Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஆந்திராவின் விசாகப்பட்டினம் நகரை ஹுட் ஹுட் புயல் தாக்கியது: கொட்டுது கனமழை; மின்சாரம், தகவல் தொடர்பு துண்டிப்பு

Posted:

விசாகப்பட்டினம்: பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த, 'ஹுட் ஹுட்' புயல், நேற்று காலை, 11:03 மணிக்கு, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு, 195 கி.மீ., வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. ஒடிசா மாநிலத்தையும் இந்த புயல் பதம் பார்த்தது. இரண்டு மாநிலங்களிலும் கோரத் தாண்டவம் ஆடிய இந்தப் புயலால், மின்சாரம், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது; ஐந்து பேர் உயிரிழந்தனர்.வடக்கு அந்தமான் மற்றும் மியான்மர் கடல் பகுதியில், சமீபத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அடுத்த சில நாட்களில், இது, புயலாக மாறியது. பின், தீவிர ...

பாக்., ராணுவத்தின் அத்துமீறல் தொடர்கிறது: 15 இடங்களில் தாக்குதல்; மூன்று பேர் காயம்

Posted:

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவத்தினர், நேற்று மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில், மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.இம்மாத துவக்கத்தில் இருந்தே, பாகிஸ்தான் ராணுவத்தினர், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச், கதுவா, ஜம்மு உள்ளிட்ட மாவட்டங்களில், எல்லையோர கிராமங்களை நோக்கி, தாக்குதல் நடத்தி வருகின்றனர். எச்சரிக்கை:இந்த தாக்குதலில், எட்டு பேர் உயிரிழந்தனர். எல்லையோர கிராமங்களில் வசித்த, ஆயிரக்கணக்கானோர், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவத்துக்கு, ...

மகா., அரியானா சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்வு: ஆட்சியை பிடிப்பதில் அரசியல் கட்சிகளிடையே கடும் போட்டி

Posted:

மும்பை: மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில், நாளை மறுநாள் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம், இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனால், அரசியல் கட்சித் தலைவர்கள், சூறாவளிப் பிரசாரத்தில்ஈடுபட்டுள்ளனர்.மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில், நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடக்கிறது. மகாராஷ்டிராவில், கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்., - தேசியவாத காங்., கூட்டணி இடையே பிளவு ஏற்பட்டதால், முதல்வர் பிருத்விராஜ் சவான், தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால், கூட்டணியை ...

கருணாநிதியை கைது செய்ய போலீஸ் மறுப்பு: முகாந்திரம் இல்லாததால் பின்வாங்கியது

Posted:

அ.தி.மு.க.,வினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கருணாநிதி மற்றும் ஸ்டாலின் மீது, போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை மீது, நடவடிக்கை எடுக்க போலீஸ் உயரதிகாரி மறுத்து விட்டார். அதனால், அவர் மீது, அ.தி.மு.க., தரப்பு கோபமாக உள்ளதாக தகவல் பரவி உள்ளது.சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பால், கடந்த 27ம் தேதி, ஜெயலலிதா கைதாகி சிறை சென்றதும், தமிழகம் முழுவதும் வன்முறைகள் வெடித்தன. கைகலப்பு:இதில், ஒரு நிகழ்வாக, அ.தி.மு.க.,வினர், தி.மு.க., தலைவர் கருணாநிதி இல்லம் சென்று கல் வீசினர். அப்போது, அங்கிருந்த தி.மு.க., தொண்டர்களுக்கும், அ.தி.மு.க.,வினருக்கும் கைகலப்பு ...

நான்கு கட்டமாகிறது காவிரி-வைகை இணைப்பு பணி? ஜெ., கைதுக்கு பின் பணிகளில் திடீர் சுணக்கம்

Posted:

காவிரி -வைகை ஆறுகள் இணைப்பு பணிகள், ஜெயலலிதா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்ட பின், சுணக்கம் கண்டுள்ளன.டெல்டா மாவட்டங்களின் பாசனம் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்வதில், காவிரி, பெரும்பங்கு வகிக்கிறது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களின் குடிநீர் தேவையையும், காவிரி நீர் பூர்த்தி செய்கிறது.2 ஆண்டுகளுக்கு முன்...:காவிரியில் சில நேரங்களில், குறிப்பிட்ட அளவைவிட கூடுதல் தண்ணீர் கிடைக்கிறது. மேட்டூர் அணையில் தேக்கி வைத்த பிறகு, மீதமுள்ள தண்ணீர், கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலுக்கு அனுப்பப்படுகிறது.காவிரியில் கிடைக்கும், ...

முறையற்ற மின் தடையால் மக்கள் கடும் அவதி:பொறுப்பற்ற பதில் அளிப்பதாக குற்றச்சாட்டு

Posted:

மின் பராமரிப்பு பணி நடக்கும் இடங்களில், முறையற்ற மின் தடை செய்யப்படுவதால், பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, 400; 230; 110; 66; 33 கிலோ வோல்ட் என, மொத்தம், 1,380 துணை மின் நிலையங்கள் உள்ளன.பராமரிப்பு பணி:தாழ்வழுத்த மின் பாதை, 5.85 லட்சம் மின் சுற்று கி.மீ., - உயரழுத்த மின் பாதை, 1.90 லட்சம் மின் சுற்று கி.மீ., - மின் வினியோக டிரான்ஸ்பார்மர், 2.25 லட்சம் கி.மீ., ஆகியவை உள்ளன.மின் வாரியம் சார்பில், துணைமின் நிலையம், டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி ஆகியவற்றில், அவ்வப்போது, பழுது ஏற்படாமல் இருக்க, பராமரிப்பு பணி ...

பொதுப்பணி துறைக்கு உலக வங்கி கைகொடுக்குமா?ஆசிய வங்கி கைவிரிப்பால் அதிகாரிகள் சந்தேகம்

Posted:

டெல்டா மாவட்டங்களின் பாசன மேம்பாட்டு திட்டங்களுக்கு கடனுதவி வழங்க, ஆசிய வளர்ச்சி வங்கி கைவிரித்துள்ள நிலையில், மற்ற திட்டங்களுக்கு, உலக வங்கியாவது கைகொடுக்குமா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.பொதுப்பணித் துறையின் அங்கமான, நீர்வள ஆதாரத் துறை மூலம் அணைகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள், கண்மாய்கள் மற்றும் பாசன வழித்தடங்கள் பராமரிக்கப்படுகின்றன.நீர்வள ஆதாரத் துறை மூலம் மேற்கொள்ள, ஆண்டுதோறும் அரசால் பல திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. இந்த திட்டங்களுக்கு, மாநில அரசின் நிதி போதுமான அளவில் இல்லை. எனவே, மத்திய அரசின் நிதியுதவி மட்டு மின்றி, 'நபார்டு' வங்கி, ...

துணை கலெக்டரின் 54 கோடி ரூபாய் சொத்து பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி

Posted:

புதுடில்லி: சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரியின், 54 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, அமலாக்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மகாராஷ்டிராவில், துணை கலெக்டராக பணியாற்றிய, ஐ.ஏ.எஸ்., அதிகாரி நிதிஷ் தாக்கூர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக, வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தியதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியானதால், 2012ல் தாக்கூர் கைது செய்யப்பட்டார். உடன், அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.தாக்கூரின் சொத்துகள் குறித்து ...

ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்

Posted:

பெங்களூரு: ''சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பூரண உடல் நலத்துடன், முழு மன தைரியத்துடனும் உள்ளார்,'' என, கர்நாடக மாநில சிறைத்துறை டி.ஐ.ஜி., பி.எம்.ஜெய்சிம்மா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து டி.ஐ.ஜி., ஜெய்சிம்மா கூறியதாவது:சிறையில் உள்ள ஜெயலலிதா பூரண உடல் நலத்துடன் உள்ளார். அவர் இதுவரை, அ.தி.மு.க., நிர்வாகிகளையோ, அக்கட்சியை சேர்ந்த எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களையோ சந்திக்கவில்லை. சிறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அதனால், எங்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை.அவர், மனம் கலங்கவில்லை, ...

ஏர் இந்தியா விவகாரம்: சுப்ரீம் கோர்ட் கண்டனம்

Posted:

புதுடில்லி:நிதிப் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தனியார் விமான சேவை நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மத்திய அரசின் போக்கிற்கு, சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்து உள்ளது.இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், விக்ரம்ஜித் சென் மற்றும் குரியன் ஜோசப் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச்கூறியதாவது:மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும், ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் ஏற்கனவே கடும் நிதித் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில், முக்கிய வழித் தடங்களுக்கான விமான சேவைகள் ...

சுனந்தாவின் சொத்தை கையகப்படுத்தவில்லை: சசி தரூர்

Posted:

கொச்சி:என் மனைவி சுனந்தாவின் சொத்துகள் எதையும் நான் கையகப்படுத்தவில்லை. இது தொடர்பாக என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை' என, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர், கேரள ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளார்.மர்ம மரணம்:காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த ஜனவரி மாதம், டில்லியில் உள்ள ஒரு ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.இந்த மரணம் தொடர்பாக, பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 'கடந்த லோக்சபா தேர்தலில், திருவனந்தபுரம் தொகுதியில் சசி தரூர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™