Tamil Star |
- தேர்தல் நடத்தப்பட்டால் ஆளும் கட்சிக்கு பாதக நிலைமை ஏற்படும்: விதுர விக்ரமநாயக்க எச்சரிக்கை!
- உறவின் பெறுமதியை இலங்கையுடன் பாகிஸ்தான் அறிந்துள்ளது!
- கிரகத்தில் காலடி எடுத்து வைக்கும் முதலாவது நபராக 13-வயது பெண்: நாசா பயிற்சி அளிக்கின்றது!!!
- சிரித்த முகத்தை சீரியஸ் ஆக்கனும்னா இவங்ககிட்ட கத்துக்கணும்….
- தனக்கு தானே முடிவெட்டி அசத்தும் மனிதர்…. சவால் விடும் மனிதர்!
- Andi 4U ப்ரிஸ்பீ மற்றும் Andi5 ஸ்டால்லியான் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!
- இந்தியாவில் ஐ.எஸ்.எல் தொடரால் கால்பந்து புரட்சி : சச்சின் நம்பிக்கை
- நவம்பர் 17ம் தேதி தொடக்கம் : சாம்பியன்ஸ் டென்னிஸ் லீக்!
- துபாயில் ஆபத்து காலங்களில் உதவும் அதிவேக நவீன ஆம்புலன்ஸ் கார் அறிமுகம்!
| தேர்தல் நடத்தப்பட்டால் ஆளும் கட்சிக்கு பாதக நிலைமை ஏற்படும்: விதுர விக்ரமநாயக்க எச்சரிக்கை! Posted: 14 Oct 2014 09:43 PM PDT
தற்போது எதிர்க்கட்சிக்கு வெற்றி பெற முடியும் என்ற நிலைப்பாடு உருவாகியுள்ளதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக் அளித்த செவ்வியின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஊவா மாகாணசபைத் தேர்தலின் மூலம் எதிர்க்கட்சிகளினால் வெற்றியீட்ட முடியும் என்ற நிலைப்பாடு உருவாகியுள்ளது. ஆளும் கட்சியின் காலம் முடிவடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலைப்பாடுகள் உறுதியாவதனை மாற்றியமைத்தே அரசாங்கம் தேர்தல்களுக்குச் செல்ல வேண்டும். எம்மில் காணப்படும் குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மக்களினால் உணரக்கூடிய மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காலம் முடிவடைந்ததன் பின்னர் எந்த நேரத்திலும் தேர்தல்களை நடத்த முடியும். எனினும், அரசியல் ரீதியான நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் மக்களினால் உணரக்கூடிய மாற்றங்களை செய்ததன் பின்னரே தேர்தல் நடத்தப்பட வேண்டும். தற்போது ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் ஆளும் கட்சிக்கு பாதக நிலைமை ஏற்படும் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும். ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சிக்கும், எதிர்க்கட்சியினர் ஆளும் கட்சிக்கும் தாவ உள்ளதாக கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. எனினும் ஆளும் கட்சியை விட்டு விலகிச் செல்லும் அளவிற்கு முட்டாள்கள் இல்லை என்றே நான் கருதுகின்றேன். பொது வேட்பாளர் அல்லது பல வேட்பாளர்கள் போட்டியிட்டால் அது எதிர்க்கட்சிகளுக்கு பாதக நிலைமைகளை ஏற்படுத்தக் கூடும். இந்தியாவில் போன்று சட்டம் அமுல்படுத்தப்பட்டால் அரசியல்வாதிகளுக்கு என தனியாக சிறைச்சாலைகள் அமைக்கப்பட வேண்டியேற்படும். ஜெயலலிதா போன்று தண்டனை விதிக்கப்படக் கூடிய பலர் இருக்கின்றார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போன்றே உயர் அதிகாரிகளும் சொத்து விபரங்களை வெளிப்படுத்த வேண்டுமென விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| உறவின் பெறுமதியை இலங்கையுடன் பாகிஸ்தான் அறிந்துள்ளது! Posted: 14 Oct 2014 09:35 PM PDT
பாகிஸ்தானிய அரசாங்கமும் மக்களும் இலங்கையுடனான உறவின் பெறுமதியை அறிந்திருப்பதாக அந்த நாட்டின் தேசியசபை சபாநாயகர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் டெய்லி டைம்ஸ் பத்திரிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தேசிய சபையின் சபாநாயகர் அயாஸ் ஷாடிக், நேற்று இலங்கையின் உயர்ஸ்தானிகர் ஜெயலத் வீரக்கொடியை அழைத்து நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தான், இலங்கையுடன் பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் ஆழமான நட்பு என்ற அடிப்படையில் செயற்பட்டு வருகிறது. இது எதிர்காலத்தில் மேன்மைபெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கிரகத்தில் காலடி எடுத்து வைக்கும் முதலாவது நபராக 13-வயது பெண்: நாசா பயிற்சி அளிக்கின்றது!!! Posted: 14 Oct 2014 09:23 PM PDT
13-வயதுடைய அமெரிக்க பெண் ஒருவர் 2034-ல் செவ்வாய் கிரகத்தில் அடி எடுத்து வைக்க தயாராகின்றார். அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தை சேர்ந்த Alyssa Carson என்ற இவர் செவ்வாய் கிரகத்தில் அடி எடுத்து வைக்க பயிற்சி பெறும் முதல் மனிதராக இருப்பார் எனவும் கூறப்படுகின்றது. அத்துடன் தற்சமயம் 7-ம் வகுப்பில் படிக்கின்றார். உலகின் அனைத்து 3 நாசா உலக விண்வெளி முகாம்களில் கலந்து கொள்ளும் முதல் நபராகவும் விளங்குகின்றார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிரித்த முகத்தை சீரியஸ் ஆக்கனும்னா இவங்ககிட்ட கத்துக்கணும்…. Posted: 14 Oct 2014 03:30 AM PDT |
| தனக்கு தானே முடிவெட்டி அசத்தும் மனிதர்…. சவால் விடும் மனிதர்! Posted: 14 Oct 2014 03:26 AM PDT |
| Andi 4U ப்ரிஸ்பீ மற்றும் Andi5 ஸ்டால்லியான் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்! Posted: 14 Oct 2014 12:04 AM PDT
iBall நிறுவனம் 3 புதிய Andi தொடர் ஸ்மார்ட்போன்களான Andi 3.5KKe வின்னர்+, Andi 4U ப்ரிஸ்பீ மற்றும் Andi5 ஸ்டால்லியான் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் இப்போது விலை விவரங்கள் உடன் நிறுவனத்தின் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. iBall Andi 3.5KKe வின்னர்+ ரூ.3,399 விலையிலும், Andi 4U ப்ரிஸ்பீ ரூ.6,799 விலையிலும், Andi5 ஸ்டால்லியான் ரூ.8,499 விலையிலும் பட்டியலிடப்பட்டுள்ளன. புதிய iBall ஸ்மார்ட்போன்களை உத்தியோகபூர்வமாக கிடைக்கும் விவரங்களை அறிவிக்கப்படவிலலை, எனினும் நிறுவனத்தில் வரும் நாட்களில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Andi 3.5KKe வின்னர் பின்னோடியான Andi 3.5KKe வின்னர்+ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. இப்போது தேதியில் Andi5 ஸ்டால்லியான் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது மற்றும் Andi 4U ப்ரிஸ்பீ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் ஓஎஸ் இயங்குகிறது. மூன்று iBall ஸ்மார்ட்போன்களிலும் இரட்டை சிம் ஆதரிக்கின்றன. மேலும் இரட்டை காத்திருப்பு கொண்டு ஆதரிக்கிறது. iBall Andi 3.5KKe வின்னர்+ : நிறுவனத்தின் பட்டியல் படி, iBall Andi 3.5KKe வின்னர்+ ஸ்மார்ட்போனில் 320x480 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 3.5 இன்ச் HVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. ஸ்மார்ட்போனில் ரேம் 256MB உடன் இணைந்து ஒரு 1.3GHz டூயல் கோர் கார்டெக்ஸ் A7 (குறிப்பிடப்படாத சிப்செட்) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 2 ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு, வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 3.2 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 0.3-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. iBall Andi 3.5KKe வின்னர்+ ஸ்மார்ட்போனில் 1250mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள் ப்ளூடூத், Wi-Fi, ஜிபிஎஸ்/ எ-ஜிபிஎஸ், ஜிபிஆர்எஸ்/எட்ஜ், மற்றும் மைக்ரோ-USB ஆகியவை அடங்கும். துரதிருஷ்டவசமாக, Andi 3.5KKe வின்னர்+ ஸ்மார்ட்போனில் 3ஜி ஆதரவுடன் வரவில்லை. iBall Andi 4U ப்ரிஸ்பீ: iBall Andi 4U ப்ரிஸ்பீ ஸ்மார்ட்போனில் 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது மற்றும் 233ppi பிக்சல் அடர்த்தி கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் ரேம் 1GB உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் கார்டெக்ஸ் A7 (குறிப்பிடப்படாத சிப்செட்) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4 ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு, வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் LED ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 0.3-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. iBall Andi 4U ப்ரிஸ்பீ ஸ்மார்ட்போனில் 1600mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. நிறுவனத்தின் பட்டியல் படி, ஸ்மார்ட்ஃபோனில் 4 பேட்டரி கவர் வருகிறது மற்றும் கீறல் ஏற்படாமல் பாதுகாக்க கார்னிங் கொரில்லா கண்ணாடி கிளாஸ் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இணைப்பு விருப்பங்கள் பொறுத்தவரையில் 3 ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், Wi-Fi 802.11 b/g/n, மைக்ரோ-USB மற்றும் ப்ளூடூத் ஆகியவை அடங்கும். iBall Andi5 ஸ்டால்லியான் : iBall Andi5 ஸ்டால்லியான் ஸ்மார்ட்போனில் 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. ஸ்மார்ட்போனில் 1700mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. Andi5 ஸ்டால்லியான் ஸ்மார்ட்போனில் மீதமுள்ள குறிப்புகள் Andi 4U ப்ரிஸ்பீ ஸ்மார்ட்போனில் உள்ளது போல அதே உள்ளன. இணைப்பு விருப்பங்கள் பொறுத்தவரையில் 3 ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், Wi-Fi 802.11 b/g/n, மைக்ரோ-USB மற்றும் ப்ளூடூத் ஆகியவை அடங்கும். iBall Andi 3.5KKe வின்னர்+ ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள்: 320x480 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 3.5 இன்ச் HVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே, ரேம் 256MB, இரட்டை சிம், 1.3GHz டூயல் கோர் கார்டெக்ஸ் A7 (குறிப்பிடப்படாத சிப்செட்) ப்ராசசர், microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 2 ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு, 3.2 மெகாபிக்சல் பின்புற கேமரா, 0.3-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, ப்ளூடூத், Wi-Fi, ஜிபிஎஸ்/ எ-ஜிபிஎஸ், ஜிபிஆர்எஸ்/எட்ஜ், மைக்ரோ-USB, ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட், 1250mAh பேட்டரி. iBall Andi 4U ப்ரிஸ்பீ ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள்: 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 233ppi பிக்சல் அடர்த்தி, இரட்டை சிம், ரேம் 1GB, 1.3GHz குவாட் கோர் கார்டெக்ஸ் A7 (குறிப்பிடப்படாத சிப்செட்) ப்ராசசர், microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4 ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு, 8 மெகாபிக்சல் பின்புற கேமரா, 0.3-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, 3 ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், Wi-Fi 802.11 b/g/n, மைக்ரோ-USB, ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட், 1600mAh பேட்டரி.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்தியாவில் ஐ.எஸ்.எல் தொடரால் கால்பந்து புரட்சி : சச்சின் நம்பிக்கை Posted: 13 Oct 2014 11:53 PM PDT
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) தொடரின் வருகையால், இந்தியாவில் கால்பந்து புரட்சி ஏற்படும் என்று முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமும் கேரளா பிளேஸ்டர்ஸ் கால்பந்து கிளப் அணியின் உரிமையாளருமான சச்சின் டெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதலாவது ஐஎஸ்எல் தொடர் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் கோலாகலமாகத் தொடங்கியது. இதில் எட்டு நகரங்களை அடிப்படையாகக் கொண்ட அணிகள் பங்கேற்கின்றன. சென்னை அணியின் உரிமையாளர்களாக இந்தி நடிகர் அபிஷேக் பச்சன், கிரிக்கெட் கேப்டன் டோனி இருவரும் உள்ள நிலையில், கேரளா அணிக்கு சச்சினும், கொல்கத்தா அணிக்கு சவுரவ் கங்குலியும் உரிமையாளர்களாக உள்ளனர். தொடக்க லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 30 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை அபாரமாக வென்றது. அடுத்து 2வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளேஸ்டர்ஸ் நார்த்ஈஸ்ட் யுனைட்டட் அணிகள் நேற்று மோதின. இப்போட்டியை பார்ப்பதற்காக கவுகாத்தி வந்த மாஸ்டர் பிளேஸ்டர் சச்சின் கூறியதாவது: ஐஎஸ்எல் தொடர் ஒரு புதிய ஆரம்பம். அனைவரும் இந்த தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அதற்கேற்ப, வண்ணமயமான தொடக்கவிழாவுடன் அமர்க்களமாகத் தொடங்கி இருக்கிறது. முதல் போட்டியே மிகவும் விறுவிறுப்பாக அமைந்து கால்பந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய கால் பந்து வரலாற்றில் இது மிகப் பெரிய தருணம். இந்த தொடரால் இந்தியாவில் மிகப் பெரிய கால்பந்து புரட்சி ஏற்படும் என நம்புகிறேன். இதில் எனக்கும் பங்கு இருக்கிறது என்பதில் பெருமை அடைகிறேன். ஒட்டு மொத்த தேசமும் இந்த தொடரை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு சச்சின் கூறியுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நவம்பர் 17ம் தேதி தொடக்கம் : சாம்பியன்ஸ் டென்னிஸ் லீக்! Posted: 13 Oct 2014 11:40 PM PDT
சாம்பியன்ஸ் டென்னிஸ் லீக் தொடர், டெல்லியில் நவம்பர் 17ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதை அடுத்து ஹாக்கி, கபடி, கால்பந்து உள்பட பல்வேறு விளையாட்டுகளுக்கும் நகரங்கள் அடிப்படையிலான லீக் தொடர்கள் நடைபெற தொடங்கியுள்ளன. இந்த வரிசையில், சாம்பியன்ஸ் டென்னிஸ் லீக் தொடர் இந்தியாவில் அறிமுகமாகிறது. முன்னாள் டென்னிஸ் நட்சத்திரம் விஜய் அமிர்தராஜ் நடத்தும் இந்த தொடரில் சென்னை, மும்பை, பெங்களூர், புனே, டெல்லி, சண்டிகர் ஆகிய 6 அணிகள் களமிறங்க உள்ளன. இந்த தொடருக்கான அட்டவணை விவரம் நேற்று வெளியிடப்பட்டது. நவம்பர் 15ம் தேதி டெல்லியில் கோலாகலமான தொடக்க விழா நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, நவம்பர் 17ம் தேதி நடைபெறும் முதல் லீக் போட்டியில் பஞ்சாப் டெல்லி அணிகளும், 2வது லீக் போட்டியில் சென்னை பெங்களூர் அணிகளும் மோதுகின்றன. ஒவ்வொரு அணியிலும் தலா 3 வீரர்கள் மற்றும் ஒரு வீராங்கனை இடம் பெறுகின்றனர். சென்னை அணியில் மார்க் பிலிப்போசிஸ், மிகைல் யூஜ்னி, மார்டினா ஹிங்கிஸ், ஜீவன் நெடுஞ்செழியன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இறுதிப் போட்டி நவம்பர் 26ம் தேதி நடைபெற உள்ளது. முதல் பரிசாக ரூ.1 கோடி மற்றும் 2வது பரிசாக ரூ.50 லட்சம் வழங்கப்படும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| துபாயில் ஆபத்து காலங்களில் உதவும் அதிவேக நவீன ஆம்புலன்ஸ் கார் அறிமுகம்! Posted: 13 Oct 2014 11:29 PM PDT
குறிப்பிட்ட துறைகளில் மிகவும் வலுவான நிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை வரையறுத்த பிரான்ஸ் பொருளாதார நிபுணர் ஜீன் டிரோல் (61), பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை பெறுகிறார். இந்தியரான சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு உள்பட பல்வேறு பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் டவுலோஸ் பொருளாதார பள்ளியில் பணியாற்றி வரும் ஜீன் டிரோல் பொருளாதார நோபலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து அறிவியலுக்கான ராயல் ஸ்வீடிஷ் அகாதெமி நேற்று வெளியிட்ட அறிக்கை: ஒரு குறிப்பிட்ட சந்தையில், குறிப்பிட்ட மிகவும் வலுவான அல்லது போட்டியே இல்லாத நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனால் பொருள்களின் விலையேற்றம் உள்ளிட்டவற்றை தடுக்க முடியாத நிலை இருந்தது. ஒரு குறிப்பிட்ட சந்தையில் உள்ள நிறுவனங்களுக்கு பொதுவான கட்டுப்பாடுகளை நிர்ணயிப்பது குறித்து பல ஆய்வுகள் உள்ளன. அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கக் கூடிய வழிமுறைகளை, வழிகாட்டுதல்களை வரையறுத்துள்ளார் டிரோல். இவரது ஆராய்ச்சிகள் பல்வேறு நாடுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பொருளாதார சிக்கல் ஏற்படும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிமுறைகளையும் அவர் வகுத்துள்ளார். நிறுவனங்களை இணைப்பது அல்லது பிரிப்பது போன்றவற்றின்போது சந்தையில் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்தும் அவர் ஆராய்ந்துள்ளார். அந்த நிலையில் அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிமுறைகளையும் டிரோல் வகுத்துள்ளார் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார நோபல் அறிவிப்புடன், இந்தாண்டுக்கான அனைத்து நோபல் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. நோபல் பரிசுகளில் பொருளாதாரத்துக்கென முன்பு வழங்கப்படாமல் இருந்தது. 1968ம் ஆண்டு ஸ்வீடன் மத்திய வங்கி பொருளாதாரத்துக்கான நோபலையும் சேர்த்தது. பரிசு: ஒவ்வொரு பிரிவுக்கும் பரிசு தொகையாக 6.76 கோடி கிடைக்கும். ஆல்பிரட் நோபல் நினைவு தினமான டிசம்பர் 10ம் தேதி அன்று ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் இந்த பரிசு வழங்கப்படும். இந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்கள்: மருத்துவம் மூளை செல் அமைப்பை பற்றி ஆராய்ந்த இங்கிலாந்து அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஜான் ஓ கீப் மற்றும் நார்வே டாக்டர் தம்பதி மேபிரிட் மோசர், எட்வர்ட் மோசர். இயற்பியல் எல்.இ.டிபல்பு கண்டுபிடித்த ஜப்பானை சேர்ந்த பேராசிரியர்கள் இசாமு அகசாகி, ஹிரோசி அமனோ, நகமுரா. வேதியியல் செல்லின் மூலக்கூறுகளை மிக தெளிவாக ஆராயும் நோனோஸ்கோப் கருவி உருவாக்கிய ஜெர்மன் விஞ்ஞானி ஸ்டீபன் ஹெல், அமெரிக்க விஞ்ஞானிகள் பெட்சிக் மற்றும் வில்லியம் மோனர். இலக்கியம் நாஜிக்களின் ஆக்ரமிப்பு மற்றும் அதனால் பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எழுதிய வரலாற்று ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான பாட்ரிக் மோடியானோ. அமைதி குழந்தைகள் நல உரிமைகளுக்காக போராடிய இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்தி, பெண் கல்விக்காக போராடி வரும் பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்சாய்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |








