Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இரட்டை மலை சீனிவாசன்

Posted: 12 Oct 2014 03:02 PM PDT

சமூக சீர்திருத்த வாதி, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்து, பறையன் என்ற திங்கள் இதழையும் நடத்தியவர், இந்திய அரசியல்வாதி, தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமைகளுள் ஒருவர் என பன்முகம் கொண்ட சீர்திருத்த வாதி இரட்டைமலை சீனிவாசன். பிறப்பு: அன்றைய செங்கல்பட்டு மாவட்டமும் இன்றைய காஞ்சிபுரம் மாவட்டமான மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம் எனும் கிராமத்தில் சடையன் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். தெய்வபக்தி நிரைந்த குடும்பத்தில் ...

நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது!

Posted: 12 Oct 2014 02:53 PM PDT

இந்த ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்திக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த 17 வயதுப் பெண் மலாலா யூசஃப்சாய்க்குமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவும் வேளையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது தற்செயல் நிகழ்வா அல்லது திட்டமிட்ட செயலா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் இந்தியத் துணைக் கண்டத்தை ஒருங்கிணைத்திருக்கும் நோபல் தேர்வுக் குழுவுக்கு நன்றி! "சமாதானம் என்பது தீவிரவாதத்திற்கும் யுத்தத்திற்கும் முற்றுப்புள்ளி ...

ஜெ.வை பார்க்கப் போகும் அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- ராமதாஸ்

Posted: 12 Oct 2014 02:05 PM PDT

ஜெ.வை அடைத்துள்ள ஜெயிலுக்குப் போகும் அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- ராமதாஸ் சென்னை: ஜெயலலிதா அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்குப் போகும் அமைச்சர்களை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மக்கள் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட தமிழக அமைச்சர்கள் அனைவரும் அதைத் தவிர மற்ற பணிகளைத் தான் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 29 ஆம் தேதி புதிதாக பதவியேற்ற ...

காதலிக்கும்போது கிடைத்த ஆனந்தம், திருமணத்துக்குப் பிறகு ஏன் கிடைக்கவில்லை

Posted: 12 Oct 2014 02:02 PM PDT

கேள்வி: ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக நேசித்தேன். நாங்கள் காதலித்த நாட்கள் மிக ரம்மியமானவை. அவளையே என் மனைவி ஆக்கிக் கொண்டேன். ஆனால், அந்தப் பழைய காதல் காற்றில் கரைந்தது போல், காணாமல் போய்விட்டது. அப்படியானால், காதல் என்பது உடல் இச்சையை அடிப்படையாகக் கொண்டதுதானா? இச்சை தீர்ந்ததால், காதலும் தீர்ந்து போய்விட்டதா? சத்குரு: ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் உடல் ரீதியான கவர்ச்சி இருப்பது இயற்கையின் நியதி. இருவேறுவிதமான உடலமைப்புகள் இருப்பதுதான் அந்த வசீகரத்தின் அடிப்படை. 'உடலளவில் என் இணை என்னிலிருந்து ...

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்!

Posted: 12 Oct 2014 01:58 PM PDT

தகவல் அறியும் உரிமை பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம் என போற்றப்படுவது 2005 அக்.,12ல் அமலுக்கு வந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம். இச்சட்டம் வந்து 10வது ஆண்டு நேற்று நிறைவு பெற்றது. அரசு மற்றும் அரசு துறைகளின் செயல்பாட்டில் வெளிப்படை தன்மையை உறுதி செய்வதற்காக, மலிந்து கிடக்கும் ஊழலை கட்டுப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தை 9 ஆண்டுகளில் பலர் பயன்படுத்தி பலனடைந்துள்ளனர்.மத்திய அரசு துறைகளுக்கென நடுவராக செயல்பட மத்திய தகவல் ஆணையம். மாநில அரசு துறைகளுக்கென நடுவராக செயல்பட மாநில தகவல் ...

படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :) - 5000/- ருபாய் நோட்டு

Posted: 12 Oct 2014 12:53 PM PDT



படம்பார்த்து சிரியுங்கள் புன்னகை

ரசித்தவை!

Posted: 12 Oct 2014 12:50 PM PDT

'greenwich ' trip போட்டோக்கள் !

Posted: 12 Oct 2014 12:40 PM PDT

'greenwich ' trip போட்டோக்கள்   ! 'கிரீன்விச்  'இல்  தான் உலகத்தை இரண்டாக வகுக்கும் 'கோடு' இருக்கு ......நாம் சின்ன வயதில் படித்திருப்போமே அக்ஷய ரேகை .....தீர்க்க ரேகை என்று அது தான் இது..............அங்கு தான் போய் வந்தார்கள் கிருஷ்ணாவும் ஆர்த்தியும் நேற்று....................சில போடோக்கள் உங்கள் பார்வைக்கு இங்கே இப்படி போட்டோ எடுப்பது சம்பிரதாயம் அங்கு...............அதாவது நட்ட நடு உலகில் நிற்பதாக அர்த்தம்..................... '0' point

இட்லி வகைகள் - கேழ்வரகு உளுந்து அவல் இட்லி -Photo வுடன்

Posted: 12 Oct 2014 12:26 PM PDT

தோசைக்கு அடுத்த படி நான் விரும்பும் உணவு இட்லி. மேலும் இது பெரும்பாலான தமிழர்களின் காலை உணவு. இது இல்லாமல் நாம்மால் இருக்க முடியாது இல்லயா? எல்லோருக்கும் தெரியும் என்றாலும் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். மேலும் பல வகை இட்லி களையும் பார்க்கலாம் நண்பர்களே ! இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மையாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது. அதற்கான அளவு: புழுங்கலரிசி - 2 கப், முழு உளுத்தம் பருப்பு - அரை கப், உப்பு - ருசிக்கேற்ப. அரிசியையும் பருப்பையும் தனித்தனியே ...

உலகச் செய்திகள்!

Posted: 12 Oct 2014 11:41 AM PDT

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

வரலாற்றில் இன்று - அக்டோபர்

Posted: 12 Oct 2014 11:35 AM PDT

வரலாற்றில் இன்று - அக்டோபர்'1 கிமு 331 - மகா அலெக்சாண்டர் பேர்சியாவின் மூன்றாம் டாரியஸ் மன்னனை போரில் வென்றான். 959 - முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். 1787 - "சுவோரொவ்" தலைமையில் ரஷ்யர்கள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தனர். 1788 - நியூவென் ஹியூ வியட்நாமின் மன்னராகத் தன்னை அறிவித்தார். 1795 - பிரான்ஸ் பெல்ஜியத்தைப் பிடித்தது. 1799 - புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டான். 1800 - ஸ்பெயின் ...

ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மதுரையில் 10,000 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

Posted: 12 Oct 2014 11:13 AM PDT

ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மதுரையில் நேற்று அதிமுக சார்பில் 10 ஆயிரம் பேர் பால்குட ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டியும், அவர் பூரண நலம் பெற்று மக்கள் பணியாற்ற வேண்டியும் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நேற்று பெண்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மதுரை கல்பாலம் அருகில் வைகை ஆற்றில் விசேஷ பூஜை செய்யப்பட்டு பால்குட ஊர்வலம் தொடங்கியது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டனர். இதை தொடர்ந்து ...

குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது.

Posted: 12 Oct 2014 10:58 AM PDT

வெள்ளிக்கிழமை காலை. அறிவொளி நகர் பேருந்து நிறுத்தம். அருகமை அம்மன் கோயில் காற்றலைகளில் கானமழை பொழிந்துகொண்டிருந்தது. மாணவர்களும் மாதச் சம்பளக்காரர்களும் சில மாடுகளுமாகப் பேருந்துக்காகக் காத்திருந்தோம். எல்.ஆர் ஈஸ்வரியையும் மீறிய வலுத்த பெண் குரல் ஒன்று பச்சை, மஞ்சள், ஊதா நிற வார்த்தைகளில் திருப்பள்ளியெழுச்சி பாடத் தொடங்கியது. குரல் வந்த திசையில் ஒரு பொறுப் புள்ள 'குடி'மகனுக்கு இடியுடன் கூடிய மழைபோல வசையுடன் கூடிய அடிகள் அன்னாரது இல்லத்தரசியால் வழங்கப் பட்டுக்கொண்டிருந்தன. வசைகளின் தலைநகராம் ...

குழந்தைகள் வீட்டில் கற்கும் பாடம்!!!

Posted: 12 Oct 2014 10:31 AM PDT

குடும்ப வன்முறை குறித்த சக்திவாய்ந்த நான்கு நிமிடக் குறும்படம் ஒன்றை It's time to act on Our Watch என்ற பெயரில் செப்டம்பர் 4-ம் தேதி வெளியிட்டுள்ளது. பார்ப்பதற்கு பால்மனம் மாறாதவர்களாகத் தோன்றும் ஏழெட்டு வயதுக் குழந்தைகளிடம், "நீங்கள் பெரியவர்களான பிறகு என்ன செய்வீர்கள்?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் அதிர்ச்சிகரமான பதிலைச் சொல்லியிருக்கிறார்கள். "என் மனைவி என்னைப் புண்படுத்தினால் அவளை அடிப்பேன்" என்று ஒரு சிறுவன் சொல்கிறான். இன்னொரு சிறுவனோ, "என் மனைவியை வேறு ஆடவர்களுடன் பழகாதே" என்பேன் ...

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன

Posted: 12 Oct 2014 10:29 AM PDT

dedicated to நம்ம புதுமாப்பிள்ளை சிவா அண்ணா கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...? 1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும். 2. மனது புண்படும்படி பேசக்கூடாது. 3. கோபப்படக்கூடாது . 4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது. 5. பலர் முன் திட்டக்கூடாது. 6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது . 7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். 8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். 9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும். 10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும். ...

ஒரு ராஜ பேனாவின் கதை!

Posted: 12 Oct 2014 10:22 AM PDT

ஒரு ராஜ பேனாவின் கதை! பாக்கியம் ராமசாமி (கவித்துவமான தலைப்பு மாதிரி இருக்கிறதல்லவா? சூட்சுமமாக எதையோ மறைமுக மாக உணர்த்துவது போல் தோன்றுகிறதல்லவா? ஏமாந்து விடாதீர்கள். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அசல் பேனா பற்றிய கதைதான் இது!) எ னது பேனாக்களுக்குள் கடந்த சில நாட்களாகவே ஒரு பனிப் போர், பொறாமைப் போராட்டம் நடந்துவருவதை என்னால் ஊகிக்க முடிந்தது. சில கூட்டுக் குடும்ப வீடுகளில் ஓரகத்திகளுக்குள் எப்போதுமே ஏதாவது போட்டி பொறாமை உணர்ச்சிகள் இருந்து வரும். ஆனால், அவர்கள் அதை வெளிப்படையாகக் ...

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள் - குதிரை வாலி உப்புமா + photo

Posted: 12 Oct 2014 10:09 AM PDT

இந்த ஐடியா எனக்கு நம் புது தோழி ஹேமாவால் வந்தது . அவங்க வேண்டு கோளுக்கு இணங்க துவங்குகிறேன். இங்கு எனக்கு தெரிந்த உணவு வகைகளை போடுகிறேன், நீங்களும்  உங்களுக்கு தெரிந்த நம் தமிழரின்  பழைய உணவுவகைகளை இங்கு பகிருங்கள் குறிப்பு :சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு என்பன சிறுதானியங்களாகும். இச்சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் ...

உணவுகளின் போட்டோகள் ! - Krishna appa vin Food photos :)

Posted: 12 Oct 2014 10:05 AM PDT

நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை     குறிப்பு: இன்று ( 31-7-2014) முதல் சிலநாட்களுக்கு என்னுடைய 'லேட்டஸ்ட் சிஷ்யை  & மாட்டுப்பெண் - ஆர்த்தி' லண்டன் இல் சமைத்தபோது எடுத்த போட்டோக்கள் இங்கு 2 வருடமாக  என்னுடன் இருந்து, பார்த்து கற்றுக் கொண்டவைகளை ...

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Posted: 12 Oct 2014 09:54 AM PDT

மற்றும் ஒரு அனுபவ கட்டுரை எழுத போகிறேன் இது ரொம்ப வித்தியாசமான அனுபவம் .... நான் இப்படி எழுதுவது  நிறைய பேருக்கு ஆச்சர்யமாக இருக்கும்.... ஆனால் இது உண்மை நான் எவ்வளவோ 'தளிகைகளை' (food items ) அநாயசமாக செய்வேன். ஆனால், எல்லோரும் left and right easy ஆக  செய்யும் இட்லிக்கும்  எனக்கும் போன ஜன்மத்துப்பகை ஆமாம் ... எனக்கு  'மெத் மெத்' இட்லி செய்ய வராது... உங்களுக்கு புரியும்படி  சொல்லணும் என்றால்....." நான் செய்த இட்லி யை எடுத்து அடிச்சா நாயி செத்துப்போகும்" அவ்வளவுதான்.     ஆனாலும் ...

சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - கேழ்வரகு உளுந்து அவல் தோசை ' + photo

Posted: 12 Oct 2014 09:53 AM PDT

தோழி சசிகலாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி சர்க்கரை நோயாளிகள, BP மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் ஆகிவிட்டால,டாக்டர் எதையும் சாப்பிடக் கூடாது என்று சொல்லிவிடுகிறார் ...... நம்ப இருக்கும் நேரத்தில், அவருக்கென தனியாய் சமைப்பதும் கஷ்டம், அவருக்கு த்தரும் பத்திய சாப்பாட்டை குழந்தைகளுக்கு தருவதும் கஷ்டம் சமையல் செய்வதே பெரும் பாடாக ஆகிவிடுகிறது அல்லவா? அதிலிருந்து கொஞ்சமாவது தப்பிக்க த்தான் இந்த திரி இதில் தரும் குறிப்புகள் சுவையானதாகவும், சத்து நிறைந்ததாகவும் இருக்கும். எனவே நோயாளிகளும், ...

தோசை வகைகள் - கேழ்வரகு உளுந்து அவல் தோசை '+ Photo

Posted: 12 Oct 2014 09:51 AM PDT

தோசை............இது பிடிக்காதவாளே இருக்க மாட்டா என்பது என் எண்ணம் இந்த திரி இல் பல வித தோசைகளை பார்ப்போம். தோசை என்பது அரைத்து செய்வது மட்டும் அல்லாது ரவா தோசை, மைதா தோசை போல கரைத்தும் செய்யப்படுகிறது. மேலும் அடை போல கனமாக காரமாகவும் வார்க்கிறோம். இலுப்ப சட்டிகளில் வார்க்கப்படும் ஆப்பம் மற்றும் தவலைகளில் வார்க்கப்படும் தவலை தோசைகளும் தோசை பிரிவில் அடக்கம். வெல்ல தோசைகளும் , தேங்காய் தோசைகளும், வெங்காய தோசைகளும், மசால் தோசைகளும் இதில் அடக்கம் மேலும் தோசைகள் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் ...

பதுங்கு குழிக்கு மகாராணியும் வருகிறாராம்…!

Posted: 12 Oct 2014 08:53 AM PDT

[b] - - மன்னா…மகாராணியும் தங்களுடன் பதுங்கு குழிக்கு வருகிறேன் என்கிறார்..! - அப்படியானால், நான் போர்க்களத்திற்கே போய் விடுகிறேன் , அமைச்சரே…! - >பர்வின் யூனூஸ் - ————————————- - கட்சியை வளர்க்க தொண்டர்கள்கிட்டே ஐடியா கேட்டது தப்பாப் போச்சு..! - ஏன் என்ன ஆச்சு? - எல்லோரும் என்னை தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா பண்ணச் சொல்றாங்க..! - >வி.சகிதா முருகன் - --------------------------------------- - ஓப்பன் பண்ணா மதுரை...! - தலைவர் இதுக்கு கதை வசனம் எழுத மாட்டார்...! - >அம்பை ...

கே.பி. சுந்தராம்பாள்: தமிழின் உச்சஸ்தாயி!!!

Posted: 12 Oct 2014 08:34 AM PDT

கே.பி.எஸ். பிறந்த நாள்: 11.10.1908 தமிழிசை என்ற மாயக் கயிற்றால் தமிழகத்தைக் கட்டிப்போட்டவர் கே.பி.எஸ். இந்திய அளவில் நடிப்புக்காக ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தை முதன்முதலில் பெற்ற நடிகை; இந்தியாவிலேயே முதன்முதலாக சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை கே.பி.சுந்தராம்பாள்தான்; காந்தியடிகளே நேரில் வந்து தேசச் சேவைக்குப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஒரே நடிகை கே.பி.எஸ்தான்; தமிழ்நாட்டில் அதிக அளவு இசைத்தட்டு விற்றதும் கே.பி.எஸ். பாடிய பாடல்களுக்குத்தான். இப்படி எத்தனையோ சாதனைகளைச் ...

பிறந்த நாள் (தேதி) பலன்......

Posted: 12 Oct 2014 08:01 AM PDT

அனைவருக்கும்  காலைவணக்கம்..!  

      இன்று 16ஆம் தேதி பிறந்தவர்களுக்கு வாழ்த்துகளும்,வணக்கமும்.
 
        16ஆம் தேதி பிறந்தோர்  அறிவு கூர்மையும், திறமையும் மிக்கவர், விளம்பரம்
 உங்களுக்கு பிடிக்காது. பத்திரிக்கைகளை படிப்பதில் ஆர்வமுள்ளவர். சிறுவிஷயங்களுக்குக் கூட கோபப்படுபவர். காதலில் தோல்வியும், இல்லறத்தில் பல இன்னல்களையும் சந்திப்பவர்.

கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன் நாவல் (நான்கு பாகம் )

Posted: 12 Oct 2014 07:51 AM PDT

பாகம் -1 http://www.mediafire.com/download/mglaavwdzwbqvww/Gangai+konda+chozhan+-Part+1+.pdf பாகம் -2 http://www.mediafire.com/download/u5g8fgwzljb3kmz/Gangai+konda+chozhan+-Part+2+.pdf பாகம் -3 http://www.mediafire.com/download/4l7b68ya2htwk55/Gangai+konda+chozhan+-Part+3+.pdf பாகம் -4 http://www.mediafire.com/download/n0qu8ijhec8lqni/Gangai+konda+chozhan+-Part+4+.pdf

ஜெயலலிதா வழக்கு தோல்விக்கு யார் காரணம்?- அரசு வழக்கறிஞர் பவானி சிங் சிறப்பு பேட்டி!!!

Posted: 12 Oct 2014 05:51 AM PDT

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜரான நாளில் இருந்து இன்று வரை ஆட்சேப குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. அவ‌ர் மீதான‌ விமர்சனங்களுக்கும், புகார்களுக்கும் பஞ்சமே இல்லை. தீர்ப்பு வெளியான பின்பு, தொலைக்காட்சி சேனல்களுக்கு தொடர்ந்து பேட்டிகள் அளித்தபடி இருக்கிறார். அவர் மீதான பல்வேறு விமர்சனங்கள் குறித்து கேள்வி கேட்டபோது, சளைக்காமல் புன்சிரிப்புடன் பதில் அளித்தார். ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் தண்டனை வாங்கிக் கொடுத்ததில் உங்களுக்கு ...

கல்லணையின் ரகசியம்!!!!

Posted: 12 Oct 2014 05:46 AM PDT

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால் சோழன் காவிரியில் அடிக்கடி பெரு வெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதை எண்ணி அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட எண்ணம் கொண்டான். ஆனால் அது சாதாரண விஷயமல்ல, என்பதையும் அறிந்தவர். ஒரு நொடிக்கு 2 லட்சம் கன அடி நீர்பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டு பிடித்தார்கள் தமிழர்கள். நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு ...

கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

Posted: 11 Oct 2014 07:30 PM PDT

2014 -ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்திக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலாவுக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டது. அதில், குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிராக போராடி வரும் கைலாஷ் சத்யார்த்தி அமைதிக்கான நோபல் பரிசை, பாகிஸ்தானின் மலாலாவுடன் பகிர்ந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது. டில்லியில் வசித்து வரும் 60 வயதான கைலாஷ் சத்யார்த்தி, 1990 முதல் குழந்தை ...

பாமரர் தேவாரம்

Posted: 11 Oct 2014 06:48 PM PDT

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™