Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மக்கள் பயன்படுத்தாத மதங்கள் சடங்குகளாகிவிடும்: எழுத்தாளர் ஜெயமோகன்
- கடலூர் தேவநாத சுவாமி கோயிலின் நுழைவு வாயிலை மூட நீதிமன்றம் மறுப்பு
- 284 இடங்களில் தேங்கிய தண்ணீர்: 33 இடங்களில் மரங்கள் விழுந்தன
- தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு பலத்த மழை வாய்ப்பு
- சென்னையில் பலத்த மழை: போக்குவரத்து பாதிப்பு
- விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
- "மன்னார்குடியில் கத்தி, புலிப்பார்வை படங்களை திரையிடக் கூடாது'
- தேக்கு மரக் கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேர் கைது
- ஆந்திரப் புயல்: பலி 50ஆக உயர்வு
- துணிக் கடையில்சேலை திருடிய 2 பெண்கள் கைது
- நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் தாளடி நடவுப் பணி தீவிரம்
- மருத்துவர்களின் கைகளை வெட்டப் போவதாக சொல்லவில்லை: பிகார் முதல்வர் மாஞ்சி விளக்கம்
- மயிலாடுதுறையில் துலா மாத பிறப்பு தீர்த்தவாரி
- மருத்துவத் துறையின் அடிப்படை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது
- மன்னார்குடி பள்ளியில் அறிவியல் கண்காட்சி
- ஊராட்சித் தலைவருக்குகொலை மிரட்டல்: 8 பேர் மீது வழக்கு
- நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளை முறையாக பராமரிக்க அறிவுறுத்தல்
- "சுகாதாரத் துறையினர் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்
- திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளத் தடுப்பு பணிகளை கண்காணிக்க குழு
- நாட்டின் பாதுகாப்பில் விழிப்போடு இருக்க வேண்டும்: ராணுவத் தளபதிகளுக்கு சுஹாக் வலியுறுத்தல்
- காரைக்கால் சாலைகளில் தேங்கிய மழைநீர்
- முத்துப்பேட்டையில் 84 மி.மீ. மழை
- மனநலம் பாதித்த இளைஞர் மீட்பு
- ராணுவ அதிகாரி தலைமறைவானதாக அறிவிப்பு
- கேரம் போட்டியில் பரணிபார்க் பள்ளி மாணவர்கள் முதலிடம்
- கல்குவாரியில் பறிமுதலான வெடி பொருட்கள் அழிப்பு
- டெங்கு நோயை தடுக்க ஆலோசனை
- பாகிஸ்தானுக்கு எதிராக காங்கிரஸார் போராட்டம்
- நாளை முத்திரை கட்டண வசூல் முகாம்
- மாவட்டத்தில் பரவலாக மழை
- கட்டளைக் கதவணையில் ஆட்சியர் ஆய்வு
- ஊராட்சித் தலைவர் பதவி நீக்கம்
- ரயில் பயணிகளிடம் போலீஸார் ஆய்வு
- மத்திய அரசு மீது நிதீஷ், திரிணமூல் தாக்கு
- கல்வித்துறையில் ஆய்வக உதவியாளர் பணியிடம்
- விருது பெற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
- ரூ. 2.64 கோடியில் வேளாண் உபகரணங்கள் அளிப்பு
- துணிக்கடையில் திருடிய 5 பேர் கைது
- மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு ஆதரவு தர மாட்டோம்: என்சிபி
- பொன்னமராவதி, திருமயத்தில் அக். 26, 27-ல் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
- விராலிமலை கூட்டுறவு சங்கத்தில் மகளிர் குழுக்களுக்கு கடன் உதவி
- தீபாவளியையொட்டி இன்று ரேஷன் கடைகள் இயங்கும்
- பாசன வாய்க்கால்களில் நீர் அளவிடும் கருவி பொருத்தும் பணி ஆய்வு
- மாவட்டத்தில் நிகழாண்டு 1.99 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு: ஆட்சியர்
- ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் தொற்றா நோய் விழிப்புணர்வு
- இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வலியுறுத்தல்
- "உள்ளார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே உண்மையான கல்வியாகும்
- "டெங்கு வராமல் தடுக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம்'
- வேகுப்பட்டியில் வண்ண வாக்காளர் அடையாள அட்டை
- கொத்தமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கிளைக் கூட்டம்
- கும்பகோணத்தில் தாற்காலிக காவல் உதவி மையம் திறப்பு
- குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது
- கூட்டுறவு கடன் சங்கக் கூட்டம்
- தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழை
- பாரத் கல்லூரியில் மேலாண்மைக் கருத்தரங்கம்
- இந்தியா - ஆப்கானிஸ்தான் உறவை வலுப்படுத்தியவர் கர்சாய்: மோடி பாராட்டு
- நாகை மாவட்டத்தில் பலத்த மழை
- தேக்கு மரக் கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேர் கைது
- குடும்ப பிரச்னை:விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
- நீதிபதி குன்ஹாவை விமர்சித்து பதாகை வைத்த 2 பேர் கைது
- போளூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க இடம் தேர்வு
- மேற்கு ஆரணி ஒன்றியத்தில் ஆட்சியர் ஆய்வு
- "சிலிண்டர்களை எடை போட்டு விநியோகம் செய்ய வேண்டும்'
- சிறப்பு பூஜைகள் நடத்திய அதிமுகவினர்
- கீழ்செட்டிப்பட்டு கிராமத்தில் ஒட்டு மொத்த தூய்மைப் பணி
- ரூ.4,800 கருணைத் தொகை வழங்க ஒப்புதல்:108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கொண்டாட்டம்
- செல்போன் டவர், பேட்டரியில் 30 பேட்டரிகள் திருட்டு
- "அறிவையும், திறமையையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்
- கபடிப் போட்டியில் பரிசு பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு
- வேன் கவிழ்ந்து விபத்து: 8 பேர் காயம்
- பைக் மீது கார் மோதல்: பெண் சாவு
- அண்ணா பல்கலைக்கழகப் போட்டிகள்: திருவண்ணாமலை கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன்
- பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சிக் கூட்டம்
- கணித உபகரணப் பெட்டி பயன்பாட்டுப் பயிற்சி
- திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழை
- ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேர சிகிச்சை
- மூதாட்டியை காணவில்லை
- மகளிர் குழுக்களுக்கு ரூ.63 லட்சம் கடனுதவி
- "டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தனி வார்டு ஏற்படுத்த வேண்டும்'
- புதுக்கோட்டை
- சாலை விபத்துகள்: பிகாரில் 6 பேர் பலி
- பாஜக - ஆம் ஆத்மி இடையே முற்றுகிறது மோதல்
- "தூய்மை இந்தியா' திட்டத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பாராட்டு
- உ.பி.யில் இனக் கலவரம்: 3 பேர் கைது
- வடகிழக்கு மாநிலத்தவர்கள் மீதான இனவெறித் தாக்குதல் தடுக்கப்படும்: கிரண் ரிஜிஜு
- ஒலி மாசுபாடு இல்லா தீபாவளியை உறுதிப்படுத்த தில்லி அரசு நடவடிக்கை
- தேச ஒற்றுமை, அமைதிக்கு பாடுபடுவோம்: நாகா பழங்குடியினர் மாநாட்டில் உறுதி
- மத்திய அரசுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- டிடிஏ' வீட்டு வசதித் திட்டம்:7.5 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்தன
- மேயரை இழிவாக பேசியதாக கவுன்சிலர் மீது வழக்கு
- நோக்கியா ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த சிஐடியு கோரிக்கை
- ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- பலத்த மழை: தாம்பரத்தில் 100 மி.மீ. பதிவு
- பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை
- அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
- மின்னல் தாக்கி 7 தொழிலாளர் காயம்
- "சம்ஸ்கிருதம் ஒழுக்கத்தை கற்றுத் தருகிறது'
- ஏடிஎம் மைய காவலாளி கொலை வழக்கு:மேலும் இருவர் கைது
- எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்
- மறைமலைநகரில் மனுநீதி நாள் முகாம்
| மக்கள் பயன்படுத்தாத மதங்கள் சடங்குகளாகிவிடும்: எழுத்தாளர் ஜெயமோகன் Posted: 18 Oct 2014 01:28 PM PDT சமூகத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்தாத மதங்கள் வெறும் சடங்குகளாகிவிடும் என எழுத்தாளர் ஜெயமோகன் கூறினார். |
| கடலூர் தேவநாத சுவாமி கோயிலின் நுழைவு வாயிலை மூட நீதிமன்றம் மறுப்பு Posted: 18 Oct 2014 01:27 PM PDT கடலூர் மாவட்டம், திருவந்திபுரத்தில் மணவாள மாமுனிகள் உற்சவ ஊர்வலத்தின் போது தேவ நாதசுவாமி கோயிலின் நுழைவு வாயிலை மூடுவதற்கு, இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. |
| 284 இடங்களில் தேங்கிய தண்ணீர்: 33 இடங்களில் மரங்கள் விழுந்தன Posted: 18 Oct 2014 01:25 PM PDT சென்னையில் இரண்டு நாள்களாகப் பெய்த தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. |
| தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு பலத்த மழை வாய்ப்பு Posted: 18 Oct 2014 01:23 PM PDT காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த இரு நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
| சென்னையில் பலத்த மழை: போக்குவரத்து பாதிப்பு Posted: 18 Oct 2014 01:23 PM PDT சென்னையில் கடந்த 2 நாள்களாக (வெள்ளி, சனி) பெய்து வரும் பலத்த மழை காரணமாக நகரில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. பல முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. |
| விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை Posted: 18 Oct 2014 12:59 PM PDT கோட்டூர் அருகே குடும்பப் பிரச்னையின் காரணமாக, விஷம் குடித்தவர் சனிக்கிழமை உயிரிழந்தார். |
| "மன்னார்குடியில் கத்தி, புலிப்பார்வை படங்களை திரையிடக் கூடாது' Posted: 18 Oct 2014 12:58 PM PDT மன்னார்குடியில் கத்தி, புலிப்பார்வை ஆகிய 2 திரைப்படங்களையும் திரையிடக் கூடாது என திரையரங்க உரிமையாளர்களிடம் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் சனிக்கிழமை மனு அளித்தனர். |
| தேக்கு மரக் கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேர் கைது Posted: 18 Oct 2014 12:58 PM PDT திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே வனத் துறைக்கு சொந்தமான தேக்கு மரங்களை வெட்டிக் கடத்த முயன்ற 3 பேரை வனத் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர். |
| ஆந்திரப் புயல்: பலி 50ஆக உயர்வு Posted: 18 Oct 2014 12:58 PM PDT ஆந்திர மாநிலத்தின் கடலோர மாவட்டமான விசாகப்பட்டினத்தை "ஹுட்ஹுட்' புயல் ஞாயிற்றுக்கிழமை தாக்கிய நிலையில், இந்தப் புயல் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. |
| துணிக் கடையில்சேலை திருடிய 2 பெண்கள் கைது Posted: 18 Oct 2014 12:58 PM PDT சீர்காழியில் துணிக் கடையில் சேலைகளை திருடியதாக 2 பெண்களை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் தாளடி நடவுப் பணி தீவிரம் Posted: 18 Oct 2014 12:57 PM PDT நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் தற்போதைய மழையை பயன்படுத்தி தாளடி நடவுப் பணியை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். |
| மருத்துவர்களின் கைகளை வெட்டப் போவதாக சொல்லவில்லை: பிகார் முதல்வர் மாஞ்சி விளக்கம் Posted: 18 Oct 2014 12:57 PM PDT ""மருத்துவர்களின் கைகளை வெட்டப் போவதாக நான் தெரிவிக்கவில்லை. ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதில், அக்கறை காட்டாத மருத்துவர்கள் குறித்த எனது அதிருப்தியை ஹிந்தி மொழியில் உள்ள பழமொழி மூலம் வெளிப்படுத்தினேன்'' என்று பிகார் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி தெரிவித்தார். |
| மயிலாடுதுறையில் துலா மாத பிறப்பு தீர்த்தவாரி Posted: 18 Oct 2014 12:57 PM PDT மயிலாடுதுறை அருள்மிகு ஸ்ரீஅபாயாம்பிகை உடனுறை ஸ்ரீமாயூரநாத சுவாமி திருக்கோயிலின் துலா மாத (ஐப்பசி மாத) பிறப்பு தீத்தவாரி மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| மருத்துவத் துறையின் அடிப்படை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது Posted: 18 Oct 2014 12:57 PM PDT மருத்துவத் துறையின் அடிப்படைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| மன்னார்குடி பள்ளியில் அறிவியல் கண்காட்சி Posted: 18 Oct 2014 12:57 PM PDT மன்னார்குடி தரணி மெட்ரிக் பள்ளியில் வெள்ளிக்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது |
| ஊராட்சித் தலைவருக்குகொலை மிரட்டல்: 8 பேர் மீது வழக்கு Posted: 18 Oct 2014 12:56 PM PDT நாகை மாவட்டம், சீர்காழி அருகே ஊராட்சித் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளை முறையாக பராமரிக்க அறிவுறுத்தல் Posted: 18 Oct 2014 12:56 PM PDT மழைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளை உரிய வகையில் பராமரிக்க வேண்டும் என ஆட்சியர் து. முனுசாமி அறிவுறுத்தினார். |
| "சுகாதாரத் துறையினர் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் Posted: 18 Oct 2014 12:56 PM PDT தொற்று நோய்த் தடுப்புப் பணிகளில் சுகாதாரத் துறை ஊழியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்றார் நாகை ஆட்சியர் து. முனுசாமி. |
| திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளத் தடுப்பு பணிகளை கண்காணிக்க குழு Posted: 18 Oct 2014 12:55 PM PDT திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை வெள்ளத் தடுப்புப் பணிகளை கண்காணிக்க வட்ட அளவில் துணை ஆட்சியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் எம். மதிவாணன். |
| நாட்டின் பாதுகாப்பில் விழிப்போடு இருக்க வேண்டும்: ராணுவத் தளபதிகளுக்கு சுஹாக் வலியுறுத்தல் Posted: 18 Oct 2014 12:55 PM PDT நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் தொடர்ந்து விழிப்போடு இருக்க வேண்டும் என்று ராணுவத் தளபதிகளை தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக் வலியுறுத்தியுள்ளார். |
| காரைக்கால் சாலைகளில் தேங்கிய மழைநீர் Posted: 18 Oct 2014 12:55 PM PDT காரைக்காலில் வெள்ளி, சனிக்கிழமை ஆகிய 2 நாள்கள் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக, காரைக்காலில் வெள்ளிக்கிழமை |
| முத்துப்பேட்டையில் 84 மி.மீ. மழை Posted: 18 Oct 2014 12:55 PM PDT திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அதிகபட்சமாக 84 மில்லி மீட்டர் மழைப் பதிவானது. |
| Posted: 18 Oct 2014 12:54 PM PDT கரூர் ரயில் நிலையம் அருகே மன நலம் பாதித்து சுற்றித்திரிந்த வடமாநில இளைஞரை கரூர் சாந்திவன காப்பகத்தினர் மீட்டனர். |
| ராணுவ அதிகாரி தலைமறைவானதாக அறிவிப்பு Posted: 18 Oct 2014 12:54 PM PDT அருணாசலப் பிரதேச மாநில ஆளுநரின் ராணுவ உதவியாளராகப் பணியாற்றி வந்த, ராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி மேஜர் ஷரீஃப் போன்ஸ்லே தலைமறைவாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார். |
| கேரம் போட்டியில் பரணிபார்க் பள்ளி மாணவர்கள் முதலிடம் Posted: 18 Oct 2014 12:54 PM PDT மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் கரூர் பரணிபார்க் பள்ளி மாணவ, மாணவிகள் முதலிடம் பிடித்தனர். |
| கல்குவாரியில் பறிமுதலான வெடி பொருட்கள் அழிப்பு Posted: 18 Oct 2014 12:54 PM PDT கரூர் அருகே தனியார் கல்குவாரியில் பறிமுதல் செய்யப்ட்ட டெட்டனேட்டர்கள், வெடிபொருட்கள் சனிக்கிழமை அழிக்கப்பட்டன. |
| Posted: 18 Oct 2014 12:54 PM PDT கரூர் மாவட்டம் நங்கவரம் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் மா. மாரிமுத்து தலைமை வகித்தார். துணைத் தலைவர் மு. முத்து, செ |
| பாகிஸ்தானுக்கு எதிராக காங்கிரஸார் போராட்டம் Posted: 18 Oct 2014 12:53 PM PDT எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் சனிக்கிழமை இளைஞர் காங்கிரஸார் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். |
| நாளை முத்திரை கட்டண வசூல் முகாம் Posted: 18 Oct 2014 12:53 PM PDT கரூரில் வரும் திங்கள்கிழமை (அக். 20) முத்திரைக்கட்டண வசூல் முகாம் நடைபெற உள்ளது. |
| Posted: 18 Oct 2014 12:53 PM PDT கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை பெய்த மழையில் அதிகபட்சமாக கிருஷ்ணராயபுரத்தில் 73 மி.மீ. பதிவானது. |
| கட்டளைக் கதவணையில் ஆட்சியர் ஆய்வு Posted: 18 Oct 2014 12:52 PM PDT மாயனூர் கட்டளைக் கதவணையில் தற்போது தேக்கி வைக்கப்பட்டுள்ள ஒரு டிஎம்சி தண்ணீரை சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி. |
| Posted: 18 Oct 2014 12:52 PM PDT ஊராட்சி நிதியில் முறைகேடில் ஈடுபட்ட அஞ்சூர் ஊராட்சித் தலைவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி. |
| ரயில் பயணிகளிடம் போலீஸார் ஆய்வு Posted: 18 Oct 2014 12:52 PM PDT கரூர் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் போலீஸார் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர். |
| மத்திய அரசு மீது நிதீஷ், திரிணமூல் தாக்கு Posted: 18 Oct 2014 12:52 PM PDT கருப்புப் பணம் பற்றிய தகவலை வெளியிட மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதற்கு ஐக்கிய ஜனதா தளம் கண்டனம் தெரிவித்துள்ளது. |
| கல்வித்துறையில் ஆய்வக உதவியாளர் பணியிடம் Posted: 18 Oct 2014 12:52 PM PDT கல்வித்துறையில் ஆய்வக உதவியாளர் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் இரா. துரைராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: |
| விருது பெற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் Posted: 18 Oct 2014 12:51 PM PDT மாவட்ட அளவிலான சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி கூறியது: |
| ரூ. 2.64 கோடியில் வேளாண் உபகரணங்கள் அளிப்பு Posted: 18 Oct 2014 12:51 PM PDT விவசாயிகளுக்கு ரூ. 2.64 கோடியில் வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்துள்ளார். |
| துணிக்கடையில் திருடிய 5 பேர் கைது Posted: 18 Oct 2014 12:51 PM PDT அரவக்குறிச்சி அருகே தேசியநெடுஞ்சாலையில் உள்ள துணிக்கடையில் ஜவுளி திருட்டில் ஈடுபட்ட 5 பேரை அரவக்குறிச்சி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு ஆதரவு தர மாட்டோம்: என்சிபி Posted: 18 Oct 2014 12:51 PM PDT "மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக ஆட்சியமைப்பதற்கு ஆதரவு தர மாட்டோம். எனினும், சிவசேனை கட்சிக்கு ஆதரவு தருவது பற்றி முடிவு எடுக்கப்படவில்லை' என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தெரிவித்துள்ளது. |
| பொன்னமராவதி, திருமயத்தில் அக். 26, 27-ல் குடிநீர் விநியோகம் நிறுத்தம் Posted: 18 Oct 2014 12:50 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, திருமயம் பகுதிகளில் வரும் 26, 27-ம் தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. |
| விராலிமலை கூட்டுறவு சங்கத்தில் மகளிர் குழுக்களுக்கு கடன் உதவி Posted: 18 Oct 2014 12:50 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| தீபாவளியையொட்டி இன்று ரேஷன் கடைகள் இயங்கும் Posted: 18 Oct 2014 12:50 PM PDT தீபாவளியையொட்டி நியாய விலைக்கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை இயங்குமென மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. |
| பாசன வாய்க்கால்களில் நீர் அளவிடும் கருவி பொருத்தும் பணி ஆய்வு Posted: 18 Oct 2014 12:49 PM PDT புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் உள்ள வயல்களுக்குச் செல்லும் நீர்ப்பாசன வாய்க்கால்களில் ரூ. 5.65 கோடி செலவில் நீர்அளவீடு செய்யும் கருவிகள் அமைக்கும் பணிகளை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். |
| மாவட்டத்தில் நிகழாண்டு 1.99 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு: ஆட்சியர் Posted: 18 Oct 2014 12:49 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் வனத் துறை மூலம் நிகழாண்டில் 1.99 லட்சம் மரக்கன்றுகள் நடவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் ஆட்சியர் செ. மனோகரன். புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்க வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்த பின்னர் அவர் கூறியது: |
| ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் தொற்றா நோய் விழிப்புணர்வு Posted: 18 Oct 2014 12:49 PM PDT புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோய் மாதத்தை முன்னிட்டு தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணர்வு பட்டிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வலியுறுத்தல் Posted: 18 Oct 2014 12:49 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| "உள்ளார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே உண்மையான கல்வியாகும் Posted: 18 Oct 2014 12:48 PM PDT உள்ளார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே உண்மையான கல்வியாகும் என்றார் பாரதி கல்வி நிறுவனங்களின் செயலர் பேராசிரியர் வீ. வைத்தியநாதன். |
| "டெங்கு வராமல் தடுக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம்' Posted: 18 Oct 2014 12:48 PM PDT கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றார் ஆலங்குடி பேரூராட்சித் தலைவர் ஏ.டி. மணமோகன். |
| வேகுப்பட்டியில் வண்ண வாக்காளர் அடையாள அட்டை Posted: 18 Oct 2014 12:48 PM PDT பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஊராட்சியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு மற்றும் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| கொத்தமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கிளைக் கூட்டம் Posted: 18 Oct 2014 12:48 PM PDT ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கிளைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கொத்தமங்கலம் வாடிமாநகரில் நடைபெற்ற கூட்டத்துக்கு கா. ராமநாதன் தலைமை வகித்தார். |
| கும்பகோணத்தில் தாற்காலிக காவல் உதவி மையம் திறப்பு Posted: 18 Oct 2014 12:47 PM PDT தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, துணிகள் உள்ளிட்ட பொருள்களை வாங்க வரும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்திடும் வகையில், கும்பகோணம் சாரங்கபாணி கோயில் அருகே தாற்காலிக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. |
| குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது Posted: 18 Oct 2014 12:46 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இளைஞர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். |
| Posted: 18 Oct 2014 12:45 PM PDT தஞ்சாவூரில் தஞ்சை மாவட்டப் பொதுப் பணித் துறை ஊழியர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கப் பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழை Posted: 18 Oct 2014 12:45 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தில் சனிக்கிழமை தொடர் மழை பெய்தது. மாவட்டத்தில் அக். 14-ம் தேதி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. நாள்தோறும் மழை பெய்து |
| பாரத் கல்லூரியில் மேலாண்மைக் கருத்தரங்கம் Posted: 18 Oct 2014 12:45 PM PDT தஞ்சாவூர் பாரத் அறிவியல், மேலாண்மைக் கல்லூரியில் மேலாண்மைத் துறை சார்பில் ஒரு நாள் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. |
| இந்தியா - ஆப்கானிஸ்தான் உறவை வலுப்படுத்தியவர் கர்சாய்: மோடி பாராட்டு Posted: 18 Oct 2014 12:44 PM PDT இந்தியா- ஆப்கானிஸ்தான் உறவை வலுப்படுத்தியவர் அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாய் என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். |
| Posted: 18 Oct 2014 12:44 PM PDT நாகை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. |
| தேக்கு மரக் கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேர் கைது Posted: 18 Oct 2014 12:44 PM PDT திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே வனத் துறைக்கு சொந்தமான தேக்கு மரங்களை வெட்டிக் கடத்த முயன்ற 3 பேரை வனத் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர். |
| குடும்ப பிரச்னை:விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை Posted: 18 Oct 2014 12:43 PM PDT கோட்டூர் அருகே குடும்பப் பிரச்னையின் காரணமாக, விஷம் குடித்தவர் சனிக்கிழமை உயிரிழந்தார். திருவண்டுத்துறையை சேர்ந்தவர் குமார் (35). விவசாய கூலி. இவரது மனைவி வனிதா. தம்பதிக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். |
| நீதிபதி குன்ஹாவை விமர்சித்து பதாகை வைத்த 2 பேர் கைது Posted: 18 Oct 2014 12:43 PM PDT பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல்-டி-குன்ஹா மற்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை விமர்சித்து, நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கேலிச் சித்திர பதாகை வைத்த அதிமுகவினர் 2 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| போளூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க இடம் தேர்வு Posted: 18 Oct 2014 12:43 PM PDT போளூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கான இடத்தை மாவட்ட நீதிபதி தலைமையிலான குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து தேர்வு செய்தனர். |
| மேற்கு ஆரணி ஒன்றியத்தில் ஆட்சியர் ஆய்வு Posted: 18 Oct 2014 12:42 PM PDT மேற்கு ஆரணி ஒன்றியத்தில் பல்வேறு பணிகள் குறித்து ஆட்சியர் அ.ஞானசேகரன் சனிக்கிழமை ஆய்வு செய்தார். |
| "சிலிண்டர்களை எடை போட்டு விநியோகம் செய்ய வேண்டும்' Posted: 18 Oct 2014 12:42 PM PDT திருவண்ணாமலை வருவாய் கோட்டத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் காஸ் சிலிண்டர்களை எடை போட்ட பிறகே விநியோகம் செய்ய வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில், நுகர்வோர் கோரிக்கை விடுத்தனர். |
| சிறப்பு பூஜைகள் நடத்திய அதிமுகவினர் Posted: 18 Oct 2014 12:42 PM PDT அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்ததையொட்டி, ஆரணி பகுதி கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. |
| கீழ்செட்டிப்பட்டு கிராமத்தில் ஒட்டு மொத்த தூய்மைப் பணி Posted: 18 Oct 2014 12:42 PM PDT திருவண்ணாமலையை அடுத்த கீழ்செட்டிப்பட்டு கிராமத்தில், ஒட்டுமொத்த தூய்மைப் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. |
| ரூ.4,800 கருணைத் தொகை வழங்க ஒப்புதல்:108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கொண்டாட்டம் Posted: 18 Oct 2014 12:41 PM PDT ரூ.4,800 கருணைத் தொகை வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் |
| செல்போன் டவர், பேட்டரியில் 30 பேட்டரிகள் திருட்டு Posted: 18 Oct 2014 12:41 PM PDT திருவண்ணாமலையில் செல்போன் டவரில் இருந்து 30 பேட்டரிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| "அறிவையும், திறமையையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் Posted: 18 Oct 2014 12:41 PM PDT மாணவர்கள் அறிவையும், திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.திருமலை தெரிவித்தார். |
| கபடிப் போட்டியில் பரிசு பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு Posted: 18 Oct 2014 12:41 PM PDT திருவண்ணாமலையில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில், கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர். |
| வேன் கவிழ்ந்து விபத்து: 8 பேர் காயம் Posted: 18 Oct 2014 12:40 PM PDT வந்தவாசி அருகே சனிக்கிழமை காலை மைல் கல் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் தொழிலாளர்கள், வேன் ஓட்டுநர் ஆகிய 8 பேர் காயம் அடைந்தனர். |
| பைக் மீது கார் மோதல்: பெண் சாவு Posted: 18 Oct 2014 12:40 PM PDT திருவண்ணாமலை அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில், இளம்பெண் இறந்தார். அவரது கணவர், மகன் படுகாயம் அடைந்தனர். |
| அண்ணா பல்கலைக்கழகப் போட்டிகள்: திருவண்ணாமலை கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் Posted: 18 Oct 2014 12:40 PM PDT சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட, திருவண்ணாமலை மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. |
| பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சிக் கூட்டம் Posted: 18 Oct 2014 12:40 PM PDT சேத்துப்பட்டை அடுத்த கெங்கைசூடாமணி ஊராட்சியில் பேரிடர் மேலாண்மை குறித்த 2 நாள்கள் பயிற்சிக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| கணித உபகரணப் பெட்டி பயன்பாட்டுப் பயிற்சி Posted: 18 Oct 2014 12:39 PM PDT செய்யாறு வட்டார வள மையத்தில் ஆசிரியர்களுக்கு கணித உபகரணப் பெட்டி பயன்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது. |
| திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழை Posted: 18 Oct 2014 12:39 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதல் தொடர் மழை பெய்து வருவதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி விற்பனை மந்தமாகவே இருப்பதால், வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். |
| ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேர சிகிச்சை Posted: 18 Oct 2014 12:39 PM PDT திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கக் கூடிய வகையில், மருத்துவப் பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும். இதை அதிகாரிகள் கண்கா |
| Posted: 18 Oct 2014 12:39 PM PDT திருவண்ணாமலை அருகே காணாமல் போன மூதாட்டியை போலீஸார் தேடி வருகின்றனர். |
| மகளிர் குழுக்களுக்கு ரூ.63 லட்சம் கடனுதவி Posted: 18 Oct 2014 12:39 PM PDT செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 56-வது பொதுப்பேரவைக் கூட்டம் வங்கி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| "டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தனி வார்டு ஏற்படுத்த வேண்டும்' Posted: 18 Oct 2014 12:38 PM PDT டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தனி வார்டு ஏற்படுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறையினரை சார் ஆட்சியர் மா.ஆர்த்தி கேட்டுக் கொண்டார். |
| Posted: 18 Oct 2014 12:38 PM PDT |
| சாலை விபத்துகள்: பிகாரில் 6 பேர் பலி Posted: 18 Oct 2014 12:29 PM PDT பிகாரில் சனிக்கிழமை நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் 6 பேர் பலியாகினர். |
| பாஜக - ஆம் ஆத்மி இடையே முற்றுகிறது மோதல் Posted: 18 Oct 2014 12:29 PM PDT மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்திய "தூய்மை இந்தியா' திட்டம் தொடர்பாக பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மோதல் முற்றுகிறது. |
| "தூய்மை இந்தியா' திட்டத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பாராட்டு Posted: 18 Oct 2014 12:25 PM PDT பிரதமர் நரேந்திர மோடியால் தொடக்கி வைக்கப்பட்ட, "தூய்மை இந்தியா' திட்டத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய் சனிக்கிழமை பாராட்டு தெரிவித்தார். |
| உ.பி.யில் இனக் கலவரம்: 3 பேர் கைது Posted: 18 Oct 2014 12:24 PM PDT உத்தரப்பிரதேசத்தில் ஜாட்-தலித் இனத்தவர்கள் இடையே நடைபெற்ற கலவரம் தொடர்பாக 3 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| வடகிழக்கு மாநிலத்தவர்கள் மீதான இனவெறித் தாக்குதல் தடுக்கப்படும்: கிரண் ரிஜிஜு Posted: 18 Oct 2014 12:16 PM PDT வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். |
| ஒலி மாசுபாடு இல்லா தீபாவளியை உறுதிப்படுத்த தில்லி அரசு நடவடிக்கை Posted: 18 Oct 2014 12:10 PM PDT தலைநகரில், பாதுகாப்பான, மாசு இல்லாத தீபாவளிப் பண்டிகையை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் தில்லி அரசின் சுற்றுச்சூழல் துறை ஈடுபட்டுள்ளது. |
| தேச ஒற்றுமை, அமைதிக்கு பாடுபடுவோம்: நாகா பழங்குடியினர் மாநாட்டில் உறுதி Posted: 18 Oct 2014 12:09 PM PDT தேச ஒற்றுமை, அமைதிக்காக பாடுபடுவோம்' என்று தில்லியில் நடைபெற்ற நாகா பழங்குடியினர் மாநாட்டில் உறுதி மொழி எடுக்கப்பட்டது. |
| மத்திய அரசுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 18 Oct 2014 12:09 PM PDT மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜந்தர் மந்தரில் சனிக்கிழமை போராட்டம் நடத்தினர். |
| டிடிஏ' வீட்டு வசதித் திட்டம்:7.5 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்தன Posted: 18 Oct 2014 12:09 PM PDT தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டிடிஏ) 2014-ம் ஆண்டுக்கான வீட்டு வசதித் திட்டத்துக்கு மொத்தம் 7.5 லட்சம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதில், விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாளான புதன்கிழமை மட்டும் 1.35 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. |
| மேயரை இழிவாக பேசியதாக கவுன்சிலர் மீது வழக்கு Posted: 18 Oct 2014 12:09 PM PDT காங்கிரஸ் கவுன்சிலர் இஷ்ரத் பேகம், தன்னை "தலித்' என்று அழைத்ததாகக் கூறி, கிழக்கு தில்லி மாநகராட்சி மேயர் மீனாக்ஷி போலீஸில் புகார் அளித்துள்ளார். |
| நோக்கியா ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த சிஐடியு கோரிக்கை Posted: 18 Oct 2014 12:08 PM PDT ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் நோக்கியா கைப்பேசி உற்பத்தி ஆலையை அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் மூடுவதாக ஆலை நிர்வாகத்தினர் அறிவித்துள்ளதைத் தொடந்து அந்த ஆலையை தமிழக அரசு ஏற்று |
| ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 18 Oct 2014 12:08 PM PDT காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| பலத்த மழை: தாம்பரத்தில் 100 மி.மீ. பதிவு Posted: 18 Oct 2014 12:07 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் அதிகபட்சமாக தாம்பரத்தில் சனிக்கிழமை 100 மி.மீ. மழை பதிவானது. |
| Posted: 18 Oct 2014 12:07 PM PDT "பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்' என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ரஹீல் ஷெரீப் கூறினார். |
| அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி Posted: 18 Oct 2014 12:07 PM PDT காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. |
| மின்னல் தாக்கி 7 தொழிலாளர் காயம் Posted: 18 Oct 2014 12:07 PM PDT ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரியில் விறகு ஏற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மின்னல் தாக்கியதில் 7 பேர் காயமடைந்தனர். |
| "சம்ஸ்கிருதம் ஒழுக்கத்தை கற்றுத் தருகிறது' Posted: 18 Oct 2014 12:07 PM PDT சம்ஸ்கிருதம் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தருகிறது என்று ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் லதா பிள்ளை தெரிவித்தார். |
| ஏடிஎம் மைய காவலாளி கொலை வழக்கு:மேலும் இருவர் கைது Posted: 18 Oct 2014 12:07 PM PDT மாமல்லபுரத்தை அடுத்த கிருஷ்ணன்காரணை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்தின் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் Posted: 18 Oct 2014 12:06 PM PDT ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப் பகுதியான பூஞ்ச், ஜம்மு மாவட்டங்களில் பாகிஸ்தான் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தினர். |
| மறைமலைநகரில் மனுநீதி நாள் முகாம் Posted: 18 Oct 2014 12:06 PM PDT காட்டாங்கொளத்தூர் குறுவட்டத்துக்கு உள்பட்ட மறைமலை நகரில் மனுநீதி நாள் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |