Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அதிரடி தொழிலாளர் நல சட்டங்களில் மாற்றம்

Posted:

புதுடில்லி:தொழிலாளர் நல சட்டங்களில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. டில்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தொழிலாளர் துறையில் புதிய சீர்திருத்தங்களை அறிவித்த பிரதமர் மோடி, ''நாட்டின் விரைவான தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த சீர்திருத்தங்கள் உதவும்,'' என்றார்.டில்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, சிறப்பான பல திட்டங்களை பின்பற்றி வருகிறது. அவற்றை தொழிலாளர்களுக்கும், தொழில் துறையினருக்கும் அறிமுகப்படுத்துவதில், மகிழ்ச்சி ...

அன்புமணிக்கு எதிரான ஊழல் வழக்கின் விசாரணை...டிசம்பர் 2

Posted:

அன்புமணிக்கு எதிரான ஊழல் வழக்கின் விசாரணை...டிசம்பர் 2: மருத்துவ கல்லுாரிக்கு முறைகேடாக அனுமதி தந்த விவகாரம்புதுடில்லி:'போதிய வசதிகள் இல்லாத மருத்துவக் கல்லுாரிக்கு, மாணவர்களைச் சேர்க்க அனுமதி வழங்கியதாக, மத்திய சுகாதாரத் துறையின் முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கு எதிராக தொடரப்பட்ட ஊழல் வழக்கின் விசாரணை, டிசம்பர், 2ம் தேதி துவங்கும்' என, டில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி, 2004 முதல், 2009 வரை, மத்தியில் முதல் முறையாக ஆட்சியில் இருந்த போது, அந்த அரசில், மத்திய ...

'2ஜி' குற்றவாளிகளை சி.பி.ஐ., இயக்குனர் சந்தித்தது முறையற்றது: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு வழக்கறிஞர் தகவல்

Posted:

புதுடில்லி:'2ஜி ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களையும், அவர்களின் பிரதிநிதிகளையும், சி.பி.ஐ., இயக்குனர் ரஞ்சித் சின்கா, அடிக்கடி சந்தித்தது முறையற்றது. அவரின் செயல், நீதிமன்ற அவமதிப்பாகும்' என, உச்ச நீதிமன்றத்தில், அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் தெரிவித்துள்ளார்.இயக்குனர் சந்திப்பு:'2ஜி ஸ்பெக்ட்ரம்' மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களையும், அவர்களின் பிரதிநிதிகளையும், சி.பி.ஐ., இயக்குனர் ரஞ்சித் சின்கா அடிக்கடி சந்தித்துப் பேசியதாக, குற்றம் சாட்டப்பட்டது.அதனால், '2ஜி வழக்கு விசாரணைகளில், அவர் தலையிட தடை விதிக்க ...

அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்:நிலக்கரி கையிருப்பு கடுமையாக வீழ்ச்சி

Posted:

புதுடில்லி:'அனல்மின் நிலையங்களில், 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நிலக்கரி கையிருப்பு, 72 லட்சம் டன் மட்டுமே உள்ளது. கோல் இந்தியா நிறுவனமும், அதன் துணை நிறுவனங்களும், நிலக்கரி உற்பத்தி இலக்கை எட்டத் தவறி விட்டன' என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.இதுதொடர்பாக, மத்திய மின் துறை அமைச்சக, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:நாட்டில் நிலக்கரியில் இயங்கும், 103 அனல்மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் தற்போது, 72 லட்சம் டன் நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது. இதில், 65.8 லட்சன் டன் நிலக்கரி, உள்நாட்டில் உற்பத்தியானது; மீதமுள்ளது இறக்குமதி செய்யப்பட்டது.அனல்மின் ...

டில்லியில் மணிப்பூர் வாலிபர்கள் மீது கொடூர தாக்குதல்:தொடர்கின்றன இனவெறி சம்பவங்கள்

Posted:

புதுடில்லி:டில்லி அருகே மணிப்பூர் வாலிபர்கள் இருவர், ஏழு பேர் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இதனால், டில்லியில் இனவெறி தாக்குதல் சம்பவங்கள் தொடர்வதாக, சமூக ஆர்வலர் கள் குற்றம்சாட்டி உள்ளனர்.கடந்த ஜனவரியில், டில்லி யின் லஜ்பத் நகர் பகுதியில், 19 வயதான, நிடோ டேனியம் என்ற வாலிபர், கடைக்காரர்களுடன் ஏற்பட்ட தகராறில், இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு பலியானார். அருணாச்சல பிரதேச காங்., எம்.எல்.ஏ.,வின் மகன் இவர்.இதன்பின், பிப்., மாதத்தில், மணிப்பூரை சேர்ந்த பெண்கள் இருவர், தெற்கு டில்லி பகுதி யில், சிலரால் தாக்கப்பட்டனர். மே மாதத்தில், நாகாலாந்தை ...

ஜெயலலிதாவின் ஜாமின் மனு: இன்று விசாரணை

Posted:

ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் இன்று நடக்கிறது. அவரின் சார்பில், மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமனே ஆஜராகப் போகிறாரா அல்லது வேறு ஒரு வழக்கறிஞர் ஆஜராவாரா என்ற பரபரப்பும் காணப்படுகிறது.ஜெயலலிதா சார்பில், மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமனும், சசிகலா சார்பில், சுஷில்குமாரும், சுதாகரன் மற்றும் இளவரசி சார்பில், கே.டி.எஸ்.துளசியும் ஆஜராகின்றனர். அதேநேரத்தில், கடைசி நேரத்தில், இதில் மாற்றங்கள் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.ஜெயலலிதாவின் ஜாமின் மனு, உச்ச நீதிமன்றத்தின், தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வின் முன் விசாரிக்க ...

கைகொடுத்த தென்மேற்கு பருவமழையால் தமிழகம்... தப்பியது இயல்பான அளவுக்கு பெய்ததால் நீங்கியது வறட்சி

Posted:

சென்னை :தென்மேற்கு பருவமழையால் அதிகபட்சமாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை உள்ளடக்கிய தெற்கு தீபகற்ப பகுதியில் 93 சதவீதம் (66.5 செ.மீ.) மழை கிடைத்துள்ளது.கிட்டத்தட்ட இயல்பான அளவுக்கு மழை பொழிவு இருந்ததால் வறட்சியின் பிடியில் இருந்து தமிழகம் தப்பியது.ஆண்டு தோறும் ஜூன் முதல் செப்டம்பர் இறுதி வரை தென்மேற்கு பருவமழை காலம். இந்த காலகட்டத்தில் தமிழகத்திற்கு குறைந்த அளவே மழை கிடைக்கும்.அதேநேரத்தில் நாட்டின் பிற பகுதிகள் அதிகளவு மழையை பெறுகின்றன. நாடு முழுவதும் இந்த காலகட்டத்தில் ஆண்டு சராசரியான 88 செ.மீ. மழையில் 88 சதவீத மழை கிடைக்கும்.இந்த ஆண்டும் அந்த ...

புயலை கிளப்புமா ஆ.ராஜா எழுதும் புத்தகம்

Posted:

'2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், வெளிவராத உண்மைகள் குறித்து, புத்தகம் எழுதப் போவதாக, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராஜா தெரிவித்து உள்ளார்.நாட்டையே உலுக்கிய இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக, இவர் எழுதப் போகும் புத்தகம், காங்., மற்றும் தி.மு.க.,வில் பெரும் புயலை கிளப்பும் என, அஞ்சப்படுகிறது.காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியில், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் ராஜா. தி.மு.க.,வை சேர்ந்த இவரது பதவிக் காலத்தில், தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு, '2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீடு ...

பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி

Posted:

அமெரிக்காவின் பிரபல ஆன் - லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ள பெண்களுக்கான, 'லெக்கின்ஸ்' ஆடைகளில், இந்து கடவுள்களின் உருவம் இடம் பெற்றுள்ளது. இது உலகளாவிய இந்தியர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்பட்டுள்ளது.இந்திய அரசு தலையிட்டு, இந்த ஆடைகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.ஆன் - லைனில்... அமெரிக்காவில் பிரபல ஆன்-லைன் வர்த்தக நிறுவனம் அமேசான். இந்நிறுவனம், பெண்களுக்கான 'லெக்கின்ஸ்' ஆடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த ஆடைகளில் இந்து கடவுள்களான விநாயகர், சிவன், ராமர், கிருஷ்ணர், சரஸ்வதி ...

புயல் சேதங்களை சீரமைக்க ரூ.500 கோடி தாருங்கள்!:பிரதமர் மோடிக்கு ஒடிசா முதல்வர் கடிதம்

Posted:

புவனேஸ்வர்:'ஹுட் ஹுட் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, இடைக்கால நிவாரணமாக, மத்திய அரசு, 500 கோடி ரூபாய் வழங்க வேண்டும்' என, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கோரிக்கை விடுத்து உள்ளார்.இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் நவீன் பட்நாயக் எழுதி உள்ள கடிதம்:சேத மதிப்பீடுஒடிசாவில் புயல் பாதித்த பகுதிகளில், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சேதமடைந்த உள்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கவும், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, உடனடியாக, 500 கோடி ரூபாயை இடைக்கால நிவாரணமாக, மத்திய அரசு வழங்க ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™