மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- அரியானா எம்.எல்.ஏ.க்களில் 83 சதவீதம் பேர் கோடீசுவரர்கள்
- அமேதி தொகுதியில் 15 ஆயிரம் பெண்களுக்கு தீபாவளி பட்டுச்சேலை: ஸ்மிரிதி இரானி வழங்கினார்
- கண்ணூர் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டிக்குள் தீக்குளித்த பெண் சாவு
- நிலக்கரி சுரங்கங்கள் மின்னணு முறையில் ஏலம்: மத்திய மந்திரிசபை சிபாரிசு
- குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டால் தேர்தலில் போட்டியிட தடை: தேர்தல் கமிஷன்
- அரியானா புதிய முதல்-மந்திரி இன்று தேர்வு: சுஷ்மா சுவராஜ் பெயரும் பரிசீலனை
- மராட்டியத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி ஆட்சி?: பாஜக தீவிர ஆலோசனை
- மருத்துவ ஆராய்ச்சியில் டாக்டர்கள் கவனம் செலுத்த வேண்டும்: மோடி பேச்சு
- தீபாவளியை முன்னிட்டு ஊழியர்களுக்கு கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை போனசாக வழங்கிய நிறுவனம்
- ஆந்திராவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் பலி
- டெல்லி கால் சென்டர் பெண் ஊழியர் கற்பழிப்பு வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை
- கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணம் கைமாறிய வழக்கு: குற்றச்சாட்டு பதிவு 31–ந்தேதிக்கு தள்ளிவைப்பு
- மணிப்பூர் இடைத்தேர்தலில் காங்கிரசும் நாகாலாந்து இடைத்தேர்தலில் நாகா மக்கள் முன்னணியும் வெற்றி
- அமித்ஷாவின் வெற்றி வியூகம்: மோடி அலையால் தொடரும் வெற்றி
- மே.வங்காளம்-பீகாரை குறிவைக்கும் பா.ஜனதா: டெல்லியிலும் தேர்தலை சந்திக்க வியூகம்
- திருப்பதி கோவில் தரிசன டிக்கெட்: ஆந்திர தபால் நிலையங்களில் முன்பதிவு
| அரியானா எம்.எல்.ஏ.க்களில் 83 சதவீதம் பேர் கோடீசுவரர்கள் Posted: 20 Oct 2014 10:50 PM PDT அரியானா மாநில சட்டசபைக்கு கடந்த 15–ந்தேதி நடந்த தேர்தலில் புதிதாக 90 எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த 90 எம்.எல்.ஏ.க்களில் 75 பேர் அதாவது அரியானாவின் 83 சதவீத எம்.எல்.ஏ.க்கள் கோடீசுவரர்களாவார்கள். என்.ஜி.ஓ. அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. கோடீசுவர எம்.எல்.ஏ.க்களில் அதிகம் பேர் பா.ஜ.க.வை சேர்ந்தவர்களாவார்கள். மொத்தம் உள்ள 46 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களில் 40 எம்.எல்.ஏ.க்கள் பல கோடிகளுக்கு அதிபதி ஆவார்கள். |
| அமேதி தொகுதியில் 15 ஆயிரம் பெண்களுக்கு தீபாவளி பட்டுச்சேலை: ஸ்மிரிதி இரானி வழங்கினார் Posted: 20 Oct 2014 10:42 PM PDT மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கடந்த பாராளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். என்றாலும் அமேதி தொகுதி மக்களுக்காக தொடர்ந்து பாடுபடப் போவதாக அவர் கூறினார். |
| கண்ணூர் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டிக்குள் தீக்குளித்த பெண் சாவு Posted: 20 Oct 2014 09:57 PM PDT கேரள மாநிலம் கண்ணூர் ரெயில் நிலையம் பரபரப்புக்கு பெயர் போன பகுதியாகும். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இதே வழியாக சென்ற பயணிகள் ரெயிலில் பயணம் செய்த இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் கற்பழித்து கொலை செய்த சம்பவம் நடந்தது. அதன் பிறகு ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு |
| நிலக்கரி சுரங்கங்கள் மின்னணு முறையில் ஏலம்: மத்திய மந்திரிசபை சிபாரிசு Posted: 20 Oct 2014 09:32 PM PDT நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான ஒரு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த 1993-ம் ஆண்டில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள் சட்ட விரோதமானவை என்று தீர்ப்பு அளித்தது. அத்தகைய 214 ஒதுக்கீடுகளை ரத்து செய்தது. இதனால் எழுந்துள்ள பிரச்சினைகளை சமாளிப்பது பற்றி பிரதம |
| குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டால் தேர்தலில் போட்டியிட தடை: தேர்தல் கமிஷன் Posted: 20 Oct 2014 08:48 PM PDT தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- குறைந்தபட்சம் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கத்தக்க குற்ற வழக்குகளை சந்திப்பவர்கள் மீது, தேர்தல் தேதி அறிவிப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பு, கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு இருந்தால், அத்தகையவர்கள் தேர்தலில் |
| அரியானா புதிய முதல்-மந்திரி இன்று தேர்வு: சுஷ்மா சுவராஜ் பெயரும் பரிசீலனை Posted: 20 Oct 2014 08:42 PM PDT அரியானா மாநில புதிய முதல்-மந்திரி இன்று தேர்வு செய்யப்படுகிறார். இதற்காக, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில், பா.ஜனதா மேலிட பார்வையாளர்களாக மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி வெங்கையா நாயுடு, கட்சியின் துணைத்தலைவர் தினேஷ் சர்மா ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்த பிறகு, கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் கடிதத்தை சமர் |
| மராட்டியத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி ஆட்சி?: பாஜக தீவிர ஆலோசனை Posted: 20 Oct 2014 04:40 PM PDT மராட்டியத்தில் ஆட்சி அமைக்க எந்த கட்சியின் ஆதரவை பெறுவது என்பது பற்றி பா.ஜனதா தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. 288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 122 இடங்களில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக திகழ்கிறது. கூட்டணி கட்சியான ராஷ்டிரீய சமாஜ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. இதனால் பா.ஜனதா ஆட்சி அமைக்க இன்னும் 22 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. |
| மருத்துவ ஆராய்ச்சியில் டாக்டர்கள் கவனம் செலுத்த வேண்டும்: மோடி பேச்சு Posted: 20 Oct 2014 02:51 PM PDT டெல்லியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மருத்துவ ஆராய்ச்சியில் டாக்டர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தின் (எய்ம்ஸ்) 42-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு படிப்பு முடிந்து வெளியேறும் டாக்டர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் அவர் பேசுகையில் கூறியதாவது:- அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக கல்வி நிறுவனத்தில் மருத்துவம் படித்து பட்டம் பெற்றுள்ள நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இந்த |
| Posted: 20 Oct 2014 04:42 AM PDT தீபாவளியை முன்னிட்டு சூரத்தில் உள்ள வைர ஏற்றுமதி நிறுவனமான அரிகிருஷ்ணா நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை போனசாக வழங்கி அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. |
| ஆந்திராவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் பலி Posted: 20 Oct 2014 03:53 AM PDT ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உப்பட கோத்தபள்ளி என்ற இடத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. தீபாவளியையொட்டி பட்டாசு வாங்குவதற்காக நேற்று மதியம் ஏராளமான பேர் இந்த தொழிற்சாலைக்கு வந்து இருந்தனர். அப்போது மதிய உணவுக்காக தொழிலாளர்கள் பலர் வெளியே சென்று இருந்தனர். அந்த சமயத்தில் திடீரென்று பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் தீப்பற்றிக்கொண்டது. பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடிக்க, தீ மளமளவென்று பரவியது. |
| டெல்லி கால் சென்டர் பெண் ஊழியர் கற்பழிப்பு வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை Posted: 20 Oct 2014 03:05 AM PDT கடந்த 2010 ஆம் ஆண்டு தெற்கு டெல்லியிலுள்ள கால் சென்டரில் பணியாற்றி வந்த இளம்பெண்ணை கற்பழித்த ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அலுவலகத்தில் பணி முடிந்த பின் தனது நண்பருடன் கடந்த 2010 ஆம் ஆண்டு நவம்பர் 14-ந் தேதி வீடு திரும்பும் போது அப்பெண் ஐந்து பேர் கும்பலால் கடத்தப்பட்டார். |
| கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணம் கைமாறிய வழக்கு: குற்றச்சாட்டு பதிவு 31–ந்தேதிக்கு தள்ளிவைப்பு Posted: 20 Oct 2014 12:59 AM PDT 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணம் கைமாறியதாக சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி எம்.பி., |
| மணிப்பூர் இடைத்தேர்தலில் காங்கிரசும் நாகாலாந்து இடைத்தேர்தலில் நாகா மக்கள் முன்னணியும் வெற்றி Posted: 20 Oct 2014 12:40 AM PDT மணிப்பூர் மற்றும் நாகாலாந்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. மணிப்பூர் மாநிலத்தின் ஹியாங்லாம் சட்டப்பேரவை தொகுதியில் |
| அமித்ஷாவின் வெற்றி வியூகம்: மோடி அலையால் தொடரும் வெற்றி Posted: 20 Oct 2014 12:32 AM PDT மோடி அலையால் பா.ஜனதா வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வருகிறது. குஜராத்தில் முதல் – மந்திரியாக இருந்து சிறப்பாக ஆட்சி நடத்தி வந்த மோடியை கலவர வழக்கு குற்றச்சாட்டுகளில் இருந்து கோர்ட்டு விடுவித்தது. மோடி விஸ்வரூபம் எடுத்தார். பாராளுமன்ற தேர்தலில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார். கடும் எதிர்ப்பையும் மீறி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நாடு முழுவதும் பிரசார கூட்டங்களில் பங்கேற்று பேசினார். அவரது |
| மே.வங்காளம்-பீகாரை குறிவைக்கும் பா.ஜனதா: டெல்லியிலும் தேர்தலை சந்திக்க வியூகம் Posted: 20 Oct 2014 12:23 AM PDT பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. நரேந்திரமோடியின் அலையும், அமித்ஷாவின் அரசியல் வியூகமும் காங்கிரசை வீழ்த்த காரணமாக இருந்தது. பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றியது. அமித்ஷாவின் செயல்பாடே இதற்கு காரணம். இதனால் பா.ஜனதா தலைவர் பொறுப்பு அவருக்கு கிடைத்தது. |
| திருப்பதி கோவில் தரிசன டிக்கெட்: ஆந்திர தபால் நிலையங்களில் முன்பதிவு Posted: 19 Oct 2014 11:36 PM PDT திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்ய வசதியாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை தேவஸ்தானம் செய்து உள்ளது. ஆனால் ஆன்லைன் முன்பதிவு வசதியை நகர மக்கள் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். கிராம மக்கள் பயன்பெறும் வகையில் 300 ரூபாய் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |