Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பெங்களூரு சிறை வாசலில் தினமும் 4 தமிழக மந்திரிகள் முகாம்: தொண்டர்களுடன் குழுமியிருக்க அ.தி.மு.க., மேலிடம் உத்தரவு

Posted:

'பெங்களூருக்கு வர வேண்டாம்' என, தமிழக அமைச்சர்கள், ஆளுங்கட்சியினருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை திடீரென்று விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. தினமும், நான்கு அமைச்சர்கள், அவர்களது மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம் முன் ஆஜராக வேண்டும் என, புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி நேற்று, அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர் ஆகியோர் பெங்களூரு சென்றனர். இந்த அமைச்சர்களின் மாவட்டங்களைச் சேர்ந்த, எம்.பி.,க் கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செய லர் மற்றும் ...

ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி: டீசல் விலை குறைப்பு இன்று அறிவிப்பு?

Posted:

சிங்கப்பூர்: ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனாவில் எண்ணெய் தேவை குறைந்ததால், ஆசிய சந்தையில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரப்படி, இந்தியாவில், பெட்ரோல் விலை நேற்று குறைக்கப்பட்டது. டீசல் விலை இன்று குறைக்கப்படலாம். வரும் நவம்பர் மாதத்தில் சப்ளை செய்யப்பட வேண்டிய, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில், நேற்று, 65 சென்ட் குறைந்து, 85.09 அமெரிக்க டாலராக இருந்தது. அது போல, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, 74 சென்ட் குறைந்து, 88.15 ஆக இருந்தது; இது, 2010ம் ஆண்டு மத்தியில் இருந்த விலை நிலவரத்தை விட மிகக் ...

அன்று ஜெ.,யை விளாசியவர் இப்போது அவருக்காக வாதாடுகிறார்: டில்லியில் அ.தி.மு.க.,வினரின் பலே சொதப்பல்

Posted:

வழக்கறிஞரை தேர்வு செய்வது முதல், தலைமை நீதிபதியை அணுகி அவரிடம் கோரிக்கை வைப்பது உட்பட, அனைத்து விவகாரங்களிலும், போதிய திட்டமிடல் இல்லாமல், அ.தி.மு.க.,வினர் செயல்பட்டுள்ளதால், ஜெயலலிதாவை ஜாமினில் கொண்டு வருவதில், பெரும் இழுபறி ஏற்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு ஜாமின் கோரி, கடந்த, 9ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட போது, வழக்கறிஞர் யார் என்பதை முடிவு செய்வதில், பெரும் குழப்பம் நீடித்தது.பேச்சுவார்த்தை:அதனால், அன்றைய தினம் வீணானது. அத்துடன், கர்நாடகா ...

மகாராஷ்டிராவில் 165 இடங்களை பா.ஜ., பிடிக்க மோடி இலக்கு: மாற்றம் ஏற்பட்டால் கூட்டணி ஆட்சிக்கும் தயார்

Posted:

மும்பை: மகாராஷ்டிராவில், இன்று நடைபெறும் சட்டசபைத் தேர்தலில், 165 இடங்களை பா.ஜ., பிடிக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்து உள்ளார். அந்த அளவு வெற்றியை, பா.ஜ., பெறாவிட்டால், தேர்தல் முடிவுகள் வெளியான பின், கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிப்பது குறித்து பரிசீலிக்கப்படலாம் என, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.20 ஆண்டுகளாக...:மகாராஷ்டிராவில் உள்ள, 288 சட்டசபைத் தொகுதிகளுக்கும், அரியானாவில், 90 சட்டசபைத் தொகுதிகளுக்கும், இன்று தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் ...

ஹுட் ஹுட் புயலால் ரூ.1 லட்சம் கோடிக்கு சேதம்: தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு நாயுடு எச்சரிக்கை

Posted:

விசாகபட்டினம்:ஆந்திராவின் விசாகப்பட்டினம் நகரில், ஹுட் ஹுட் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்ய, அம்மாநில அரசு திணறி வருகிறது. அதேநேரத்தில், புயலால் ஏற்பட்ட சேதம், 25 ஆயிரம் கோடி ரூபாய் முதல், ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கலாம் என, கூறப்படுகிறது.வங்கக் கடலில், சமீபத்தில் உருவான ஹுட் ஹுட் புயல், கடந்த ஞாயிறன்று, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கரையை கடந்தது.அப்போது, விசாகப்பட்டினம் நகரம் உட்பட, ஆந்திரா மற்றும் ஒடிசாவின் பல மாவட்டங்களில், கடும் சூறாவளி காற்று வீசியதோடு, கனமழையும் பெய்தது. அதில், விசாகப்பட்டினம் நகரம், சூறாவளியால் ...

ஜெ.,க்கு எதிரான தீர்ப்பை தொடர்ந்து சொத்துகள் சேதம்: இழப்பீடு வசூலிக்க கோரிய மனு மீது உத்தரவு

Posted:

சென்னை:'பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததால், அ.தி.மு.க., கட்சியிடம் இருந்து, இழப்பீடு வசூலிக்கக் கோரிய மனுவை, ஒரு மாதத்தில் பைசல் செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த, பத்திரிகையாளர் அன்பழகன், தாக்கல் செய்த மனு:குற்ற வழக்கில், ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், உத்தரவிட்டது. தீர்ப்பு வெளியான அன்று காலையில் இருந்து, தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியது; பஸ்கள் இயங்கவில்லை.அ.தி.மு.க.,வினர் சாலை மறியல், தர்ணா, வன்முறை உள்ளிட்டவைகளில் ஈடுபட்டனர்; அரசு ...

சட்டசபைக்கு பா.ஜ.,வின் 'வி' பார்முலா

Posted:

வரும் சட்டசபைத் தேர்தலில், தமிழக பா.ஜ, தலைமையில், 'மெகா' கூட்டணி அமைத்து, ஆட்சி அமைக்க, பா.ஜ., மேலிடம் காய் நகர்த்த துவங்கி உள்ளது. தே.மு.தி.க.,வையும், கேப்டன், 'டிவி'யையும் நடத்த, பொருளாதார சிரமத்தில் சிக்கியிருப்பதால், பா.ஜ.,வுடன் தே.மு.தி.க.,வை இணைக்கும் பேச்சுவார்த்தை துவங்கி உள்ளது.ஓட்டு வங்கி குறைவு:அந்த பேச்சுவார்த்தை வெற்றி அடைந்தால், தமிழக பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தையும், நடிகர் விஜய் தலைமையில் இயங்கும் மக்கள் இயக்கத்தை, தமிழக பா.ஜ.,வுக்கு ஆதரவாகவும் செயல்பட வைத்து, சட்டசபைத் தேர்தலில், 'வி' பார்முலா அரங்கேற்ற காரியங்கள் ...

ஸ்ரீரங்கம் தொகுதியில் 6 மாதத்திற்குள் தேர்தல்

Posted:

சென்னை: ''ஸ்ரீரங்கம் தொகுதி சூழல் குறித்த தகவலை, தேர்தல் கமிஷனுக்கு தெரியப்படுத்தி விட்டோம்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவிற்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், அவர் முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார்.எனவே, ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ள விவரத்தை, சட்டசபை செயலர் அறிவிக்க வேண்டும். ஆனால், இன்னமும் அறிவிப்பு வெளியாகவில்லை.இது குறித்து, பிரவீன்குமார் கூறியதாவது:எந்த தொகுதி காலியானாலும், ஆறு மாதங்களுக்குள், தேர்தல் நடத்த வேண்டும்.சுப்ரீம் கோர்ட் ...

ரேஷன் வினியோக விவகாரம்: மத்திய அரசின் உத்தரவுக்கு தமிழகம் செவி சாய்க்குமா?

Posted:

வருமான வரி செலுத்துவோருக்கு, ரேஷன் பொருட்கள் வழங்குவதை நிறுத்தும் திட்டத்தை, தமிழக அரசு, முனைப்புடன் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.தமிழகத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில், அரிசி இலவசமாகவும்; சர்க்கரை, பாமாயில், பருப்பு வகைகள் உள்ளிட்டவை குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன. கடந்த செப்டம்பர் நிலவரப்படி, அனைத்து பொருட்களும் பெற தகுதி உடைய கார்டுகள், 1.86 கோடி; சர்க்கரை, 10.70 லட்சம்; காவலர், 65 ஆயிரம்; எந்த பொருளும் வேண்டாதது, 65 ஆயிரம் என, மொத்தம், 1.98 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன.ஏழை மக்கள் பயன் பெற, ரேஷனில், குறைந்த விலையில், ...

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வில் தமிழகத்தில் 600 பேர் தேர்ச்சி

Posted:

சென்னை : சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவை, யு.பி.எஸ்.சி., (மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்), நேற்று வெளியிட்டது. தமிழகத்தில், 600க்கும் மேற்பட்டோர், தேர்ச்சி பெற்றனர்.நாடு முழுவதும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட உயர் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட், 24ம் தேதி நடந்தது. இதை, நாடு முழுவதும், 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்.இதன் முடிவை, யு.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது.தேர்வில், 15 ஆயிரம் பேர், முதன்மை தேர்வுக்கு, தேர்வு பெற்றுள்ளனர். தமிழகத்தில், 2,000த்திற்கும் மேற்பட்டோர், தேர்வை எழுதினர். இதில், 600க்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றிருப்பதாக, துறை ...

ஊரக வேலை திட்டத்தை பலவீனப்படுத்திடாதீங்க: பிரதமர் மோடிக்கு பொருளாதார நிபுணர்கள் கடிதம்

Posted:

புதுடில்லி: 'முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் அமல்படுத்தப்பட்ட, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை பலவீனப்படுத்தி விடாதீர்கள்' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னணி பொருளாதார நிபுணர்கள், 28 பேர் கடிதம் எழுதி உள்ளனர்.இதுதொடர்பாக, அவர்கள் எழுதி உள்ள கடித விவரம்:தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை பலவீனப்படுத்த, மத்திய அரசு முற்படுவதாக அதிர்ச்சித் தகவல்கள் வருகின்றன. அத்துடன், இந்தத் திட்டம் தொடர்பான சட்டத்திலும், சில கட்டுப்பாடுகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிகிறது. இந்த ஊரக வேலை திட்டத்தால், ...

பொது சொத்துகளை தன் சொத்தாக கருதும் அரசியல்வாதிகள்: ஐகோர்ட் நீதிபதி அதிருப்தி

Posted:

பெங்களூரு: 'ஹலசூரு சோமேஸ்வரா கோவில் டெவலப்மென்ட் போர்டு உறுப்பினர்கள் நியமனத்தில், முதல்வரும், தகவல் துறை அமைச்சரும் தலையிட்டதை, அனுமதிக்க முடியாது' என, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி வேணுகோபால கவுடா தெரிவித்துள்ளார்.பெங்களூரு, ஹலசூரு சோமேஸ்வரா கோவில், வரலாற்று சிறப்பு மிக்கது. இக்கோவில், கங்கா அரசர்களால் கட்டப்பட்டது. கோவில் அருகில் இருந்த, 1,200 ஆண்டு பழமை வாய்ந்த தெப்பக்குளம், அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டது.ஒப்புதல்:இத்தகைய பெருமை வாய்ந்த இக்கோவில், டெவலப்மென்ட் போர்டு உறுப்பினர்களாக, ஏற்கனவே இருந்தவர்களை அறநிலையத் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™