Tamil Star |
- அரசு நிறுவனங்கள் உரிய முறையில் இயங்குவதில்லை! தமரா குணநாயகம் கருத்து
- அமைச்சர் எஸ்.பி.யின் நடவடிக்கைகளுக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் எதிர்ப்பு!
- மட்டக்களப்பை தத்தெடுக்கப்போவதாக கனடாவின் தேர்தலில் வாக்குறுதி!
- கட்டுபடுத்த எபோலாவை போராடும் நாடுகளுக்கு பேஸ்புக் நிறுவனர் ரூ.150 கோடி!
| அரசு நிறுவனங்கள் உரிய முறையில் இயங்குவதில்லை! தமரா குணநாயகம் கருத்து Posted: 15 Oct 2014 10:13 PM PDT
நாட்டின் அரச நிறுவனங்கள் உரிய முறையில் இயங்குவதில்லை என முன்னாள் இராஜதந்திரி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம், நீதிமன்றக்கட்டமைப்பு, அரசியல் கட்சிகள், ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் வெளிவிவகாரத் துறையுடன் தொடர்புடைய நிறுவனங்கள் செயலிழந்துள்ளன. இலங்கை வெளிவிவகார அமைச்சு எனது பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள அனுமதியளிக்கவில்லை. இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்த போது அதற்கு எதிராக போராடினன். அமெரிக்காவுடன் பேச வேண்டாம் என எனக்கு கட்டளையிட்ட வெளிவிவகார அமைச்சுää எனக்குத் தெரியாமல் அமெரிக்காவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முயற்சித்தது. எவ்வாறெனினும் நான் பதவி வகித்த காலத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவிருந்த தீர்மானத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க முடிந்தது. இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் இராஜதந்திர சேவையை ஒரு குழுவினர் கைப்பற்றியுள்ளனர். தேசத்தின் கொள்கைகளை விடவும், குறித்த நபர்களின் விருப்பு வெறுப்புக்களே முன்னிலைப்படுத்தப்படுகின்றன. தற்போதைய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் செனுகா செனவிரட்ன ஜெனீவாவின் நிரந்தர பிரதிநிதியாக கடமையாற்றிய காலத்தில், புலிகளுக்குச் சொந்தமான நிறுவனங்களுடன் தொடர்பு பேணப்பட்டது. நிரந்தர பிரதிநிதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் புலிகளுக்கு சொந்தமான நிறுவனமொன்றினால் நிர்மாணிக்கப்பட்டது. இது தொடர்பிலான ஆவணங்கள் என்னிடம் உண்டு. நான் பதவி வகித்த காலத்தில் இது குறித்த கணக்காய்வு மற்றும் பாதுகாப்பு தொடர்பான அறிக்கைகளை கோரியிருந்தேன். எதிர்த்தரப்பினரைக் கொண்டு வீடு கட்டினால் அவர்களுக்கு உள்ளே இருக்கக்கூடிய விடயங்கள் துல்லியமாக தெரிந்திருக்கும். சில வேளைகளில் இரகசியமான முறையில் உள்ளே பேசப்படும் விடயங்கள் கூட ஒட்டுக் கேட்கப்படலாம். எனவேதான் குறித்த விபரங்களை நான் கோரியிருந்தேன். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறுவதற்கு ஒரு மாத காலத்திற்கு முன்னதாக என்னை ஜெனீவாவிற்கான நிரந்தரப் பிரதிநிதியாக நியமித்தார்கள். இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்ற உத்தேசித்திருந்த காலம் அது. நாம் எவ்வாறு அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போகின்றோம் என்பது பற்றிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை. அவற்றை அறிந்துகொள்ள நான் இலங்கைக்கு வரப்போவதாக அறிவித்தேன். வெளிவிவகார அமைச்சு அதற்கு அனுமதியளிக்கவில்லை. ஜனாதிபதி என்னை அழைத்தார், அதன் அடிப்படையில் நான் இலங்கைக்கு வந்தேன். எனினும், சஜின் வாசும் அமைச்சரும் என்னை கடுமையான திட்டினார்கள். உத்தியோகபூர்வ உத்தரவுகளை மீறி இலங்கைக்கு வந்தது பிழையானது என தெரிவித்திருந்தனர். எவ்வாறான தந்திரோபாயங்களின் அடிப்படையில் நாம் நடவடிக்கை எடுக்கப் போகின்றோம் என்பது பற்றி தெரியாத காரணத்தினால் நான் இலங்கைக்கு வந்தேன். இராஜதந்திரிகள் நடத்தப்படும் விதம் குறித்து திருப்தி அடைய முடியாது என தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமைச்சர் எஸ்.பி.யின் நடவடிக்கைகளுக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் எதிர்ப்பு! Posted: 15 Oct 2014 10:06 PM PDT
உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் நடவடிக்கைகளுக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அமைச்சரின் நடவடிக்கைகள் மோதல்களை தூண்டக் கூடிய வகையிலும், ஒட்டுமொத்த கல்வி முறைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய வகையிலும் அமைந்துள்ளது என பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்க ஒன்றியத்தின் தலைவர் பேராசிரியர் சந்திரகுப்த தெனுவர தெரிவித்துள்ளார். உயர்கல்வி அமைச்சின் முதன்மைப் பொறுப்பு பல்கலைக்கழக மாணவர்களின் நலன்களை உறுதி செய்து மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாகும். எனினும், தற்போதைய உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நாட்டுக்குள் குண்டர்குழு பொறிமுறைமை ஒன்றை உருவாக்கியுள்ளார். மாணவர்களை அடக்குமுறைக்கு உட்படுத்தி வரும் உயர்கல்வி அமைச்சர் தனது கடந்த காலத்தை சற்று நினைத்துப் பார்க்க வேண்டும். மக்கள் அரசாங்கமொன்றை நிறுவிக்கொள்வது தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலேயேயாகும். ஜனாதிபதி தனது பணிகளை பிரித்து வேறு ஒருவரிடம் ஒப்படைப்பது குறித்த பணி செவ்வனே நடக்க வேண்டும் என்பதற்காகவே. எனினும், உயர்கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளவருக்கு அந்தப் பதவி பொருத்தமற்றது. அவர் வர்த்தக விவகார அமைச்சுப் பதவிக்கு என்றால் பொருத்தமானவராக இருக்கலாம். உயர்கல்வி அமைச்சின் பிரதான இலக்கு இலவச கல்வி முறைமையை தனியார் மயப்படுத்துவதேயாகும். இலவச கல்வியை ஒர் வர்த்தகப் பண்டமாகவே அவர் நோக்குகின்றார். கடந்த சில ஆண்டுகளாக பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லை. பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு வழங்கப்படாத காரணத்தினால் மாணவர்கள் கொட்டகை அமைத்து போராட நேரிட்டுள்ளது. இவ்வாறு போராடும் மாணவர்கள் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பது குண்டர் குழுக்களைக் கொண்டு தாக்குவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. உயர்கல்வி அமைச்சரின் இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும். நாட்டுக்கு மக்களுக்கு மாணவர்களுக்கு சேவையாற்ற நியமிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தமது கடமைகளை உரிய முறையில் செய்யத் தவறினால் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என மக்களிடம் கோருகின்றேன் என பேராசிரியர் சந்திரகுப்த தெனுவர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மட்டக்களப்பை தத்தெடுக்கப்போவதாக கனடாவின் தேர்தலில் வாக்குறுதி! Posted: 15 Oct 2014 04:53 AM PDT
கனடாவின் தெற்கு ஒன்றாரியோ மாநில Mississauga மாநகர சபை மேயர் பதவிக்காக நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் திருமதி Bonni Crombie இத்தேர்தலில் தான் வெற்றி பெற்றால் இலங்கையின் மட்டக்களப்பை தான் தத்தெடுக்கப்போவதாக வாக்குறுதியளித்துள்ளார். Mississauga நகரில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதியில் மேற்கொண்ட பிரச்சாரங்களின் போதே மட்டக்களப்பைத் தத்தெடுப்பது என்ற வாக்குறுதி அவரால் வழங்கப்பட்டது. Bonni Crombie கனடிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன்இ மாநகரசபை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். இதன் அடிப்படையில் மாநகர மேயராகப் பதவி வகிப்பதற்கான அனைத்துக் தகுதிகளும் தனக்குள்ளதாக அவர் தெரிவித்துவருகின்றார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கட்டுபடுத்த எபோலாவை போராடும் நாடுகளுக்கு பேஸ்புக் நிறுவனர் ரூ.150 கோடி! Posted: 15 Oct 2014 12:13 AM PDT
எபோலாவை கட்டுபடுத்த போராடும் நாடுகளுக்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷுக்கர் பெர்க் ரூ.150 கோடி நிதி உதிவி அளிக்க போவதாக அறிவித்துள்ளார். எபோலா நோய் தாக்கி மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ழள்ளனர். 9,000 பேர் அந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எபோலா பராவாமல் தடுக்க உலக சுகாதார நிறுவனம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் எபோலா நோய் தாக்கி மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளான கினியா லைபேரியா சியரால் லியோன் உள்ளிட்ட நாடுகளுக்கு உதவும் வகையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷுக்கர் பெர்க்கும் அவரது மனைவியும் இனைந்து ரூ.150 கோடி நிதிஉதவி அளிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். எபோலா நோயை கட்டுப்படுத்த அமெரிக்காவில் செயல்பட்டு வரும் மையங்கள் மூலம் அவர்களுக்கு இந்த நிதிஉதவி அளிக்கப்படும் என பேஸ்புக் நிறுவனர் தெரிவித்துள்ளார். இதனிடையே எபோலா நோயை கட்டுபடுத்த துரித நடவடிக்கைகளை எடுக்கபட வில்லை எனில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. கடந்த 4 வாரங்களில் வாரத்துக்கு புதிய ஆயிரம் எபோலா நோயாளிகள் உருவாகியுள்ளதாகவும், அந்நோயை கட்டுபடுத்த வேண்டிய நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் எபோலா ஒரு பேரழிவு சக்தியாக உருவெடுத்துவிடும் உலக சுகாதாரம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடதக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




