மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- வெள்ளை காலர் ஊழியர்களுக்கு தரும் மரியாதையை கீழ்மட்ட ஊழியருக்கும் தரவேண்டும்: மோடி பேச்சு
- தொழிலாளர் சீர்திருத்த திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
- மாநிலம் விட்டு மாநிலம் மாறினாலும் செல்போன் எண் மாறாது: மார்ச் 31–க்குள் புதிய வசதி அறிமுகம்
- முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார்
- ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை: நோட்டீசு வந்தால் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராவேன் - பவானிசிங்
- தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு
- அனைவருக்கும் சொந்த வீடு திட்டத்தில் பங்கேற்க கனடா ஆர்வம்
- உத்தரகாண்டில் ஆறு பேரை தாக்கிய சிறுத்தையை அடித்துக்கொன்ற கிராம மக்கள்
- 83-வது பிறந்த நாள் காணும் அப்துல் கலாமுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
- உடை மாற்றுவதை ரகசியமாக படம் எடுத்துள்ளனர்: கோர்ட்டில் வழக்கு தொடருவேன்- சரிதாநாயர்
- மே.வங்கத்தில் நடந்த குண்டு வெடிப்பு: சென்னையை சேர்ந்த மூவருக்கு தொடர்பா?-என்.ஐ.ஏ.விசாரணை
- மகாராஷ்டிரா தேர்தலில் வாக்களித்த பாலிவுட் பிரபலங்கள்
- உ.பி.யில் கனமழைக்கு 18 பேர் பேலி
- விசாகப்பட்டினத்தில் குடிதண்ணீர்–உணவு கிடைக்காமல் பொதுமக்கள் அவதி
- தாக்குதல் நடந்ததாக பாகிஸ்தான் கூறும் எல்லையோர கிராமங்களில் ஐ.நா. குழுவினர் ஆய்வு
- பரப்பன அக்ரஹாரா சிறை அருகில் வாடகைக்கு வீடுகள் தேடி அலையும் அ.தி.மு.க.வினர்
- விளையாட்டு மேம்பாட்டுக்கு மேலும் ரூ.450 கோடி நிதி: மோடி அறிவிப்பு
- விபரீதத்தில் முடிந்த இனப்பெருக்க முயற்சி: ஆண் புலி தாக்கி ஜோடிப் புலி பரிதாப பலி
- குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்பு மத்திய மந்திரிசபை விரிவாக்கம்: புதிதாக 17 பேருக்கு மந்திரி பதவி?
- எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: மோர்ட்டார் குண்டுகளை ஏவி தாக்குதல்
| வெள்ளை காலர் ஊழியர்களுக்கு தரும் மரியாதையை கீழ்மட்ட ஊழியருக்கும் தரவேண்டும்: மோடி பேச்சு Posted: 15 Oct 2014 10:54 PM PDT தொழிலாளர்கள் தொடர்பாக புதிய சீர்திருத்தங்களை மோடி இன்று அறிவித்து வருகிறார். இன்றைய அறிவிப்பின் மூலம் தொழிலாளர்களுக்கும், முதலாளிகளுக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதே சமயம் தொழிலாளர் நல ஆய்வாளர்களுக்கும் கிடுக்கிப்பிடி போட முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. |
| தொழிலாளர் சீர்திருத்த திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார் Posted: 15 Oct 2014 05:27 PM PDT 'இந்தியாவில் தயாரிப்போம்' என்னும் இலக்கை எட்டுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக தொழிலாளர் சீர்திருத்த திட்டங்களை அவர் சத்யமேவ் ஜெயதே என்ற பெயரில் இன்று டெல்லியில் தொடங்கி வைக்கிறார். |
| மாநிலம் விட்டு மாநிலம் மாறினாலும் செல்போன் எண் மாறாது: மார்ச் 31–க்குள் புதிய வசதி அறிமுகம் Posted: 15 Oct 2014 04:04 PM PDT செல்போன் எண்ணை மாற்றிக்கொள்ளாமல் செல்போன் சேவை நிறுவனத்தை மாற்றிக்கொள்ளும் 'மொபைல் நம்பர் போர்டபிலிட்டி' வசதி ஏற்கனவே நமது நாட்டில் வந்து விட்டது. அதாவது, தமிழ்நாட்டில் செல்போன் வைத்துள்ள ஒருவர், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் சேவை பெற்று வருகிறபோது, அந்த சேவையில் அதிருப்தி அடைந்தால், அந்த எண்ணை மாற்றிக்கொள்ளாமல், இங்குள்ள மற்றொரு சேவை |
| முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார் Posted: 15 Oct 2014 01:11 PM PDT பிரதமர் நரேந்திர மோடி, முப்படை தளபதிகளான அருப் ராஹா (விமானப்படை), தல்பீர் சிங் சுஹாக் (ராணுவம்), ஆர்.கே. தொவான் (கடற்படை) ஆகியோருடன் நாளை (வெள்ளிக்கிழமை) டெல்லியில் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். |
| ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை: நோட்டீசு வந்தால் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராவேன் - பவானிசிங் Posted: 15 Oct 2014 11:13 AM PDT ஜெயலலிதா ஜாமீன் மனு மீது வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற உள்ள நிலையில் நோட்டீசு வந்தால் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராவேன் என்று அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் கூறினார். சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அவரது சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் |
| தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு Posted: 15 Oct 2014 09:33 AM PDT மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநில சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று அமைதியாக நடந்து முடிந்துள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில், பா.ஜனதா வெற்றி பெற்று இரு மாநிலங்களிலும் தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பும் பா.ஜனதாவுக்கு ஆதரவாகவே அமைந்துள்ளது. |
| அனைவருக்கும் சொந்த வீடு திட்டத்தில் பங்கேற்க கனடா ஆர்வம் Posted: 15 Oct 2014 07:12 AM PDT 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சொந்த வீடு உருவாக்கி கொடுக்கப்படும் என்றும், நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கனவுத் திட்டங்களில் பங்கேற்று தனது தொழில்நுட்பத்தை வழங்க கனடா முன்வந்துள்ளது. |
| உத்தரகாண்டில் ஆறு பேரை தாக்கிய சிறுத்தையை அடித்துக்கொன்ற கிராம மக்கள் Posted: 15 Oct 2014 04:12 AM PDT கடந்த திங்கட்கிழமையன்று அக்கிராமத்திற்குள் நுழைந்த அந்த சிறுத்தை ஆறு பேரை கடித்ததால் மக்கள் அனைவரும் பீதியடைந்தனர். இதையடுத்து சிறுத்தை சுற்றிக்கொண்டிருந்த பகுதிக்கு போலீசாரும், வனத்துறையினரும் விரைந்தனர். ஆனால் அவர்கள் வந்து சேருவதற்குள்ளாகவே சிறுத்தையை கண்டுபிடித்த பொது மக்கள் அதை அடித்துக்கொன்றனர். கடந்த 15 |
| 83-வது பிறந்த நாள் காணும் அப்துல் கலாமுக்கு பிரதமர் மோடி வாழ்த்து Posted: 15 Oct 2014 03:42 AM PDT இந்திய அணுசக்தி துறையில் முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் பங்கு அபரிமிதமானது. பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்திய இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து ஒட்டுமொத்த உலகையும் அசந்து போக வைத்த அப்துல் கலாமுக்கு இன்று 83-வது பிறந்த நாள். |
| உடை மாற்றுவதை ரகசியமாக படம் எடுத்துள்ளனர்: கோர்ட்டில் வழக்கு தொடருவேன்- சரிதாநாயர் Posted: 15 Oct 2014 03:37 AM PDT கேரளாவில் நடந்த சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதாகி சமீபத்தில் ஜாமீனில் விடுதலையானவர் சரிதாநாயர். இவருக்கு காங்கிரஸ் கூட்டணி அரசின் முக்கிய பிரமுகர்கள் சிலர் உதவி செய்ததாக எதிர் கட்சியினர் குற்றம் சாட்டினர். இது பற்றி விசாரணை நடந்த நிலையில் முதல்–மந்திரி உம்மன்சாண்டி அலுவலக ஊழியர்கள் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். |
| மே.வங்கத்தில் நடந்த குண்டு வெடிப்பு: சென்னையை சேர்ந்த மூவருக்கு தொடர்பா?-என்.ஐ.ஏ.விசாரணை Posted: 15 Oct 2014 03:35 AM PDT மேற்கு வங்காள மாநிலத்தில் பர்த்வான் நகரில் கடந்த 2–ந்தேதி குடியிருப்புகளுக்கு மத்தியில் ஒரு வீட்டில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயத்துடன் உயிர் தப்பினார். இது தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு போலீசாரும், மேற்கு வங்காள சி.ஐ.டி. போலீசாரும் இணைந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குண்டு வெடிப்பில் பலியானவர்கள் பற்றி விசாரணை நடத்தியதில் அவர்கள் |
| மகாராஷ்டிரா தேர்தலில் வாக்களித்த பாலிவுட் பிரபலங்கள் Posted: 15 Oct 2014 03:02 AM PDT மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. அம்மாநில தலைநகர் மும்பையில் பாலிவுட் பிரபலங்கள் பலர் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். ராஜ்யசபா எம்.பி. ஜெயாபச்சன், ஹேமமாலினி, ரேகா மற்றும் குல்ஷன் க்ரோவர் ஆகியோர் தங்கள் பகுதி வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தனர். |
| உ.பி.யில் கனமழைக்கு 18 பேர் பேலி Posted: 15 Oct 2014 02:46 AM PDT ஆந்திராவில் கரைகடந்த ஹுட் ஹுட் புயலால் அம்மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அப்புயலின் தாக்கம் உத்தரப்பிரதேசத்திலும் எதிரொலித்துள்ளது. அம்மாநிலத்தின் கிழக்கு பகுதியில் பெய்த கனமழையால் 18 பேர் பலியானதாக அரசு செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். |
| விசாகப்பட்டினத்தில் குடிதண்ணீர்–உணவு கிடைக்காமல் பொதுமக்கள் அவதி Posted: 15 Oct 2014 02:01 AM PDT ஆந்திர மாநிலத்தில் 'ஹூட் ஹூட்' புயல் தாக்கியதை தொடர்ந்து விசாகப்பட்டினம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கு இன்னும் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. புயல் தாக்கி 3 நாட்களாகியும் இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை. மின் கம்பங்கள் அனைத்தும் சேதமடைந்து விட்டதால் விசாகப்பட்டினம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளது. |
| தாக்குதல் நடந்ததாக பாகிஸ்தான் கூறும் எல்லையோர கிராமங்களில் ஐ.நா. குழுவினர் ஆய்வு Posted: 15 Oct 2014 01:56 AM PDT எல்லைப்பகுதியின் ஓரம் அமைந்திருக்கும் இந்திய கிராமங்கள் மீது கடந்த வாரம் தாக்குதல் நடத்தி அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான், தங்கள் நாட்டு எல்லையோரம் உள்ள கிராமங்களில் இந்தியப் படையினர் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 12 பொதுமக்கள் பலியானதாகவும், 69 பேர் காயமடைந்ததாகவும் குற்றம்சாட்டி வருகின்றது. இந்தப் பொய்க் குற்றச்சாட்டை புகாராக தயாரித்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு பாகிஸ்தான் அரசு அனுப்பி வைத்தது. தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை ஐ.நா.குழுவினர் பார்வையிட்டு |
| பரப்பன அக்ரஹாரா சிறை அருகில் வாடகைக்கு வீடுகள் தேடி அலையும் அ.தி.மு.க.வினர் Posted: 15 Oct 2014 01:53 AM PDT ஜெயலலிதா பெங்களூர் சிறையில் இருப்பதால் தினமும் அ.தி.மு.க.வினர் பெருமளவில் பெங்களூர் செல்கிறார்கள். பெங்களூர் நகரில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் பரப்பன அக்ரஹாரா ஜெயில் உள்ளது. அங்குள்ள சிறை வளாகத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த தலைவர்கள் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் தினமும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை |
| விளையாட்டு மேம்பாட்டுக்கு மேலும் ரூ.450 கோடி நிதி: மோடி அறிவிப்பு Posted: 15 Oct 2014 01:07 AM PDT 17–வது ஆசிய விளையாட்டுப்போட்டி தென் கொரியாவில் உள்ள இன்சியான் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் இந்தியா 11 தங்கம், 10 வெள்ளி, 36 வெண்கலம் ஆக மொத்தம் 57 பதக்கம் வென்று பதக்கப்பட்டியலில் 8–வது இடத்தை பிடித்தது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். |
| விபரீதத்தில் முடிந்த இனப்பெருக்க முயற்சி: ஆண் புலி தாக்கி ஜோடிப் புலி பரிதாப பலி Posted: 15 Oct 2014 12:22 AM PDT கர்நாடக மாநிலம், மங்களூர் நகரின் அருகில் இருக்கும் வமஞ்சூர் பகுதியில் பிலிகுலா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் இருக்கும் பண்ட்டி என்ற பெண் புலியை இனப்பெருக்கத்துக்காக ஒரு கூண்டுக்குள் அடைத்த சரணாலய அதிகாரிகள், கடந்த திங்கட்கிழமை காலை அதே கூண்டுக்குள் குமார் என்ற ஆண் புலியையும் உலவ விட்டனர். பண்ட்டியை கண்ட குமார் ஆவேசமாக அதன்மீது எகிறிப்பாய்ந்தது. பயந்து ஒதுங்கிச் சென்ற பண்ட்டியை |
| குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்பு மத்திய மந்திரிசபை விரிவாக்கம்: புதிதாக 17 பேருக்கு மந்திரி பதவி? Posted: 14 Oct 2014 11:53 PM PDT பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசு பதவி ஏற்று 5 மாதங்கள் ஆகிறது. கடந்த 5 மாதங்களாக பிரதமர் மோடி தனது மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள மந்திரிகளின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார். மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள சிலர் தனது அமைச் |
| எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: மோர்ட்டார் குண்டுகளை ஏவி தாக்குதல் Posted: 14 Oct 2014 11:52 PM PDT போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக காஷ்மீர் மாநிலத்தில் எல்லையோரத்தில் உள்ள 192 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லைப்பகுதியில் இந்திய ராணுவ நிலைகள் மீதும், கிராமங்கள் மீதும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வந்தது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய தாக்குதலால் எல்லையோரத்தில் உள்ள 113 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த கிராமங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |