ஈகரை தமிழ் களஞ்சியம் |
- உலக உணவு நாள் (அக்.16 1979)
- வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம் (அக். 16- 1799)
- பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்
- 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை
- குன்ஹா தீர்ப்பு முழு விவரம்
- தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல!
- தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள்
- பெண் மொழிக் கவிதை
- எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க...
- கால்பந்து: சென்னை அணி வெற்றி
- உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?!
- தீபாவளிக் கதைகள் - மின்நூல்
- ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே...
- அக்கம் பக்கத்துல Scooty இருக்கான்னு பாக்குறவன் பெரிய மனுசன்...!
- தண்ணி காட்டிய ஷாஜி... கண்ணி வைத்த காவல்துறை! தாய்லாந்து டு தாய்நாடு
- 'சராசரியாக இருக்காதீர்கள்!'
- பெண் ஊழியர்களின் கருமுட்டை உறைபனி (Egg Freezing)செலவினை ஏற்க முன் வந்துள்ளது ஆப்பிள் பேஸ்புக் நிறுவனம்,
- அதிர்ஷ்டம் காலை இடறினால் ....
- மஹாபாரதம் - ஆதிபர்வம் பகுதிகள் 1 முதல் 100 இலவச பதிவிறக்கம்
- நத்தைகள் விபத்தைச் தேடிச் செல்கின்றன - கவிதை
- பாசிக்குடா கடற்கரையில் தமிழ் முறைத் திருமணத்தில் அசத்திய வெள்ளை ஜோடிகள்
- நடிகை கேத்ரின் தெரசாவின் ஆசை...
- உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன்
| Posted: 15 Oct 2014 02:44 PM PDT உலக உணவு நாள் ஆண்டு தோறும் அக்டோபர் 16-ம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945-ம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. நவம்பர் 1979-ம் ஆண்டில் இவ்வமைப்பின் 20-வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டு மந்திரி பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150-ற்கும் அதிகமான நாடுகளில் ... |
| வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம் (அக். 16- 1799) Posted: 15 Oct 2014 02:44 PM PDT வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சி புரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று ... |
| பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள் Posted: 15 Oct 2014 12:32 PM PDT ![]() |
| 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை Posted: 15 Oct 2014 11:58 AM PDT கல்லும் வெல்லும் இதழில் ![]() |
| Posted: 15 Oct 2014 10:23 AM PDT கற்பனை செய்ய முடியாத கணக்கு அது! இந்தியாவையே தனது தீர்ப்பை நோக்கி திருப்பியவர் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா. 1,136 பக்கங்களுக்கு எழுதப்பட்ட தீர்ப்பு அது. முதல் 894 பக்கங்களுக்கு வழக்கின் பின்னணி, குற்றச்சாட்டுகள், அதற்கான ஆவணங்கள், கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள், வழக்கில் சேர்க்கப்பட்ட சாட்சிகள் ஆகியவை தனித்தனித் தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உள்ள சாட்சிகள், ஆவணங்கள் ஆகியவை உறுதியாக உள்ளன என்பதும் அவற்றை எதிர்த்துக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அளித்த ... |
| தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! Posted: 15 Oct 2014 10:14 AM PDT (RTM என்கிற ரேடியோ டெலிவிசன் மலேசியா என்கிற மலேசியா அரசுக்கு சொந்தமான ரேடியோவுக்கு தெய்வமுரசு ஆசிரியர் அளித்த பேட்டி) பேட்டியாளர் திருமிகு மனோன்மணி: ஐயா! தங்களை மீண்டும் சந்தித்துப் பேட்டி எடுப்பதில் மிக்க மகிழ்ச்சி. தற்போது மலேசியாத் தமிழர்களில் வரும் தீபாவளியின் பரபரப்பு தொடங்கிவிட்டது. இந்தத் தீபாவளிக் கொண்டாட்டத்தின் அடிப்படையைப் பற்றி சற்று எடுத்துச் சொல்லுங்கள் ஐயா! தெய்வமுரசு ஆசிரியர்: அம்மா! தங்களை மீண்டும் ஒரு பேட்டிக்காகச் சந்திப்பதில் மெத்தமகிழ்ச்சி. தீபாவளிப் பண்டிகை என்பது ... |
| தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Posted: 15 Oct 2014 10:12 AM PDT முன்னுரை: தீபாவளி உலகமெல்லாம் கொண்டாடும் நன்னாள் பொன்னாள். இதை யாண்டும் எல்லோரும் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள். சிவபெருமானை நினைத்துக் கடைத்தேறும் விரதங்கள் எட்டு. அதில் தீபாவளியும் ஒன்று. இது ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முன்தினம் வரும். தீபாவளி = தீபம் – விளக்கு, ஆவளி – வரிசை. தீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரியநாள் தீபாவளி என உணர்க. தீபங்களை ஏற்றினால் இருள் தானே விலகிவிடும். இந்தத் தீபாவளித் தத்துவத்தை எழுதும்படி அன்பர்கள் விரும்பிக் கேட்டதால் இந்தக் கட்டுரையை எழுதி ... |
| Posted: 15 Oct 2014 10:10 AM PDT இடுப்பு வரை அலையாடி விளையாடிக் கிடப்பது கடல்தானென்றால் கைகளால் விலக்கிக் கால்களால் முன்னேறி வெளி வந்து விடலாம்தான் - கடலல்ல கருங்கற்பாறை இடுப்புக்குக்கீழே இறுகிக்கிடக்க யோசித்தபடியே டீ குடித்து பீடிப்புகையை முகத்தில் ஊதுகின்ற சிற்பியையே வெறித்துக் கொண்டிருந்தது தலையிலிருந்து இடுப்பு வரை செதுக்கி விடப்பட்ட சிலை - ------------------------------------ --அகஸ்டஸ் நன்றித குங்குமம் |
| எலி கிலி! இளவரசி அலற...சசிகலா சிரிக்க... Posted: 15 Oct 2014 10:09 AM PDT சென்னையை தவிர்த்து, கொடநாட்டுக்கு அடுத்தபடியாக ஜெயலலிதா அதிக நாட்கள் சென்று தங்கியது பரப்பன அக்ரஹாராவாகத்தான் இருக்கும்! 'அம்மா... அம்மா...' என்று உருகித்தவித்த அரசியல்வாதிகளின் வருகை குறைந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் உறவினர்கள் வருகை அதிகமாகியிருக்கிறது. செல்ஃபி வித் பரப்பன அக்ரஹாரா! 'பரப்பன அக்ரஹாரா...' பெங்களூரில் உள்ள இந்த இடம் இப்போது கர்நாடக மக்களைவிட தமிழக மக்களுக்கு நன்கு பரிச்சயம் ஆகிவிட்டது. ஜெயலலிதாவை விசாரித்த நீதிமன்றம், இப்போது அடைக்கப்பட்டிருக்கும் ... |
| Posted: 15 Oct 2014 10:08 AM PDT கோவா: கோவா எப்.சி., அணிக்கு எதிரான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் சென்னை எப.சி., அணி வெற்றி பெற்றது. இந்தியாவில் பல்வேறு பகுதியில் முதலாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. கோவாவில் நடந்த இன்றைய லீக் போட்டியில் கோவா எப்.சி., சென்னை அணிகள் மோதின. போட்டியின் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய சென்னைஅணிக்கு முதல் பாதியின் 32வது நிமிடத்தில் தானச்சந்திரா சிங் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய சென்னை அணிக்கு எலானோ (42வது நிமிடம்) இரண்டாவது கோல் அடித்தார். ... |
| உங்கள் கணினி, வேகமாக இயங்க வேண்டுமா?! Posted: 15 Oct 2014 09:12 AM PDT கணினி, வாங்கிய புதிதில் செயலாற்றும் வேகம், நாட்கள் செல்லச் செல்லக் குறைந்துவிடும். ஒரு கட்டத்தில் நம் பொறுமையை சோதிக்கும் அளவுக்கு நகர ஆரம்பித்துவிடும். அதன் செயல்வேகத்தை எப்போதும் சீராக வைத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்யலாம்?! * வாரத்தில் ஒருநாள், கணினியில் தேவையில்லாமல் தேங்கியுள்ள தற்காலிக ஃபைல்களைஅழிக்க வேண்டும். அதற்கு, Start பட்டணை கிளிக் செய்து, அதில் Run ஆப்ஷனை செலக்ட் செய்து,Temp என டைப் செய்தால், தேவையற்ற தற்காலிக ஃபைல்கள் தோன்றும். அவற்றை ஒட்டுமொத்தமாக செலக்ட் செய்து Delete பட்டனை ... |
| Posted: 15 Oct 2014 09:08 AM PDT தீப ஒளித்திருநாள் பற்றிய புராண கதைகள் தீபாவளி கதைகள் என்ற நூல் வடிவில்....... பதிவிறக்க தீபாவளிக் கதைகள் |
| ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே... Posted: 15 Oct 2014 09:07 AM PDT எம்ஜிஆருடன் இணையாக அம்மா நடித்த அடிமைப் பெண் படப் பாடல். அம்மாவுக்கென்றெ பாடிவைத்தது போல் இருக்கிறது, மறந்துவிட்டார் போலும் - இன்று அனுபவிக்கிறார்... ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழியிருக்கும் எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும் - தக்க சமயத்தில் நடந்ததை எடுத்துரைக்கும் ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே பொது நீதிக்கும் ... |
| அக்கம் பக்கத்துல Scooty இருக்கான்னு பாக்குறவன் பெரிய மனுசன்...! Posted: 15 Oct 2014 09:03 AM PDT -- - எங்க படத்துல மதச்சார்பின்மையை வலியுறுத்தி ஒரு வசனம் வருது...! - என்னங்க அது? - பீட்டர், மசூதிக்குப் போய் என் பேர்ல அர்ச்சனை பண்ணிட்டு வா...! - --பாரதி - ---------------------------------------------- - புதுசா வீடு தேடும்போது சேப்டி இருக்கான்னு பாக்குறவன் மனுசன்... - அக்கம்பக்கத்துல ஏதாவது Scooty இருக்கானு பாக்குறவன் பெரிய மனுசன்...! - >புண்ணியமூர்த்தி - ------------------------------------------- - தொடரும் |
| தண்ணி காட்டிய ஷாஜி... கண்ணி வைத்த காவல்துறை! தாய்லாந்து டு தாய்நாடு Posted: 15 Oct 2014 07:29 AM PDT 'எழும்பூரில் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை அருகில் நடைபாதையில் தூங்கிய குடும்பத்தினர் மீது கடந்த 22-ம் தேதி நள்ளிரவில் காரை ஏற்றியதில் முனிராஜ் என்ற 13 வயதுச் சிறுவன் பரிதாபமாக இறந்தான்.; நான்கு பேருக்கு பலத்தகாயம். 'வேகமாகக் காரை ஓட்டியதால் விபரீதம்' என்றுதான் முதலில் தகவல் வெளியானது. போக்குவரத்து போலீஸாரும் அப்படித்தான் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ஆனால், தொழில் அதிபர் புருஷோத்தமனின் மகன் ஷாஜி தாறுமாறாகக் காரை ஓட்டிச் சென்றதே இந்தக் கோர விபத்துக்குக் காரணம் என்பது போலீஸ் உயர் அதிகாரிகளுக்குத் ... |
| Posted: 15 Oct 2014 07:20 AM PDT வாழ்வியல், பொருளாதாரம், நிர்வாகம், சுயமுன்னேற்றம்,பங்குச்சந்தை வியாபாரம் என பல்வேறு விஷயங்கள் குறித்து எளிதில் புரியும் வண்ணம் புத்தகம் எழுதியவர் சோம. வள்ளியப்பன். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மைலம் பொறியியல் கல்லூரியில், வருங்கால இளைஞர்களான மாணவர்களுக்கு, அவர்களின் திறமைகளை செயல்படுத்தும் வழிமுறைகளையும், சமுதாயத்தின் மாணவர்களின் பங்கு பற்றியும் 'இளமையில் தலைமை' என்னும் தலைப்பில் அவர் ஆற்றிய உரையிலிருந்து... "முதலில் நீங்கள் எல்லாரையும் போல் சராசரியான நபராக இருக்காதீர்கள், சராசரி என்பது ... |
| Posted: 15 Oct 2014 05:18 AM PDT சான் பிரான்சிஸ்கோ: ஆப்பிள் மற்றும் பேஸ்புக் நிறுவனம், தங்களது பெண் ஊழியர்களின் கருமுட்டை உறைபனி (Egg Freezing) செய்வதற்கான செலவினை ஏற்க முன் வந்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் கருவுறாமை சிகிச்சைக்கும், விந்து நன்கொடையாளர்களுக்கும் மற்றும் கருமுட்டை உறைபனி செய்வதற்கும் $20,000 வரை செலவினை கொடுத்து உதவி செய்ய உள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஜனவரி மாதத்திலிருந்து, பெண் ஊழியர்களுக்கு தங்களின் கருமுட்டைகளை உறைபனி செய்வதற்கான செயல்முறை மற்றும் சேமிப்பு செலவுகளுக்காக $20,000 வரை கொடுக்க முன் வந்துள்ளது. ... |
| Posted: 15 Oct 2014 05:15 AM PDT ஒரு சிறுவன் நடந்து போய்க் கொண்டிருந்த போது சாலையில் நூறு ரூபாய் நோட்டு கிடப்பதைப் பார்த்தான். அன்று முதல் ஏதும் தரையில் கிடக்கிறதா என்று பூமியைப் பார்த்துக் கொண்டே நடந்தான். அடுத்த அறுபது வருடங்கள் அப்படியே இருந்தான். அவனுக்குக் கிடைத்தவை 768 ரூபாய், 2 மோதிரங்கள், 3 கொலுசுகள். ஆனால் அவன் இழந்திருந்தவை, 21900 சூர்யோதயங்கள், 630 வானவில் காட்சிகள். ஆயிரக்கணக்கான பூக்கள், பல்லாயிரம் குழந்தைகளின் புன்னகைகள் வாழ்க்கையைத் தொலைத்தவன் மீட்பதற்கு வாய்ப்பே இல்லை. 'அதிர்ஷ்டம் காலை இடறினால் ... |
| மஹாபாரதம் - ஆதிபர்வம் பகுதிகள் 1 முதல் 100 இலவச பதிவிறக்கம் Posted: 15 Oct 2014 04:30 AM PDT அனைவரும் மஹாபாரதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூவே முழு மஹாபாரதம். அவ்வலைப்பூவில் இன்று வரை நான் மொழிபெயர்த்த அனைத்துப் பகுதிகளையும் எளிதாக படிக்கும் வகையிலும், அப்புத்தகம் மேலும் மேலும் பகிரப்படும் என்ற நம்பிக்கையிலும் பிடிஎப் கோப்புகளாக இங்கே தருகிறேன். நாம் அறிந்து கொள்வதைப் போல மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டும். ஆகையால், நண்பர்களுக்குப் பகிருங்கள். பரிந்துரை செய்யுங்கள். இதை, மின்னஞ்சல் மூலமாக, முகநூல் மூலமாக, கீச்சு மூலமாக, - என பல வழிகளில் பகிரலாம், ... |
| நத்தைகள் விபத்தைச் தேடிச் செல்கின்றன - கவிதை Posted: 15 Oct 2014 02:59 AM PDT 0]]ஒரு விநோதப்பூ நான்கு சிறிய இதழ்கள் அதன் மடியில் இன்னும் நான்கு சிறிய இதழ்கள் அதன் மடியில் இன்னும் நான்கு என்று ஒரு வசீகரமான விநோதச் சூழல் - நான் அதைக் குனிந்து வியந்து கொண்டிருந்த போது நேற்று இந்த இடத்தில் ஒரு பையன் இறந்து போனான் என்றார் நண்பர் கணவனை இழந்த தாய்க்கு ஒரே பையன் அடுமனை ஒன்றில் அன்றாடக் கூலிவேலை அவனுக்கு ஒரே ஓர் உடல் குறைந்த தங்கை நின்றிருந்த வாகனத்தின் மீது வேகமாக வந்து மோதி தலை சிதறி மரணம் என்றார். - மனிதன் விபத்துக்களை நாடிச் செல்கிறானா என்றவர் கேட்டார் பிறகு - - நாற்பது ... |
| பாசிக்குடா கடற்கரையில் தமிழ் முறைத் திருமணத்தில் அசத்திய வெள்ளை ஜோடிகள் Posted: 15 Oct 2014 12:18 AM PDT - இன்றைய நவீன காலத்தில் தமிழரின் கலாச்சாரம் கானல்நீராவதுடன் பெயரளவில் மட்டும் கலாச்சாரம் எனும் நிலை உருவாகி விடும் என்கிற அச்சம் பலரிடமும் உள்ளதை யாவரும் நன்கறிவர். இலங்கை வாழ் தமிழர் என்றாலும் சரி வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் ஆனாலும் சரி பல்வேறு பட்ட விதத்தில் புதிய நாகரீகத்தை தேடி நுகரத் தொடங்கியதே இதற்கு பிரதான காரணம். ஒரு இனம் விடுதலை பெறும் நாட்களில் அவ் இனத்தின் போராட்டத்துடன் பண்பாடு, கலாச்சாரம், மொழி முதன்மை பெறுகிறது அதற்கு தமிழ் இனம் தயாராகுமா_ என்பது பாரிய சவால் எனலாம். ஓரிரு ... |
| நடிகை கேத்ரின் தெரசாவின் ஆசை... Posted: 14 Oct 2014 11:48 PM PDT - தமிழில் தான் நடித்த முதல் படமான மெட்ராஸ் வெற்றி பெற்றதோடு தன்னையும பேச வைத்து விட்டதால், அடுத்தபடியாக தமிழில் ஆழமாக காலூன்ற முடிவெடுத்திருக்கிறார் கேத்ரின் தெரசா, அதனால் தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவர், அந்த படங்களை முடித்ததும் தமிழில் நடிப்பதற்கு சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். அதோடு, என்னைத்தேடி நகரத்து கதைகளே அதிகமாக வருகிறது. ஆனால் கிராமத்து மனிதர்களின் வெள்ளந்தியான கேரக்டரை வெளிப்படுத்தும விதமான ரோல்களில் நடிக்க வேண்டும் என்ற ... |
| உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன் Posted: 14 Oct 2014 08:53 PM PDT ஈகரையின் அனைத்து நெஞ்சங்களுக்கும் என் வணக்கங்கள், நான் இலங்கையில் வசிக்கின்றேன், இங்கு க்ரைம் நாவல்,சூப்பர் நாவல் போன்ற பாக்கெட் நாவல்கள் கிடைப்பதில்லை தமிழ்நாட்டில் எங்கு அவற்றை கொள்வனவு செய்ய முடியும். அதாவது ராஜேஷ்குமார், இந்திரா சௌந்தராஐன், சுபா, பாலகுமாரனின் ஊடையார் போன்றவர்களின் எல்லா தலைப்புகளிலும் ஒவ்வொரு புத்தகங்கள் தேவை, எனக்கு தெரிந்தவர்கள் இங்கு இருந்து வரும் போது அங்கு கொள்வனவு செய்வதற்கு வசதியாக இருக்கும்.... உங்கள் உதவியை நாடி நிற்கும் செல்லா பி.கு எனக்கு தமிழ்நேசன் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

