ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஜெயலலிதா ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
- கட்டபொம்மன் கொள்ளைக்காரன்
- 19 வருடங்களாக ஒரு படம் ஓடுவது... உண்மையில் பேரதிசயம்தான்..!
- மழையில் நனைந்து பாருங்கள்...
- ‘அம்மா’வை மிஸ் பண்ணும் தலைமைச் செயலகம்!
- 38 நோயாளிகளைக் கொன்று செல்ஃபி எடுத்துக் கொண்ட கொடூர நர்ஸ்!
- பாரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்குள் !
- நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் !
- இந்தியாவுக்குள் எங்கு இடம்பெயர்ந்தாலும் மொபைல் எண்ணை மாற்றத் தேவையில்லை !
- அலிஷா பூமிக்குத் திரும்புவாரா?
- ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL
- கொட்டிக் கிடக்கு டிப்ஸ்
- பதுங்கு குழிக்கு மகாராணியும் வருகிறாராம்…!
- கொஞ்சம் சிரிக்கலாமே
- குழந்தைகளை அடிக்காதீர்கள்
- நடிகர் கமலஹாசன் ஆஸ்பத்திரியில் அனுமதி !
- விளக்கை அணைத்து விட்டு படிக்கிறோம்...!
- முதலிரவில் என்ன கலாட்டா...!!
- இந்த வார கவிதை-விகடன் கவிதைகள்
- இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள்
- அகஸ்தியம் - சிறுகதை
- பா.ஜ.க. பாசவலை... நழுவி ஓடும் ரஜினி..!
- வலை பாயுதே
- மருத்துவம் - புதிர் கேள்விகள்
- விசேஷமான அமைதி!
- நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்
- ஜெயலலிதா ஜாமீன் வழக்கு : சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல்
- உடல் நலமில்லாததால் இங்கு வர இயலவில்லை.
- ஒரு தத்துவம் - நாகேஷ்
- ஒரு நாள் போலீஸ் கமிஷனர் - சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார்
- ஷிர்டி சாய் பாபா
- கவியருவி ம.ரமேஷ் -ஹைபுன் கவிதைகள்
- ஈற்றடி தானே இனிப்பு!
| ஜெயலலிதா ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை Posted: 16 Oct 2014 01:56 PM PDT புது டெல்லி, அக் 17 - அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெறவுள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் கிடைத்து அவர் விடுதலையாகி வெளியே வர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அதிமுகவினர் தீவிர வழிபாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது கர்நாடக தனி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ளார். ... |
| Posted: 16 Oct 2014 01:55 PM PDT கட்டபொம்மன் என்று எடுக்கப்பட்ட திரைப்படம் பாதிக்கு மேல் வரலாற்றுப் பிழையாகவே இருக்கும் என்று கருதுகிறேன். அதில் "வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் தரவேண்டும் கிஸ்தி (வரி)" போன்ற நீண்ட வசனத்தைப் பேசியிருக்க மாட்டான். அப்படியே பேசியிருந்தாலும் தெலுங்கில் தான் பேசியிருக்க வேண்டும்... தமிழ்வாணன் எழுதிய 'கட்டபொம்மன் கொள்ளைக்காரன்!' என்ற நூலில் இருந்து .. இந்நூலில் உள்ள பல செய்திகள் நாம் எண்ணிக் கொண்டிருப்பதற்கு மாறாக இருந்தன எனவே அதனைத் தங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலில் ... |
| 19 வருடங்களாக ஒரு படம் ஓடுவது... உண்மையில் பேரதிசயம்தான்..! Posted: 16 Oct 2014 01:24 PM PDT கடந்த சில வருடங்களாக தியேட்டர்களில் படங்கள் ஓடும் நாட்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. படங்களின் எண்ணிக்கையும், ரிலீஸ் சென்டர்களின் எண்ணிக்கையும் அதிகமானதால் ஏற்பட்ட மாற்றம் இது. கடந்த காலங்களில் 100 நாட்கள் படங்கள் ஓடுவதும், 175 நாட்கள் ஓடி வெள்ளிவிழா கொண்டாடுவதும் வழக்கத்தில் இருந்தது. சமீபகாலங்களில் இந்தநிலை மாறிவிட்டது. அதிகபட்சமாக இரண்டு வாரங்கள் ஓடினால் வெற்றிப்படம் என்ற நிலையும் உருவாகிவிட்டது. அமிதாப் பச்சன், தர்மேந்திரா நடிப்பில் 1972 ஆம் வருடம் வெளியான ஹிந்திப்படம் ஷோலே. ... |
| Posted: 16 Oct 2014 11:31 AM PDT கோடைக்காலத்தில், "மழை வந்தா நல்லயிருக்குமே!" மழைக்காலத்தில், "வெயில் அடிச்சா தேவலயே!" என்று பிதற்றும் மனங்கள் ஏராளம். ஆனால் மழையில் சொட்டச் சொட்ட நனைந்து, அந்த அனுபவத்தில் குதூகலித்ததுண்டா நீங்கள்? இல்லையென்றால், இனிமேலும் தாமதிக்காமல் சத்குருவின் மழை அனுபவத்தைக் கேட்டுவிட்டு நனையக் காத்திருங்கள் மழைக்காக! திறந்த வெளியில் நடந்து செல்கிறீர்கள். திடீரென்று மழை வருகிறது. என்ன செய்வீர்கள்? அருகிலிருக்கும் ஏதாவது ஒரு கூரைக்கு அடியில் ஓடிப்போய் ஒளிந்து கொள்வீர்களா? ஓ! சர்க்கரையைப் போல், உப்புக் ... |
| ‘அம்மா’வை மிஸ் பண்ணும் தலைமைச் செயலகம்! Posted: 16 Oct 2014 11:10 AM PDT 'அம்மா'வை மிஸ் பண்ணும் தலைமைச் செயலகம்! எம்.பரக்கத் அலி 'தேரடி வீதியில் தேவதை வந்தா, திருவிழானு தெரிஞ்சுகோ...' என்பதுபோல முன்னாள் முதலமைச்சர் சென்னையில் இருந்தாலே, களைகட்டும் தமிழகத்தின் தலைமைச் செயலகமான ஜார்ஜ் கோட்டை, இப்போது திருவிழா முடிந்த திடல்போல நிற்கிறது. 'தமிழ்நாட்டுக்கு 'முதலமைச்சர்' என ஒருவர் இருக்கிறாரா?' என்று சந்தேகம் வரும் அளவுக்கு கப்சிப் அமைதியில் இருக்கிறது கோட்டை வட்டாரம். 'ஜெயலலிதாவுக்கு முன்'... 'ஜெயலலிதாவுக்குப் பின்' என பல அலேக் மாற்றங்கள் தலைமைச் செயலகத்தில். நுழைவாயிலில் ... |
| 38 நோயாளிகளைக் கொன்று செல்ஃபி எடுத்துக் கொண்ட கொடூர நர்ஸ்! Posted: 16 Oct 2014 11:05 AM PDT இத்தாலியில் மருத்துவமனை பிணங்களுடன் நின்று புகைப்படம் எடுத்துகொள்ளும் விநோத குணமுள்ள டேனியலா போக்கியலி(42) எனும் பெண் செவிலியரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இத்தாலி நாட்டில் உள்ள லூகோ மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருபவர் டேனியலா போக்கியலி(42). அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கு, ரோசா என்ற 78 வயது மூதாட்டி உடலில் உள்ள சர்க்கரை அளவைத் தெரிந்து கொள்வதற்காக வந்திருக்கிறார். அப்போது அவருக்கு பொட்டாசியம் கலந்த வீரியமிக்க ஊசிமருந்து ஒன்றை செலுத்தியுள்ளார். இதானால் ரோசாவுக்கு திடீரென ... |
| பாரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்குள் ! Posted: 16 Oct 2014 10:53 AM PDT சென்ற வார இறுதியில் வேலை செய்ததற்கு, நேற்று compensation holiday கொடுத்திருந்தார்கள். பயன்படுத்திக் கொண்டேன். வேறு என்ன? பரப்பன அக்ரஹாராதான். வழக்கத்தை விடவும் கூட்டம் அதிகம். மதியம் பன்னிரண்டு மணியளவில் ஆயிரம் பேராவது இருந்திருப்பார்கள். அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம் மற்றும் செந்தூர்பாண்டியன் ஆகிய நால்வர் மட்டும் மரத்தடியில் நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள். செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தார்கள். தமிழ் செய்தித்தாள்தான். அதில் நத்தம் மட்டும் தாடியோடு இருந்தார். ... |
| நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Posted: 16 Oct 2014 10:51 AM PDT மதுராந்தகம் : மதுராந்தகம் அருகே, பழங்கால நாணயங்களை சேகரிக்கும் பணியில், பள்ளி மாணவர் அசத்தி வருகிறார்.மதுராந்தகம் அடுத்த, பழுமத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி என்பவர் மகன் பாலசந்தர், 11. செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக, 1835ம் ஆண்டு நாணயம் முதல் தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்கள் வரை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். குறுகிய காலத்திற்குள், தற்போது வரையில் மொத்தம் 960 நாணயங்களை அவர் சேகரித்துள்ளார். இத்தகைய ஆர்வம் ... |
| இந்தியாவுக்குள் எங்கு இடம்பெயர்ந்தாலும் மொபைல் எண்ணை மாற்றத் தேவையில்லை ! Posted: 16 Oct 2014 10:48 AM PDT இந்தியாவுக்குள் மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயர்ந்து வாழ்வோரின் வசதிக்காக மத்திய தொலைத் தொடர்புத்துறை ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இனி மாநிலம் மாறினாலும் வாடிக்கையாளர்கள் தங்களின் தொடர்பு எண்ணை மாற்றத் தேவையில்லை. ஏற்கெனவே பயன்படுத்திய நம்பரையே பயன்படுத்திக் கொள்ளலாம். வரும் மார்ச் மாதம் 31 க்குள் இந்த வசதி நடைமுறைக்கு வரும். செல்போன் வாடிக்கையாளர்கள் பெருகி வரும் நிலையில், முழுமையான 'மொபைல் நம்பர் போர்டபிலிட்டி' வசதியை வழங்க தொலைத் தொடர்புத்துறை முடிவு செய்துள்ளது. இது ... |
| அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? Posted: 16 Oct 2014 10:47 AM PDT அலிஷா பூமிக்குத் திரும்புவாரா? எஸ்.கலீல்ராஜா அலிஷா கார்சன்... 13 வயது அமெரிக்கச் சிறுமி. இப்போது அமெரிக்கப் பிரபலமாக இருக்கும் அலிஷா, இன்னும் சில வருடங்களில் அகில உலகப் பிரபலம் ஆகிவிடுவார். அப்போதைய தலைமுறை மாணவர்கள், 'செவ்வாய்க் கிரகத்தில் கால் பதித்த முதல் பெண், அலிஷா கார்சன்' என நெஞ்சில் குத்திக் குத்தி மனப்பாடம் செய்யலாம். அல்லது டேப்லெட்டில் லைவ் வீடியோ பார்த்து லைக்கிட்டு 'குட் டே அலிஷா' என கமென்ட்டலாம். சிலர் பிறக்கும்போதே ஐ.க்யூ லெவல் எகிறிப் பிறப்பார்களே... அப்படி ஒரு பெண் அலிஷா. ... |
| ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL Posted: 16 Oct 2014 10:42 AM PDT அன்று காலை 9.00 மணி திருச்செங்கோடு வட்டாச்சியர் அலுவலகம் - இரண்டு பக்கமும் தூண்களை துணைக்கு வைத்துக் கொண்டு அரைவட்டம் போல கம்பீரமாய் நின்றது அந்த பெயர்ப்பலகை.. திங்கள் கிழமை என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. பார்வதி என்ற ஒரு வயதான பெண்மணி ஒரு அலுவலரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள். அய்யா, சாமி கொஞ்சம் இறக்கம் காட்டுங்க சாமி, வயசான காலத்துல கஞ்சிக்கு கஷ்டப்படறேன், அய்யா மட்டும் மனசு வச்சீங்கன்னா எனக்கு கவருமெண்டுல வயசானவங்களுக்கு கொடுக்குற காசு கெடைக்கும். மவராசன இருப்பீங்க ஒரு கையெழுத்த ... |
| Posted: 16 Oct 2014 10:25 AM PDT -- ரவா, மைதா தோசைக்குக் கரைத்த மாவிலேயே தேவையான எண்ணெய்யை ஊற்றிவிட்டால், ஒவ்வொரு தோசைக்கும் தனித்தனியே எண்ணெய் ஊற்ற வேண்டியதில்லை. - * உருளைக்கிழங்கு, காலிஃபிளவர் ஆகியவற்றை சமைக்கும்போது தண்ணீரில் சில சொட்டு வினீகர் சேர்த்தால் நிறம் மாறாமல் இருக்கும். - * கால் கிலோ தனியாவையும் 100 கிராம் கறிவேப்பிலையையும் நன்றாக மணம்வரும் வரை வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். புளிக்குழம்பு, கூட்டு, பொரியல் செய்யும்போது 2 தேக்கரண்டி அரைத்தப் பொடியைத் தூவினால் வாசனை துக்கலாக ... |
| பதுங்கு குழிக்கு மகாராணியும் வருகிறாராம்…! Posted: 16 Oct 2014 10:22 AM PDT [b] - - மன்னா…மகாராணியும் தங்களுடன் பதுங்கு குழிக்கு வருகிறேன் என்கிறார்..! - அப்படியானால், நான் போர்க்களத்திற்கே போய் விடுகிறேன் , அமைச்சரே…! - >பர்வின் யூனூஸ் - ————————————- - கட்சியை வளர்க்க தொண்டர்கள்கிட்டே ஐடியா கேட்டது தப்பாப் போச்சு..! - ஏன் என்ன ஆச்சு? - எல்லோரும் என்னை தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா பண்ணச் சொல்றாங்க..! - >வி.சகிதா முருகன் - --------------------------------------- - ஓப்பன் பண்ணா மதுரை...! - தலைவர் இதுக்கு கதை வசனம் எழுத மாட்டார்...! - >அம்பை ... |
| Posted: 16 Oct 2014 10:18 AM PDT கொஞ்சம் சிரிக்கலாமே ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில்.. முட்டை மதிப்பெண் கிடைத்ததால் பெரும் அதிர்ச்சி ஆனான்..! காரணம் அவன் அனைத்து கேள்விகளுக்கும்.. சரியாக பதிலளித்திருப்ப தாகவே நம்பினான்..! சரியான பதிலை எழுதியதாகவே.. அந்த மாணவன் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம்.. வாதாடினான்..! சரி.. அப்படி என்ன தான் கேள்விகளுக்கு பதில் அளித்தான்.. என பார்ப்போம்..! கேள்வி;- எந்த போரில் திப்பு சுல்தான் உயிரிழந்தார்..? பதில்;- அவரது கடைசி போரில்..! கேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான.. பிரமாணம் ... |
| Posted: 16 Oct 2014 10:13 AM PDT - நன்றி: அமுதசுரபி |
| நடிகர் கமலஹாசன் ஆஸ்பத்திரியில் அனுமதி ! Posted: 16 Oct 2014 10:09 AM PDT நெல்லை: நடிகர் கமலஹாசன் மற்றும் நடிகர் கலாபவன் மணி கியோர் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பாபநாச்ததி்ல நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பில் நடந்த ஒத்திகையின்போது நடிகர் கமலஹாசனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையி்ல் சிகிச்சைக்காக அனுமதி்க்கப்பட்டார். தினமலர் |
| விளக்கை அணைத்து விட்டு படிக்கிறோம்...! Posted: 16 Oct 2014 10:07 AM PDT ![]() |
| Posted: 16 Oct 2014 07:43 AM PDT [img] [/img] |
| இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Posted: 16 Oct 2014 07:16 AM PDT ராமவாணம் ஒளிரும் கணம் - கவிதை ஜான் சுந்தர், ஓவியம்: எஸ்.ஏ.வி.இளையபாரதி சிவப்பு விளக்கொளியில் நின்று குதிரைகள் உறும நின்று நடுங்கும் தேர்களின் பின்னெழும்பும் புகை நடுவே திடுமெனக் காட்சியளிக்கும் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி முனைமுறியா பாணங்களை லாகவமாய் உருவி சரஞ்சரமாய்த் தொடுக்கிறார் சுவாசம் முட்டி வரும் கோபியருக்கு மாத்திரம் சைக்கிளில் தொங்கும் அம்பறாத்தூணியிலிருந்து நறுமணத்தையள்ளி அவர் வழங்க மன்மதக் கணைகளை முழக்கணக்கில் பெற்றுக்கொண்டிருந்தவர்களில் ஒருத்தி 'மூர்த்தியண்ணா ... |
| இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் Posted: 16 Oct 2014 07:16 AM PDT செம்பையின் சங்கீதம்; இன்று செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு நாள் ! கர்நாடக சங்கீத உலகில் அழியாப் புகழுக்கு உரியவர் செம்பை வைத்தியநாத பாகவதர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாய் என்னும் கிராமத்தில் செம்பை அக்ரகாரத்தில் அனந்த பாகவதருக்கும் பார்வதி அம்மாளுக்கும் மகனாக 1896ஆகஸ்ட் 28 ல் பிறந்தார். ஒன்பதாவது வயதில் முழுமையானதொரு கச்சேரி நடத்துவதற்கான திறமையை வைத்தியநாதரும், அவரது சகோதரரும் கற்றுக் கொண்டனர். மலபாரில் பல கச்சேரிகள் நடத்திட செம்பை சகோதரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. பதினெட்டாம் ... |
| Posted: 16 Oct 2014 07:12 AM PDT அகஸ்தியம் - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு வண்ணதாசன், ஓவியங்கள்: ஸ்யாம் ''இன்றைக்கு பௌர்ணமியா?'' - நான் வானத்தைப் பார்த்துக்கொண்டே தனுஷ்கோடி அண்ணனிடம் கேட்டேன். நிலா முழு வட்டமாக நிறைந்துகிடந்தது. சின்னத் துண்டுமேகம்கூட இல்லை. எட்டுத் திசைகளும் சுத்தமாக இருந்தன. எல்லா இடங்களையும் துடைத்து எடுத்ததால் அப்படியொரு துடிப்புடன், கொதிபால் காம்புச் சூட்டுடன் கறவைச் செம்பில் நுரைத்துக்கொண்டு இருந்தது. நட்சத்திரங்கள் விடுமுறையில் போயிருந்தன. ''நேற்றுதானே கோயிலில் கூட்டமாக் ... |
| பா.ஜ.க. பாசவலை... நழுவி ஓடும் ரஜினி..! Posted: 16 Oct 2014 06:34 AM PDT பா.ஜ.க. பாசவலை... நழுவி ஓடும் ரஜினி..! ப.திருமாவேலன், ஓவியம்: பாலா 'பாட்ஷா'வை தி.மு.க-வும், 'அண்ணாமலை'யை அ.தி.மு.க-வும், 'பாபா'வை பா.ம.க-வும் ஓட்டியதைப்போல 'லிங்கா' படத்தை ஓட்ட இதோ வந்துவிட்டது பா.ஜ.க. இந்தப் படத்துக்கான செலவு இல்லாத பி.ஆர்.ஓ-வாக வேலைபார்க்கிறார் பா.ஜ.க-வின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்! தமிழிசையின் அப்பா குமரி அனந்தன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தபோது, ரஜினியை காங்கிரஸுக்குள் இழுக்கும் படலம் தொடங்கியது. அன்றைய பிரதமரும், அகில இந்திய காங்கிரஸ் ... |
| Posted: 16 Oct 2014 06:32 AM PDT ![]() |
| Posted: 16 Oct 2014 06:13 AM PDT - சரியான விடையை கூறுங்கள் |
| Posted: 16 Oct 2014 06:06 AM PDT விசேஷமான அமைதி! பாரதி தம்பி இந்தியா-பாகிஸ்தான் எல்லையோரத்தில் குண்டுச் சத்தங்கள் ஓயாமல் ஒலித்து, பெரும் பதற்றம் சூழ்ந்திருக்கும் இந்தத் தருணத்தில், இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதிக்கான நோபல் பரிசைப் பகிர்ந்துகொள்கின்றன. இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தானின் மலாலா யூசஃப்சாய் ஆகிய இருவரும் பகிர்ந்துகொள்ளும் இந்தப் பரிசின் மூலம், இந்தியா தனது எட்டாவது நோபல் பரிசைப் பெற்றிருக்கிறது. மலாலாவைப் பற்றி பலருக்குத் தெரியும். மேற்கு பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கைச் சேர்ந்த மலாலா, கடந்த 2012-ம் ... |
| நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன் Posted: 16 Oct 2014 06:06 AM PDT நலம் 360' - 1 மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: ஹாசிப்கான் குந்தா மலைக்கிராமத்தின் சாலையோரத்தில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது வந்த தொலைபேசி அழைப்பு, என் வாழ்வின் மறக்க முடியாத ஒரு தருணத்தைப் பரிசளித்தது! ''எனக்கு 71 வயசு. 40 வருஷ விகடன் வாசகன். 'ஆறாம்திணை' முடிஞ்சிருச்சுனு படிச்சப்ப, மனசு பாரமாயிடுச்சு. நெஜமா சொல்றேன் தம்பி... கண்ணீர் வந்திருச்சு! ரெண்டு வருஷத்துல என் வீடே வேற மாதிரி ஆகிருக்கு. எல்லாரும் எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கிறாங்க. உளுந்தங்களி திரும்ப வந்திருக்கு. மருமக முடக்கறுத்தான் ... |
| ஜெயலலிதா ஜாமீன் வழக்கு : சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல் Posted: 16 Oct 2014 06:03 AM PDT தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜாமீன் விவகாரத்தில் மனுதாரர் என்ற அடிப்படையில் தனது கருத்தையும் கேட்க வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி புதிய மனு தாக்கல் செய்துள்ளார். - ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனு வெள்ளிக்கிழமை அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், சுப்ரமணிய சுவாமி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். - அதில், சொத்து குவிப்பு வழக்கின் மனுதாரர் என்ற அடிப்படையில் தன்னையும் வாதிட அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் - --தினமணி |
| உடல் நலமில்லாததால் இங்கு வர இயலவில்லை. Posted: 16 Oct 2014 06:01 AM PDT கடந்த ஒரு வாரமாக கடுமையான குளிர்காய்ச்சல் காரணமாக இங்கு ஈகரைக்கு சரியாக வர முடியாமல் இருந்தது. சாப்பிட்டே ஒரு வாரமாக ஆகிறது, வெறும்நீர் மட்டும் தான். இன்று கொஞ்சம் கஞ்சி அருந்திவிட்டு கொஞ்ச நேர ஓய்வுக்கு பின், இனிய ஈகரையை ரசிக்க வந்திருக்கிறேன். உடல் முழு சுகமடைந்ததும் அதிக பங்கெடுப்பேன். அதுவரை அன்புடன் மன்னிக்கவும. |
| Posted: 16 Oct 2014 06:00 AM PDT ![]() |
| ஒரு நாள் போலீஸ் கமிஷனர் - சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார் Posted: 16 Oct 2014 05:12 AM PDT ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை இருக்கும். நான் கலெக்டராவேன்... டாக்டராவேன்... என்ஜினீயர் ஆவேன்... என்று சிறு வயதிலேயே குழந்தைகள் மனதில் வளர்ந்து கொள்ளும் ஆசைக்கு ஏற்ப பெரியவனாக வளர்ந்து சாதிக்கிறார்கள்... அப்படித்தான் சாதிக்குக்கும் போலீஸ் கமிஷனராகி சாதிக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் விதி...? தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஏழை ஆட்டோ டிரைவரின் மூத்த மகன் சாதிக். 4–ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன். படிப்பில் படுசுட்டியான சாதிக்குக்கு நன்றாக படித்து பெரிய ... |
| Posted: 16 Oct 2014 03:17 AM PDT உண்மையிலேயே அந்தச் செய்தி ஷிர்டி கிராமத்தில் வாழ்ந்த மக்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. அதிகாலையில், ஷிர்டி பாபா வசிக்கும் மசூதிக்குச் சென்ற யாரோ ஒரு பெண்தான், முதன்முதலில் அந்த விந்தையான காட்சியைக் கண்டிருக்கிறாள். உடனே ஓடோடி வந்து, பக்கத்து வீட்டுக்காரியிடம் சொல்ல, விறுவிறுவென்று செய்தி பரவிவிட்டது. எல்லோரும் அவசர அவசரமாக பாபா வாழும் மசூதியை நோக்கி ஓடலானார்கள். பலருக்கு வேகமாக ஓட முடியாத நிலை... காலராவால் அவர்கள் உடல் மிகவும் தளர்ந்திருந்தது. சில நாட்களாகவே காலரா அந்த கிராமத்தில் வேகமாகப் ... |
| கவியருவி ம.ரமேஷ் -ஹைபுன் கவிதைகள் Posted: 15 Oct 2014 09:54 PM PDT நல்ல நேரம் காலையில் நாள் காட்டியைப் பார்த்தேன். ராசி சரியில்லை. தொலைக்காட்சியைப் பார்த்தேன் ஒவ்வொன்றிலும் மாற்றி மாற்றி சொன்னார்கள். வருத்தமாக வெளியே சென்றேன். நண்பன் விசாரித்தான். சொன்னேன். அவன் நல்ல ஐடியா சொன்னான். 'ஒரு வருச காலண்டர்ல எந்த ராசிக்கு நல்லதா போட்டிருக்கோ அந்த ராசிக்கு ஏத்த மாதிரியே வருசா வருஷத்துக்கும் பேர மாத்திக்க…' காலையிலேயே மழையென்று நொந்து கொண்டார்கள். மகிழ்ச்சியில் குழந்தைகள்! இப்படியும் எழுதலாம் என்பதற்காக சில... எல்லாவற்றிற்கும் தீர்வுகள் ... |
| Posted: 15 Oct 2014 07:45 PM PDT --- - கசப்பும் உவர்ப்புமாய் வாழ்க்கை கரிப்பு! பசப்பிடும் பந்தம் புளிப்பு! - வசவுகளால் தூற்றிடும் நட்பு துவர்ப்பு , இறை தந்திடும் ஈற்றடி தானே இனிப்பு! - --இரா.பாசுகரன், சிவகங்கை ================================= - ஆவலுடன் பாவலர்கள் அற்புதமாய் வெண்பாவில் யாவரும் போற்ற எழுதுதற்கும் - தேவைமிகு மாற்றுக் கருத்து மனங்களில் தோன்றுதற்கும் ஈற்றடி தானே இனிப்பு! - அரிமா இளங்கண்ணன், லாசு ஏஞ்சல் - ===================================== - முன்னடியில் சொல்கின்ற மூலக் கருத்தினைப் பின்னர் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

[/img]
