மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- திருவனந்தபுரம் கடற்கரையை சுத்தம் செய்த சசிதரூர்: காங். தலைவர்கள் அதிர்ச்சி
- மத்திய மந்திரி சபையில் சிவசேனாவுக்கு மேலும் மந்திரி பதவி
- அமைச்சராக பதவி ஏற்ற பிறகு 3 மத்திய மந்திரிகளின் சொத்து திடீர் உயர்வு
- விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கொச்சி விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு
- கோழிக்கோடு விமான நிலையத்தில் 3½ கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
- இந்திய-சீன எல்லை விவகாரத்தில் அமைதிக்காக நாட்டின் கவுரவத்தை விட்டுக்கொடுக்க முடியாது: ராஜ்நாத் சிங்
- கருப்பு பணக்காரர்கள் பட்டியல் வெளியானால் காங்கிரசுக்கு சங்கடம் வராது: ப.சிதம்பரம் பேட்டி
- போலீசார் தேடுதல் வேட்டையில் இளம்பெண் உள்பட 5 மாவோயிஸ்டுகள் கைது
- உணவு பாதுகாப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு குறித்து ஐ.நா. பொதுச்சபையில் இந்தியா கண்டிப்பு
- மானிய விலையில் வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை குறையாது: தர்மேந்திர பிரதான்
- பஞ்சாப் குருத்துவாராவில் சீக்கிய குழுக்களுக்கிடையே துப்பாக்கி சண்டை: 6 பேர் காயம்
- யமுனை ஆற்றில் மூழ்கிய பெண்ணை காப்பாற்றிய என்.சி.சி. வீரர்கள்
- நவம்பர் 19-ல் பிஜி செல்கிறார் பிரதமர் மோடி
- கருப்பு பண விவகாரம்: அருண் ஜெட்லிக்கு ராம் ஜெத்மலானி கடிதம்
- சிறுவனுக்கு சூன்யம் வைத்ததாக கூறி மூன்று பெண்கள் சித்ரவதை
- ஹுட் ஹுட் புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திர கிராமத்தை தத்தெடுத்தார் வெங்கையா நாயுடு
- சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிக்கும் முன்பு மோடி வருகை தர ஏற்பாடு
- அரியானாவில் பீடா கடைக்காரருக்கு வந்த ரூ.132 கோடி மின் கட்டண நோட்டீஸ்
- பாகிஸ்தானின் வாயை அடைத்துவிட்டோம் என்று மோடி கூறினார்: ஆனால் தாக்குதல் இன்னும் தொடர்கிறது-ப.சி. பேட்டி
- 4 வயது சிறுமி பலாத்காரம்: பள்ளி காவலாளி கைது
| திருவனந்தபுரம் கடற்கரையை சுத்தம் செய்த சசிதரூர்: காங். தலைவர்கள் அதிர்ச்சி Posted: 24 Oct 2014 11:13 PM PDT பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் நாட்டை சுத்தப்படுத்தும் வகையில் ''கிளீன் இந்தியா'' எனும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தார். நாடெங்கும் உள்ள பல்வேறு துறை பிரபலங்கள் இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு தெருக்களில் குப்பைகளை அகற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்கள். பிரதமர் மோடியின் ''கிளீன் இந்தியா'' திட்டத்தை காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் |
| மத்திய மந்திரி சபையில் சிவசேனாவுக்கு மேலும் மந்திரி பதவி Posted: 24 Oct 2014 10:39 PM PDT மராட்டியத்தில் பா.ஜனதா, சிவசேனா இடையே உடன்பாடு ஏற்பட்டது. மத்தியில் சிவசேனாவுக்கு கூடுதல் மந்திரி பதவி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. மராட்டியத்தில் பா.ஜனதா– சிவசேனா கூட்டணி சட்டசபை தேர்தலின் போது தொகுதி பங்கீடு பிரச்சினையால் முறிந்தது. தேர்தலில் இரு கட்சிகளும் தனித்து போட்டியிட்டன. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் |
| அமைச்சராக பதவி ஏற்ற பிறகு 3 மத்திய மந்திரிகளின் சொத்து திடீர் உயர்வு Posted: 24 Oct 2014 10:07 PM PDT பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபை கடந்த மே மாதம் பதவி ஏற்றது. மோடியுடன் 45 பேர் மத்திய மந்திரிகளாக பொறுப்பு ஏற்றனர். அப்போது மத்திய மந்திரிகள் ஒவ்வொருவரின் சொத்து மதிப்பு வெளியிடப்பட்டது. மத்திய மந்திரிகள் 45 பேரில் 41 பேர் தங்களை கோடீசுவரர்கள் என்று கூறி சொத்து விபரங்களை தெரிவித்திருந்தனர். |
| விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கொச்சி விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு Posted: 24 Oct 2014 09:45 PM PDT ஏர் இந்தியா விமானத்தில் குண்டு வெடிக்கும் அல்லது தற்கொலை படை தாக்குதல் நடக்கும் என்று கொல்கத்தா விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. கொச்சி விமான நிலையத்தில் இந்த தாக்குதல் நடக்கும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. |
| கோழிக்கோடு விமான நிலையத்தில் 3½ கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் Posted: 24 Oct 2014 09:42 PM PDT வெளிநாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி செய்ய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் கடத்தல்காரர்கள் பல்வேறு வழிகளில் தங்கத்தை கடத்தி வருகிறார்கள். கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வளைகுடா நாட்டில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க |
| இந்திய-சீன எல்லை விவகாரத்தில் அமைதிக்காக நாட்டின் கவுரவத்தை விட்டுக்கொடுக்க முடியாது: ராஜ்நாத் சிங் Posted: 24 Oct 2014 05:25 PM PDT இந்திய எல்லைப்பகுதியில் சீன ராணுவம் அடிக்கடி ஊடுருவி வருகிறது. இதைப்போல பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இந்த நாடுகளுடன் தொடர்ந்து எல்லைப்பிரச்சினை நீடித்து வருகிறது. |
| கருப்பு பணக்காரர்கள் பட்டியல் வெளியானால் காங்கிரசுக்கு சங்கடம் வராது: ப.சிதம்பரம் பேட்டி Posted: 24 Oct 2014 03:17 PM PDT வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வருவோம் என்று பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பா.ஜனதா வாக்குறுதி அளித்தது. இந்நிலையில், கருப்பு பண முதலைகளின் பட்டியலை பகிரங்கமாக வெளியிட முடியாது என்று சமீபத்தில் கூறியது. இருப்பினும், கோர்ட்டில் தெரிவிப்பதாக கூறியுள்ளது. |
| போலீசார் தேடுதல் வேட்டையில் இளம்பெண் உள்பட 5 மாவோயிஸ்டுகள் கைது Posted: 24 Oct 2014 02:47 PM PDT மராட்டிய மாநிலத்தில் கடந்த 21-ந் தேதி முதல் 23-ந் தேதிவரை, மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். அதில், மாவோயிஸ்டு முக்கிய பிரமுகர்கள் துங்க யேசு பாபு தேகா (வயது 30), மணாஸ் சோனாரி சாய்னு தாராமி (21), ராஜு விஷ்ணு நைதம், வசந்த் ரெஜிராம் பத்திரம் வடே (21), ரூபி சுமன் கவடே (16) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். |
| உணவு பாதுகாப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு குறித்து ஐ.நா. பொதுச்சபையில் இந்தியா கண்டிப்பு Posted: 24 Oct 2014 01:55 PM PDT சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவா நகரில் 3 மாதங்களுக்கு முன் 'டபிள்யூ.டி.ஓ.' என்னும் உலக வர்த்தக அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இதில் உலக நாடுகள் இடையே வர்த்தக நடைமுறை ஒப்பந்தம் நிறைவேற்றும் முயற்சியில் தோல்வி ஏற்பட்டது. |
| மானிய விலையில் வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை குறையாது: தர்மேந்திர பிரதான் Posted: 24 Oct 2014 12:57 PM PDT வீடுகளுக்கு ஆண்டுக்கு, 14.2 கிலோ எடை கொண்ட 12 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் (ரூ.401) வழங்கப்படுகின்றன. அதற்கு மேல் சிலிண்டர் தேவைப்படுபவர்கள் சந்தை விலையான 880 ரூபாய் கொடுத்து தான் வாங்க வேண்டும். மேலும் மாதத்துக்கு ஒரு சிலிண்டர்தான் மானிய விலையில் வழங்கப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. |
| பஞ்சாப் குருத்துவாராவில் சீக்கிய குழுக்களுக்கிடையே துப்பாக்கி சண்டை: 6 பேர் காயம் Posted: 24 Oct 2014 11:08 AM PDT சீக்கிய மத பாரம்பரியப்படி, தீபாவளிக்கு மறுநாள், நிஹாங் எனப்படும் ஆயுதம் தாங்கிய சீக்கிய வீரர்கள், ஒரு குருத்துவாராவின் மைதானத்தில் கூடி, தங்களது துப்பாக்கி, வாள் போன்ற ஆயுதங்களை பொதுமக்களுக்கு தூக்கி காண்பித்தபடி, குதிரையில் வலம் வருவது வழக்கம். |
| யமுனை ஆற்றில் மூழ்கிய பெண்ணை காப்பாற்றிய என்.சி.சி. வீரர்கள் Posted: 24 Oct 2014 07:28 AM PDT டெல்லியில் தற்கொலை செய்யும் முயற்சியில் யமுனை ஆற்றில் குதித்த பெண்ணை என்.சி.சி. வீரர்கள் காப்பாற்றினர். கடற்படையின் என்.சி.சி. பிரிவு வீரர்கள் இன்று காலை மீட்பு படகு உள்ளிட்ட 3 படகுகளில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். |
| நவம்பர் 19-ல் பிஜி செல்கிறார் பிரதமர் மோடி Posted: 24 Oct 2014 06:56 AM PDT பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19-ம் தேதி தீவு நாடான பிஜிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, அங்கிருந்து பிஜி நாட்டிற்கு சென்று, முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| கருப்பு பண விவகாரம்: அருண் ஜெட்லிக்கு ராம் ஜெத்மலானி கடிதம் Posted: 24 Oct 2014 04:51 AM PDT உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கருப்பு பண விவகாரம் பற்றிய வழக்கு தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இந்திய நாட்டின் குடிமகன் என்ற முறையில் தனது கடிதத்தில் ஜெட்லிக்கு சில ஆலோசனைகளை கூறியுள்ளதாகவும், பாரதீய ஜனதா கட்சியை |
| சிறுவனுக்கு சூன்யம் வைத்ததாக கூறி மூன்று பெண்கள் சித்ரவதை Posted: 24 Oct 2014 04:49 AM PDT அசாமில் சிறுவனுக்கு சூன்யம் வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பெண்களை கிராம மக்கள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ககோபதார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கும்சங் தேயிலை தோட்டத்தில், அடித்து துன்புறுத்தப்பட்ட ரதானி கதா, மாலா புமிஜ், கங்கி உராக் ஆகிய மூன்று பெண்களும் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து |
| ஹுட் ஹுட் புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திர கிராமத்தை தத்தெடுத்தார் வெங்கையா நாயுடு Posted: 24 Oct 2014 03:27 AM PDT மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரியான வெங்கையா நாயுடு ஹுட் ஹுட் புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தை சேர்ந்த செப்பாலா உப்பாடா என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளார். அம்மாநிலத்தின் வடக்கு கடற்கரையோர கிராமங்களை ஒட்டுமொத்தமாக |
| சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிக்கும் முன்பு மோடி வருகை தர ஏற்பாடு Posted: 24 Oct 2014 03:25 AM PDT கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு வழிபாடுகளுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான விழா அடுத்த மாதம் 17-ந்தேதி தொடங்குகிறது. பிரதமர் நரேந்திரமோடி, கேரளாவில் சுற்றுப்பயணம் செய்தபோது சபரிமலை கோவில் பற்றியும், அய்யப்பனின் மகிமை குறித்தும் மாநில பா.ஜனதா |
| அரியானாவில் பீடா கடைக்காரருக்கு வந்த ரூ.132 கோடி மின் கட்டண நோட்டீஸ் Posted: 24 Oct 2014 02:28 AM PDT அரியானாவில் பீடா கடை வைத்திருப்பவருக்கு ரூ.132 கோடி மின் கட்டணம் வந்ததால் அவர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அரியானாவின் சொனிபெட் மாவட்டத்தில் பீடா கடை வைத்திருப்பவர் ராஜேஷ். இவருக்கு தீபாவளி அன்று உத்தர் ஹரியானா பிஜ்லி வித்ரான் நிகாமிடமிருந்து மின்சார கட்டணத்திற்கான நோட்டீஸ் வந்தது. |
| Posted: 24 Oct 2014 02:08 AM PDT முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று டெல்லியில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது பாகிஸ்தானின் வாயை அடைத்துவிட்டோம் என்று பிரதமர் மோடி கூறினார், ஆனால் எல்லையில் இன்னும் தாக்குதல் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது என்று அவர் கூறினார். |
| 4 வயது சிறுமி பலாத்காரம்: பள்ளி காவலாளி கைது Posted: 24 Oct 2014 01:39 AM PDT பெங்களூர் ஜாலஹள்ளியில் உள்ள தனியார் இன்டர்நேஷனல் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்த 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |