Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அ.தி.மு.க.,வினரின் தீபாவளி பிரகாசிக்கும்: ஜெயலலிதாவிற்கு நிபந்தனை ஜாமின்: 21 நாட்களுக்கு பின் இன்று சென்னை வருகிறார்

Posted:

புதுடில்லி: நேற்று காலை, அ.தி.மு.க.,வின், 43வது நிறுவன நாளை அனுஷ்டிக்க, அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் குழுமியிருந்த கட்சித் தலைவர்களும், தொண்டர்களும், பெரும் மனஉளைச்சலோடும், கவலையோடும் புழுங்கிக் கொண்டு இருந்தனர். வழக்கமாக, விமரிசையாக நடத்தப்படும் நிறுவன நாள் விழாவிற்கு பதில், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சி மட்டும் நடந்தது. அதுவும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்த பின், அனைவரும் கிளம்பிவிட்டனர்.இதுவே, நேற்று மதியம், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவிற்கு, சுப்ரீம் கோர்ட், ஜாமின் வழங்கிய செய்தி பரவிய பின், அந்த கட்சியினர் ...

அனைவரும் அமைதி காக்க வேண்டும்: ஜெயலலிதா வேண்டுகோள்

Posted:

சென்னை: யாரும் குறை கூற இடமளிக்காத வகையில், அமைதி காத்து, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை, எப்போதும் போல் செவ்வனே பராமரிக்க, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் இருந்து, நேற்று மாலை, ஜெயலலிதா பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கை:ஒரு தலைவன் குறித்து, அண்ணாதுரை கூறும்போது, 'எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்றார். அவரது வழியில், எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட, அ.தி.மு.க.,வின் தலைமை பொறுப்பில் இருக்கும் நான், அவர்களின் வழியில், ...

தி.மு.க.,வில் சொத்து குவித்தவர்கள் மீதான வழக்கில் சுறுசுறுப்பு: முட்டுக்கட்டையை நீக்க லஞ்ச ஒழிப்புத் துறை தீவிரம்

Posted:

தி.மு.க., 'மாஜி'க்கள் மீதான, சொத்து குவிப்பு வழக்குகளில், இன்னும் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படவில்லை. குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு, விவாதம் துவங்கினால் தான், ஓராண்டுக்குள் இந்த வழக்குகளில் விசாரணையை முடிக்க முடியும் என்பதால், அதற்கான நடவடிக்கைகளில், லஞ்ச ஒழிப்புத் துறையும், அரசு சிறப்பு வழக்கறிஞர்களும் தீவிரம் காட்டி வருகின்றனர்.தற்போதைய அ.தி.மு.க., ஆட்சியில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் தவிர்த்து, கடந்த தி.மு.க., ஆட்சியில் (2006 11) அமைச்சர்களாக இருந்த, 16 பேர் மீது, சொத்து குவிப்பு வழக்குகள் ...

தொழில்நுட்ப போருக்கு தயாராகுங்கள்: முப்படை தளபதிகள் கூட்டத்தில் மோடி

Posted:

புதுடில்லி: ''தற்போதுள்ள சூழ்நிலையில் முழு அளவிலான போர் நடப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. அதேநேரத்தில், கண்ணுக்கு தெரியாத எதிரிகளால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது. எதிர்காலத்தில், தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து தான், போர் நடக்கும் என்பதால் இந்த சவாலை எதிர்கொள்ள, நம் படைகள் தயாராக வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி, முப்படை தளபதிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.இந்திய எல்லை பகுதிக்குள் பாகிஸ்தான் ராணுவம், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.இதேபோல், ...

கருப்பு பண விவகாரம்: மத்திய அரசு திடீர் பல்டி

Posted:

புதுடில்லி:'இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளில், கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை தெரிவிக்க முடியாது' என, மத்திய அரசு தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறப்பு குழு:'வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய விவரத்தை அறிந்து, அந்த பணத்தை இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வர வேண்டும்' என, தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.இதையடுத்து, கருப்பு பண மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, சிறப்பு புலனாய்வு குழு ...

நிர்பய் ஏவுகணை சோதனை வெற்றி

Posted:

பாலாசூர் (ஒடிசா):முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, அணு ஆயுதங்களை சுமந்து சென்று, எதிரிகளின் இலக்கை தாக்கக் கூடிய, 'நிர்பய்' ஏவுகணைச் சோதனை, நேற்று வெற்றிகரமாக நடந்தது.ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகமான, டி.ஆர்.டி.ஓ.,வால், முற்றிலும் உள்நாட்டிலேயே, 'நிர்பய்' என்ற ஏவுகணை தயாரிக்கப்பட்டது. ஒலியை விட சற்று வேகம் குறைந்த, 'சப்சானிக்' வகையைச் சேர்ந்த இந்த ஏவுகணையின் சோதனை, ஒடிசா மாநிலம் சாந்திபூர் அருகேயுள்ள பாலாசூரில், நேற்று நடந்தது.காலை, 10:03க்கு, இங்குள்ள நடமாடும் ஏவுதளத்தில் இருந்து, ஏவுகணை ஏவப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாக, ...

ஜெயிலும் ஜாமினும் சனிக்கிழமை ஒற்றுமை

Posted:

சனிக்கிழமை சிறைக்கு சென்ற ஜெயலலிதா, சனிக்கிழமை வெளியில் வர உள்ளார்.ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், கடந்த மாதம் 27ம் தேதி சனிக்கிழமை, கர்நாடக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.வழக்கில் இருந்து விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன், ஜெயலலிதா பெங்களூரு புறப்பட்டு சென்றார்.ஆனால், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்.அதேபோல், இவ்வழக்கில் தொடர்புடைய சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நான்கு பேரும், அன்றைய தினமே, பெங்களூரு ...

48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை

Posted:

சென்னை:'சாதகமான வானிலை ஏற்பட்டுள்ளதால், தமிழகம், கேரளா, ஆந்திரா பகுதிகளில், 48 மணி நேரத்தில், வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு பருவமழை முழுவதுமாக நீங்க வேண்டும்; கிழக்கு திசையில் இருந்து காற்று வீச வேண்டும்; தமிழக கடலோர பகுதிகளில் பல இடங்களில் மழை பெய்ய வேண்டும். இவை தான், வடகிழக்கு பருவ மழையின் துவக்கமாக அறிவிக்கப்படும்.இந்த வகையில், தற்போது தென்மேற்கு பருவமழை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இரு தினங்களில் முடிவடையும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதற்கிடையில், ...

காத்திருந்தார் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா

Posted:

பெங்களூரு:சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நடந்த, பெங்களூரு தனி நீதிமன்றம், நீண்ட நாட்களுக்கு பின்னர், 4 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது. உச்ச நீதிமன்றத்திலிருந்து ஜாமின் வழங்கிய நகல் பெறுவதற்காக, மாலை, 5:45 மணி வரை, நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா காத்திருந்தார்.ஜெயலலிதா உட்பட, 4 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டதாக, நேற்று பகல், 12:30 மணியளவில், அறிவிப்பு வெளியானது. இந்த உத்தரவு, சொத்து குவிப்பு வழக்கு நடந்த பெங்களூரு தனி நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட பின்னர், அங்கிருந்து ஜாமின் பெறலாம், என்று நீதிபதிகள் அறிவித்திருந்தனர்.இதையடுத்து, பெங்களூரு தனி ...

மின் திருட்டில் ஈடுபட்ட மாஜி அமைச்சருக்கு அபராதம்

Posted:

கொச்சி: விவசாய நிலத்திற்கு வழங்கப்பட்ட மின்சாரத்தை, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திய, காங்., கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட, கேரள முன்னாள் அமைச்சர் முஸ்தபாவுக்கு, அம்மாநில மின்சார வாரியம் அபராதம் விதித்துள்ளது.கடந்த வியாழக்கிழமை, எர்ணாகுளம் மாவட்டம், பெரும்பாவூரில் உள்ள, அவரது வீட்டில், கேரள மாநில மின்வாரியத்தின், மின்திருட்டுக்கு எதிரான ஸ்குவாட் சோதனையிட்டது. அப்போது, விவசாயத்திற்காக வழங்கப்பட்ட மின்சாரத்தை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, முன்னாள் அமைச்சர் முஸ்தபாவுக்கு, 8,000 ரூபாய் ...

தமிழகம் முழுவதற்கும் ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணயம்! அரசாணை வெளியீடு

Posted:

கோவை: கோவையில் ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டுமென்ற ஐகோர்ட் உத்தரவு எதிரொலியாக, மாநிலம் முழுவதற்கும், ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணயித்து, தமிழக அரசின் உள்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில், சென்னைக்கு மட்டும் ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணத்தை நிர்ணயித்து, கடந்த ஆண்டில் தமிழக அரசு ஆணை வெளியிட்டது. அதேபோல, கோவைக்கும் ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டுமென்று, கோயம்புத்துார் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு, ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தது.மனுவை விசாரித்த ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், சத்தியநாராயணன் ...

காங்., ஊழல் முதல்வர்கள் குறித்து பிருத்வி பேட்டிக்கு எதிர்ப்பு

Posted:

மும்பை: 'ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழலில் தொடர்புடைய, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர்கள், அசோக் சவான், விலாஸ்ராவ் தேஷ்முக், சுஷில்குமார் ஷிண்டே ஆகியோர் மீது, நான் நடவடிக்கை எடுத்திருந்தால், மகாராஷ்டிராவில் காங்., காணாமல் போயிருக்கும்' என, பத்திரிகை ஒன்றுக்கு, சில நாட்களுக்கு முன் பேட்டியளித்த, மற்றொரு முன்னாள் முதல்வர், பிருத்விராஜ் சவான் கூறினார்.சவானின் பேட்டி யால், கட்சியின் மூத்த தலைவர்கள், கடும் கோபம் அடைந்தனர். உடன், சவான் வருத்தம் தெரிவித்தார்.இதுகுறித்து, மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர், நாராயண் ரானே, ''பத்திரிகையில் வெளிப்படையாக பேட்டி அளித்து ...

ஜெ., வுக்கு விதித்த தண்டனை நிறுத்தி வைப்பு: அவரால் முதல்வராக முடியாது: ஆச்சார்யா

Posted:

பெங்களூரு:''ஜெயலலிதாவுக்கு விதித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தாலும், தற்போது, அவர் முதல்வராக முடியாது,'' என, பெங்களூரு தனி நீதிமன்ற முன்னாள் அரசு வக்கீல் ஆச்சார்யா கருத்து தெரிவித்தார்.ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு, பெங்களூரு தனி நீதிமன்றம் விதித்த தண்டனையை, உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து, அவர்களுக்கு ஜாமின் வழங்கியுள்ளது. இது தொடர்பாக, இவ்வழக்கில், ஆஜராகியிருந்த, முன்னாள் அரசு வக்கீல் ஆச்சார்யா கூறியதாவது:உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ஜாமின் வழங்கியுள்ளது. 2 மாதத்துக்குள், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான, ...

ஏழை மக்கள் வாழ்க்கையில் விளையாடினால் கையை வெட்டுவேன்: பீகார் முதல்வர் ஆவேச பேச்சு

Posted:

பாட்னா: ஏழைகள் வாழ்க்கையில் விளையாடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கையை துண்டிப்பேன் என பீகார் முதல்வர் ஆவேசமாக பேசினார்.பீகாரில் முதல்வர் ஜிதின்ராம் மஞ்சி தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் பாட்னாவில் நடந்த தசரா பண்டிகையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30-க்கும் மேற்பட்டோர் இறந்தார். காயமடைந்தவர்கள் பாட்னா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்கள் போதிய சிகிச்சை அளிக்கவில்லை என புகார் கூறினர்.இந்நிலையில மோத்திஹாரி மாவட்டத்தில் நடந்த ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™