை:சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு வெளியானவுடன், நான் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. காரணம், இது முக்கியமான வழக்கு என்பதால், எச்சரிக்கை உணர்வுடன் பொறுமையாக இருந்து, தீர்ப்பு முழுவதையும், கவனமாக படித்த பின் விளக்கம் அளிக்கலாம் என, ...

ரூ.1,381 கோடி வருமான வரிச்சலுகை: அரசியல் கட்சிகள் பாடு கொண்டாட்டம்

Posted:

புதுடில்லி : நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளில், 1,381 கோடி ரூபாய் வருமான வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதில், 80 சதவீதத்திற்கும் அதிகமான சலுகையை, பா.ஜ.,வும், காங்கிரசும் அனுபவித்துள்ளன.முக்கிய கட்சிகளுக்கு...:அரசியல் கட்சிகளின் வருமானத்தில், வருமான வரிச் சட்டம், 1961ன், 13 ஏ பிரிவின் படி, சலுகைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், 13 முக்கிய கட்சிகளுக்கு, கடந்த இரண்டாண்டுகளில், 1,381 கோடி ரூபாய் வருமான வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2012 - 13 மற்றும் 2013 - 14ம் நிதியாண்டில், காங்கிரசுக்கு, 743 கோடி ரூபாயும்; பா.ஜ.,வுக்கு, 338 கோடி ரூபாயும் வருமான ...

முதல்வர் பதவியை கைப்பற்ற பா.ஜ., தலைவர்கள் போட்டி: அரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பரபரப்பு

Posted:

மும்பை : மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, இரண்டு மாநிலங்களிலும் முதல்வர் பதவியை பெறுவதில், பா.ஜ., தலைவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.அரியானாவில், பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, முதல் முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது. அதே போல், மகாராஷ்டிராவில், பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், மற்ற கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது.இதன் அடுத்த கட்டமாக, இரண்டு மாநிலங்களிலும் முதல்வர் பதவி யாருக்கு கிடைக்கும் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.தேர்தலுக்கு முன் வரை, அரியானாவில், பா.ஜ.,வுக்கு ...

மகாராஷ்டிரா, அரியானா தேர்தலில் பா.ஜ., அமோகம்: காங்., கோட்டைகளில் வெற்றிக்கொடி நாட்டியது

Posted:

புதுடில்லி: மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. அரியானாவில், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ள இக்கட்சி, மகாராஷ்டிராவிலும் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த 2 மாநிலங்களிலும், காங்., கோட்டையை தகர்த்து, பா.ஜ., வெற்றிக் கொடி நாட்டியுள்ளது.மகாராஷ்டிராவில், 15 ஆண்டுகளாகவே காங்., தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. சிவசேனா பா.ஜ., கூட்டணியால், காங்., கூட்டணியை வீழ்த்த முடியவில்லை. அதேபோல், அரியானா வில், கடந்த, 10 ஆண்டு களாக, பூபிந்தர் சிங் ஹூடா தலைமையில் காங்., ஆட்சி நடந்து வந்தது. இங்கு, ஓம் பிரகாஷ் ...

சி.பி.ஐ.,யின் கவுரவமே முக்கியம்: ரஞ்சித் சின்கா

Posted:

புதுடில்லி: ''ரஞ்சித் சின்கா என்ற தனி நபரை விட, சி.பி.ஐ., என்ற அமைப்பு தான் முக்கியம். சி.பி.ஐ.,யின் கவுரவத்தை காப்பாற்றும் வகையில் செயல்படுவேன்,'' என, சி.பி.ஐ., இயக்குனர் ரஞ்சித் சின்கா கூறினார்.இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:நிலக்கரி ஊழல் வழக்கு தொடர்பாக, சிறப்பு கோர்ட், தெரிவித்த சில கருத்துகளுக்கு, சுப்ரீம் கோர்ட் எதிர்ப்பு தெரிவித்தது. குறிப்பாக, 'நிலக்கரி ஊழல் வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ., அதிகாரிகளை, தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வேண்டாம்' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது: இது, வரவேற்கத் தகுந்த நடவடிக்கை.ரஞ்சித் சின்கா என்ற தனிப்பட்ட நபர் ...

கறுப்பு பண பதுக்கல் குறித்த அறிக்கை: மத்திய நிதி அமைச்சகம் திடீர் அறிவிப்பு

Posted:

புதுடில்லி: முந்தைய காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்தில், வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் குறித்த விவரங்களை ஆய்வு செய்யும் பொறுப்பு, மூன்று நிறுவனங்களிடம் கொடுக்கப்பட்டது.இந்நிலையில், இந்த நிறுவனங்கள் தாக்கல் செய்த அறிக்கைகளின் விவரங்களை தெரிவிக்கும்படி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்டிருந்தது. இதற்கு, மத்திய நிதி அமைச்சகம் அளித்துள்ள பதில்:முந்தைய காங்., அரசு, மூன்று நிறுவனங்களிடம் கறுப்பு பண ஆய்வு குறித்த பொறுப்பை ஒப்படைத்து இருந்தது. இந்த நிறுவனங்கள், வெளிநாடுகள் மற்றும் ...

மகா., லோக்சபா இடைத்தேர்தலில் புதிய சாதனை படைத்தார் பிரீதம் முண்டே

Posted:

மும்பை: மகாராஷ்டிராவில் நடந்த லோக்சபா இடைத்தேர்தலில், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேயின் மகள், பிரீதம் முண்டே, ஆறு லட்சத்து, 96 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.மகாராஷ்டிரா மாநிலம் பீட் லோக்சபா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கோபிநாத் முண்டே, மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற சில நாட்களில், டில்லியில் சாலை வித்தில் பலியானார்.இதையடுத்து, மாநில சட்டசபை தேர்தலுடன், பீட் லோக்சபாவுக்கான இடைத் தேர்தலும் நடைபெற்றது. பா.ஜ., சார்பில், கோபிநாத் முண்டேயின் மகள், பிரீதம் முண்டே, களம் இறக்கப்பட்டார். ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™