Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வரலாற்றில் இன்று - அக்டோபர்

Posted: 07 Oct 2014 11:33 AM PDT

வரலாற்றில் இன்று - அக்டோபர்'1 கிமு 331 - மகா அலெக்சாண்டர் பேர்சியாவின் மூன்றாம் டாரியஸ் மன்னனை போரில் வென்றான். 959 - முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். 1787 - "சுவோரொவ்" தலைமையில் ரஷ்யர்கள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தனர். 1788 - நியூவென் ஹியூ வியட்நாமின் மன்னராகத் தன்னை அறிவித்தார். 1795 - பிரான்ஸ் பெல்ஜியத்தைப் பிடித்தது. 1799 - புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டான். 1800 - ஸ்பெயின் ...

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..முதலில் குத்தாட்டம்; பிறகு போராட்டம் !

Posted: 07 Oct 2014 11:26 AM PDT

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்.............. முதலில் ஜெ வின் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ராம்  ஜெத் மலானி கேட்டுக்கொண்டதற்கு,  வரிசை இல் தான் வழக்குகள்   விசாரிக்கப்படும் என்று நீதிபதி சந்திர சேகர், கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம்  ..................இவருடைய வழக்கு எண்  73....இப்போது விசாரிக்கப்படும் வழக்கின் எண்ணிக்கை 53 என்று டிவி இல் சொல்கிறார்கள்  ................ கோர்ட் க்கு 1 கிலோமீட்டர் தொலைவு வரை 144 தடை  உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது...............நாளை மீண்டும் கோர்ட் விடுமுறை என்பதால் ...

ஒசாமாவின் உடலை கடலில் மூழ்கடிக்க 140 கிலோ எடை சங்கிலி

Posted: 07 Oct 2014 11:13 AM PDT

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு, அவரது உடலில் கிட்டத்தட்ட 140 கிலோ எடை கொண்ட சங்கிலி கட்டப்பட்டு கடலில் வீசப்பட்டதாக சிஐஏ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னாள் சிஐஏ இயக்குநரும், அமெரிக்க பாதுகாப்பு செயலருமான லியோன் பனேடா, சமீபத்தில் அமெரிக்க போர்கள் தொடர்பான புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். அதில், அல்-காய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பின் லேடன், அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட பிறகு, எவ்வாறு அவரது உடல் கடலில் வீசப்பட்டது என்பதை விவரித்துள்ளார். "சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு ...

அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா உருவப்படங்களை அகற்ற வேண்டும்: ராமதாஸ்

Posted: 07 Oct 2014 11:04 AM PDT

அரசு அலுவலகங்களிலும், ஆவணங்களிலும் ஜெயலலிதாவின் படங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதையடுத்து முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஜெயலலிதா, பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். பதவி நீக்கப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகும் நிலையில் அரசு அலுவலகங்களில் இருந்து ஜெயலலிதாவின் படங்கள் இதுவரை அகற்றப்படவில்லை. மக்கள் பிரதிநிதிகளுக்கும், நாடு போற்றும் தலைவர்களுக்கும் ...

நீயும் நானும்-கோபிநாத்

Posted: 07 Oct 2014 10:25 AM PDT

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நீயா? நானா?' நிகழ்ச்சியில் சூடான விவாதங்களை வாரம்தோறும் நடத்திக் கொண்டிருக்கும் கோபிநாத், ஆனந்த விகடன் இதழில் 'நீயும் நானும்!' என்ற தலைப்பில் தொடர் எழுதத் துவங்கியபோதே இளைஞர்கள் ஆர்வமுடன் வரவேற்றார்கள். 'நம்மை நல்ல திசையில் அழைத்துச் செல்லவும், ஆலோசனை சொல்லவும் நல்ல நண்பர் ஒருவர் இருக்கிறார்' என்ற எண்ணம் பல இளைஞர்களுக்கு ஏற்பட்டு, தங்கள் எனர்ஜி அதிகரிப்பதாக உணர்ந்தார்கள். ஒவ்வொரு கட்டுரையிலும், மிகுந்த அக்கறையோடு, சமூகப் பிரச்னைகளை எடுத்துக்கொண்டு அழகாகவும் ...

அவள் ஒரு தென்றல் - லக்ஷ்மி நாவல் .

Posted: 07 Oct 2014 10:14 AM PDT

உலகச் செய்திகள்!

Posted: 07 Oct 2014 10:14 AM PDT

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

எபோலா - செய்தித் தொகுப்புகள்

Posted: 07 Oct 2014 10:12 AM PDT

சியரா லியோனில் எபோலா நோய்க்கு 3-வது டாக்டர் பலி லைபீரியா, நைஜீரியா, கினியா குடியரசு, சியரா லியோன் உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 'எபோலா' என்னும் கொடிய நோய் வேகமாக பரவி வருகிறது. இதன் கோரப்பிடியில் சிக்கி 1,400–க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். சுகாதார ஊழியர்களும் இந்த நோய்க்கு தப்பவில்லை. இதுவரை 120-க்கும் அதிகமான சுகாதார ஊழியர்கள் பலியாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பல்லாயிரக்கணக்கானவர்கள் எபோலாவின் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் ...

மருத்துவத்துக்கான நோபல் பரிசு – 3 பேர் பகிர்ந்து கொள்கின்றனர்

Posted: 07 Oct 2014 10:07 AM PDT

இந்த ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை 3 பேர் இப்பரிசை பகிர்ந்து கொண்டுள்ளனர். மனித மூளையில் உள்ள அணுக்களின் (செல்) செயல்பாடு குறித்து இவர்கள் மூவரும் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆராய்ச்சியின் வழி பல்வேறு வியத்தகு விஷயங்களைக் கண்டறிந்தமைக்காக இந்த உயரிய பரிசு கிடைத்துள்ளது. நம்மைச் சுற்றியுள்ள இடத்தின் வரைபடத்தை மூளை உருவாக்கும் விதம் மற்றும் சிக்கலான சூழ்நிலையில் அதற்கேற்ப நம்மை எப்படி வழிநடத்திச் செல்கிறது? என்பதை ஆய்வின் மூலம் மூவரும் விளக்கி உள்ளனர். இங்கிலாந்து ...

பலகார டிப்ஸ்!

Posted: 07 Oct 2014 10:07 AM PDT








நன்றி- அவள்விகடன்

சேது நாட்டு வேங்கை - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .

Posted: 07 Oct 2014 09:59 AM PDT

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் பயன்பாடுகள்

Posted: 07 Oct 2014 09:48 AM PDT

தொடர்ந்த இணையத் தொடர்பு, இக்கால வாழ்க்கையில் அத்தியாவசியத் தேவையாக மாறிவருகிறது. இதற்கென அனைவரும் லேப் டாப் கம்ப்யூட்டரையும், இணைய இணைப்பு பெற டேட்டா கார்ட் என அழைக்கப்படும் இணைய சிறிய மோடங்களையும் எடுத்துக் கொண்டு அலைய முடியாது. இந்த தேவையை நிறைவு செய்திடவே, நமக்கு ஸ்மார்ட் மொபைல் போன்கள் அதிக அளவில் வந்துவிட்டன. அனைவரும் வாங்கும் வகையில், பட்ஜெட் விலையிலும் இவை கிடைப்பதால், அநேக மக்கள் இவற்றை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே ...

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்

Posted: 07 Oct 2014 08:58 AM PDT

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... 01 சித்தமருத்துவர் கு.சிவராமன் அஞ்சறைப்பெட்டி, அந்தக் கால மருத்துவ அறிவியல் நம் கலாசாரத்தோடு ஒட்டிவந்ததன் அடையாளம்! உடல் பற்றிய அறிவும், தாக்கும் நோயின் குறிகுணத்தையும் நம் மூத்தவர்கள் தெளிவாக அறிந்து, வரும்முன் காப்பதையும் உணவே மருந்து என உணவில் மெனக்கிடுவதையும் பண்பாடாக தலைமுறைகளுக்குக் கடத்தியிருந்தனர். கைப்பக்குவமான உணவைக்கொண்டும், தோட்டத்தில் எளிய செடி, கொடிகளைவைத்தும் அவர்கள் அன்று வைத்தியம் செய்த வித்தை, இன்று உலகெங்கும் பல மருத்துவ மற்றும் ...

தமிழகத்தில் வரவிருக்கும் புயல் பெயர் - ஹூட் ஹூட் (HUDHUD)

Posted: 07 Oct 2014 08:37 AM PDT

அக்டோபர் 7 ---- அந்தமான் நிகோபார் பகுதியில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் மேலும் வலுப்பெற்று ஆந்திர கடற்கரையோர பகுதிகளை அடையும் என முன்னெச்சரிக்கை ...

முட்டாளை பிடித்த முக்கோணம் - கோயாவி காமிக்ஸ்.

Posted: 07 Oct 2014 08:25 AM PDT

நில்லுங்கள் ராஜாவே - சுஜாதா தொடர்கதை.

Posted: 07 Oct 2014 08:24 AM PDT

சுஜாதா-நில்லுங்கள் ராஜாவே நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . நில்லுங்கள் ராஜாவே, சுஜாதாவால் சாவி இதழில் எழுதப்பட்டுத் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் கிழக்குப் பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது. கதை: தான் பணிபுரியும் அலுவலகம், தன் மனைவி, குழந்தை உள்ளிட்ட எல்லாரும் தனது அடையாளங்களை மறுப்பதாகக் கூறும் ஒரு நபர் கொலை முயற்சியில் ஈடுபட்டுவிடுகிறார். நீதிமன்றத்தில் அந்த நபரின் மன நலத்தை சோதிக்கச் சொல்கிறார்கள். மனநல மருத்துவரின் ...

இரண்டாவது வாழ்கை - அனுராதாரமணன் நாவல் .

Posted: 07 Oct 2014 08:22 AM PDT

15-10-2014-ஆன்மிகம் இதழை டவுன்லோட் செய்ய

Posted: 07 Oct 2014 08:20 AM PDT

6-10-2014-தினமலர் கம்ப்யூட்டர் மலர் இதழை டவுன்லோட் செய்ய

Posted: 07 Oct 2014 08:19 AM PDT

5-10-2014-தினமலர் வாரமலர் இதழை டவுன்லோட் செய்ய

Posted: 07 Oct 2014 08:18 AM PDT

சிதம்பரம் நடராஜர் கோயிலுள்ள நான்கு வாயில்களின் சிறப்புகள்

Posted: 07 Oct 2014 07:27 AM PDT

- - சிதம்பரம் நடராஜர் கோயிலுள்ள நான்கு வாயில்களுக்கும் நான்கு சிறப்புகள் உண்டு. - கிழக்கு வாயில் வழியாக மாணிக்கவாசகரும் மேற்கு வாயில் வழியாக திருநாவுக்கரசரும் வடக்கு வாயில் வழியாக சுந்தரரும் தெற்கு வாயில் வழியாக திருஞானசம்பந்தரும் நுழைந்து சென்று நடராசரைத் தரிசித்தார்கள் என்பதே அதன் சிறப்பாகும் - -------------------------------- >சு.கண்ணகி (மங்கையர் மலர்)

உடல் எடையை குறைக்க தினமும் சாப்பிட வேண்டிய சில இந்திய உணவுகள்!!!

Posted: 07 Oct 2014 07:26 AM PDT

உடல் எடையை குறைக்க வேண்டுமென்று டயட்டை பின்பற்ற பல இந்தியர்களும் நினைக்கின்றனர். உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு சந்தையில் பல விதமான உடல் எடை குறைப்பு பொருட்கள் கிடைக்கவே செய்கிறது. ஆனால் கலோரிகளை வேகமாகவும் சிறந்த முறையிலும் குறைக்க வேண்டுமானால் கண்டிப்பான உணவுப் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். இந்திய உணவுகளில் மசாலாக்களும் எண்ணெயும் வளமையாக உள்ளதால் அதனைப் பற்றி பலரும் தவறான அபிப்ராயத்தை கொண்டுள்ளனர். ஆனால் ஆரோக்கியமற்ற உணவுகளைப் போல் தெரிந்தாலும் கூட, உங்கள் உடல் எடையை குறைக்கும் பொருட்கள் ...

மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.

Posted: 07 Oct 2014 07:06 AM PDT

. பாரதத்தில் மக்களை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்ட நிலை உள்ளது. அது 1.பிரமணர்கள் 2.சத்ரியர்கள் 3.வைசியர்கல். 4.சூத்திரர்கல். என்பதே ஆகும்.மகாபாரதம் இந்த நான்கு வகையான பிரிவினையுடைய மக்களுக்கு அறம் என்ற ஒன்றை வகுத்து வைத்திருக்கிறது.ஒவ்வொருவருக்கும் ஒரு அறம் உண்டு.மனிதர்கள் எல்லோருக்கும் ஒரே அறம் என்று கிடையாது.இந்த நான்கு பிரிவு மக்களுக்கும் தனித்தனியே அறம் என்பது மாறுபடும். இந்த நான்கு வகையினரையும் நாம் தனித்தனியே விரிவாக காணலாம். 1.பிரமணர்கள். பிரமணர்கள் என்பவர்கள் கற்றல் என்னும் ...

நாளை சந்திர கிரகணம் - பரிகாரம் செய்து கொள்ள வேண்டியவர்கள்...........

Posted: 07 Oct 2014 07:02 AM PDT

மதுரை: நாளை முழுமையான சந்திரகிரகணம் உண்டாவதையொட்டி, பரிகாரம் செய்ய வேண்டியவர்களைப் பற்றி பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது. நாளை கேது கிரஸ்தமாக ரேவதி நட்சத்திரத் தில் உருவாகும் இந்த கிரகணம் பகல் 2.45 மணி தொடங்கி மாலை 6.04க்கு முடிகிறது. அசுவினி, ஆயில் யம், கேட்டை, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், புதன்கிழமையில் பிறந்தவர்களும் கிரகண சாந்தி பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என தகவல் உள்ளது

உடல் நலத்தின் மீது அக்கறையால் சைக்கிள் விற்பனை சூடுபிடிக்கிறது !

Posted: 07 Oct 2014 06:58 AM PDT

புதுடெல்லி: உலகம் முழுவதிலும் உடல் பருமன் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நவீன வாழ்க்கைக்கு ஏற்ப உணவு பழக்கவழக்கங்களும் மாறியதால், உடல் பருமனுக்கு ஆளாவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது நோய்களுக்கு வாயிலாக இருக்கிறது. எனவே, உடல் நலத்தின் மீதான அக்கறை அதிகரிப்பு காரணமாக, கட்டுக்கோப்பாக உடலை வைப்பதற்கும், கொழுப்பு சதையை கரைக்கவம் உணவு கட்டுப்பாடு மற்றும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சைக்கிள் ஓட்டுவதால் உடல் பருமன் குறையும் என்பதால், சைக்கிளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது.சைக்கிள் ...

முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?

Posted: 07 Oct 2014 06:43 AM PDT

-- முருகக் கடவுளுக்கு கந்தன், குமாரன், வேலன், சரவண பவன், ஆறுமுகம் குகன், விசாகன், குருநாதன் என்று எத்தனையோ பெயர்கள் இருக்கிறது. எப்படி முருகனுக்கு மட்டும் இத்தனை பெயர்கள் என்று நமக்குள் பல கேள்விகள் எழலாம். ஒவ்வொரு பெயருக்கும் ஒரு சில காரணங்கள் இருக்கிறது. ஒரு சில பெயர்களுக்கு மட்டுமாவது அதற்கான காரணத்தை நாம் தெரிந்து கொள்ளலாமே? முருகன்: முருகு என்றால் அழகு என்பார்கள். இந்த சொல்லுக்கு இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை, தேன் என்று பல பொருள்களும் இருக்கிறது. ஆதலால் முருகன் மாறாத இளமையும், ...

கடவுளைக் காணுங்கள்...!

Posted: 07 Oct 2014 06:41 AM PDT

- காலங்களைக் கடந்து நிற்பவை எல்லாம் கடவுள் மதங்களின் எல்லைகள் அற்றவை கடவுள். யாரும் எளிதில் பின்பற்ற முடியாத எளிமைதான் கடவுள் - நேர்மை அன்பு அர்ப்பணிப்பு - இவையெல்லாம் கடவுள் நம்பிக்கையும் தோல்vsயும் கடவுள். அறியாமையும் குழந்தையும் பெண்மையும் கடவுள். - எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்தல் கடவுள். பொறுத்து மறப்பது கடவுள். இவையெல்லாம் உங்களிடமிருந்தால் நீங்களே நீக்கமற நிறைந்திருக்கும் கடவுள். - உன்னத இசை கடவுள். நற்பண்பெல்லாம் கடவுள். மன்னிப்புக் கோருபவரும் கடவுள். மன்னிப்பவரும் ...

தீபங்கள் பேசும்!

Posted: 07 Oct 2014 06:38 AM PDT

தீபாவளித் திருநாளில் வீட்டில் விளக்கேற்றுவது வழக்கம்தான். ஆனால்... எண்ணெய், திரி, திசை, முகம் என அந்த விளக்குகளுக்கு உண்டான தாத்பர்யங்கள் அனைத்தும் அறிந்து ஏற்றுவது இன்னும் சிறப்பல்லவா! இதோ... விளக்கு பற்றிய ஆன்மிக விளக்கங்களை உங்களுக்காக வழங்குகிறார் ஆன்மிக சொற்பொழிவாளர் பி.என்.பரசுராமன்! விளக்குகள் பல வகை! மண் விளக்கு, வெண்கல விளக்கு, வெள்ளி விளக்கு, பஞ்சலோக விளக்கு, எவர்சில்வர் விளக்கு (சனிக்கிழமை மட்டும் தோஷ சாந்தி செய்பவர்கள் இதை ஏற்றலாம்) என, எந்த விளக்காக இருந்தாலும், அதில் காமாட்சி ...

குயில் தந்த பூசணி விதை !

Posted: 07 Oct 2014 06:33 AM PDT

குயில் தந்த பூசணி விதை ! தமிழண்ணா, படங்கள் : ஜெயசூர்யா 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கொரியக் கிராமம் ஒன்றில், அண்ணன் தம்பி இருவர் வசித்துவந்தனர். அண்ணன் பெயர், நோல்பு. தம்பி பெயர் கியூங்பு. நோல்பு, பெரிய பணக்காரன். ஆனால், பேராசைக்காரன். இரக்கம் இல்லாதவன். எந்த நல்ல குணமும் அவனிடம் இல்லை. தன் தம்பிக்குக்கூட தோட்டத்தில் விளையும் தானியத்தில் கொஞ்சமும் கொடுக்காதவன். தம்பி கியூங்பு, ஏழையாக இருந்தாலும் அடுத்தவருக்கு உதவும் குணம் உள்ளவன். ஒரு நாள்... குயில் ஒன்று கால் ஒடிந்து வலியால் துடிப்பதைக் ...

ஸ்கைப்' உள்ளூர் சேவை நவம்பர் 10 முதல் கட் ; செல்போன் இண்டர்நெட் சேவைக் கட்டணம் உயர்வு !

Posted: 07 Oct 2014 06:27 AM PDT

புது டில்லி:"ஸ்கைப்' இணையதள வசதி மூலம் உள்ளூர் செல்போன், தொலைபேசி அழைப்புகளுக்கான சேவை நவம்பர் 10 ஆம் தேதியுடன் இந்தியாவில் நிறுத்தப்படும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. "ஸ்கைப்' என்ற வசதி மூலம் இணையத்தின் வழியாக உள்ளூர், வெளிநாடுகளில் உள்ள செல்போன்கள், தொலைபேசிகளுக்கு வாடிக்கையாளர்கள் இலவசமாகத் தொடர்பு கொண்டு பேச முடியும். ஸ்கைப் மென்பொருள் வசதி மூலம் வீடியோ அழைப்புகளையும் மேற்கொள்ளலாம். இதுபோன்ற அழைப்புகளுக்கு இணையத் தொடர்பு பயன்பாட்டுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். இதன்மூலம், ...

செல்வி இந்திரமாலினியின் இரண்டாம் திருமணம்!

Posted: 07 Oct 2014 06:06 AM PDT

செல்வி இந்திரமாலினியின் இரண்டாம் திருமணம்! சுபா, ஓவியம்: ஸ்யாம் அறைக்கு வெளியே 'செல்வி இந்திரமாலினி, பதிப்பாளர், தங்கத்தாமரை பதிப்பகம்' என்று பொறிக்கப்பட்ட பித்தளை பெயர்ப் பலகை! அறையில் இந்திரமாலினி சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தாள். எதிரில் வனதுர்கா. இடையில் மேஜையில் ஒரு டிஜிட்டல் ரிக்கார்டர். 'கேள்வியெல்லாம் முடிஞ்சதா? என் வெற்றிக்கதையைப் பதிவு பண்ணிக்கிட்டியா?' என்று இந்திரமாலினி புன்னகையுடன் கேட்டாள். வனதுர்கா, ரிக்கார்டரை எடுத்துக் கைப்பையில் வைத்துக்கொண்டாள். 'ஒம் பேர் ...

திருப்பதி ஏழுமலையான் தரிசனம் நாளை 10 மணி நேரம் ரத்து!

Posted: 07 Oct 2014 04:42 AM PDT

திருப்பதி : திருமலை ஏழுமலையான் தரிசனம், நாளை, 10 மணிநேரம் ரத்து செய்யப்பட உள்ளது. நாளை 8ம் தேதி, மாலை 4:45 மணி முதல், இரவு 7:05 மணி வரை, சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. கிரகணம் துவங்குவதற்கு, 6 மணிநேரம் முன், திருமலை, ஏழுமலையான் கோவில் நடையை சாத்துவது வழக்கம். அதனால், புதன்கிழமை காலை, 10:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை, ஏழுமலையான் கோவில் மூடப்படும். அன்று காலை, 6:30 மணி முதல், 9:30 மணி வரை, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். சந்திர கிரகணம் முடிந்த பின், இரவு 8:00 மணிக்கு, கோவில் ...

ஏழை,பணக்காரர் இடைவெளி குறைய என்ன செய்ய வேண்டும்?

Posted: 07 Oct 2014 02:36 AM PDT

"ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள்; பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்" என்பது நம் நாட்டில் மக்கள் பேசும் பேச்சாக இருக்கிறது. இதை உறுதி செய்யும் விதமாக, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஏழை, பணக்காரன் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவதாகவும், ஏழைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் ஆசிய பசிபிக் பிராந்தியத்துக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சமூக, பொருளாதார ஆணையம் (யுஎன்-இஎஸ்சிஏபி - United Nations - Economic and Social Commission for Asia and Pacific) தெரிவித்துள்ளது. ...

கொஞ்சம் பெரிய பதிவு தான் ஆனா USEFUL கொசு கடிப்பதும்., தவிர்ப்பதும்!!!

Posted: 07 Oct 2014 12:35 AM PDT

* உலகத்தின் ஆதி உயிரினங்களுள் ஒன்று கொசு. * 2.5 மில்லி கிராம் எடைகொண்ட கொசுவுக்குப் பற்கள் மட்டும் 47. * மழை கொட்டும்போதும் உடல் நனையாமல் துளிகளின் இடுக்குகளில் பறக்க முடிந்த ஒரே பூச்சியினம் கொசு. * ஒரு விநாடிக்கு 300 முதல் 600 முறை வரை சிறகடிக்கிறது. அதுதான் நீங்கள் கேட்கும் ரீங்காரம். * சில வாரங்கள் மட்டுமே ஆயுள்கொண்ட கொசுக்கள் ஆண்டுக்கு 10 லட்சம் மனிதர்களைக் கொன்று குவிக்கின்றன. * கொசு வகைகளின் எண்ணிக்கை, 3000ஐத் தாண்டியுள்ளது. இதில், 80 வகை கொசுக்கள் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும். * ...

இந்தியாவை சுத்தம் செய்வோம்.

Posted: 06 Oct 2014 11:11 PM PDT

இந்தியாவை சுத்தம் செய்வோம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

படிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்!

Posted: 06 Oct 2014 11:10 PM PDT

'ஆட்கள் தேவை என்கிற வாசகம் எழுதப்பட்டிருக்கும் அட்டைகள் திரும்பிய பக்கமெல்லாம் தென்படும் ஊர் திருப்பூர்' என்று பெருமையோடு சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்! இன்றைய தேதியில், ஆண்டுக்கு 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறது 'டாலர் சிட்டி' என்றழைக்கப்படும் திருப்பூர். இதன் மூலம் மறைமுகமாக, நேரடியாக என 6 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கிறது. இதில் பெண் தொழிலாளர்கள் 3 லட்சம் பேர் என்பது, ஆச்சர்ய உண்மை! கடந்த 50 ஆண்டுகளாக திருப்பூரில் வசித்துவரும் ...

காதல் கவிதைகள்

Posted: 06 Oct 2014 11:00 PM PDT

http://www.mediafire.com/download/eyyyj1jc7f5etke/Poem.படப்

அருமையாக இருக்கும் வாசித்து பாருங்கள் .........


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™