Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


நீதிநெறி விளக்கம்: பேராசை கொள்ளற்க

Posted: 11 Oct 2014 01:04 PM PDT

தன்னை நெருங்க நெருங்க, கொடிய நெருப்பானது மரத்தை எரிப்பதோடு தானும் எரிந்து அழியாமல் இருப்பதில்லை; அழிவது உறுதி.

வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை

Posted: 11 Oct 2014 12:50 PM PDT

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தாந்தோன்றிமலை பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

Posted: 11 Oct 2014 12:49 PM PDT

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தாந்தோன்றிமலை வெங்கட ரமணசுவாமி கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

கரூர் அருகே என்எஸ்எஸ் முகாம் நிறைவு விழா

Posted: 11 Oct 2014 12:49 PM PDT

கரூர் அருகே என்எஸ்எஸ் முகாம் நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.

மின் பாதையில் தனியார் பணி கூடாது

Posted: 11 Oct 2014 12:49 PM PDT

மின்பாதையிலோ, மின் சாதனங்களிலோ மின்வாரியத் துறையினரைத் தவிர மற்றவர்கள் எந்தப் பணியும் மேற்கொள்ளக்கூடாது என மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

மணலி, தூத்துக்குடி உரத் தொழிற்சாலைகள் நாப்தாவில் இயங்க அனுமதிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ.பி.எஸ். கடிதம்

Posted: 11 Oct 2014 12:49 PM PDT

நாப்தாவை மூலப் பொருளாகக் கொண்டே மணலி, தூத்துக்குடியில் உள்ள உரத் தொழிற்சாலைகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவித்தால் ஐந்தாண்டு சிறை

Posted: 11 Oct 2014 12:49 PM PDT

கருவிலிருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து தெரிவிக்கும் ஸ்கேன் மைய மருத்துவருக்கு ஐந்தாண்டு சிறையும், ரூ.1 லட்சம் வரை அபாரதமும் விதிக்கப்படும் என சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் (பொ) ஆசாக்உசேன் தெரிவித்துள்ளார்.

அரசுக் கல்லூரியில் தாவரவியல் கருத்தரங்கு

Posted: 11 Oct 2014 12:48 PM PDT

கரூர் அரசு கலைக்கல்லூரியில் தாவரவியல்துறை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் மாணவ, மாணவிகள் திரளாகப் பங்கேற்றனர்.

இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 11 Oct 2014 12:48 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் இளைஞர் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம்: என்எல்சி தலைவருடனான பேச்சுவார்த்தை தோல்வி

Posted: 11 Oct 2014 12:48 PM PDT

ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்டத் தொழிற் சங்கங்களின் நிர்வாகிகள், சென்னையில் என்எல்சி தலைவர் பி.சுரேந்திர மோகனை சனிக்கிழமை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் திருட்டு

Posted: 11 Oct 2014 12:47 PM PDT

தஞ்சாவூர் அருகே சனிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

இருவர் தூக்கிட்டு சாவு

Posted: 11 Oct 2014 12:47 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டனர்.

விவசாயிகளுக்கு ரூ.68 கோடியில் பயிர்க்கடன்

Posted: 11 Oct 2014 12:47 PM PDT

தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 12,569 விவசாயிகளுக்கு இதுவரை ரூ. 68.69 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

பள்ளி மாணவர்களுக்கு நாளை வினாடி- வினா

Posted: 11 Oct 2014 12:47 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் உலக சுற்றுலா தினத்தையொட்டி ஒன்றிய அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வினாடி- வினா போட்டிகள் திங்கள்கிழமை (அக். 13) நடைபெற உள்ளன. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ. மகாலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளிப் பண்டிகை: 9 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

Posted: 11 Oct 2014 12:47 PM PDT

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, சென்னையில் இருந்தும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் 9 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சனிக்கிழமை வெளியிட்டார். அதன் விவரம்:

பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை பயன்படுத்த அழைப்பு

Posted: 11 Oct 2014 12:46 PM PDT

பெரம்பலூர் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் தங்களது விலை பொருள்களை குறைந்த வாடகைக்கு இருப்பு வைத்துப் பயன்பெற அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

"ஆசிரியர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களின் தொடர் வைப்புக்கு 10 சத வட்டி'

Posted: 11 Oct 2014 12:46 PM PDT

நிகழாண்டு முதல் உறுப்பினர்களிடமிருந்து வசூலிக்கப்படும் தொடர் வைப்புக்கு 10 சத வட்டி வழங்கப்படும் என்றார் பெரம்பலூர் ஒன்றிய ஆசிரியர்கள் கூட்டுறவுச் சிக்கன மற்றும் கடன் சங்கத் தலைவர் கு. ரவிச்ச

அடகுக் கடையில் பணம் திருட்டு

Posted: 11 Oct 2014 12:46 PM PDT

சீர்காழியை அடுத்த தைக்கால் பகுதியில் நகை அடகுக் கடையில் பணம், செல்போன்களை திருடி சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

"மனிதப் பண்புகளை பேணி வளர்க்க வேண்டும்

Posted: 11 Oct 2014 12:45 PM PDT

இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் மனிதப் பண்புகளை பேணி வளர்க்க வேண்டும் என்றார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் என். மாரிமுத்து.

செந்துறை அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

Posted: 11 Oct 2014 12:45 PM PDT

செந்துறை அருகே வெள்ளிக்கிழமை இரவு கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போனது. அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ளது மருதூர் ஊராட்சி ஏரிக்கரையில் அடைக்கலம் காத்தார்

4 இடங்களில் போக்குவரத்து சிக்னல் தொடக்கம்

Posted: 11 Oct 2014 12:45 PM PDT

அரியலூரில் 4 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல்களை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.

கந்தர்வகோட்டையில்கார் மோதி தொழிலாளி சாவு

Posted: 11 Oct 2014 12:45 PM PDT

கந்தர்வகோட்டையில் வெள்ளிக்கிழமை கார் மோதியதில் ஹோட்டல் தொழிலாளி உயிரிழந்தார்.

பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி வீதியுலா

Posted: 11 Oct 2014 12:44 PM PDT

புதுக்கோட்டை ஐயர்குளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் கடைசி புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமி வீதியுலா நடைபெற்றது.

புதுகை அரசு மருத்துவமனையில் உலக நல்வாழ்வு தினம்

Posted: 11 Oct 2014 12:44 PM PDT

உலக நல்வாழ்வு மற்றும் நோய் தணிப்பு, கவனிப்பு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட தலைமை மருத்துவமனையில் சனிக்கிழமை மெழுகுவர்த்தி ஏற்றி உறுதிமொழியேற்கப்பட்டது.

"நடைபாதை வியாபாரிகளைத் துன்புறுத்தினால் போராட்டத்தில் ஈடுபடுவோம்'

Posted: 11 Oct 2014 12:44 PM PDT

நடைபாதை வியாபாரிகளை துன்புறுத்தினால் சாலையோர வியாபாரிகள் சங்கத்துடன் இணைந்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன்.

குழந்தைகளை காப்பதில்தான் நாட்டின் எதிர்காலம் உள்ளது: கைலாஷ் சத்யார்த்தி

Posted: 11 Oct 2014 12:44 PM PDT

குழந்தைகளைப் பாதுகாப்பதில்தான் ஒரு நாட்டின் நிகழ்காலமும், எதிர்காலமும் அமைந்துள்ளது என்று அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள குழந்தைகள் நல ஆர்வலர் கைலாஷ் சத்தியார்த்தி தெரிவித்தார்.

கொன்னையம்பட்டி பள்ளியில் "தூய்மை இந்தியா' உறுதிமொழி ஏற்பு

Posted: 11 Oct 2014 12:44 PM PDT

பொன்னமராவதி வட்டார வள மையத்துக்குட்பட்ட கொன்னையம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

புதுகை பள்ளியில் புத்தகம் இல்லா நாள் விழா

Posted: 11 Oct 2014 12:43 PM PDT

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் புத்தகம் இல்லா நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலம் பொறியியல் கல்லூரியில் புத்தாக்கப் பயிற்சி

Posted: 11 Oct 2014 12:43 PM PDT

புதுக்கோட்டை அருகே சத்தியமங்கலம் சுதர்சன் பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் புத்தாக்க பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

துவரை சாகுபடியில் அதிக லாபம் பெற யோசனை

Posted: 11 Oct 2014 12:43 PM PDT

துவரை சாகுபடியில் அதிக லாபம் பெற வேளாண் துறை யோசனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் வி.எம். ரவிச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை:

கண்டியாநத்தம் ஊராட்சியில் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்

Posted: 11 Oct 2014 12:43 PM PDT

பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் பொதுவிநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு வட்ட வழங்கல் அலுவலர் சார்லஸ் தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர்

"அகழிக் கரையில் விரைவில் கைவினை கலை நிலையம்

Posted: 11 Oct 2014 12:42 PM PDT

தஞ்சாவூர் பெரியக்கோட்டை அகழிக் கரையில் விரைவில் கைவினைக் கலை நிலையம் அமைக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.

அம்மன் கோயிலில் அதிமுகவினர் சிறப்பு பூஜை

Posted: 11 Oct 2014 12:42 PM PDT

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி, தஞ்சாவூர் கரம்பையில் உள்ள உக்ரகாளியம்மன் கோயிலில் அதிமுகவைச் சார்ந்த மாவட்ட அண்ணா மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்கும் "முன்மாதிரி கிராமம்' திட்டம்: பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்

Posted: 11 Oct 2014 12:42 PM PDT

தீபாவளி பரபரப்பை எட்டாத தஞ்சாவூர் கடைவீதிகள்

Posted: 11 Oct 2014 12:42 PM PDT

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில் தஞ்சாவூர் கடைவீதிகள் இன்னும் பரபரப்பை எட்டவில்லை.

பெண்ணை கத்தியால் குத்தியவர் கைது

Posted: 11 Oct 2014 12:41 PM PDT

கும்பகோணத்தில் பெண்ணை கத்தியால் குத்தியவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். கும்பகோணம் சத்தியாநகரைச் சேர்ந்த நாகராஜ் மனைவி ஆனந்தி (33). ரெங்கர் தெருவைச் சேர்ந்தவர்

மதுக்கூர் பகுதிகளில் முறைவைக்காமல் தண்ணீர் விடக் கோரிக்கை

Posted: 11 Oct 2014 12:41 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் ஒன்றியப் பகுதிகளில் பாசனத்துக்கு முறைவைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேராவூரணியில் 29 மி.மீ. மழை

Posted: 11 Oct 2014 12:41 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பேராவூரணியில் 29 மி.மீ. மழை பெய்தது.

கும்பகோணம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Posted: 11 Oct 2014 12:41 PM PDT

கும்பகோணம் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை நெடுஞ்சாலைத் துறையினர் சனிக்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர்.

அக். 18-ல் திமுக இளைஞரணி சார்பில் தஞ்சையில் இலக்கிய மன்ற போட்டிகள்

Posted: 11 Oct 2014 12:40 PM PDT

அண்ணாவின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு, தஞ்சை மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், வரும் 18-ம் தேதி தஞ்சையில் இலக்கிய மன்ற போட்டிகள் நடைபெறவுள்ளது என்று அக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

பேராவூரணி அருகே வேன் கவிழ்ந்து 11 பேர் காயம்

Posted: 11 Oct 2014 12:40 PM PDT

பேராவூரணி அருகே சனிக்கிழமை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்தனர்.

பருவதராஜகுல மீனவ சங்க பொதுக்குழுக் கூட்டம்

Posted: 11 Oct 2014 12:40 PM PDT

தமிழ்நாடு பருவதராஜகுல மீனவ சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

ஒரத்தநாடு வட்டாரத்தில் ஆட்சியர் ஆய்வு

Posted: 11 Oct 2014 12:39 PM PDT

ஒரத்தநாடு வட்டாரத்தில் வாராபந்தி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சமுதாய ஆழ்குழாய் கிணறுகளை ஆட்சியர் என். சுப்பையன் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பழக்கடை மீது தாக்குதல் : இந்திய கம்யூ. கண்டனம்

Posted: 11 Oct 2014 12:39 PM PDT

பேராவூரணியில் பழக்கடை மீது தாக்குதல் நடத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.

