Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Posted: 17 Oct 2014 02:34 PM PDT

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா


அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

ஜெயலலிதாவுக்காக நாரிமன் வாதாடியது தெளிவான விதிமீறல்: முன்னாள் நீதிபதி சந்துரு

Posted: 17 Oct 2014 02:32 PM PDT

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் இருக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் சார்பில் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான பாலி எஸ் நாரிமன் ஆஜராகி வாதாடினார். அதன் தொடர்ச்சியாக இன்று வெள்ளிக்கிழமை இந்திய உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்கும் அவருடன் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட அவரது தோழி சசிகலாவுக்கும், அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரனுக்கும் நிபந்தனையுடனான ...

ஸ்வீட், காரம் - தீபாவளி ஸ்பெஷல்

Posted: 17 Oct 2014 02:21 PM PDT

லட்டு தேவையானவை: கடலை மாவு - 200 கிராம், சர்க்கரை - 350 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, முந்திரி, திராட்சை - தலா 20, லவங்கம் - 8, டைமண்ட் கல்கண்டு - 15, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை, முழு ஏலக்காய் - 5, பால் - ஒரு டீஸ்பூன், கேசரி கலர் - சிறிதளவு. செய்முறை: சர்க்கரையில் 50 மில்லி நீர்விட்டு சூடாக்கவும். கொதிக்கும்போது பால் விட்டு அழுக்கு நீக்கி, கேசரி கலர் சேர்த்து பாகு காய்ச்சி இறக்கவும். கடலை மாவை நீர்விட்டு பஜ்ஜி மாவு போல் கெட்டியாக கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, மாவை லட்டு ...

ரமணர் எழுதிய தீபாவளி பாடல்!

Posted: 17 Oct 2014 01:30 PM PDT

'நான் இந்த உடம்பு மட்டுமே' என்ற எண்ணம் உடையவனே நரகன். உடல் ஈடுபாட்டை ஒழித்து, அதாவது தேகாத்ம பாவம் (உடல் பற்று) நீங்கி, ஆத்மாவாய் ஒளிவிடுவதே தீபாவளி தத்துவம் என்பது, ரமணரின் திருவாக்கு. தீபாவளியைப் பற்றி இரண்டு பாடல்களை ரமணர் இயற்றியுள்ளார். அவை எழுதப்பட்ட சூழலும் சுவையானதுதான். ரமணர் எதையும் தமக்காகச் செய்வதில்லை; பிறருக்காகவே செய்வார். ஞானத்தின் அடையாளமே அதுதானே! ஒரு தீபாவளி தினத்தன்று, தீபாவளி பற்றிப் பாடல் எழுத வேண்டும் என்று ரமணரிடம் வேண்டிக்கொண்டார் அவரின் பக்தரான முருகனார். அவரே ...

திருக்குறள் காவியம்

Posted: 17 Oct 2014 12:59 PM PDT

இசை வடிவில் 1330 திருக்குறளையும் கேட்டு மகிழுங்கள்! MP3 யாகத் தரவிறக்கம் செய்ய! http://eegarai.com/mp3/Thirukkural/thirukkural_kaviyam_158MB.mp3 158MB 64 bitrate http://eegarai.com/mp3/Thirukkural/thirukkural_kaviyam.mp3 476MB 192 bitrate

திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

Posted: 17 Oct 2014 12:58 PM PDT

இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்!

Posted: 17 Oct 2014 12:56 PM PDT

அண்ட்ராய்ட் அலைபேசியை எப்படியெல்லாம் மேம்படுத்தலாம் என்பது குறித்த தகவல்கள், மென்பொருட்கள் குறித்த தகவல்களை இங்கு தொகுத்து வழங்க உள்ளேன்! படித்துப் பயன்பெறுங்கள்! சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள். (தெரிந்தால் பதில் தருகிறேன் சிரி )

இங்கு வழங்கப்படும் தகவல்கள் Root செய்யப்பட்ட அலைபேசிகளுக்கே பெரும்பாலும் பொருந்தும்! எனவே உங்கள் போனை இப்பொழுதே ரூட் செய்து விடுங்கள்!

சிவகங்கை மாவட்டச் செய்திகள்

Posted: 17 Oct 2014 12:32 PM PDT



இங்கு சிவகங்கை மாவட்டச் செய்திகள் தொகுத்து வழங்கப்படும்!

(மற்ற மாவட்டங்களுக்கு ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உங்கள் மாவட்டச் செய்திகளை நீங்கள் தொகுத்து வழங்கலாம்)

எடை தூக்கும் பயிற்சியில் உள்ள நன்மை, தீமைகள்

Posted: 17 Oct 2014 12:12 PM PDT

எடை தூக்கும் பயிற்சியின் சில சாதகங்களையும், பாதகங்களையும் இப்போது பார்க்கலாம். பல விதமான பயன்கள் இருந்தாலும் கூட எடை தூக்கும் பயிற்சியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கத் தான் செய்கிறது. தசை மேம்பாடு மற்றும் தசை வளர்ச்சிக்கு எடை தூக்கும் பயிற்சி ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. எடை தூக்கும் பயிற்சியின் நன்மை தீமைகளை பார்க்கலாம். • ஃப்ரீ வெயிட்கள் (பளு தூக்கல்) தான் அதிக தசைகளை செயல்பட வைத்து அதற்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும். இதற்கு முக்கிய காரணமே ஃப்ரீ வெயிட்கள் செய்திட ...

முகத்துக்கு நண்பன் முல்தானிமட்டி!

Posted: 17 Oct 2014 12:11 PM PDT

முகத்துக்கு நண்பன் முல்தானிமட்டி! டாக்டர். எஸ்.டி.வெங்கடேஸ்வரன் முல்தானிமட்டியைக் குழைச்சு முகத்தில் பூசினால், பளிச்னு இருக்கும்' என, பாட்டி வைத்தியத்தில் தொடங்கி பியூட்டி பார்லர் வரை முல்தானி மட்டிக்கு செம மவுசு! 'முல்தானிமட்டினா என்ன?' என்று யாரிடமாவது கேளுங்கள். 'அது ஒரு பவுடர்...' என்பதற்கு மேல் வேறு எந்தத் தகவலும் தெரியாமல் விழிப்பார்கள். சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் இணைப் பேராசிரியர் டாக்டர் எஸ்.டி.வெங்கடேஸ்வரனிடம் முல்தானிமட்டி பற்றி கேட்டோம். முல்தானிமட்டி ...

இன்று துலா ஸ்நானம்: ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!

Posted: 17 Oct 2014 12:04 PM PDT

வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத காவிரி என காவிரியின் பெருமையை விவரிப்பதே துலா புராணம் ஆகும். ஐப்பசி மாதத்தில் தினமும் சூரிய உதயத்திற்கு முன் காவிரியில் நீராடி புனிதமாவதே துலா ஸ்நானம் வழிபாடாகும். இதிலும் ஐப்பசி மாதத்தில் கடைசி 2 நாட்களில் நீராடுவது மிகவும் சிறப்பு. காவிரியில் புனித நீராடிய பிறகு துலா புராணத்தினை முழுவதுமாகவோ அல்லது ஒவ்வொரு பகுதியாகவோ தினமும் படிப்பது சகல நலன்களையும் தரும். பொதுவாக 2 நதிகள் கூடும் இடத்தை கூடுதுறை அல்லது சங்கமம் என்று கூறுவோம். தமிழ்நாட்டில் பவானி, ...

மிரட்டும் மூட்டு வலி... விரட்டுவது எப்படி?

Posted: 17 Oct 2014 11:49 AM PDT

''மூட்டு வலி... இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, சமீப ஆண்டுகளாக பலரையும் வாட்டுகிறது'' என்கிறார்கள் மருத்துவர்கள். இதற்கான காரணம், சிகிச்சை, அதற்கான செலவுகள், மூட்டுவலி வராமல் தவிர்ப்பதற்கான வழிகள் பற்றியெல்லாம் தகவல்கள் வழங்குகிறார், சென்னையைச் சேர்ந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வேல்முருகன். ''மூட்டு வலி வயதானவர்களுக்கு வரக்கூடிய பிரச்னை என்பதில்லை. மிக அதிக வேலை, அல்லது மிகக் குறைந்த வேலை என்றிருக்கும் எந்த வயதினரும் மூட்டு வலியை சந்திக்க ...

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Posted: 17 Oct 2014 11:48 AM PDT

ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட போலே (40)  கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய ...

The Homesman - விமர்சனம்

Posted: 17 Oct 2014 11:38 AM PDT

டாமி லீ ஜோன்ஸ் இயக்கி நடித்திருக்கும் இப்படம் இந்த வருட கான் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருது போட்டியில் இடம்பெற்றது. பல சர்வதேச திரைப்பட விழாக்களில் தொடர்ச்சியாக திரையிடப்பட்டு வருகிறது. நவம்பர் 7 யுஎஸ் திரையரங்குகளில் வெளியாகிறது. இதுவொரு அமெரிக்கன் வெஸ்டர்ன் சினிமா. மரங்கள் இல்லாத வறண்ட பூமி, கண்ணுக்கெட்டிய தூரம்வரை பரந்து கிடக்கும் மணற்பரப்பு, பறவையிறகு கிரீடத்துடன் பயத்தை தோற்றுவிக்கும் பூர்வகுடிகளான செவ்விந்தியர்கள், அழுக்கடைந்த உடைகளுடன் கோச் வண்டிகளை கொள்ளையடிக்கும் ...

வினயா ஒரு விடுகதை - ராஜேஷ்குமார்

Posted: 17 Oct 2014 11:24 AM PDT

இன்று நான் உருவாக்கிய மின்நூல்.

http://www.mediafire.com/download/bwhwxul63ozfbwk/Vinaya+Oru+Vidukathai.pdf

பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி!

Posted: 17 Oct 2014 11:04 AM PDT

அமெரிக்காவின் பிரபல ஆன் - லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ள பெண்களுக்கான, 'லெக்கின்ஸ்' ஆடைகளில், இந்து கடவுள்களின் உருவம் இடம் பெற்றுள்ளது. இது உலகளாவிய இந்தியர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்பட்டுள்ளது. இந்திய அரசு தலையிட்டு, இந்த ஆடைகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.ஆன் - லைனில்... அமெரிக்காவில் பிரபல ஆன்-லைன் வர்த்தக நிறுவனம் அமேசான். இந்நிறுவனம், பெண்களுக்கான 'லெக்கின்ஸ்' ஆடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த ஆடைகளில் ...

ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...!

Posted: 17 Oct 2014 10:41 AM PDT

'கிச்சனைப் பார்த்தால் அந்த ஹோட்டலில் சாப்பிட முடியாது!' என்பார்கள். சென்னையில் உள்ள சில ஹோட்டல்களில் சமையல்காரராகப் பணியாற்றிய அனுபவம் மிக்க ஒருவர், அளித்த அதிர்ச்சித் தகவல்கள் இங்கே... ''பொதுவாக ஹோட்டல்களில் ஒருநாளைக்கு 150 கிலோ மட்டன் வாங்கப்படுகிறது என்றால், அதில் 100 கிலோ பயன்படுத்தப்பட்டால், மீதம் இருக்கும் 50 கிலோ, மதியம் வரை ரூம் டெம்ப்பரேச்சரிலேயே இருக்கும். ஃப்ரீஸரில் வைத்தால் மீண்டும் தேவைக்கு எடுக்கும்போது அது இறுகிப்போயிருக்கும், பின் அதை சமைக்கத் தாமதமாகும் என்பதால், அதை வெளியிலேயே ...

உலகத் தமிழ்க் கவிதைப் பெருவிழா மற்றும் 9 வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

Posted: 17 Oct 2014 10:40 AM PDT

மலேயாசியாவின் ஈப்போ நகரில் ஜனவரி 2015 24, 24 ஆம் நாட்களில் நடைபெற இருக்கிற உலகத் தமிழ்க் கவிதைப் பெருவிழாவிலும் 29.01.15 முதல் 02.02.15 வரை நடைபெற இருக்கின்ற 9 வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாமலேயாசியாவின் ஈப்போ நகரில் ஜனவரி 2015 24, 24 ஆம் நாட்களில் நடைபெற இருக்கிற உலகத் தமிழ்க் கவிதைப் பெருவிழாவிலும் 29.01.15 முதல் 02.02.15 வரை நடைபெற இருக்கின்ற 9 வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிலும் கலந்து சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறது உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இந்திய ஒன்றியம்.

இவர் கவிதைக்கு ராஜா - இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் !

Posted: 17 Oct 2014 10:38 AM PDT

இவர் கவிதைக்கு ராஜா - இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் ! சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் 1927 ஜூன் 24ல் சிறகை விரித்து, சிகாகோ மண்ணில் 1981 அக்.,17ல் வாழ்வை முடித்துக் கொண்டவர். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தாலும், பிறருக்கு எட்டாத கருத்துக்களை கொட்டியவர். 'பத்து வயதானதொரு பாலகன் உன் சன்னதியில் பாடியதும் நினைவில் இலையோ முத்து என இட்ட பெயர் முத்தாக வேண்டுமென முறையீடு செய்ததிலையோ! தமிழில் ஒரு கவிமகனை சிறுகூடல் பட்டிதனில் தந்த மலையரசித் தாயே'- என மலையரசி கோயிலில் கவிதை ...

மந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம்

Posted: 17 Oct 2014 10:34 AM PDT

கேரளாவில் சிறு நீரக கோளாரால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு சிகிச்சை அளிக்காமல், பேய் பிடித்ததாக கூறி மாந்திரீகம் செய்ததால், மாணவி பரிதாபமாக இறந்துள்ளார். இந்த சம்பவம், நாம் இன்னும் பல நூற்றாண்டுகள் பின்னால் இருப்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது. இவ்வளவு அறிவியல் வளர்ச்சி, மருத்துவத்துறையில் வின்னைத்தொடும் முன்னேற்றம் எல்லாம் எதற்காக என்ற கேள்வி நம் முன்னே நிற்கிறது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே வடசேரிகரை பகுதியை சேர்ந்தவர் பிரசன்னகுமார். இவரது மகள் ஆதிரா(18). இவர் அருகில் உள்ள ஒரு ...

கருவாய்... உருவாய்... உறுதியாய்!

Posted: 17 Oct 2014 10:33 AM PDT

'இட்ஸ் மெடிக்கல் மிராக்கல்' என்று மருத்துவ உலகை கோரஸாக சொல்ல வைத்த பெயர். இனி வரும் காலங்களில் மருத்துவ மாணவர்கள் 'லுகாஸ் மோர்' பற்றிய பாடம் படிப்பார்கள். அவர் பிறந்த தினமான 2013 ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதியை எந்த மருத்துவரும் எளிதில் மறக்க முடியாது. அப்படி மருத்துவ உலகமே கொண்டாடும் வகையில் லுகாஸ் மோர் செய்த சாதனை என்ன என்கிறீர்களா? கருவாகி 23 வாரங்களிலே தன் தாயின் வயிற்றிலிருந்து பூமிக்கு வந்தவர். மேற்கத்திய நாடுகளைப் பொறுத்தவரை தம் வயிற்றில் உருவான கருவினை கலைக்க விரும்புவோர், கரு உருவான 24 ...

சொர்க்கம் என்பது... சுத்தம் உள்ள வீடுதான்!

Posted: 17 Oct 2014 10:29 AM PDT

சொர்க்கம் என்பது... சுத்தம் உள்ள வீடுதான்!, டாக்டர் குருநாதன், குழந்தை நல மருத்துவர் படங்கள்: பா.அருண் வீட்டின் சுகாதாரம், குடும்ப ஆரோக்கியத்தின் கண்ணாடி. தினமும் குளிப்பது, இரண்டு வேளை பல் தேய்ப்பது இதுவே சுகாதாரம் என நம்மில் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். இவை தவிர, வீட்டில், அலுவலகத்தில் நம் கவனத்துக்கு வராமல் ஏராளமான கிருமிகள் நம்மைப் பின்தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. அவற்றில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள, கொஞ்சம் மெனக்கெட்டாக வேண்டும். இந்தியாவில் மோசமான சுகாதாரப் பழக்கங்களின் ...

ஜெயலலிதாவிற்கு /மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது

Posted: 17 Oct 2014 10:28 AM PDT

தினமலர் செய்தி .
ஜெயலலிதாவிற்கு /மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது
தண்டனை நிறுத்தி வைப்பாம் .

ரமணியன்

சுவடுகள் - சுஜாதா சிறுகதை.

Posted: 17 Oct 2014 09:58 AM PDT

ஐப்பசி - மாத ராசி பலன் (18.10.2014 - 16.11.2014)

Posted: 17 Oct 2014 09:48 AM PDT

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) மங்கல நிகழ்ச்சி! நட்புக்கு முன்னுரிமை அளிக்கும் மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் புதன் நவ.2 வரை நன்மை தர காத்திருக்கிறார். சுக்கிரன் நவ. 13ல் சாதகமான இடத்துக்கு வருகிறார். ராகு மாதம் முழுவதும் நன்மை அளிக்கிறார். 6 ல் இருக்கும் ராகுவால் முயற்சியில் வெற்றி உண்டாகும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். ஆற்றல் மேம்படும்.குடும்பத்தில் மாதத் தொடக்கத்தில் சுப நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். நவ.2 க்குள் திருமணம் போன்ற சுபவிஷயம் நல்ல முறையில் ...

தொப்புள் கொடி உறவு

Posted: 17 Oct 2014 09:28 AM PDT

இரு துளை வழியாக ஆக்ஸிஜனை இழுக்கும் இழுக்க முடியாமலும் குவியமில்லா இடத்தில் ஒளிந்திருக்கும் உயிருக்கு அனுப்புகிறது சுமைதான் ஆனால் சுகமாக சுமக்கிறது சுகப் பிரசவத்தை எதிர் நோக்கி ஒரு வழியாக தொப்புள் கொடியிலிருந்து வெளியே வந்து விழுந்தேன் சட்டென்று ஒருவனே தேவன் என்பவன் என்ன கேனயனா ஆரம்பித்தான் அவன் வேலையை சுழியை போட்டான் சினுங்கல் சப்தத்துடன் பெற்றெடுத்தவளின் முகத்தின் பரப்பளவை அதிகரிக்க ஒரு அங்குலம் இடத்தை நிரப்புவதற்குக் கூட முட்டி மோதி பிறகு தண்டனையாய் வாங்கினேன் கடவாய் வலியை ஒரு ...

ஜெ., நாளையே விடுதலையாவார் ; கோர்ட் உத்தரவு நகல் வருவதில் சிக்கல்!

Posted: 17 Oct 2014 09:22 AM PDT

பெங்களூரு; சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெ., நாளையே விடுதலையாகக்கூடும் என கூறப்படுகிறது. ஜெ., விடுதலையாவார் என பரப்பபன அக்ரஹார சிறை அருகே தொண்டர்கள் குவிந்ததால் , 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் ஜெ., சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு ஜாமின் வழங்கியுள்ளது, இத்துடன் இவர்கள் மீதான சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பதுடன், அபராத தொகையும் செலுத்த வேண்டியதில்லை என்றும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு காலை 11.30 மணியளவில் நீதிபதிகள் உத்தரவிட்டனர். ...

கைகொடுத்த தென்மேற்கு பருவமழையால் தமிழகம்... தப்பியது !

Posted: 17 Oct 2014 08:58 AM PDT

கைகொடுத்த தென்மேற்கு பருவமழையால் தமிழகம்... தப்பியது இயல்பான அளவுக்கு பெய்ததால் நீங்கியது வறட்சி ! சென்னை :தென்மேற்கு பருவமழையால் அதிகபட்சமாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை உள்ளடக்கிய தெற்கு தீபகற்ப பகுதியில் 93 சதவீதம் (66.5 செ.மீ.) மழை கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட இயல்பான அளவுக்கு மழை பொழிவு இருந்ததால் வறட்சியின் பிடியில் இருந்து தமிழகம் தப்பியது.ஆண்டு தோறும் ஜூன் முதல் செப்டம்பர் இறுதி வரை தென்மேற்கு பருவமழை காலம். இந்த காலகட்டத்தில் தமிழகத்திற்கு குறைந்த அளவே மழை கிடைக்கும்.அதேநேரத்தில் ...

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Posted: 17 Oct 2014 08:46 AM PDT

எனக்கு புத்தகங்கள் என்றால் கொள்ளை விருப்பம் ஆனால் நேரமின்மை காரணமாக நூலகத்திற்கு அடிக்கடி செல்ல இயலாது இருந்த பொழுது தான் தமிழ்த்தேனீ இணையளத்தின் அறிமுகமானது. அதற்கு பின் நான் முகநூலில் செலவழித்த நேரத்தை விட தமிழ்த்தேனீ இல் தான் அதிக நேரத்தை செலவிட்டேன். அப்பொழுது தான் நானும் புத்தகங்களை மின்நூல்களாக மாற்றினால் என்ன என்று யோசித்து 'துப்பறியும் சாம்பு' புத்தகத்தை Scan  செய்து தமிழ்நேசனுக்கு அனுப்பி அவரும் அதை தமிழ்த்தேனீ இல் பதிவேற்றம் செய்தார். சில காலத்தில் அவ்விணையத்தளமும் ஏனோ தெரியவில்லை மூடப்பட்டது. ...

இன்று உலக வறுமை ஒழிப்பு தினம் !

Posted: 17 Oct 2014 08:17 AM PDT

உலகில் ஒருவர் வறுமையால் பாதிக்கப்பட்டால், அங்கு அவரது மனித உரிமை மீறப்படுகிறது என்கிறார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி. இவர் சிறு வயது முதலே வறுமைக்கு எதிராக போராடினார். இவரது முயற்சியால் உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 அக்., 17ல் உருவாக்கப்பட்டது. ஐ.நா., சபையால் இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது. வறுமையை ஒழிக்கவும், அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யவும் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது. "ஒருவர் கூட வறுமையில் இருக்கக்கூடாது : வறுமையால் ...

உணவுகளின் போட்டோகள் ! :)

Posted: 17 Oct 2014 07:57 AM PDT

நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை     குறிப்பு: இன்று ( 31-7-2014) முதல் சிலநாட்களுக்கு என்னுடைய 'லேட்டஸ்ட் சிஷ்யை  & மாட்டுப்பெண் - ஆர்த்தி' லண்டன் இல் சமைத்தபோது எடுத்த போட்டோக்கள் இங்கு 2 வருடமாக  என்னுடன் இருந்து, பார்த்து கற்றுக் கொண்டவைகளை ...

படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :) - 5000/- ருபாய் நோட்டு

Posted: 17 Oct 2014 07:56 AM PDT



படம்பார்த்து சிரியுங்கள் புன்னகை

தீபா`வலி’யாக வேண்டாமே? கொஞ்சம் கவனம்... நிறைய கொண்டாட்டம்

Posted: 17 Oct 2014 06:37 AM PDT

தீபா`வலி'யாக வேண்டாமே? கொஞ்சம் கவனம்... நிறைய கொண்டாட்டம் ப்ரீத்தி படங்கள்: ஆர்.வருண் ப்ரசாத் பாவளி என்றாலே கொண்டாட்டம்தான். பட்டாசு, புது டிரெஸ், ஸ்வீட்ஸ் என ஒட்டுமொத்தக் குடும்பமும், உற்சாகம் ஆகிவிடும். மகிழ்ச்சியோடு தொடங்கும் பண்டிகை, முடியும்போது சிலருக்கு மட்டும் சோகத்தை ஏற்படுத்திவிடும். பலகாரங்கள் சுடுவது, பட்டாசு வெடிப்பது என அதிகம் நெருப்போடு விளையாடும் பண்டிகை என்பதால், கொஞ்சம் கவனமாக இருந்து கொண்டாட்டத்தை நீட்டிப்போம். பாதுகாப்பான தீபாவளிக்கு சில ஆலோசனைகளை வழங்குகிறார் ...

வைட்டமின் மாத்திரைகள் அறிந்ததும் அறியாததும்!

Posted: 17 Oct 2014 06:28 AM PDT

வைட்டமின் மாத்திரைகள் அறிந்ததும் அறியாததும்! க.தனலட்சுமி ''எப்பவும் டயர்டா இருக்கு. சுறுசுறுப்பா எந்த வேலையும் செய்ய முடியலை, முடி கொட்டுது. சத்துக்குறைவா இருக்கும்னு தோணுது. ஏதாவது சத்து மாத்திரை எழுதித் தாங்க டாக்டர்' இப்படிக் கேட்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொண்டதுபோய், காலையில் இரண்டு, மதியம் ஒன்று, இரவுக்கு மூன்று என மாத்திரைகள் மூலமே ஆரோக்கியமாக வாழ்ந்துவிடலாம் என நம்பத் தொடங்கிவிட்டோம். ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டு டாக்டரின் ஆலோசனைப்படி ...

தீபாவளிக் கதைகள் - மின்நூல்

Posted: 17 Oct 2014 03:59 AM PDT



தீப ஒளித்திருநாள் பற்றிய புராண கதைகள்
தீபாவளி கதைகள் என்ற நூல் வடிவில்.......

பதிவிறக்க

தீபாவளிக் கதைகள்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™