Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அரியானாவில் 73 சதவீத ஓட்டுப்பதிவு; மகாராஷ்டிராவில் மந்தம்: ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.,வுக்கு வாய்ப்பு என கருத்து கணிப்பு

Posted:

புதுடில்லி:அரியானா சட்டசபைக்கு, நேற்று நடந்த தேர்தலில், விறுவிறுப்பான ஓட்டுப் பதிவு நடந்தது. ஆனால், தேர்தல் நடந்த மற்றொரு மாநிலமான மகாராஷ்டிராவில், ஓட்டு பதிவு மந்தமாகவே இருந்தது. ஓட்டுப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில், இரு மாநிலங்களிலுமே ஆட்சியை பிடிக்க பா.ஜ.,வுக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிராவில், காங்., - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி, கடந்த, 15 ஆண்டுகளாக நடந்தது. தற்போதைய சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், தொகுதி பங்கீடு குறித்த விவகாரத்தில், இந்த இரண்டு கட்சிகளுக்கும் இழுபறி ஏற்பட்டது. ஜனாதிபதி ...

வருகிறது அமெரிக்க கறிக்கோழி உள்நாட்டு கோழி விற்பனை 40 சதவீதம் பாதிக்கும்?

Posted:

அமெரிக்காவின் கறிக்கோழி இறக்குமதிக்கு, இந்தியா விதித்திருந்த தடையை, உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூ.டி.ஓ.,) ரத்து செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, மிகக் குறைந்த விலையில், அமெரிக்க கறிக்கோழி, இந்திய சந்தைக்கு வரவுள்ளது. இதனால், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கறிக்கோழி விற்பனை, கடுமையாக பாதிக்கப்படும் என, இந்திய கறிக்கோழி பண்ணையாளர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.கறிக்கோழி உற்பத்தியில், உலகின் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில், பிரேசில் மற்றும் சீனா உள்ளன. இந்தியா, ஐந்தாவது இடத்தில் உள்ளது.இந்தியாவில் உற்பத்தி ...

கவர்னரின் பாராட்டுக்கு பரிசு என்ன: கருணாநிதி

Posted:

சென்னை:'தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது என, கவர்னர் ரோசய்யா பாராட்டி உள்ளார். இந்த பாராட்டுக்கு கிடைத்த பரிசு என்னவோ' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது என, கவர்னர் பாராட்டி உள்ளார். அமைச்சர் ரமணாவின் தம்பி, அவருடைய கட்சியினரால் கொலை செய்யப்பட்டு உள்ளார். கோவையில் அய்யம்மாள், லட்சுமி என, இருவர் நகைக்காக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.வேளச்சேரியில், மாநகராட்சி ஊழியர் வீட்டில், 20 சவரன் நகைகளும், மறைமலை நகரில், இன்ஜி., வீட்டுப் பூட்டை உடைத்து, 60 சவரன் நகைகளும் கொள்ளை ...

ஜெ., விடுதலைக்காக முதல்வர், அமைச்சர்கள் விரதம்

Posted:

பெங்களூரு, பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து, ஜெயலலிதா விடுதலையாகி வெளியே வர வேண்டும் என, இஷ்ட தெய்வங்களை வேண்டி, அமைச்சர்கள் சிலர் விரதம் இருந்து வருகின்றனர். இதில், தாடியுடன், சோகத்துடன் காணப்படும், முதல்வர் ஓ.பி.எஸ்., அய்யப்பனுக்கு விரதம் இருப்பதாக கூறப்படுகிறது.இவரை போல், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், வேலுமணி, உள்ளிட்ட பலரும், வேண்டுதலுடன் தாடி வளர்த்து வருகின்றனர் என்று, அ.தி.மு.க., வட்டாரம் தெரிவித்தது.ஜெயலலிதா சிறைக்கு சென்ற அடுத்த நாள், அவரை சந்திப்பதற்காக, எல்லா அமைச்சர்களும் பெங்களூரில் தான் இருந்தனர். ஓ.பி.எஸ்., மட்டும் ...

முதல்வர் பதவி முள் படுக்கையா? பன்னீரின் பகீர் கட்டளைகள்

Posted:

உறவினர்கள் யாரும், சென்னைக்கு வரக் கூடாது; பொது விழாக்களில் கலந்துக் கொள்ளக் கூடாது; அரசு அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களை சந்திக்க கூடாது என, முதல்வர் பன்னீர் செல்வம் கடும் உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.அ.தி.மு.க., பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெ., சிறைக்கு சென்றதை அடுத்து, தமிழக பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், முதல்வராக பொறுப்பேற்றார். தீவிர விசுவாசம் காரண மாக, அரசு அலுவலகங் களில் இருக்கும், ஜெ., படங்களை அகற்றவும் உத்தரவிடவில்லை. தன்னை எங்கும் முதல்வர் எனவும் விளித்துக் கொள்வதில்லை. அரசு சார்ந்த அன்றாட ...

ஜெ.,வுக்கு ஜாமின் கிடைக்காது: ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் கணிப்பு

Posted:

''ஜெயலலிதாவுக்கு, இப்போதைக்கு ஜாமின் கிடைக்காது,'' என்று ரிஷிவந்தியத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், விஜயகாந்த் பேசினார்.வாய்தா மேல் வாய்தா: விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியத்தில், நலத்திட்ட உதவிகளை வழங்கி விஜயகாந்த் பேசியதாவது:நான் அரசியலுக்கு பிழைக்க வரவில்லை; உழைக்க வந்துள்ளேன். 'அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்' என்று கூறுவர். ஆண்டவன், கணக்கைச் சரியாகத்தான் போடுவான்.'மாபெரும் சபையினில் நீ நடந்தால், மாலைகள் விழ வேண்டும்' என்று எம்.ஜி.ஆர்., பாடினார். அவர் மட்டுமே தொடர்ச்சியாக, 13 ஆண்டுகள் தமிழகத்தில் ...

அட்டஸ்டேஷன் முறையை நீக்கியும் ஏற்காத ரயில்வே தேர்வு வாரியம்: தெற்கு ரயில்வே தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் தமிழக இளைஞர்கள்

Posted:

சென்னை:அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கும் போது, இணைக்கப்படும் சான்றிதழ் நகல்களுக்கு, அரசு அதிகாரிகளின் ஒப்பம் (அட்டஸ்டேஷன்) பெற வேண்டும் என்ற விதி நீக்கப்பட்டு விட்டது. இருப்பினும், பழைய முறையில், சான்றிதழ் நகல்களில் அதிகாரிகள் ஒப்பம் இல்லை என, கூறி, பல ஆயிரம் விண்ணப்பங்களை, ரயில்வே தேர்வு வாரியம் நிராகரித்து உள்ளது. இதனால், தெற்கு ரயில்வேயின், 'குரூப் டி' பணியாளர் தேர்வை எழுத முடியாமல், தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தவித்து வருகின்றனர்.தேர்வு:தெற்கு ரயில்வேயில், காலியாக உள்ள, 5,450 'குரூப் டி' பணியாளர் பதவிகளுக்கு தேர்வு ...

ஆந்திராவில் புயல் தாக்கியதால் பாதிப்பு: சென்னையில் அறிவிக்கப்படாத மின் தடை

Posted:

ஆந்திராவில் உள்ள, அனல் மின் நிலையங்களில், திடீரென, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால், அங்கிருந்து, தமிழகத்திற்கு மின்சாரம் கிடைக்காததால், சென்னையில், மின் தடை அமல்படுத்தப்பட்டது.தெலுங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டம், ராமகுண்டத்தில், தேசிய அனல் மின் கழகத்திற்கு (என்.டி.பி.சி.,), அனல் மின் நிலையம் உள்ளது.இங்கு, தலா, 200, மூன்று; தலா, 500, நான்கு என, மொத்தம், ஏழு அலகுகள் உள்ளன. இவற்றின் மொத்த மின் உற்பத்தி திறன், 2,600 மெகாவாட்.640 மெகாவாட் :இந்த மின் நிலையத்தில் இருந்து, தமிழகத்திற்கு, 640 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், ...

ஆளும் கூட்டணியின் புத்த மத துறவி போர்க்கொடி: இலங்கையில் அதிபர் ஆட்சி முறைக்கு எதிர்ப்பு

Posted:

கொழும்பு:இலங்கையில், ''அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்தம் செய்யாமல், அதிபர் தேர்தலை நடத்த, அதிபர் ராஜபக் ஷே முயன்றால், அவரை தேர்தலில் தோற்கடிக்க எதையும் செய்வேன்,'' என, ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும், புத்த மதத் துறவி வெனிரபிள் அதுரலியே ரதானா என்ற எம்.பி., கூறியுள்ளார். மேலும், ஆட்சி முறையை மாற்ற வேண்டும் என, அவர் தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.இலங்கையில், அதிபர் ராஜபக் ஷே தலைமையிலான, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அதிபர் பதவிக்காலம் நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், முன்கூட்டியே தேர்தலை நடத்தி, வெற்றி ...

பெரியாறு பகுதியில் கேரளா அத்துமீறல்: தமிழக அரசு வழக்கு

Posted:

புதுடில்லி : 'கேரளாவில், முல்லைப் பெரியாறு அணைக்கு அருகில் உள்ள பகுதியில், கேரள அரசு செயல்படுத்த உள்ள, மெகா கார் பார்க் திட்டத்தை தடை செய்ய வேண்டும்; அந்த பகுதியில் மேற்கொண்டு எவ்வித அத்து மீறலிலும் கேரள அரசு ஈடுபடாமல் தடுக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு நேற்று முறையீடு செய்தது. கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் பரா மரிப்பு மற்றும் நிர்வாகம் தமிழக அரசின் வசம் உள்ளது. அந்த அணையின் நீர் பரவும் இடம் ஒன்றில், கேரள அரசு, கார் தொழிற்சாலை துவக்கதிட்டமிட்டு, அதற்கான நடவடிக்கையில் வேகமாக இறங்கியது. கனரக இயந்திரங்களை ...

அமித் ஷாவுக்கு அக்னிபரீட்சை

Posted:

புதுடில்லி: மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் நேற்று நடந்து முடிந்து, 19ல்ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் முடிவு, பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு, அக்னி பரீட்சையாக அமையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.'லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு வெற்றி தேடித் தந்தவர்' என, கட்சியின் அனைத்து மட்டங்களிலும் பாராட்டப்படும் அமித் ஷாவுக்கு, அடுத்த சில மாதங்களிலேயே, இந்த இரண்டு மாநில சட்டசபை தேர்தல்கள், சோதனைக் களமாக அமைந்துள்ளன.பிரதமர் மோடி, இந்த இரண்டு மாநிலங்களிலும் முக்கிய நகரங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், அமித் ஷா, இந்த ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™