காரைக்குடி - திருவாரூர் அகல ரயில்பாதை பணியை விரைந்து முடிக்கக் கோரிக்கை

Posted: 11 Oct 2014 12:39 PM PDT

காரைக்குடி - திருவாரூர் அகல ரயில்பாதை திட்டப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அண்மையில் நடைபெற்ற பேராவூரணி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு தலைவர் சாந்தி அசோக்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மு. கருணாக

தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம்

Posted: 11 Oct 2014 12:39 PM PDT

தஞ்சாவூரில் தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ப.கோ. நாராயணசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

14 ஒன்றிய அலுவலகங்கள் முன் அக். 17-ல் போராட்டம் நடத்த முடிவு

Posted: 11 Oct 2014 12:38 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றிய அலுவலகங்கள் முன் அக். 17-ல் கஞ்சிக் கலயம் உடைக்கும் போராட்டம் நடத்துவது என அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்டவை முடிவு செய்துள்ளன.

பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை

Posted: 11 Oct 2014 12:38 PM PDT

திருவாரூர் மாவட்டம், மேலநன்னிலத்தில் பூச்சிமருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார். மேலநன்னிலத்தைச் சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமி (60). இவரிடம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விவசா

பெரம்பலூரில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

Posted: 11 Oct 2014 12:38 PM PDT

பெரம்பலூரில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை வருவாய்த் துறையினர் சனிக்கிழமை அகற்றினர்.

"நல்ல மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர்களின் கடமை'

Posted: 11 Oct 2014 12:38 PM PDT

நல்ல மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர்களின் கடமை என்றார் பாரதி கல்வி நிறுவனங்களின் செயலரும், மன்னர் கல்லூரியின் வரலாற்றுத் துறை முன்னாள் தலைவருமான வீ. வைத்தியநாதன்.

அக்டோபர் 13 மின் தடை

Posted: 11 Oct 2014 12:37 PM PDT

பொன்னமராவதி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் திங்கள்கிழமை (அக். 13) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

"அகழிக் கரையில் விரைவில் கைவினை கலை நிலையம்

Posted: 11 Oct 2014 12:37 PM PDT

தஞ்சாவூர் பெரியக்கோட்டை அகழிக் கரையில் விரைவில் கைவினைக் கலை நிலையம் அமைக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.

பருவதராஜகுல மீனவ சங்க பொதுக்குழுக் கூட்டம்

Posted: 11 Oct 2014 12:36 PM PDT

தமிழ்நாடு பருவதராஜகுல மீனவ சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கும்பகோணம் துக்காம்பாளையத் தெருவில் உள்ள சங்க கட்டடத்தில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு கே.ஏ.கே

எபோலோ தடுப்பு விழிப்புணர்வு முகாம்

Posted: 11 Oct 2014 12:36 PM PDT

பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி, லியோ சங்கம் மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், எபோலோ விழிப்புணர்வு முகாம் பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ள

மென்திறன் ஆளுமை பயிற்சி

Posted: 11 Oct 2014 12:36 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு பெண்கள் கல்லூரியில் சரோஜினி நாயுடு ஆங்கில இலக்கிய மன்றத்தின் சார்பாக மென்திறன் ஆளுமை என்னும் தலைப்பில் மூன்று நாள் பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.

தஞ்சாவூரில் மாநில அளவிலானகராத்தே போட்டி தொடக்கம்

Posted: 11 Oct 2014 12:36 PM PDT

தஞ்சாவூரில் தண்டர் விளையாட்டுக் கழகம், சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி சனிக்கிழமை தொடங்கியது.

இளைஞர் கொலை வழக்கு:சகோதரி கைது

Posted: 11 Oct 2014 12:35 PM PDT

தஞ்சாவூரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது சகோதரியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

முறைவைக்காமல் தண்ணீர் விடக் கோரிக்கை

Posted: 11 Oct 2014 12:35 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் ஒன்றியப் பகுதிகளில் பாசனத்துக்கு முறைவைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு வைட்டமின் திரவம் வழங்கும் முகாம்

Posted: 11 Oct 2014 12:35 PM PDT

கும்பகோணம் அருகே 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் அண்மையில் நடைபெற்றது.

வீட்டில் பதுக்கப்பட்ட600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 11 Oct 2014 12:34 PM PDT

தஞ்சாவூரில் பூட்டிய வீட்டுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 கிலோ ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலர் சனிக்கிழமை பறிமுதல் செய்தார்.

பூண்டி புஷ்பம் கல்லூரி சிறப்பு முகாமில் 101 பேர் ரத்த தானம்

Posted: 11 Oct 2014 12:34 PM PDT

பூண்டி புஷ்பம் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு ரத்த தான முகாமில் என்சிசி, என்எஸ்எஸ் அமைப்புகளைச் சேர்ந்த 101 பேர் ரத்ததானம் செய்தனர்.

அம்மன் கோயிலில் அதிமுகவினர் சிறப்பு பூஜை

Posted: 11 Oct 2014 12:34 PM PDT

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி, தஞ்சாவூர் கரம்பையில் உள்ள உக்ரகாளியம்மன் கோயிலில் அதிமுகவைச் சார்ந்த மாவட்ட அண்ணா மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

சயன திருக்கோலத்தில் பெருமாள்

Posted: 11 Oct 2014 12:34 PM PDT

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி, காரைக்காலில் 2 கோயில்களில் சயன திருக்கோலத்தில் பெருமாள் காட்சி அளித்தார்.

மயிலாடுதுறையில் அக்டோபர் 14-ல் பாசனதாரர்கள் குறைதீர் கூட்டம்

Posted: 11 Oct 2014 12:33 PM PDT

நாகை மாவட்டம், மயிலாடுதுறை கோட்ட பாசனதாரர்கள் குறைதீர் கூட்டம் மயிலாடுதுறையில் அக்டோபர் 14-ம் தேதி நடைபெறுகிறது.

டெங்கு காய்ச்சல்விழிப்புணர்வு பயிற்சி முகாம்

Posted: 11 Oct 2014 12:33 PM PDT

குத்தாலம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

நுகர்வோர் விழிப்புணர்வு பயிற்சி முகாம்

Posted: 11 Oct 2014 12:33 PM PDT

நீடாமங்கலம் வட்டம், பழங்களத்தூர் கிராமத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் நீடாமங்கலம் கூடுதல் வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணகுமார், ஊராட்சித் தலைவர் கீதாகாமராஜ், துணைத் தலைவர் பக்கிரிசாமி, வட்டார திட்ட மேலாளர் பிரபு, ஒருங்கிணைப்பாளர்

திருநகரிகல்யாணரெங்கநாதபெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

Posted: 11 Oct 2014 12:32 PM PDT

சீர்காழியை அடுத்த திருநகரி கல்யாணரெங்கநாத பெருமாள் கோயிலில் கார்த்திகை நட்சத்திர சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் கவனத்துக்கு...

Posted: 11 Oct 2014 12:32 PM PDT

பிரதமரின் கல்வி உதவித் தொகைக்கு, முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம் என நாகை ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார்

செம்போடை கல்லூரியில் தூய்மைப் பணி

Posted: 11 Oct 2014 12:32 PM PDT

வேதாரண்யத்தை அடுத்த செம்போடை ஆர்.வி. கல்வி நிறுவனங்களின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது.

பட்டவர்த்தி ஊராட்சியில் வருவாய் திட்ட சிறப்பு முகாம்

Posted: 11 Oct 2014 12:32 PM PDT

மயிலாடுதுறை வட்டம், பட்டவர்த்தி ஊராட்சியில் வெள்ளிக்கிழமை வருவாய்த் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Posted: 11 Oct 2014 12:31 PM PDT

குத்தாலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை சார்பில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூரில் அக்டோபர் 14-ல்கடனுதவி விழிப்புணர்வு முகாம்

Posted: 11 Oct 2014 12:31 PM PDT

திருவாரூரில் செவ்வாய்க்கிழமை (அக். 14) கடனுதவி திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது என்று ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்துள்ளார்.

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு: 84 % மாணவர்கள் தேர்ச்சி

Posted: 11 Oct 2014 12:30 PM PDT

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டில் 84 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சை

Posted: 11 Oct 2014 12:30 PM PDT

திண்டுக்கல் அருகே கார் மீது ரயில் மோதல்: 3 பேர் பலத்த காயம்

Posted: 11 Oct 2014 12:29 PM PDT

திண்டுக்கல் அருகே ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கார் மீது ரயில் மோதியதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

நோபல் பரிசு: கைலாஷ், மலாலாவுக்கு கருணாநிதி வாழ்த்து

Posted: 11 Oct 2014 12:27 PM PDT

நோபல் பரிசு பெற்ற இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா ஆகியோருக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாயம்: கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

Posted: 11 Oct 2014 12:26 PM PDT

கிருஷ்ணகிரி அணையிலிருந்து எந்த நேரமும் தென்பெண்ணை ஆற்றில் உபரி நீர் திறக்க வாய்ப்பு இருப்பதால், கரையோர மக்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தார்.

சித்த மருத்துவப் படிப்புகளுக்கு அக்டோபர் 17-இல் கலந்தாய்வு

Posted: 11 Oct 2014 12:24 PM PDT

சித்த மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்குகிறது.

மேற்கு வங்கம்: ஆயுதங்களுடன் திரிணமூல் கட்சி பிரமுகர்கள் 2 பேர் கைது

Posted: 11 Oct 2014 12:17 PM PDT

மேற்கு வங்கம் மாநிலம், பீர்பூம் மாவட்டத்தில் துப்பாக்கி, வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பிரமுகர்கள் உள்பட 6 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

சரணடைந்தார் சௌதாலா

Posted: 11 Oct 2014 12:17 PM PDT

ஹரியாணா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் (ஐஎன்எல்டி) தலைவருமான ஓம் பிரகாஷ் சௌதாலா, தில்லி திகார் சிறை அதிகாரிகளிடம் சனிக்கிழமை சரணடைந்தார்.

சசி தரூர் மீது ஒழுங்கு நடவடிக்கை: காங்கிரஸ் மேலிடம் பரிசீலனை

Posted: 11 Oct 2014 12:14 PM PDT

பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசிய விவகாரத்தில், முன்னாள் மத்திய அமைச்சரும், திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து, அக்கட்சி மேலிடம் பரிசீலித்து வருகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்கும் "முன்மாதிரி கிராமம்' திட்டம்

Posted: 11 Oct 2014 12:14 PM PDT

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்கும் "முன்மாதிரி கிராமம்' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடக்கி வைத்தார். இதையொட்டி, தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்

தலைநகரில் "கர்வா சௌத்' கொண்டாட்டம்

Posted: 11 Oct 2014 12:13 PM PDT

தலைநகர் தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் வசிக்கும் இந்துக்களால் "கர்வா செüத்' நிகழ்ச்சி சனிக்கிழமை பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

பெண் குழந்தைகளை பாதுகாக்க ஆலோசனை: இணையதளத்தில் பகிர்ந்து கொள்ள பிரதமர் அழைப்பு

Posted: 11 Oct 2014 12:13 PM PDT

பெண் குழந்தைகளைப் பாதுகாக்க ஆலோசனைகளைத் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

ரூ.12.5 லட்சத்துக்கு ஏலம்போனது "0001' வாகன பதிவெண்!

Posted: 11 Oct 2014 12:13 PM PDT

வாகனங்களின் சிறப்பு (ஃபேன்சி) பதிவெண்களை முதல் முறையாக ஆன்லைனில் ஏலம் விட்ட தில்லி அரசுக்கு, ரூ.74 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. இந்த ஏலத்தில், "0001' என்ற சிறப்புப் பதிவெண் ரூ.12.5 லட்சத்துக்கு ஏலம் போனது.

"அடையாளங்களைத் தாண்டி தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்

Posted: 11 Oct 2014 12:13 PM PDT

சாதி, மத, பண்பாட்டு அடையாளங்களைத் தாண்டி, தமிழ், தமிழர் ஆகிய அடையாளங்களின் கீழ் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று பேராசிரியர் ப.அ.சாம் வெள்ளதுரை வலியுறுத்தினார்.

நேதாஜியின் நெருங்கிய உதவியாளர் மரணம்

Posted: 11 Oct 2014 12:13 PM PDT

சுதந்திரப் போராட்ட வீரரும், சுபாஷ் சந்திர போஸின் நெருங்கிய உதவியாளருமான கேப்டன் அப்பாஸ் அலி கான் மாரடைப்பால் சனிக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 95.

எபோலா: இந்தியா திரும்பும் ஹஜ் பயணிகளிடம் பரிசோதனை

Posted: 11 Oct 2014 12:13 PM PDT

இந்தியா திரும்பும் ஹஜ் பயணிகளிடம் எபோலா நோய் தாக்கம் குறித்த பரிசோதனை செய்ய தில்லி விமான நிலையத்தில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

மழலையர் பள்ளிகளை ஒரே துறையின் கீழ் கொண்டுவர வேண்டும்

Posted: 11 Oct 2014 12:12 PM PDT

மழலையர் பள்ளிகளில் நடைபெறும் குற்றங்களை குறைக்கும் வகையில், ஒரு குறிப்பிட்ட துறையின் கீழ் அத்தகைய பள்ளிகள் கொண்டுவரப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என்று தில்லி குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

7 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது தில்லி நீதிமன்றம்

Posted: 11 Oct 2014 12:12 PM PDT

தில்லியில் கால்நடை கடத்தலை கடந்த ஆண்டு தடுக்க முயன்ற போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டதாக தொடரப்பட்ட வழக்கில், 7 பேருக்கு தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை ஆயுள் தண்டனை வழங்கியது.

புரட்டாசி கடைசி சனிக்கிழமை: கோயில்களில் பக்தர்கள் கூட்டம்

Posted: 11 Oct 2014 12:11 PM PDT

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.

கட்கரியின் "அன்பளிப்பு' பேச்சு: தேர்தல் ஆணையம் அதிருப்தி

Posted: 11 Oct 2014 12:11 PM PDT

"அரசியல் கட்சியினர் அன்பளிப்பு கொடுத்தால் பெற்றுக் கொள்ளுங்கள்' என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதற்கு தேர்தல் ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

ஆஞ்சநேயர் கோயிலில் எம்ஜிஆர் மன்றத்தினர் பூஜை

Posted: 11 Oct 2014 12:11 PM PDT

 முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி உத்தரமேரூரை அடுத்த ஸ்ரீ சுந்தரவரதர் வீர ஆஞ்சநேயர் கோயிலில் எம்ஜிஆர் மன்றத்தினர் சனிக்கிழமை சிறப்புப் பூஜை நடத்தினர்.

வெறிச்சோடிய "ஆதார்' புகைப்படம் எடுக்கும் மையம்

Posted: 11 Oct 2014 12:10 PM PDT

செங்கல்பட்டு நகராட்சி பகுதியில் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுப்பது குறித்து மக்களுக்கு முறையாகத் தெரிவிக்கப்படாத காரணத்தினால் சனிக்கிழமை அந்த மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன

மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகள் நாளை தொடக்கம்

Posted: 11 Oct 2014 12:10 PM PDT

மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம், குழு விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கவுள்ளது.

இன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம்

Posted: 11 Oct 2014 12:10 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை, சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என்று ஆட்சியர் வி.கே. சண்முகம் அறிவித்துள்ளார்.

எல்லையில் தாக்கப்பட்ட கிராமத்தினருக்கு பாதுகாப்பான பகுதியில் நிலம் ஒதுக்கீடு: காஷ்மீர் அமைச்சரவை முடிவு

Posted: 11 Oct 2014 12:10 PM PDT

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட கிராமத்தினருக்கு பாதுகாப்பான பகுதியில் நிலம் ஒதுக்க காஷ்மீர் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

தெருக்களில் ஓடும் கழிவு நீரால் சுகாதாரக் கேடு

Posted: 11 Oct 2014 12:10 PM PDT

வல்லம் கிராமத்தின் குடியிருப்புப் பகுதியில் கால்வாய் அமைக்கப்படாததால் கழிவுநீர் தேங்கி இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

பஜனை கோயிலில் ருக்மணி சிலை திருட்டு

Posted: 11 Oct 2014 12:09 PM PDT

காஞ்சிபுரம் அருகே திம்மராஜம் பேட்டை, பஜனை கோயிலில் உள்ள ருக்மணி சிலையை மர்ம நபர்கள் சனிக்கிழமை திருடிச் சென்றனர்.

சரணடைந்தார் சௌதாலா

Posted: 11 Oct 2014 12:09 PM PDT

ஹரியாணா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் (ஐஎன்எல்டி) தலைவருமான ஓம் பிரகாஷ் சௌதாலா, தில்லி திகார் சிறை அதிகாரிகளிடம் சனிக்கிழமை சரணடைந்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™