Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பால் டேங்கர்களை கண்காணிக்க ஜி.பி.எஸ். கருவிகள்: தமிழக அரசு ஆலோசனை
- வீடுகளில் கூடுதல் கட்டுமானப் பணிகளுக்காக நிரந்தர இணைப்பை ஒப்படைக்கத் தேவையில்லை: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு
- பின்லாந்தில் பிரணாப் முகர்ஜி: 15 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன
- ஜெயலலிதா விடுதலையாக வேண்டி அருணாசலேஸ்வரர் கோயிலில் மஹா யாகம், 1008 சங்காபிஷேகம்
- செங்கம் அருகே மேல்ராவந்தவாடியில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
- பள்ளியில் தூய்மை இந்தியா திட்டப் பணி
- செங்கம் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் ரூ.1000 அபராதம்: பேரூராட்சி நடவடிக்கை
- அருகாவூர் கிராமத்தில் வேளாண் தொழில்நுட்ப செயல் விளக்கம்
- வருவாய்க் கிராம ஊழியர் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம்
- மின் வாரியத்தில் அரசியல் தலையீடுகளை தடுக்க வேண்டும்: தொழிலாளர் கூட்டமைப்பு கோரிக்கை
- மணல் கடத்தல்: மாட்டு வண்டிகள் பறிமுதல்
- குடும்பத் தகராறு: பெண் தற்கொலை
- வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை திருட்டு
- பழக்கடையில் தீ விபத்து
- டாஸ்மாக் கடைகளை மூட பாரதிய மஸ்தூர் சங்கம் வலியுறுத்தல்
- 19 மாற்றுத்திறனாளிகளுக்குஇணைப்புச் சக்கரத்துடன் ஸ்கூட்டர்
- கரூர் அருகே மணல் லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்
- குளித்தலை பாரதி வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி
- வீட்டின் பூட்டை உடைத்து பொருள்கள், ரொக்கம் திருட்டு
- அரியலூர், ஜயங்கொண்டம் தொகுதிகளில் 4,72,689 வாக்காளர்கள்
- அரியலூர் அருகே சொத்துத் தகராறில் விவசாயி மீது தாக்கு
- மருமகனை வெட்டிய மாமனார் கைது
- அரியலூரில் தொழிலாளி மர்மச் சாவு
- பாஜகவில் இணைந்த நடிகர்கள்
- மனுநீதி நாள் முகாமில் ரூ. 4.27 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்
- ஆசிரியர்களுக்கு வகுப்பு மேலாண்மை பயிற்சி
- பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாவட்டப் பிரிவு அலுவலகம் திறப்பு
- சிகரெட் பாக்கெட்டில் எச்சரிக்கை படம், வாசகத்துக்கு 85% இடம்: அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு
- தொழில்கடனை தவறாமல் திருப்பிச் செலுத்த வேண்டும்: ஆட்சியர்
- அகவிலைப்படி நிலுவைத் தொகையை தீபாவளிக்கு முன் வழங்க வலியுறுத்தல்
- மேலைச்சிவபுரி கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்
- தேசிய மாணவர் படை சார்பில் ரத்ததானம்
- மகாராஷ்டிரம், ஹரியாணாவில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்: வாக்குக்கணிப்பில் தகவல்
- பள்ளி மாணவர்களுக்கு நாளை கேரம் போட்டி
- இலவச கேஸ் தொடர்பாக விசாரணை
- நாளை மாவட்ட விளையாட்டுப் போட்டி
- போட்டிகளில் சிறப்பிடம்: ஜே.ஆர்.சி. ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு
- மதுக்கூரில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- தரம் உயர்த்தப்பட்ட பார்வையற்றோர் பள்ளியில் 13 மாணவர்கள் சேர்க்கை
- 1008 தேங்காய் உடைத்து அதிமுகவினர் வழிபாடு
- சீனாவுக்கு எதிராக தில்லியில் அருணாசல் மாநிலத்தவர் ஆர்ப்பாட்டம்
- கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்
- தமிழ் வளர்ச்சித் துறை போட்டி:பொறையாறு கல்லூரிக்கு 2 பரிசுகள்
- மனவளர்ச்சி குன்றிய ஆண்களுக்கு மறுவாழ்வு இல்லம்: தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
- காரைக்காலில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
- ராஜசோளீஸ்வரர் கோயிலில் அக். 24-ல் கந்த சஷ்டி விழா தொடக்கம்
- கரூர் மாவட்டத்தில் 8,10,703 வாக்காளர்கள்
- அக்டோபர் 17 மின் தடை
- "அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் விரைவில் ஏடிஎம், இணைய பணப் பரிமாற்ற வசதி'
- அரசுப் பேருந்து மோதி முதியவர் சாவு
- பள்ளபட்டியில்ரூ. 20 ஆயிரம் தங்க நகைகள் திருட்டு
- கரூரில் நாளை திமுக செயற்குழு கூட்டம்
- அக்டோபர் 16 மின் தடை
- பெரியதிருமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்
- அரியலூர் மாவட்டத்தில்3 இடங்களில் நாளை "அம்மா' திட்ட முகாம்
- உரிமம் இல்லாமல் பட்டாசு விற்றால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
- பெரம்பலூர், குன்னம் தொகுதிகளில் 5,01,393 வாக்காளர்கள்
- பெரம்பலூர்,
- அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலத்த காயம்
- புதுகை அருகே விவசாயி மர்மச் சாவு
- தொற்றா நோய்கள்: தொலைபேசி வழி கலந்துரையாடலில் 65 பேர் பங்கேற்பு
- விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து செயல்விளக்கம்
- புதுகை மாவட்டத்தில் 11.62 லட்சம் வாக்காளர்கள்
- கந்தர்வகோட்டையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்
- "இந்தியாவில் மனநலம் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவு'
- டிராக்டர் மோதி இளைஞர் சாவு
- வலம்புரி வடுகநாதன் பள்ளியில் விநாடி - வினா
- வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
- காவல் விசாரணையில் இருந்த இளைஞர் தற்கொலை முயற்சி
- டிச. 6-ல் தேசிய மக்கள் நீதிமன்றம்
- சீனப்பட்டாசுகளை புறக்கணிக்க வேண்டும்
- குழந்தைகள் இல்லத்தில் தீக்காயமடைந்த சிறுமி சாவு
- மூன்றாம் பாலின சிறார்களுக்கு தில்லி பள்ளிகளில் இலவசக் கல்வி
- காவிரியாற்றில் தடுப்பணை கரை உடைப்பு
- வீட்டின் பூட்டை உடைத்துபொருள்கள், ரொக்கம் திருட்டு
- நாகை, திருவாரூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
- பிறந்த நாள்: கலாமுக்கு மோடி வாழ்த்து
- நாகையில் அக். 17-ல் "அம்மா' திட்ட முகாம்
- நாகையில் நாளை அரசு ஊழியர் சங்க மாநில மாநாடு தொடக்கம்
- என்எஸ்எஸ் சிறப்பு முகாம்
- "அக். 19-ல் அனைத்து நியாய விலைக் கடைகளும் திறந்திருக்கும்'
- திருவாரூரில் 12.8 மி.மீ. மழை
- என்.ஆர். உணவகத்தில்மலிவு விலையில் தீபாவளி பலகாரங்கள் விற்பனை
- தஞ்சாவூர்
- கங்கை நதி தூய்மைத் திட்டம்: 118 உள்ளாட்சி தலைவர்களுக்கு அழைப்பு
- ஆந்திரத்தில் 28 அதிகாரிகள் பணியிட மாற்றம்
- தாஜ்மஹால் அருகே சிற்றுண்டியகம்: அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடங்கினர்
- தேநீர் விற்றவர் பிரதமராக முடியுமென்றால் என்னாலும் முதல்வராக முடியும்: உத்தவ் தாக்கரே
- நான் மகாராஷ்டிர முதல்வராக மக்கள் விரும்புகின்றனர்: பங்கஜா முண்டே
- பணவீக்கம் குறைந்ததற்கு மோடி அரசு காரணம் அல்ல: ப. சிதம்பரம்
- தூய்மைத் திட்டம்: மோடியை பின்பற்றவில்லை- கோகோய்
- எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல்: பதிலடி கொடுத்தது இந்தியா
- அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்டப்படும்: விஎச்பி
- உத்தரகண்ட் ஆளுநரை பதவி விலகக் கூறியது உண்மைதான்: மத்திய உள்துறைச் செயலர் ஒப்புதல்
- இரட்டைக் கொலை: அமெரிக்காவில் இந்தியருக்கு மரண தண்டனை
- நேபாளத்தில் பனிச் சரிவு: இந்தியர் உள்பட 12 பேர் சாவு
- கருமுட்டை சேகரிப்பு: பெண் ஊழியர்களுக்கு ஆப்பிள், ஃபேஸ்புக் நிறுவனங்கள் உதவித் தொகை
- உலகின் மிக உயரமான பார்வையாளர் மாடம்: புர்ஜ் கலீஃபா மற்றொரு கின்னஸ் சாதனை
- ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்: நீதிபதிகள், ஆட்சியர் ஆய்வு
- போந்தவாக்கம் கோயிலில் அதிமுகவினர் சிறப்பு அபிஷேகம்
| பால் டேங்கர்களை கண்காணிக்க ஜி.பி.எஸ். கருவிகள்: தமிழக அரசு ஆலோசனை Posted: 15 Oct 2014 01:06 PM PDT ஆவின் பால் கொண்டு செல்லப்படும் டேங்கர்களில் முறைகேடுகளைத் தவிர்க்க, அவற்றைக் கண்காணிக்கும் வகையில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்த தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. |
| Posted: 15 Oct 2014 01:05 PM PDT வீடுகளில் மேற்கொள்ளப்படும் கூடுதல் கட்டுமானப் பணிகளுக்காக நிரந்தர இணைப்பை ஒப்படைத்துவிட்டு, தாற்காலிக இணைப்பைப் பெறத் தேவையில்லை என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. |
| பின்லாந்தில் பிரணாப் முகர்ஜி: 15 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன Posted: 15 Oct 2014 01:00 PM PDT நார்வே சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, பின்லாந்துக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்றுள்ளார். |
| ஜெயலலிதா விடுதலையாக வேண்டி அருணாசலேஸ்வரர் கோயிலில் மஹா யாகம், 1008 சங்காபிஷேகம் Posted: 15 Oct 2014 12:53 PM PDT அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி, திருவண்ணாமலை அருணாசேஸ்வரர் கோயிலில் மஹா யாகம் மற்றும் 1008 சங்காபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. |
| செங்கம் அருகே மேல்ராவந்தவாடியில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் Posted: 15 Oct 2014 12:52 PM PDT செங்கத்தை அடுத்த மேல்ராவந்தவாடியில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் செய்தனர். மேல்ராவந்தவாடி கிராம ஊராட்சியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை |
| பள்ளியில் தூய்மை இந்தியா திட்டப் பணி Posted: 15 Oct 2014 12:52 PM PDT திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. |
| செங்கம் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் ரூ.1000 அபராதம்: பேரூராட்சி நடவடிக்கை Posted: 15 Oct 2014 12:52 PM PDT செங்கம் பேரூராட்சிப் பகுதி சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்படுமென செயல் அலுவலர் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார். |
| அருகாவூர் கிராமத்தில் வேளாண் தொழில்நுட்ப செயல் விளக்கம் Posted: 15 Oct 2014 12:51 PM PDT செய்யாறை அடுத்த அருகாவூர் கிராமத்தில் வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமைத் திட்ட செயல் விளக்கம் அண்மையில் நடைபெற்றது. |
| வருவாய்க் கிராம ஊழியர் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் Posted: 15 Oct 2014 12:51 PM PDT தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் செங்கத்தில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எம்.தங்கராஜ் தலைமை வகித்தார். துணை |
| மின் வாரியத்தில் அரசியல் தலையீடுகளை தடுக்க வேண்டும்: தொழிலாளர் கூட்டமைப்பு கோரிக்கை Posted: 15 Oct 2014 12:51 PM PDT தமிழக மின் வாரியத்தின் நிர்வாகப் பணிகளில் அரசியல் கட்சியினரின் தலையீடுகளைத் தடுக்க வேண்டும் என்று தேசிய மின்சார பொறியாளர் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பு வலியுறுத்த |
| மணல் கடத்தல்: மாட்டு வண்டிகள் பறிமுதல் Posted: 15 Oct 2014 12:51 PM PDT போளூர் பகுதியில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வசூர் ஊராட்சியைச் சேர்ந்த நல்லாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயவேலு மகன் மணிவண்ணன் (29) என்பவரும், |
| குடும்பத் தகராறு: பெண் தற்கொலை Posted: 15 Oct 2014 12:50 PM PDT செய்யாறில் குடும்பத் தகராறு காரணமாக பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். |
| வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை திருட்டு Posted: 15 Oct 2014 12:50 PM PDT வந்தவாசியில் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை திருட்டு போனது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். |
| Posted: 15 Oct 2014 12:50 PM PDT வந்தவாசி கோட்டைக் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (45). இவர் வந்தவாசி பஜார்வீதியில் ஓடுவேய்ந்த கடையில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு |
| டாஸ்மாக் கடைகளை மூட பாரதிய மஸ்தூர் சங்கம் வலியுறுத்தல் Posted: 15 Oct 2014 12:43 PM PDT டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாரதிய மஸ்தூர் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| 19 மாற்றுத்திறனாளிகளுக்குஇணைப்புச் சக்கரத்துடன் ஸ்கூட்டர் Posted: 15 Oct 2014 12:42 PM PDT கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் |
| கரூர் அருகே மணல் லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள் Posted: 15 Oct 2014 12:42 PM PDT கரூர் அருகே புதன்கிழமை இரவு மணல் லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| குளித்தலை பாரதி வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி Posted: 15 Oct 2014 12:42 PM PDT கரூர் மாவட்டம், குளித்தலை பாரதி வித்யாலயா உயர்நிலைப் பள்ளியில், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் பிறந்த தினத்தையொட்டி, அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது. |
| வீட்டின் பூட்டை உடைத்து பொருள்கள், ரொக்கம் திருட்டு Posted: 15 Oct 2014 12:41 PM PDT தஞ்சாவூர் அருகேயுள்ள ஆர்.எம்.எஸ். காலனியை சேர்ந்தவர் கனகம் (65). இவர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளிநாட்டில் வசிக்கும் மூத்த மகன் வீட்டுக்குச் சென்றார். இதனிடையே, இவரது வீட்டைப் |
| அரியலூர், ஜயங்கொண்டம் தொகுதிகளில் 4,72,689 வாக்காளர்கள் Posted: 15 Oct 2014 12:41 PM PDT அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் 4,72,689 வாக்காளர்கள் உள்ளனர் என்றார் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ். |
| அரியலூர் அருகே சொத்துத் தகராறில் விவசாயி மீது தாக்கு Posted: 15 Oct 2014 12:41 PM PDT அரியலூர் மாவட்டம், குவாகம் காவல் சரகம், இடையக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (35), விவசாயி. இவருக்கும், இவரது உறவினரான சுரேந்தர் (22) என்பவருக்கும் இடையே |
| Posted: 15 Oct 2014 12:40 PM PDT அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே முன்விரோதத்தில் மருமகனை அரிவாளால் வெட்டிய மாமனார் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். |
| அரியலூரில் தொழிலாளி மர்மச் சாவு Posted: 15 Oct 2014 12:40 PM PDT அரியலூரில் மரப்பட்டறை தொழிலாளி மர்மமான முறையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். |
| Posted: 15 Oct 2014 12:40 PM PDT |
| மனுநீதி நாள் முகாமில் ரூ. 4.27 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் Posted: 15 Oct 2014 12:40 PM PDT பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வயலப்பாடியில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் முகாமில் ரூ. 4.27 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| ஆசிரியர்களுக்கு வகுப்பு மேலாண்மை பயிற்சி Posted: 15 Oct 2014 12:40 PM PDT பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வி.களத்தூரில் உள்ள லிட்டில் ஆனந்த் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில், ஆசிரியர்களுக்கான வகுப்பு மேலாண்மை பயிற்சி புதன்கிழமை |
| பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாவட்டப் பிரிவு அலுவலகம் திறப்பு Posted: 15 Oct 2014 12:39 PM PDT புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பேரூராட்சிகளின் திருச்சி மண்டல உதவி இயக்குநர் அலுவலகத்தின் புதுக்கோட்டை மாவட்ட பிரிவின் புதிய அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் கூறியது: |
| சிகரெட் பாக்கெட்டில் எச்சரிக்கை படம், வாசகத்துக்கு 85% இடம்: அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு Posted: 15 Oct 2014 12:39 PM PDT சிகரெட், புகையிலை பாக்கெட்டுகளில் 85 சதவீத பகுதியை, புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான எச்சரிக்கை வாசகம், படங்களுக்காக ஒதுக்க வேண்டும் என்ற அரசாணையை மத்திய அரசு அரசிதழில் புதன்கிழமை வெளியிட்டது. |
| தொழில்கடனை தவறாமல் திருப்பிச் செலுத்த வேண்டும்: ஆட்சியர் Posted: 15 Oct 2014 12:39 PM PDT தொழில்கடனை தவறாமல் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் தெரிவித்தார். |
| அகவிலைப்படி நிலுவைத் தொகையை தீபாவளிக்கு முன் வழங்க வலியுறுத்தல் Posted: 15 Oct 2014 12:39 PM PDT ஜூலை 2014 முதல் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவைத் தொகையை வருகிற தீபாவளி பண்டிகைக்கு முன்பாக வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| மேலைச்சிவபுரி கல்லூரியில் கண் பரிசோதனை முகாம் Posted: 15 Oct 2014 12:38 PM PDT பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் கண் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| தேசிய மாணவர் படை சார்பில் ரத்ததானம் Posted: 15 Oct 2014 12:38 PM PDT கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் தேசிய மாணவர் படை சார்பில் ரத்ததான முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| மகாராஷ்டிரம், ஹரியாணாவில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்: வாக்குக்கணிப்பில் தகவல் Posted: 15 Oct 2014 12:38 PM PDT மகாராஷ்டிரம், ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல்களில், தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுக்கும் என்று வாக்குக் கணிப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| பள்ளி மாணவர்களுக்கு நாளை கேரம் போட்டி Posted: 15 Oct 2014 12:38 PM PDT தஞ்சாவூர் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன. |
| Posted: 15 Oct 2014 12:37 PM PDT கும்பகோணம் அருகே ஏழுமாந்திடல் நரிக்குறவர்களுக்கு இலவச கேஸ், அடுப்பு வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது தொடர்பாக அதிகாரிகள் கேஸ் ஏஜென்சியிடம் புதன்கிழமை விசாரணை நடத்தினர். |
| நாளை மாவட்ட விளையாட்டுப் போட்டி Posted: 15 Oct 2014 12:37 PM PDT தஞ்சாவூர் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் அன்னை சத்யா விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகின்றன. |
| போட்டிகளில் சிறப்பிடம்: ஜே.ஆர்.சி. ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு Posted: 15 Oct 2014 12:37 PM PDT இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியில் மாநில அளவிலான பயிற்சி முகாமில் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜே.ஆர்.சி. ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. |
| மதுக்கூரில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 15 Oct 2014 12:36 PM PDT பாசனத்திற்கு முறை வைக்காமல் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி மதுக்கூரில் அனைத்துக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| தரம் உயர்த்தப்பட்ட பார்வையற்றோர் பள்ளியில் 13 மாணவர்கள் சேர்க்கை Posted: 15 Oct 2014 12:36 PM PDT மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்ட தஞ்சாவூர் அரசு பார்வையற்றோர் பள்ளியில் 13 பேருக்கு சேர்க்கை நடைபெற்றது. |
| 1008 தேங்காய் உடைத்து அதிமுகவினர் வழிபாடு Posted: 15 Oct 2014 12:36 PM PDT சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி, சீர்காழி ஆபத்து காத்த விநாயகர் கோயிலில் புதன்கிழமை 1008 சிதறு தேங்காய் உடைத்து அதிமுக இளைஞர் பாசறையினர் வழிபாடு மேற்கொண்டனர். |
| சீனாவுக்கு எதிராக தில்லியில் அருணாசல் மாநிலத்தவர் ஆர்ப்பாட்டம் Posted: 15 Oct 2014 12:35 PM PDT அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனித்தாளில் நுழைவு அனுமதிகளை (விசாக்களை) சீனா வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தில்லியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் Posted: 15 Oct 2014 12:35 PM PDT சீர்காழியில் உள்ள நகை மற்றும் அடகுக் கடைகளில் வரும் நவம்பர் 1-ம் தேதிக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றார் சீர்காழி காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேசன். |
| தமிழ் வளர்ச்சித் துறை போட்டி:பொறையாறு கல்லூரிக்கு 2 பரிசுகள் Posted: 15 Oct 2014 12:35 PM PDT தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நாகை மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகளில் பொறையாறு டிபிஎம்எல் கல்லூரி மாணவர்கள் 2 முதல் பரிசுகளைப் பெற்றனர். |
| மனவளர்ச்சி குன்றிய ஆண்களுக்கு மறுவாழ்வு இல்லம்: தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் Posted: 15 Oct 2014 12:35 PM PDT மனவளர்ச்சி குன்றிய 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு தங்கும் வசதி, உணவு மற்றும் தொழிற்பயிற்சியுடன் கூடிய மறுவாழ்வு இல்லம் நடத்த தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். |
| காரைக்காலில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு Posted: 15 Oct 2014 12:35 PM PDT காரைக்காலில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி 1.1.2015-ம் தேதியை தகுதிபெறும் தேதியாகக் |
| ராஜசோளீஸ்வரர் கோயிலில் அக். 24-ல் கந்த சஷ்டி விழா தொடக்கம் Posted: 15 Oct 2014 12:34 PM PDT காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ராஜசோளீஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி விழா வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி திங்கள்கிழமை பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது. |
| கரூர் மாவட்டத்தில் 8,10,703 வாக்காளர்கள் Posted: 15 Oct 2014 12:34 PM PDT கரூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் புதன்கிழமை வெளியிட்டார். இதன்படி கரூர் மாவட்டத்தில் 8,10,703 வாக்காளர்கள் உள்ளனர். |
| Posted: 15 Oct 2014 12:34 PM PDT கரூர் மாவட்டம், மாயனூர், பஞ்சப்பட்டி ஆகிய இரு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக, இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக். 17) மின் விநியோகம் இருக்காது என குளித்தலை மின்வாரியச் செயற்பொறியாளர் (பொ) கோ. |
| "அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் விரைவில் ஏடிஎம், இணைய பணப் பரிமாற்ற வசதி' Posted: 15 Oct 2014 12:33 PM PDT "அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் விரைவில் ஏடிஎம், இணைய பணப் பரிமாற்ற வசதி'கரூர், அக். 15: |
| அரசுப் பேருந்து மோதி முதியவர் சாவு Posted: 15 Oct 2014 12:33 PM PDT கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே அரசுப் பேருந்து மோதியதில் முதியவர் புதன்கிழமை உயிரிழந்தார். |
| பள்ளபட்டியில்ரூ. 20 ஆயிரம் தங்க நகைகள் திருட்டு Posted: 15 Oct 2014 12:33 PM PDT கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டியில் பூட்டியிருந்த வீட்டில் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| கரூரில் நாளை திமுக செயற்குழு கூட்டம் Posted: 15 Oct 2014 12:32 PM PDT கரூரில் திமுக செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக். 17) நடைபெற உள்ளது. |
| Posted: 15 Oct 2014 12:32 PM PDT குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 16) மின் விநியோகம் இருக்காது என குளித்தலை மின்வாரியச் செயற்பொறியாளர் (பொ) கோ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். |
| பெரியதிருமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல் Posted: 15 Oct 2014 12:32 PM PDT கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள பெரியதிருமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு அண்மையில் நடைபெற்றது. |
| அரியலூர் மாவட்டத்தில்3 இடங்களில் நாளை "அம்மா' திட்ட முகாம் Posted: 15 Oct 2014 12:31 PM PDT அரியலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (அக். 17) நடைபெறவுள்ளது. |
| உரிமம் இல்லாமல் பட்டாசு விற்றால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை Posted: 15 Oct 2014 12:31 PM PDT உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ். |
| பெரம்பலூர், குன்னம் தொகுதிகளில் 5,01,393 வாக்காளர்கள் Posted: 15 Oct 2014 12:31 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம் சட்டப்பேரவை தொகுதிகளில் 5,01,393 வாக்காளர்கள் உள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| Posted: 15 Oct 2014 12:30 PM PDT அகில இந்திய அளவில் நடைபெற்ற டென்னிஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை, மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது செவ்வாய்க்கிழமை பாராட்டி பரிசுகள் வழங்கினார். |
| அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலத்த காயம் Posted: 15 Oct 2014 12:30 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே புதன்கிழமை சாய்ந்து கிடந்த மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் விவசாய கூலித் தொழிலாளி பலத்த காயமடைந்தார். |
| புதுகை அருகே விவசாயி மர்மச் சாவு Posted: 15 Oct 2014 12:30 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு விவசாயி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். |
| தொற்றா நோய்கள்: தொலைபேசி வழி கலந்துரையாடலில் 65 பேர் பங்கேற்பு Posted: 15 Oct 2014 12:29 PM PDT புதுக்கோட்டையில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமும், மாவட்ட சுகாதாரத் திட்டமும் இணைந்து புதன்கிழமை நடத்திய தொற்றா நோய்களுக்கு தொலைபேசி மூலம் விளக்கமளிக்கும் நிகழ்ச்சியில் 65 பேர் தொடர்பு கொண்டு விளக்கமும், ஆலோசனையும் பெற்றனர். |
| விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து செயல்விளக்கம் Posted: 15 Oct 2014 12:29 PM PDT பொன்னமராவதி அரிமா மெட்ரிக் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த செயல்விளக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. |
| புதுகை மாவட்டத்தில் 11.62 லட்சம் வாக்காளர்கள் Posted: 15 Oct 2014 12:29 PM PDT புதுக்கோட்டையில் புதன்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 11 லட்சத்து 62 ஆயிரத்து 595 வாக்காளர்கள் உள்ளதாக ஆட்சியர் செ. மனோகரன் தெரிவித்தார். |
| கந்தர்வகோட்டையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் Posted: 15 Oct 2014 12:29 PM PDT கந்தர்வகோட்டையில் வாக்குச்சாவடி பொறுப்பு அலுவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| "இந்தியாவில் மனநலம் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவு' Posted: 15 Oct 2014 12:28 PM PDT இந்தியாவில் மனநலம் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது என்றார் மனவள மேம்பாட்டு ஆலோசகர் எஸ். இளங்கோ. |
| Posted: 15 Oct 2014 12:28 PM PDT ஆலங்குடி அருகே புதன்கிழமை டிராக்டர் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார். கறம்பக்குடி அருகேயுள்ள பட்டத்திக்காடு கிராமத்தைச் சேர்ந்த அழகர் மகன் சுரேஷ் (31). சிங்கப்பூரில் |
| வலம்புரி வடுகநாதன் பள்ளியில் விநாடி - வினா Posted: 15 Oct 2014 12:28 PM PDT பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளியில் மக்கள் தொகை விழிப்புணர்வு குறித்த விநாடி - வினா நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. |
| வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு Posted: 15 Oct 2014 12:28 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட 10 ஆயிரத்து 4 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளது வரைவு வாக்காளர் வெளியிடப்பட்டதில் தெரியவந்துள்ளது. |
| காவல் விசாரணையில் இருந்த இளைஞர் தற்கொலை முயற்சி Posted: 15 Oct 2014 12:27 PM PDT தஞ்சாவூர் அருகே காவல் விசாரணையில் இருந்த இளைஞர் செவ்வாய்க்கிழமை இரவு மதுபாட்டில் மூடியை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். |
| டிச. 6-ல் தேசிய மக்கள் நீதிமன்றம் Posted: 15 Oct 2014 12:27 PM PDT தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுச் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் டிச. 6-ம் தேதி நடைபெறவுள்ளது. |
| சீனப்பட்டாசுகளை புறக்கணிக்க வேண்டும் Posted: 15 Oct 2014 12:27 PM PDT சட்டத்திற்குப் புறம்பாக விற்கப்படும் சீனப்பட்டாசுகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தேசிய ஜனநாயக மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. |
| குழந்தைகள் இல்லத்தில் தீக்காயமடைந்த சிறுமி சாவு Posted: 15 Oct 2014 12:26 PM PDT தஞ்சாவூர் அருகேயுள்ள குழந்தைகள் இல்லத்தில் தீக்காயமடைந்த சிறுமி புதன்கிழமை உயிரிழந்தார். தஞ்சாவூர் மகர்நோம்புசாவடியைச் சேர்ந்தவர் செல்வன் அமல்ராஜின் மகள் நிலோபர் நிஷா (14). |
| மூன்றாம் பாலின சிறார்களுக்கு தில்லி பள்ளிகளில் இலவசக் கல்வி Posted: 15 Oct 2014 12:26 PM PDT அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு தில்லி பள்ளிகளில் வழங்கப்படும் இலவசக் கல்வியை இனி மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த சிறார்களும் பெறும் வகையில் தில்லி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. |
| காவிரியாற்றில் தடுப்பணை கரை உடைப்பு Posted: 15 Oct 2014 12:26 PM PDT கும்பகோணம் அருகே மணஞ்சேரி காவிரியாற்றில் தடுப்பணை ஓரம் கரை 150 அடி நீளத்திற்கு உடைப்பு ஏற்பட்டது. |
| வீட்டின் பூட்டை உடைத்துபொருள்கள், ரொக்கம் திருட்டு Posted: 15 Oct 2014 12:25 PM PDT தஞ்சாவூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கணினி,டிவி, ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் அருகேயுள்ள ஆர்.எம்.எஸ். காலனியை சேர்ந்தவர் கனகம் (65). இவர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளிநாட்டில் வசிக்கும் மூத்த மகன் வீட்டுக் |
| நாகை, திருவாரூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு Posted: 15 Oct 2014 12:25 PM PDT நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. |
| பிறந்த நாள்: கலாமுக்கு மோடி வாழ்த்து Posted: 15 Oct 2014 12:25 PM PDT குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் 83-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். |
| நாகையில் அக். 17-ல் "அம்மா' திட்ட முகாம் Posted: 15 Oct 2014 12:25 PM PDT நாகை மாவட்டத்தில் 7 வட்டங்களில் தலா ஒரு கிராமத்தில் "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (அக்.17) நடைபெறுகிறது. |
| நாகையில் நாளை அரசு ஊழியர் சங்க மாநில மாநாடு தொடக்கம் Posted: 15 Oct 2014 12:25 PM PDT நாகையில் அரசு ஊழியர் சங்கத்தின் 11-வது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை (அக். 17) தொடங்குகிறது. |
| Posted: 15 Oct 2014 12:24 PM PDT குத்தாலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் என்எஸ்எஸ் சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது. கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கிய முகாமுக்கு பள்ளியின் முதுகலை ஆசிரியை விஜயா தலைமை |
| "அக். 19-ல் அனைத்து நியாய விலைக் கடைகளும் திறந்திருக்கும்' Posted: 15 Oct 2014 12:24 PM PDT திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.19) திறந்திருக்கும் என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன். அரிசி, கோதுமை, சர்க்க |
| Posted: 15 Oct 2014 12:24 PM PDT திருவாரூரில் செவ்வாய்க்கிழமை 12.8 மில்லி மீட்டர் மழைப் பெய்தது. |
| என்.ஆர். உணவகத்தில்மலிவு விலையில் தீபாவளி பலகாரங்கள் விற்பனை Posted: 15 Oct 2014 12:23 PM PDT காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தால் நடத்தப்படும் என்.ஆர். உணவகத்தில் மலிவு விலையில் தீபாவளி பலகார வகைகள் விற்பனை செய்யப்படவுள்ளது. |
| Posted: 15 Oct 2014 12:23 PM PDT |
| கங்கை நதி தூய்மைத் திட்டம்: 118 உள்ளாட்சி தலைவர்களுக்கு அழைப்பு Posted: 15 Oct 2014 12:18 PM PDT கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டத்தின் ஓர் அம்சமாக, கழிவுநீர் வெளியேற்றப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கான செயல் திட்டம் வகுப்பது குறித்து 5 மாநிலங்களைச் சேர்ந்த 118 உள்ளாட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. |
| ஆந்திரத்தில் 28 அதிகாரிகள் பணியிட மாற்றம் Posted: 15 Oct 2014 12:17 PM PDT ஆந்திர மாநிலம், சித்தூர், கடப்பா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் 28 பேர் கடமையில் அலட்சியம் காட்டியதாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். |
| தாஜ்மஹால் அருகே சிற்றுண்டியகம்: அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடங்கினர் Posted: 15 Oct 2014 12:17 PM PDT அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது மனம் தளர்ந்து விடாமல் ஒன்று சேர்ந்து, உலக புகழ்பெற்ற தாஜ்மஹால் அருகே சிற்றுண்டியகம் தொடங்கியுள்ளனர். |
| தேநீர் விற்றவர் பிரதமராக முடியுமென்றால் என்னாலும் முதல்வராக முடியும்: உத்தவ் தாக்கரே Posted: 15 Oct 2014 12:16 PM PDT ""தேநீர் விற்றவர் நாட்டின் பிரதமராக முடியுமென்றால், என்னாலும் மாநில முதல்வராக முடியும்'' என்று சிவசேனைக் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார். |
| நான் மகாராஷ்டிர முதல்வராக மக்கள் விரும்புகின்றனர்: பங்கஜா முண்டே Posted: 15 Oct 2014 12:15 PM PDT மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் சார்பாக முதல்வர் பதவியை ஏற்கப்போவது யார்? என்ற விவாதம் தற்போதே தொடங்கியுள்ளது. |
| பணவீக்கம் குறைந்ததற்கு மோடி அரசு காரணம் அல்ல: ப. சிதம்பரம் Posted: 15 Oct 2014 12:13 PM PDT நாட்டின் பணவீக்கம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்ததற்கு, சர்வதேச அளவில் பண்டங்களின் விலை குறைந்ததே காரணம் என்றும், மோடி அரசின் செயல்பாடு இதற்குக் காரணம் அல்ல என்றும் மத்திய முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் தெரிவித்தார். |
| தூய்மைத் திட்டம்: மோடியை பின்பற்றவில்லை- கோகோய் Posted: 15 Oct 2014 12:12 PM PDT "பிரதமர் மோடி அறிவித்த "தூய்மை இந்தியா' திட்டத்தை நான் பின்பற்றவில்லை. மாறாக, எனது பள்ளிப் பருவத்தில் இருந்தே, நான் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறேன்' என்று அஸ்ஸாம் மாநில முதல்வர் தருண் கோகோய் தெரிவித்தார். |
| எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல்: பதிலடி கொடுத்தது இந்தியா Posted: 15 Oct 2014 12:11 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் படையினர் அத்துமீறி புதன்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். |
| அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்டப்படும்: விஎச்பி Posted: 15 Oct 2014 12:10 PM PDT அயோத்தியில் வெகுவிரைவில் ராமர் கோயில் கட்டப்படும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீண் தொகாடியா கூறினார். |
| உத்தரகண்ட் ஆளுநரை பதவி விலகக் கூறியது உண்மைதான்: மத்திய உள்துறைச் செயலர் ஒப்புதல் Posted: 15 Oct 2014 12:09 PM PDT உத்தரகண்ட் ஆளுநர் அஜீஸ் குரேஷியை பதவி விலகக் கூறியது உண்மைதான் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய உள்துறைச் செயலர் அனில் கோஸ்வாமி ஒப்புக் கொண்டுள்ளார். |
| இரட்டைக் கொலை: அமெரிக்காவில் இந்தியருக்கு மரண தண்டனை Posted: 15 Oct 2014 11:53 AM PDT அமெரிக்காவில் பத்து மாதக் குழந்தையையும், அதன் பாட்டியையும் கொலை செய்த குற்றச்சாட்டில், இந்தியர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. |
| நேபாளத்தில் பனிச் சரிவு: இந்தியர் உள்பட 12 பேர் சாவு Posted: 15 Oct 2014 11:52 AM PDT நேபாளத்தின் வடக்குப் பகுதியிலுள்ள மலை ஒன்றில் ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கி, இந்தியர் உள்பட 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். |
| கருமுட்டை சேகரிப்பு: பெண் ஊழியர்களுக்கு ஆப்பிள், ஃபேஸ்புக் நிறுவனங்கள் உதவித் தொகை Posted: 15 Oct 2014 11:51 AM PDT தகவல் தொழில்நுட்பத்துறையின் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள், ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் பெண் ஊழியர்கள் தங்கள் கருமுட்டைகளை சேகரித்து வைத்துக்கொள்வதற்கு உதவித் தொகை வழங்க முன்வந்துள்ளன. |
| உலகின் மிக உயரமான பார்வையாளர் மாடம்: புர்ஜ் கலீஃபா மற்றொரு கின்னஸ் சாதனை Posted: 15 Oct 2014 11:48 AM PDT உலகிலேயே மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவில், பொதுமக்கள் பார்வையாளர் மாடம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டதையடுத்து, "மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிக உயர்ந்த பார்வையாளர் மாடம்' என்ற பெருமையைப் பெற்றுள்ளது. |
| ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்: நீதிபதிகள், ஆட்சியர் ஆய்வு Posted: 15 Oct 2014 11:48 AM PDT திருவள்ளூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகக் கட்டடப் பணிகளை மாவட்ட ஆட்சியர், மாவட்ட நீதிபதிகள் ஆகியோர் புதன்கிழமை ஆய்வு செய்தனர். |
| போந்தவாக்கம் கோயிலில் அதிமுகவினர் சிறப்பு அபிஷேகம் Posted: 15 Oct 2014 11:48 AM PDT ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி, பூண்டி ஒன்றிய அதிமுகவினர் போந்தவாக்கம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேகம் செய்தனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |