மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- டீசல் விலை ரூ. 2.50 குறைகிறது
- மராட்டியம், அரியானா சட்டசபை தேர்தல்: விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
- கருப்பு பண விவகாரம்: இந்திய குழுவினர் சுவிட்சர்லாந்து பயணம்
- ரூ.9 ஆயிரம் கோடிக்கான ஹெலிகாப்டர் டெண்டர் ரத்து: உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு
- டெல்லியில் பெண் கடத்தி கற்பழிப்பு: 5 பேரும் குற்றவாளிகள் என கோர்ட்டு தீர்ப்பு
- ஜெயலலிதா ஜாமீன் வழக்கில் பாலி நாரிமன் ஆஜராக கூடாது: தலைமை நீதிபதிக்கு டிராபிக் ராமசாமி கடிதம்
- எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியா-பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பேச்சு
- ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பிளிப் கார்ட் நிறுவனத்துக்கு ரூ.1,000 கோடி அபராதம்?
- ஜெயலலிதா அறையில் குளுகுளு வசதியா? சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயசிம்மா மறுப்பு
- ஆசிய போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
- சட்டசபை தேர்தல்: மராட்டியம், அரியானாவில் இன்று ஓட்டுப்பதிவு
- பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.28 குறைந்தது
- சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் ஆஜராக தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
- செவ்வாயின் துணைக் கோளான போபோசை படம் பிடித்து அனுப்பிய மங்கள்யான்
- வெளிநாட்டில் இருந்து 56 கடற்படை ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான டெண்டர் ரத்து
- விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது: பைலட்டுகள் உயிர் தப்பினர்
- ஜம்மு காஷ்மீரில் ஐ.எஸ்.ஐ.எஸ். கொடியை காட்டியவர்கள் முட்டாள்கள்: உமர் ஆவேசம்
- தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் ஆன பிறகே டீசல் விலை குறைப்பு: பெட்ரோலிய மந்திரி தகவல்
- புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திராவுக்கு 1000 கோடி ரூபாய் நிவாரண உதவி: பிரதமர் அறிவிப்பு
- தெலுங்கானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுமி பரிதாப சாவு
| Posted: 14 Oct 2014 11:21 PM PDT சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. பெட்ரோல் விலை ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்தது. இந்த நிலையில் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.50 வரை குறைய வாய்ப்பு |
| மராட்டியம், அரியானா சட்டசபை தேர்தல்: விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு Posted: 14 Oct 2014 11:12 PM PDT மராட்டிய மாநிலத்தில் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு 4,119 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் ஆண் வேட்பாளர்கள் 3,843 பேரும் பெண் வேட்பாளர்கள் 276 பேரும் உள்ளனர். பாரதீய ஜனதா சார்பில் 280 பேரும், காங்கிரஸ் சார்பில் 287 பேரும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் 278 பேரும், சிவசேனா சார்பில் 282 பேரும் |
| கருப்பு பண விவகாரம்: இந்திய குழுவினர் சுவிட்சர்லாந்து பயணம் Posted: 14 Oct 2014 10:32 PM PDT சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வரர்களும், அரசியல்வாதிகளும் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான தகவல்களை தரும்படி இந்தியா பலமுறை கேட்டும் சுவிட்சர்லாந்து மறுத்து வருகிறது. |
| ரூ.9 ஆயிரம் கோடிக்கான ஹெலிகாப்டர் டெண்டர் ரத்து: உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு Posted: 14 Oct 2014 05:10 PM PDT இந்திய கடற்படை பயன்படுத்தி வரும் சீட்டா, சேடக் ஆகிய ஹெலிகாப்டர்களுக்கு பதிலாக, வெளிநாட்டில் இருந்து 56 ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்ய கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடற்படை சார்பில் டெண்டர் விடப்பட்டது. ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில், இந்த ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட இருந்தன. இத்தாலி |
| டெல்லியில் பெண் கடத்தி கற்பழிப்பு: 5 பேரும் குற்றவாளிகள் என கோர்ட்டு தீர்ப்பு Posted: 14 Oct 2014 04:43 PM PDT தெற்கு டெல்லி தவுலா கான் பகுதியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் 30 வயது வடகிழக்கு மாநில பெண் ஒருவர் வேலைபார்த்து வந்தார். கடந்த 2010-ம் ஆண்டு நவம்பர் 24-ந்தேதி அவர் வேலை முடிந்து தனது நண்பருடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 5 பேர் அந்த பெண்ணை மோங்கோல்புரி என்ற இடத்துக்கு கடத்திச் சென்று 5 பேரும் கற்பழித்தனர். |
| ஜெயலலிதா ஜாமீன் வழக்கில் பாலி நாரிமன் ஆஜராக கூடாது: தலைமை நீதிபதிக்கு டிராபிக் ராமசாமி கடிதம் Posted: 14 Oct 2014 04:33 PM PDT கர்நாடகா ஐகோர்ட்டில் ஜாமீன் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா தரப்பில் கடந்த 9-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் தலைமை நீதிபதியின் அமர்வில் வேண்டுகோள் விடுத்தார். |
| எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியா-பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பேச்சு Posted: 14 Oct 2014 03:37 PM PDT காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் கடந்த 2 வாரங்களாக இரு தரப்பு ராணுவத்துக்கும் இடையே கடும் துப்பாக்கிசூடு, சிறிய ரக பீரங்கி தாக்குதல்கள் நடந்தன. இதில் இரு பக்கமும் பலத்த சேதம் ஏற்பட்டது. தற்போது எல்லையில் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு பெரும்பாலும் அமைதி |
| ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பிளிப் கார்ட் நிறுவனத்துக்கு ரூ.1,000 கோடி அபராதம்? Posted: 14 Oct 2014 03:25 PM PDT ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் பிரசித்தி பெற்ற நிறுவனம், 'பிளிப் கார்ட்'. இந்த நிறுவனம் சமீபத்தில் அதிரடி தள்ளுபடி விற்பனையை அறிவித்தது. ஒரே நாளில் 15 லட்சம் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கி குவித்தனர். இதன் மூலம் இந்த நிறுவனம் ரூ.600 கோடியை அள்ளியது. |
| ஜெயலலிதா அறையில் குளுகுளு வசதியா? சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயசிம்மா மறுப்பு Posted: 14 Oct 2014 02:25 PM PDT பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா இருக்கும் அறையில் 'குளுகுளு' வசதி செய்யப்பட்டு உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இந்த தகவலை சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயசிம்மா மறுத்து உள்ளார். |
| ஆசிய போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு Posted: 14 Oct 2014 01:43 PM PDT தென்கொரியாவின் இன்சியோன் நகரில் அண்மையில் நடந்து முடிந்த 17-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 11 தங்கம் உள்பட 57 பதக்கங்களை கைப்பற்றி 8-வது இடத்தை பிடித்தது. பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை டெல்லியில் உள்ள தனது |
| சட்டசபை தேர்தல்: மராட்டியம், அரியானாவில் இன்று ஓட்டுப்பதிவு Posted: 14 Oct 2014 12:52 PM PDT 288 தொகுதிகளை கொண்ட மராட்டிய மாநில சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பிரசாரம் மும்முரமாக நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இதை தொடர்ந்து இன்று தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக 15 |
| பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.28 குறைந்தது Posted: 14 Oct 2014 12:06 PM PDT சர்வதேச சந்தையில் முன் எப்போதும் இல்லாத வகையில் கச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. அன்று நள்ளிரவு முதல் சென்னையில் பெட்ரோல் விலை |
| சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் ஆஜராக தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் Posted: 14 Oct 2014 11:36 AM PDT தே.மு.தி.க. துணை செயலாளர், வக்கீல் ஜி.எஸ்.மணி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரின் மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பவானி சிங் தொடருவதற்கு ஆட்சேபம் தெரிவித்து கர்நாடக அரசுக்கும், கர்நாடக ஐகோர்ட்டுக்கும் ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. |
| செவ்வாயின் துணைக் கோளான போபோசை படம் பிடித்து அனுப்பிய மங்கள்யான் Posted: 14 Oct 2014 09:44 AM PDT செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட மங்கள்யான், இன்று செவ்வாயின் துணைக் கோளான போபோசை படம் பிடித்து அனுப்பியுள்ளது. மங்கள்யான் அனுப்பிய போபோசின் புகைப்படங்களில் ஒன்றை இஸ்ரோ இன்று தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. செவ்வாய் |
| வெளிநாட்டில் இருந்து 56 கடற்படை ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான டெண்டர் ரத்து Posted: 14 Oct 2014 08:17 AM PDT இந்திய கடற்படை பயன்பாட்டிற்காக வெளிநாடுகளில் இருந்து 56 ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான டெண்டரை பாதுகாப்புத்துறை இன்று ரத்து செய்தது. ரூ.3600 கோடி மதிப்பீட்டில் விவிஐபி ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதால், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது. வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து இலகு ரக ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான |
| விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது: பைலட்டுகள் உயிர் தப்பினர் Posted: 14 Oct 2014 07:46 AM PDT மகாராஷ்டிர மாநிலம் புனே அருகில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விழுந்து நொறுங்கியது. புனே லோகிகான் விமானப்படை தளத்தில் இருந்து இரண்டு பைலட்டுகள் இன்று மாலை சுகோய் எஸ்.யு.-30எம்.கே.ஐ. ரக போர் விமானத்தில் வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து புனே அருகில் உள்ள தியூர் கிராமத்தில் விழுந்து நொறுங்கியது. |
| ஜம்மு காஷ்மீரில் ஐ.எஸ்.ஐ.எஸ். கொடியை காட்டியவர்கள் முட்டாள்கள்: உமர் ஆவேசம் Posted: 14 Oct 2014 07:07 AM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் கொடியை காட்டியது சில முட்டாள் இளைஞர்களின் செயல் என்று முதல்வர் உமர் அப்துல்லா கடுமையாகச் சாடினார். டெல்லியில் இன்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்த உமர் அப்துல்லா, பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:- |
| தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் ஆன பிறகே டீசல் விலை குறைப்பு: பெட்ரோலிய மந்திரி தகவல் Posted: 14 Oct 2014 06:51 AM PDT சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்துள்ளதால், பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்தன. அதன்படி இந்த மாத துவக்கத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசுகள் குறைக்கப்பட்டது. பிரதமர் மோடி அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய பிறகு டீசல் விலை |
| புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திராவுக்கு 1000 கோடி ரூபாய் நிவாரண உதவி: பிரதமர் அறிவிப்பு Posted: 14 Oct 2014 04:57 AM PDT ஆந்திர மாநிலத்தை தாக்கிய ஹுட் ஹுட் புயலால் விசாகப்பட்டினம் நகரம் முற்றிலும் சிதைந்து போயுள்ளது. மின் வினியோகம் தடைபட்டுள்ளதுடன், தொலை தொடர்பு சேவையும் முடங்கியுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. |
| தெலுங்கானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுமி பரிதாப சாவு Posted: 14 Oct 2014 04:04 AM PDT தெலுங்கானா மாநிலம், ரெங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள இப்ராஹிம் பட்டினம் அருகேயுள்ள மஞ்சலா கிராமத்தை சேர்ந்த தம்பதியர் நாகைய்யா–அயிலம்மாள். இவர்களது பேத்தி கிரிஜா (வயது 4) அங்குள்ள பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார். தாய்–தந்தையை இழந்த கிரிஜா, தனது பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |