Tamil News | Online Tamil News |
- ஜெ., ஜாமின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் 17ம் தேதி விசாரணை: பிரபல வழக்கறிஞர் பாலிநாரிமன் ஆஜராகிறார்
- சிறையில் வாடும் மீனவர்களை பற்றி ஒரு போதும் கவலைப்படாத காங்.,
- ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு குற்றப்பத்திரிகை: விசாரணைக்கு ஏற்கப்படுமா? 29ல் தீர்ப்பு
- ஒரு புறம் கொண்டாட்டம்; மறுபுறம் சோகம்: சத்யார்த்தியின் சொந்த ஊரில் நடப்பது என்ன?
- மோடியின் கிராமங்கள் தத்தெடுப்பு திட்டம் அரசியல் கடந்து தமிழகத்தில் பரவலான வரவேற்பு
- பால் விலை 80 ரூபாய்: விசாகப்பட்டினத்தில் அத்தியாவசிய பொருட்கள் விலை கடும் உயர்வு
- மவுலிவாக்கம் கட்டட விபத்தில் 61 பேர் பலி: அவசரகதியில் இறுதி அறிக்கை தாக்கலா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி
- பொது துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ்: முதல்வர் அறிவிப்பு
- பள்ளி சிறுவர்கள் காதலிப்பது போன்ற சினிமாக்கள்: ஐகோர்ட் வேதனை
- நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கு: முன்னாள் செயலர் ஆஜராக உத்தரவு
| ஜெ., ஜாமின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் 17ம் தேதி விசாரணை: பிரபல வழக்கறிஞர் பாலிநாரிமன் ஆஜராகிறார் Posted: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, ஜாமின் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, வரும் 17ம் தேதி, விசாரணைக்கு வருகிறது. அவரது சார்பில், பிரபல வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆஜராகிறார்.சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கும், அவருடன் தண்டனை பெற்ற சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசிக்கும், ஜாமின் வழங்க, கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை ஜெயலலிதாவும், வெள்ளிக்கிழமை மற்ற மூன்று பேரும், ஜாமின் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த ... |
| சிறையில் வாடும் மீனவர்களை பற்றி ஒரு போதும் கவலைப்படாத காங்., Posted: பால்கர் : ''என்னுடைய, 60 நாள் ஆட்சி குறித்து கணக்கு கேட்கும் காங்கிரசார், பாகிஸ்தான் சிறைகளில் வாடும், இந்திய மீனவர்களை விடுவிப்பது குறித்து, ஒரு போதும் கவலைப்பட்டதில்லை,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார். |
| ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு குற்றப்பத்திரிகை: விசாரணைக்கு ஏற்கப்படுமா? 29ல் தீர்ப்பு Posted: புதுடில்லி : 'ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில், சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்பது குறித்து, வரும் 29ம் தேதி, உத்தரவு பிறப்பிக்கப்படும்' என, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.ஏர்செல் நிறுவனத்தை, மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கும்படி, முன்னர், மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி, நிர்பந்தம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.இது தொடர்பாக, விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், தயாநிதி, அவரின் சகோதரர் கலாநிதி உட்பட, ஆறு பேர் மீது, டில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், ஆக., 29ல், ... |
| ஒரு புறம் கொண்டாட்டம்; மறுபுறம் சோகம்: சத்யார்த்தியின் சொந்த ஊரில் நடப்பது என்ன? Posted: விதிஷா: குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக குரல் கொடுத்து, ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்வில் விளக்கேற்றி வைத்த, ம.பி.,யைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்திக்கு, இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.இந்த மகிழ்ச்சியை நாடே கொண்டாடி வரும் நிலையில், கைலாஷின் சொந்த ஊரான விதிஷாவில், இன்னும் ஏராளமான குழந்தை தொழிலாளர்கள், தங்கள் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கும் தகவல், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. |
| மோடியின் கிராமங்கள் தத்தெடுப்பு திட்டம் அரசியல் கடந்து தமிழகத்தில் பரவலான வரவேற்பு Posted: லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள், 2019ம் ஆண்டு வரை, மூன்று கிராமங்களை தத்தெடுத்து, தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் தன்னிறைவு பெறச் செய்யும், பிரதமர் மோடியின் திட்டத்துக்கு, தமிழகத்தில், கட்சிகளைக் கடந்து வரவேற்பு கிடைத்துள்ளது.'நாட்டின் உயிர் நாடியான கிராமங்கள் முன்னேறுவதே, நாட்டின் முன்னேற்றம்' என, காந்தியடிகள் கூற்றை, மெய்படுத்தும் வகையில், பிரதமரின் இத்திட்டம் அமைந்துள்ளது என, புகழாரம் சூட்டுகின்றனர்.நடப்பு நிதியாண்டில் இருந்து, 2019 வரை, ஒரு லோக்சபா தொகுதிக்கு, மூன்று கிராமங்களை தத்தெடுத்து, தன்னிறைவு பெற்ற மாதிரி கிராமங்களாக உருவாக்க ... |
| பால் விலை 80 ரூபாய்: விசாகப்பட்டினத்தில் அத்தியாவசிய பொருட்கள் விலை கடும் உயர்வு Posted: புதுடில்லி: 'ஹுட் ஹுட்' புயல் தாக்கியதில், விசாகப்பட்டினம் நகரம் உட்பட, ஆந்திரா மற்றும் ஒடிசாவின் பல மாவட்டங்களில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்; மின் கம்பங்களும், தகவல் தொடர்பு சாதனங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.இந்த புயல் சேதம் காரணமாக, விசாகப்பட்டினத்தில், அத்தியாவசிப் பொருட்களின் விலையையும், வியாபாரிகள் கடுமையாக உயர்த்தி உள்ளனர். நேற்று ஒரு லிட்டர் பால் விலை, 60 முதல், 80 ரூபாய் வரை விற்கப்பட்டது. புயலால், 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், மதிப்பிடப்பட்டுள்ளது.வடக்கு அந்தமான் மற்றும் ... |
| Posted: சென்னை : 'சென்னை மவுலிவாக்கம் கட்டடம் இடிந்த சம்பவத்தில், புலன் விசாரணை முடிக்கப்பட்டு, அவசரகதியில், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதா' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. |
| பொது துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ்: முதல்வர் அறிவிப்பு Posted: சென்னை: 'தமிழக பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, தீபாவளி பண்டிகையையொட்டி, 20 சதவீத போனஸ் வழங்கப்படும்' என, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை:தமிழக அரசின், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், தீபாவளி பண்டிகையை, மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், கடந்த ஆண்டுகளில், போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கி, அவர்களை ஜெயலலிதா உற்சாகப்படுத்தினார். அவரது வழியில் செயல்படும், தமிழக அரசு, கடந்த ஆண்டை போல், 2013 - 14ம் ஆண்டிற்கும், போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க, முடிவு செய்துள்ளது.அவற்றின் ... |
| பள்ளி சிறுவர்கள் காதலிப்பது போன்ற சினிமாக்கள்: ஐகோர்ட் வேதனை Posted: மதுரை:''தர்மம், நற்செயல்கள், நாகரிகம், தேசப்பற்று, மனிதநேயம், உறவுகளின் மேன்மை, நீதி, நெறிகளை கற்பித்து நல்வழிப்படுத்தும் சினிமா எடுக்க வேண்டும்,'' என, மதுரை ஐகோர்ட் கிளை வலியுறுத்தி உள்ளது. |
| நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கு: முன்னாள் செயலர் ஆஜராக உத்தரவு Posted: புதுடில்லி: நிலக்கரி சுரங்க ஊழலில், வழக்கு ஒன்றை முடிப்பது தொடர்பாக, சி.பி.ஐ., தாக்கல் செய்த அறிக்கையை நிராகரித்த, டில்லி சிறப்பு நீதிமன்றம், நிலக்கரி துறை முன்னாள் செயலர் எச்.சி.குப்தா உட்பட, சிலர், வரும் 31ம் தேதி, ஆஜராக வேண்டும் என, உத்தரவிட்டு உள்ளது.நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்குகளை, உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில், சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.இவற்றில், ம.பி.,யை சேர்ந்த, 'கமால் ஸ்பான்ஞ் ஸ்டீல் அன்ட் பவர் லிமிடெட்' மற்றும் அதன் அதிகாரிகள், மத்திய நிலக்கரி துறை அமைச்சகத்தின், சில அதிகாரிகள் தொடர்பான வழக்கு ஒன்றை, போதிய ஆதாரங்கள் இல்லாததால், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 14,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |