Tamil News | Online Tamil News |
- என் டெலிபோன் ஒட்டு கேட்கப்படுவது பற்றி தெரியாது : சதானந்த கவுடா காட்டம்
- ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை பயன்படுத்தி பலத்தை சோதிக்க...வியூகம்
- ஆட்சியை பிடிப்பது மட்டும் தான் பா.ஜ.,வின் நோக்கம்: சோனியா
- ஆந்திரா, ஒடிசாவில் வெளியேற்றம்...8 லட்சம் பேர் : மிக பலத்த புயல் இன்று தாக்கும் அபாயம்
- எம்.பி.,க்களின் மாதிரி கிராம திட்டம் துவக்கினார் மோடி:2019க்குள் 2,500 கிராமங்களை மேம்படுத்த தீவிரம்
- பெட்ரோல், டீசல் விலை விரைவில்...குறைகிறது: கச்சா எண்ணெய் சந்தை கடும் வீழ்ச்சி
- டில்லியிலும் பின்னப்படுகிறதா சூழ்ச்சி வலை?:சந்தேகத்தை கிளப்பும் ஜாமின் நடவடிக்கைகள்
- எதிர்நீச்சல் ஜெ., சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு: சிறப்பு செய்திகள் பாகம் -4
- மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தம்மின் தடை நேரம் அதிகரிக்கும் அபாயம்
- பா.ஜ.,வுக்கு ரஜினி தேவையா?:பதிலளிக்கிறார் சு.சாமி
- வாரிசு அரசியலை ஒதுக்க வேண்டும்:பிரதமர் மோடி வலியுறுத்தல்
| என் டெலிபோன் ஒட்டு கேட்கப்படுவது பற்றி தெரியாது : சதானந்த கவுடா காட்டம் Posted: பெங்களூரு: நடிகை மைத்ரியா வழக்கு தொடர்பாக, மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவின் தொலைபேசி, ஒட்டு கேட்கப்படுவதாக வெளியான தகவலால், பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பெங்களூரு குடும்பநல நீதிமன்றத்தில், கார்த்திக் மீது, நடிகை மைத்ரியா வழக்கு தொடர்ந்துள்ளார்.நிச்சயதார்த்தம்மத்திய அமைச்சர் சதானந்த கவுடா மகன் கார்த்திக் கவுடாவுக்கு, இரண்டு மாதங்களுக்கு முன், குஷால் நகரில், ஸ்வேதா என்ற பெண்ணுடன், திருமணத்துக்கு நிச்சயம் செய்யப்பட்டது.இது நடந்த ஒரு மணி நேரத்தில், கன்னட நடிகை மைத்ரியா, பெங்களூருவில், கன்னட சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 'கார்த்திக், என்னை, ... |
| ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை பயன்படுத்தி பலத்தை சோதிக்க...வியூகம் Posted: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலை ஜெ., இல்லாமல் சந்தித்து, தி.மு.க.,வில் பலம் என்ன, அ.தி.மு.க.,விற்கு அனுதாப அலை உள்ளதா என, சோதிக்க, தி.மு.க., புது வியூகம் வகுத்துள்ளது. இந்த பின்னணியில் தான், ஜெ., சிறையில் அடைக்கப்பட்டு, 10 நாட்களான பின், கடந்த, 8ம் தேதி, தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன் மவுனத்தை கலைத்தார். சென்னையில், மாவட்ட செயலர்கள் கூட்டத்தை கூட்டி, 'ஜெயலலிதா தேவையில்லாமல், தண்டிக்கப்பட்டு விட்டார் என்ற, பொய் பிரசாரத்தை முறியடிக்கும் பணியை உடனடியாக செய்யுங்கள்' என்று கட்டளையிட்டார்.அதற்கு அடுத்த நாள், 'ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வான ஜெ., பதவி இழந்து விட்டதை ... |
| ஆட்சியை பிடிப்பது மட்டும் தான் பா.ஜ.,வின் நோக்கம்: சோனியா Posted: பிவானி:அரியானா மாநிலத்தில், முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு வரும் 15ல், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. காங்கிரஸ் - பா.ஜ., - இந்திய தேசிய லோக்தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.இந்த தேர்தலில் போட்டி யிடும் காங்., வேட்பாளர்களை ஆதரித்து, அந்த கட்சி தலைவர் சோனியா, பிவானி என்ற இடத்தில், நேற்று நடந்த பிரசார கூட்டத்தில், பேசியதாவது:காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களையும், சட்டங்களையும், தற்போதைய பா.ஜ., அரசு பலவீனமாக்கி வருகிறது. நரேந்திர மோடியின் ... |
| ஆந்திரா, ஒடிசாவில் வெளியேற்றம்...8 லட்சம் பேர் : மிக பலத்த புயல் இன்று தாக்கும் அபாயம் Posted: விசாகப்பட்டினம்:'ஆந்திரா, ஒடிசா மாநில மக்களை அச்சுறுத்தி வரும், 'ஹுட் ஹுட்' புயல், இன்று மதியம், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, மிக பலத்த மழையும், மணிக்கு 195 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றும் வீசும் என்றும், வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த இரண்டு மாநிலங்களிலும், கடலோர மாவட்டங்களில் வசிக்கும், எட்டு லட்சம் பேர், பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.மியான்மர் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அதி தீவிர புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக, கடந்த மூன்று ... |
| எம்.பி.,க்களின் மாதிரி கிராம திட்டம் துவக்கினார் மோடி:2019க்குள் 2,500 கிராமங்களை மேம்படுத்த தீவிரம் Posted: புதுடில்லி:வரும், 2019ம் ஆண்டுக்குள், ஒவ்வொரு எம்.பி.,யும், தலா மூன்று கிராமங்களை தேர்ந்தெடுத்து, நிறுவன ரீதியான உள்கட்டமைப்பு வசதிகள் உட்பட, அனைத்து விதமான வசதி களை யும் மேம்படுத்துவதற்காக, 'எம்.பி.,க்களின் மாதிரி கிராம திட்டத்தை' பிரதமர் நரேந்திர மோடி, டில்லியில் துவக்கி வைத்தார்.சுதந்திர தினத்தை ஒட்டி, டில்லி செங்கோட்டையில் உரை நிகழ்த்திய, பிரதமர் நரேந்திர மோடி, 'எம்.பி.,க்களின் மாதிரி கிராம திட்டம்' என்ற புதிய திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றார்.சொந்த கிராமம் கூடாது:நாட்டில் கிட்டத்தட்ட, 800 எம்.பி.,க்கள் உள்ளனர். இந்த எம்.பி.,க்கள் ... |
| பெட்ரோல், டீசல் விலை விரைவில்...குறைகிறது: கச்சா எண்ணெய் சந்தை கடும் வீழ்ச்சி Posted: புதுடில்லி:சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறைந்துள்ளதாலும், தங்களிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு, ஈரானும், சவுதி அரேபியாவும், போட்டி போட்டு தள்ளுபடி அறிவித்துள்ளதாலும், பெட்ரோல், டீசல் விலை விரைவில் கணிசமாக குறைக்கப்பட உள்ளது.வளைகுடா நாடான ஈராக் மற்றும் லிபியாவில், அரசியல் ரீதியாக அமைதியற்ற சூழ்நிலை நிலவினாலும், அங்கு கச்சா எண்ணெய் உற்பத்தி குறையவில்லை; அதற்கு மாறாக அதிகரித்துள்ளது.அதேநேரத்தில், இதுவரை இல்லாத ஒன்றாக, தங்களிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு, ஈரானும், சவுதி அரேபியாவும் தள்ளுபடி அறிவித்துள்ளன. இதனால், ... |
| டில்லியிலும் பின்னப்படுகிறதா சூழ்ச்சி வலை?:சந்தேகத்தை கிளப்பும் ஜாமின் நடவடிக்கைகள் Posted: கர்நாடக ஐகோர்ட்டில், ஜாமின் மறுக்கப்பட்டதை அடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு, எப்படியாவது, ஜெயலலிதா வெளியில் கொண்டு வரப்படமாட்டாரா என்ற ஏக்கமும், எதிர்பார்ப்பும், அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் நிலவுகிறது. ஆரம்பத்தில் இருந்தே, சொத்து குவிப்பு வழக்கை சரிவர கையாளாமல் போனதே, ஜெயலலிதாவுக்கு இந்த நிலைமை ஏற்பட காரணம் என்ற கருத்தும் உள்ளது.சட்டரீதியிலான நடவடிக்கைகளை, இனிமேலாவது சரிவர எடுக்க வேண்டும்; குறிப்பாக, ஜாமின் விவகாரத்தில் சறுக்கிவிட கூடாது என்றெல்லாம், அக்கட்சியினர் வேண்டிக் கொண்டிருக்கும் நிலையில், டில்லியில் ... |
| எதிர்நீச்சல் ஜெ., சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு: சிறப்பு செய்திகள் பாகம் -4 Posted: அரசு தரப்பின் கணக்குப்படி, விசாரணைக்கு உட்பட்ட காலகட்டத்தில், ஜெ., உள்ளிட்டோர் பெயர்களில், 66.65 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கப்பட்டன. இதில், புடவைகள், காலணிகள்,கட்டடங்கள் உள்ளிட்ட சில தலைப்புகளின் கீழ் காட்டப்பட்ட செலவுகளின் மதிப்பை குறைத்து கருதலாம் என, நீதிபதி குன்ஹா உத்தரவிட்டதை 'கணக்கில் பிணக்கு' என்ற பாகத்தில் பார்த்தோம்.அசையா சொத்துக்களை பொறுத்தவரை;உரிமையாளர் நிலத்தின் பதிவு செய்யப்பட்ட பெயர் பரப்பளவு மதிப்பு ... |
| மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தம்மின் தடை நேரம் அதிகரிக்கும் அபாயம் Posted: மத்திய மற்றும் மாநில மின் நிலையங்களில், பழுது காரணமாக, 3,000 மெகாவாட் அளவிற்கு, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால், தமிழகத்தில் மின் தடை நேரம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் மின் தேவை, உற்பத்தியை காட்டிலும் அதிகமாக உள்ளதால், மின் பற்றாக்குறை நிலவுகிறது. இதை சமாளிக்க, மின் தடை, மின் கொள்முதல், மின் கட்டுப்பாடு ஆகிய நடவடிக்கைகளில், மின் வாரியம் ஈடுபடுகிறது.என்.எல்.சி., 1,120; வல்லுார் 715; கல்பாக்கம் 330; கைகா 230; ராமகுண்டம் 640; சிம்ஹாத்ரி 270; தால்சர் 500 என, மத்திய அரசின் மின் நிலையங்களில் இருந்து தமிழகத்திற்கு, 3,800 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ... |
| பா.ஜ.,வுக்கு ரஜினி தேவையா?:பதிலளிக்கிறார் சு.சாமி Posted: தமிழகத்தில் திராவிட கட்சிகளான தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு படிந்து, அதில், இரண்டு இயக்கங்களும் சிக்கித் திணறிக் கொண்டு இருக்கின்றன.இப்படி இரண்டு திராவிட இயக்கங்களும், ஊழலில் சிக்கித் தவிப்பதால், அவற்றின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பதாகவும், அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகவும், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.இந்த வெற்றிடத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, வரும் 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பா.ஜ.,தீவிரமாக ... |
| வாரிசு அரசியலை ஒதுக்க வேண்டும்:பிரதமர் மோடி வலியுறுத்தல் Posted: சிர்ஸா:அரியானா மாநிலத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரத்தில், குடும்ப அரசியலை ஒதுக்கித் தள்ள வேண்டும் பொதுமக்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.அரியானாவில் வரும் 15ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அங்குள்ள சிர்ஸா நகரில் நேற்று நடந்த பிரசாரக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியாதாவது:கூட்டணிகளிடம் ஓர் ஒப்பந்தம்:ஒரு குடும்பம் ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்த வேண்டும்; அப்போது மற்றொரு குடும்பம் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து விமர்சிக்க வேண்டும் என்று இந்தக் கூட்டணிகளிடையே ஓர் ஒப்பந்தம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 12,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |