Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தமிழகம் முழுவதும் கனமழை கொட்டுது: தண்ணீர் தேங்கியதால் சென்னை ஸ்தம்பிப்பு

Posted:

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டுஉள்ளதால், தமிழகம் முழுவதும் கனமழை கொட்டுகிறது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.தமிழகத்திற்கு அதிக மழையைத் தரும், வடகிழக்கு பருவமழை துவங்கியதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, சென்னை வானிலை மையம் வெளியிட்டது.இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது: ஈரப்பதம் நிரம்பிய கீழ்திசை காற்று வீசத் துவங்கிய நிலையில், தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக ...

நேரடி மானிய திட்டம் நவ., 10 முதல் மீண்டும் அமல்: மத்திய அமைச்சரவை முடிவு

Posted:

புதுடில்லி: முந்தைய மத்திய அரசு அறிமுகப்படுத்திய, நேரடி மானிய திட்டத்தை, நவம்பர், 10ம் தேதி முதல் மீண்டும் அமல்படுத்த, மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பின், நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியதாவது:பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கே, சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக செலுத்தும் திட்டத்தை, மீண்டும் திறமையான வகையில் செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதனால், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியமானது, நவம்பர், 10ம் தேதி முதல், ...

சென்னை வந்தார் ஜெ.,: அ.தி.மு.க.,வினர் வரவேற்பு

Posted:

சென்னை: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்ட ஜெயலலிதா, நேற்று மாலை, 5:00 மணிக்கு சென்னை வந்தார். அவரை அ.தி.மு.க.,வினர் உற்சாகமாக வரவேற்றனர்.சிறையில் இருந்து விடுதலையாகி வந்த, ஜெயலலிதாவை வரவேற்க, அ.தி.மு.க.,வினர் காலை முதல், விமான நிலையத்தில் இருந்து, போயஸ் கார்டன் வரை, கூடி நின்றனர். போலீசாரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.போலீசார் சாலையோரம் தடுப்பு ஏற்படுத்தி, தொண்டர்களை அதற்குள் நிற்க வைத்தனர். விமான நிலையத்தில் இருந்து போயஸ் கார்டன் வரை ஜெயலலிதாவின் கார், அ.தி.மு.க., தொண்டர்கள் வரவேற்புக்கு மத்தியில் ஊர்ந்து ...

மீண்டும் குன்ஹா; மிரண்ட அ.தி.மு.க.,வினர்: பெங்களூரு தனி நீதிமன்றம், சிறையில் திக்... திக்... நிமிடங்கள்

Posted:

உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து ஜெயலலிதா, நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டார்.செப்டம்பர், 27ம் தேதி, சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு, பெங்களூரு தனி நீதிமன்றம், தலா நான்கு ஆண்டுகள் தண்டனையும், அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இவர்களுக்கு, உச்ச நீதிமன்றம், நேற்று முன்தினம் ஜாமின் வழங்கியது.ஒவ்வொருவருக்கும், இரண்டு பேரின் பிணைய பத்திரம், பிணையத்தொகை உள்ளிட்ட ஆவணங்களை, உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, தாக்கல் செய்வதற்காக, அ.தி.மு.க., ...

ஜெ., ஜாமினில் விடுவிப்பு: கருணாநிதி மவுனம் நீடிப்பு

Posted:

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை அளித்த போது, எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்தது போல், உச்ச நீதிமன்றம் அளித்த ஜாமின் உத்தரவுக்கு பின்னும் எந்த கருத்தும் தெரிவிக்காமல், தி.மு.க., தலைவர் கருணாநிதி மவுன விரதம் கடைப்பிடித்து வருகிறார்.இந்த விஷயத்தில், மற்ற தலைவர்கள் என்னென்ன கருத்துக்கள் தெரிவிக்கின்றனர் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்; அதே நேரம், அப்பீல் வழக்கு எப்படி போகிறது என்பதையும் பார்த்து விட்டுத்தான், கருணாநிதி தன் கருத்தை தெரிவிப்பார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.ஜெயலலிதாவின் ஜாமின் உத்தரவு குறித்து, ...

கூடாரங்கள் வாங்கியதிலும் ஊழல்

Posted:

புதுடில்லி : மத்திய உளவு அமைப்புக்கு (ரா) கூடாரங்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது.சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது:வெளிநாடுகள் தொடர்பான உளவு விவகாரங்களை கையாளும் மத்திய உளவு அமைப்பாக, 'ரா' இயங்கி வருகிறது. இந்த அமைப்பு, எல்லை பகுதி தொடர்பான பிரச்னைகளை கையாள, சிறப்பு பிரிவு ஒன்றை அமைத்தது.இந்த பிரிவினர் மலைச் சிகரங்களில் தங்குவதற்காக நவீன வசதியுடைய கூடாரங்கள், 2010ல் வாங்கப்பட்டன. இதில் ஊழல் நடந்ததாக தற்போது புகார் எழுந்துள்ளது.'ரா' அமைப்பு நடத்திய துறை ரீதியான விசாரணை ...

விசாகப்பட்டினத்தை சீரமைக்க நிதி தாருங்கள் என நாயுடு வேண்டுகோள்: சொகுசு பஸ்சை அலுவலகமாக்கி நிவாரண பணியில் தீவிரம்

Posted:

விசாகப்பட்டினம்: 'ஹுட் ஹுட் புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட விசாகப்பட்டினம் நகரம், மீண்டும் பழைய பொலிவை அடையவும், அந்நகரத்தை மறுகட்டமைக்கவும், பொதுமக்கள் தாராளமாக நன்கொடைகள் வழங்க வேண்டும்' என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவேண்டுகோள் விடுத்துள்ளார். அதேநேரத்தில், விசாகப்பட்டினத்தில், சொகுசு பஸ் ஒன்றில் முகாமிட்டு, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.சமீபத்தில், வங்கக்கடலில் உருவான, ஹுட் ஹுட் புயல், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் கரையை கடந்தது. அப்போது, கோரத்தாண்டவம் ஆடிய சூறாவளி காற்று மற்றும் பேய் மழையால், ...

ஜாமின் விசாரணை உரையாடல் 'டேப்': சுப்ரீம் கோர்ட் விதிமுறை மீறலா?

Posted:

ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி மற்றும் வழக்கறிஞருக்கு இடையே நடந்த விசாரணை உரையாடல்களை, விதிகளுக்கு புறம்பாக அ.தி.மு.க., ஆதரவு வழக்கறிஞர்கள் பதிவு செய்து, அதை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜெயலலிதாவின் ஜாமின் மனு, நேற்று முன்தினம், சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மொத்தம் 13 கோர்ட்டுகளைக் கொண்ட, சுப்ரீம் கோர்ட்டின் முதல்தளத்தில், தலைமை நீதிபதி அமரும், 1ம் எண் கோர்ட்டில் தான், இந்தமனு, மீதான விசாரணை நடைபெற்றது. மிக முக்கியமான வழக்கு என்பதால், காலை முதலே, சுப்ரீம் ...

தமிழக நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகள் 20 லட்சம்: ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் எண்ணிக்கை

Posted:

சென்னை, மதுரை உயர் நீதிமன்ற கிளை, மாவட்ட நீதிமன்றங்களில் உரிமையியல், குற்றவியல் வழக்குகளின் தேக்கம் கடந்த, 2013ல், 18 லட்சத்தை தாண்டிய நிலையில், 2014 ஆகஸ்ட் வரை, 20 லட்சமாக அதிகரித்துள்ளன.வழக்குகளின் எண்ணிக்கை : தமிழகத்தில், சென்னையில், 113, பிற மாவட்டங்களில் 855 என, மொத்தம், 988 நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. தமிழக சட்டசபையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடந்த நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை மானியக் கோரிக்கையின் போது, வெளியான கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்ட தகவலின் படி, நடப்பு, 2013 மார்ச் வரை, 18 லட்சத்தை தாண்டியதாக ...

டில்லி மெட்ரோ ரயில் பாதை: நான்காம் கட்ட திட்டம் ரெடி

Posted:

புதுடில்லி: டில்லி மெட்ரோ ரயில் பாதை கட்டுமானத்தில், நான்காம் கட்டமாக, 103 கி.மீ., தொலைவுக்கு பாதை அமைக்கும் திட்டம், வரும், 2016ல், துவங்க உள்ளது.இதுகுறித்து, டில்லி மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் திட்டத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:டில்லி மெட்ரோ ரயில் திட்டத்தில், ஏற்கனவே இரண்டு கட்ட பணிகள் முடிவடைந்து போக்குவரத்து நடந்து வருகிறது. மூன்றாம் கட்ட திட்டத்தில், 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. இன்னும் சில மாதங்களில், இங்கு போக்குவரத்து துவங்கவுள்ளது. இந்நிலையில், ரிதாலா என்ற இடத்திலிருந்து சாகெட் வரை, 103 கி.மீ., துாரத்துக்கு ரயில் பாதை அமைக்கும் ...

ஜம்மு - காஷ்மீரில் எப்போது தேர்தல் நடத்தலாம்? அரசியல் கட்சிகளுடன் ஆணையர்கள் ஆலோசனை

Posted:

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், எப்போது சட்டசபை தேர்தலை நடத்தலாம் என்பது குறித்து, அம்மாநில அரசியல் கட்சிகளுடன், தேர்தல் ஆணையர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.கடும் பாதிப்பு:ஜம்மு - காஷ்மீர் மாநில சட்ட சபையின் ஆறு ஆண்டு பதவிக்காலம், 2015 ஜனவரி, 19ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால், விரைவில் அங்கு தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்தில், தேர்தல் ஆணையம் உள்ளது.ஆனால், கடந்த மாதம், இம்மாநிலத்தில் பெய்த பேய் மழை மற்றும் வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை சீரமைப்பதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் ...

அரியானா, மகா.,வில் ஆட்சி அமைப்பது யார்? இன்று மாலையில் முடிவு தெரியும்

Posted:

புதுடில்லி : அரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங் களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், இன்று எண்ணப்படுகின்றன. இந்த இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பது, இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநிலங்களில், கடந்த 15ல், சட்டசபை தேர்தல்கள் நடந்தன. மகாராஷ்டிராவில், ஆட்சியில் இருந்த காங்., - தேசியவாத காங்., கூட்டணியில் முறிவு ஏற்பட்டதால், அங்கு, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.குற்றச்சாட்டு:அதேபோல், எதிர்க்கட்சி கூட்டணியான, சிவசேனா - பா.ஜ., கூட்டணியிலும் தொகுதி பங்கீடு விவகாரத்தில் சிக்கல் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™