Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


முண்டே மரணத்தில் சதி இல்லை: சி.பி.ஐ., அறிக்கையில் தகவல்

Posted:

புதுடில்லி:'மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணத்தில், குற்றச் சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை. சாலை விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாகவே, அவர் மரணம் அடைந்துள்ளார்' என, சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற போது, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக பதவியேற்றவர், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கோபிநாத் முண்டே, 64. இவர், ஜூன் 2ம் தேதி டில்லி விமான நிலையத்திற்கு காரில் சென்ற போது, அவரின் கார் மீது மற்றொரு கார் மோதியதில், கழுத்து மற்றும் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இறந்தார். இருப்பினும், முண்டேயின் மரணம் தொடர்பாக, ...

ஜெ., ஜாமின் மனு தள்ளுபடி எதிரொலியால் உஷார்: கர்நாடகா பாதுகாப்பு குறித்து முதல்வர் ஆலோசனை

Posted:

பெங்களூரு:தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், ஜாமின் மனு தள்ளுபடியானதை தொடர்ந்து, கர்நாடகாவில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, முதல்வர் சித்தராமையாவை, கர்நாடக உள்துறை அமைச்சர் ஜார்ஜ் சந்தித்து பேசினார்.கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதையடுத்து, கர்நாடகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி, முதல்வர் சித்தராமையாவை சந்தித்து, கர்நாடக உள்துறை அமைச்சர் ஜார்ஜ் ஆலோசனை நடத்தினார். கர்நாடகத்திலும், கர்நாடக - தமிழக எல்லையோரங்களிலும், எந்த அசம்பாவிதமும் ...

மகிழ்ச்சியில் துவங்கிய கொண்டாட்டம் சோகத்தில் முடிந்த பரிதாபம்

Posted:

ஜெயலலிதாவிற்கு ஜாமின் கிடைத்ததாக, வெளியான தகவலை தொடர்ந்து, அ.தி.மு.க., தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்தில், ஜாமின் மனு ரத்து செய்யப்பட்டதாக வெளியானத் தகவலை தொடர்ந்து, தொண்டர்கள் சோகத்தில் மூழ்கினர்.அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவிற்கு, சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, கடந்த மாதம் 27ம் தேதி, பெங்களூரு சிறப்புநீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதனால், அமைச்சர்கள் பெங்களூருவில் முகாமிட்டு, ஜெயலலிதாவை ஜாமினில் வெளியே கொண்டு வர, நடவடிக்கை மேற்கொண்டனர். அவரது ஜாமின் மனு, நேற்று ...

தமிழக சட்டம் - ஒழுங்கு கருணாநிதி எதிர்பார்ப்பு

Posted:

சென்னை:தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு பிரச்னை கட்டுப்படுத்த முடியாமல் இருந்தால், அதை கட்டுப்படுத்த வேண்டியவர்கள் கட்டுப்படுத்துவார்கள் என, தி.மு.க., தலைவர்கருணாநிதி கூறினார்.ஜெயலலிதாவின் ஜாமின் மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறித்து, அவர் அளித்த பேட்டி:ஜெயலலிதாவின் ஜாமின் மனுநிராகரிக்கப்பட்டு விட்ட தால், மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு, கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது குறித்து உங்கள்கருத்தென்ன?சட்டம் - ஒழுங்கு பிரச்னை கட்டுப்படுத்த முடியாமல் இருக்குமானால், அதை கட்டுப்படுத்த வேண்டியவர்கள் கட்டுப்படுத்துவர்; அது ...

இதற்கு நடவடிக்கை இல்லை; இனிமேல் கடும் நடவடிக்கை பாயும்: 'பகீர்' போஸ்டர் விவகாரத்தில் பதுங்கிய சென்னை போலீஸ்

Posted:

சென்னையில் நேற்று, இருமாநில மக்களுக்கு இடையே, பெரிய அளவில் மோதலை உருவாக்கும் வகையில், 'பகீர்' வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதுகுறித்து, கர்நாடக போலீசார் புகார் தெரிவித்த பிறகே, சென்னை போலீசார் உஷாராகினர். எனினும், 'பகீர்' போஸ்டர் ஒட்டிய ஆளுங்கட்சி பிரமுகர் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், 'எச்சரிக்கை செய்துள்ளோம்' என, பட்டும்படாமலும் பதில் அளித்தனர்.சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா சிறைத் தண்டனை பெற்றதும், அவரை ஜாமினில் விடுவிக்கக் கோரி, தமிழகத்தின் பல பகுதிகளிலும், அ.தி.மு.க.,வினர் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ...

நான் பிரதமராக இருக்கும் வரை மகாராஷ்டிராவை பிரிக்க முடியாது: தேர்தல் பிரசாரத்தில் மோடி உறுதி

Posted:

துலே (மகாராஷ்டிரா):''நான் டில்லியில் பிரதமர் பதவியில் இருக்கும் வரை, மகாராஷ்டிராவை யாராலும் பிரிக்க முடியாது. மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்த, காங்கிரஸ் கூட்டணி அரசு, விவசாயிகளைப் படுகொலை செய்த அரசு,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.மகாராஷ்டிரா மாநிலத்தில், வரும், 15ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், அங்கு தேர்தல்களம் சூடு பிடித்துள்ளது. பழங்குடியினர் அதிகம் வசிக்கும், துலே மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:பருத்தி மற்றும் வெங்காயம் தொடர்பாக, கடந்த 10 ஆண்டுகளாக, காங்., தலைவர்கள் ...

எல்லையில் தொடர்கிறது பாக்., ராணுவ அட்டகாசம்: ஏழு நாளில் 17 முறை அத்துமீறி தாக்குதல்

Posted:

ஜம்மு:இந்த மாதத்தில், 17வது முறையாக, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக்., படையினர், ஜம்மு - காஷ்மீர் எல்லை பகுதியில் நேற்று தாக்குதல் நடத்தினர். இதில், மூன்று பேர் காயம் அடைந்தனர்.இந்தியா உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஜம்மு - காஷ்மீர் மாநில எல்லைப் பகுதிகளில், பாக்., படையினர் சமீப நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லைப் பகுதிகளில், நேற்று முன்தினம் பாக்., படையினர் நடத்திய தாக்குதலில், கிராமவாசிகள் ஐந்து பேர் பலியாயினர்; 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.இதற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் ...

பல இடங்களில் கடையடைப்பு; அ.தி.மு.க.,வினர் ரகளை: முதல்வர் அறிவிப்புக்கு பலன் கிடைக்குமா?

Posted:

சென்னை:'கடையடைப்பு வேண்டாம்; வேலைநிறுத்தம் வேண்டாம்' என்ற, முதல்வரின் அறிவிப்பை, வணிகர்கள், சமூக ஆர்வலர்கள் வரவேற்று உள்ளனர். ஆளுங்கட்சியின் நிர்ப்பந்தம் இனியாவது குறையுமா என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.போராட்டம்:சொத்து குவிப்பு வழக்கில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சிறை வைத்த நாள் முதலாக, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,வினர், ஆதரவு கட்சிகள், பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.அதன்பின், ஆளுங்கட்சி நெருக்கடி அதிகரிப்பால், பல்வேறு அமைப்புகள், வணிகர்களும் கடையடைப்பு, உண்ணாவிரத போராட்டங்களை ...

நவ., 1 முதல் சென்னை நோக்கியா ஆலை மூடல்

Posted:

சென்னை: 'சென்னை ஸ்ரீபெரும்புதுார் நோக்கியா மொபைல் போன் உற்பத்தி ஆலை, நவ., 1 முதல் மூடப்படும்' என, அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.இந்த ஆலையில், 6,800 தொழிலாளர்கள் இருந்தனர். இவர்களில், 6,000 பேருக்கு, விருப்ப ஓய்வு அளித்து, சில மாதங்களுக்கு முன், நிறுவனம் வெளியேற்றியது.இதன்பின், 800 பேர் பணியாற்றி வந்தனர். ஆலை நிரந்தரமாக மூப்படும் என்ற அறிவிப்பால், இந்த, 800 தொழிலாளர்களும், வேலை இழக்கின்றனர்.மூடல் அறிவிப்பு:ஆலை முடல் தொடர்பாக, நோக்கியா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:நோக்கியா மொபைல் போன் உற்பத்தி ஆலையை, கடந்த ஏப்ரல் முதல், மைக்ரோசாப்ட் நிறுவனம் விலைக்கு ...

ஜெயலலிதாவுக்கு ஜாமின் இல்லை: மனுவை நிராகரித்தது கர்நாடக ஐகோர்ட்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி நீதிபதி அதிரடி

Posted:

சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு ஜாமின் வழங்க, பெங்களூரு உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து ஜாமின் கோரி அவர்கள், உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.வருமானத்துக்கு அதிகமாக, 66.65 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், அ.தி.மு.க., பொதுச் செயலரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு, கடந்த ௨௭ம் தேதி, நான்கு ஆண்டு சிறை தண்டனை மற்றும், 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து, பெங்களூரு தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ஜெ., தோழி சசிகலா, ...

காலத்திற்கு ஒவ்வாத சட்டங்களைரத்து செய்ய அரசு துறைகள் தீவிரம்

Posted:

புதுடில்லி:''காலத்திற்கு ஒவ்வாத மற்றும் பயன்பாட்டில் இல்லாத சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை ரத்து செய்ய, மத்திய அரசின் பல்வேறு அரசு துறைகளும், தீவிரமாக பணியாற்றி வருகின்றன,'' என, கேபினட் செயலர் அஜித் சேத் கூறினார்.டில்லியில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற அவர் கூறியதாவது:அரசின் நடவடிக்கைகளையும், குறைதீர் நடவடிக்கைகளையும் எளிமைப்படுத்த வேண்டியது அவசியம். அதனால், காலத்திற்கு ஒவ்வாத சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை நீக்க வேண்டும் என, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு உள்ளார்.அதனால், பயன்பாட்டில் இல்லாத, காலத்திற்கு ஒவ்வாத சட்டங்களை ரத்து செய்வதற்கான ...

ஜெட்லியுடன் முப்படை தளபதிகள் திடீர் சந்திப்பு

Posted:

புதுடில்லி: எல்லையில் தொடரும் பதற்றமான சூழல் குறித்து, முப்படை தளபதிகள், ராணுவ அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாக்., படையினர் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதால், இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளுக்கிடையே நடப்பதாக இருந்த, கொடி அமர்வு பேச்சு வார்த்தை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து, எல்லைப் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் அனுப்பியது.இந்நிலையில், பாக்., ராணுவத்தின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளதை அடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™