Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஜாமீன் நிபந்தனை மீறியதாக சி.பி.ஐ.மனு: சவுதாலா கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

Posted: 09 Oct 2014 11:06 PM PDT

அரியானா முன்னாள் முதல் – மந்திரி ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு ஆசிரியர் தேர்வு ஊழல் வழக்கில் 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு கூறியது. கடந்த 2013–ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த தீர்ப்பு கூறப்பட்டது. அதன் பிறகு மருத்துவ காரணங்களை காட்டி கடந்த ஜூலை மாதம் 11–ந் தேதி அவரை ஜாமீனில் விடுதலை செய்ய டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அசாம்: துப்பாக்கியால் சுட்டு போலீஸ் சூப்பிரண்ட் தற்கொலை

Posted: 09 Oct 2014 11:02 PM PDT

அசாம் மாநிலம், சோனிட்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்டாக பணியாற்றிய வந்த நரேன் தலுக்டர்(56) என்பவர் நேற்றிரவு அங்குள்ள ஒரு காவல் நிலையத்துக்கு தனது வழக்கமான பணி நிமித்தமாக சென்றார். அங்குள்ள ஒரு அறையில் அமர்ந்து வழக்குகள் தொடர்பான கோப்புகளை அவர் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, உள்ளே இருந்து சத்தம் கேட்டதையடுத்து, போலீசார் ஓடிச் சென்று பார்த்தனர்.

வழக்கில் ஆஜர் ஆகாத மத்திய மந்திரி கல்ராஜ் மிஸ்ராவுக்கு கோர்ட்டு பிடிவாரண்ட்

Posted: 09 Oct 2014 10:59 PM PDT

மத்திய அரசில் சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை மந்திரியாக இருப்பவர் கல்ராஜ் மிஸ்ரா. 2009–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது நடத்தை விதிகளை மீறியதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டு சம்மன் அனுப்பியது. பலமுறை சம்மன் அனுப்பியும் கல்ராஜ் மிஸ்ரா கோர்ட்டில் ஆஜர்

சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல்

Posted: 09 Oct 2014 10:57 PM PDT

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 66 கோடி ரூபாய் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் நான்கு வருட சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் மூவருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து 2 எம்.எல்.ஏ.க்கள் விலகல்

Posted: 09 Oct 2014 10:38 PM PDT

தெலுங்கானா மாநில எம்.எல்.ஏ.க்கள் தலசாமி ஸ்ரீனிவாச யாதவ், பீகல கிருஷ்ணா ரெட்டி, பிரகாஷ் கவுடு, சர்மா ரெட்டி. தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த இவர்கள் தெலுங்கானா முதல்–மந்திரி சந்திர சேகரராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இணையப் போவதாக தகவல் வெளியானது. இதே போல் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.சி. கங்காதர கவுடுவும் தெலுங்காணா ராஷ்ட்ரிய சமிதி

லாட்டரியில் ரூ. இரண்டரை கோடி பரிசு விழுந்ததாக ரூ.65 லட்சம் மோசடி: நைஜீரிய ஆசாமி கைது

Posted: 09 Oct 2014 10:35 PM PDT

நாளுக்கு நாள் விரிவடைந்து, வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்ப புரட்சியின் பலனாக பரந்து விரிந்த இந்த பெரிய உலகம் நமது உள்ளங்கை அளவிற்கு சுருங்கி விட்டது. இதன் பலனாக, மின்னணு வர்த்தகம், மின்னணு வங்கியியல் என மனிதர்களின் அனைத்து தேவைகளையும் வீண் அலைச்சலின்றி அமர்ந்த இடத்தில் இருந்தே வெகுசுலபமாக நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. இந்த தொழில்நுட்ப புரட்சி பல கோடி மக்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கி வரும் அதே வேளையில், சில ஊடுருவல் (ஹேக்கிங்) பேர்வழிகளுக்கும் காமதேனுவாக இருந்து வருகிறது.

மராட்டிய சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்கும்: கருத்துக்கணிப்பில் தகவல்

Posted: 09 Oct 2014 10:24 PM PDT

மராட்டிய சட்டசபை தேர்தல் வருகிற 15–ந் தேதி நடக்கிறது. அங்கு காங்கிரஸ்–தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தது. இந்த தேர்தலில் இரு கட்சிகளிடையேயான கூட்டணி முறிந்ததால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதே போல் பா.ஜனதா சிவசேனா கூட்டணியும் உடைந்தது. இரு கட்சிகளும் தனித் தனியாக போட்டியிடுகின்றன. இதனால் மராட்டியத்தில்

மோடி எச்சரிக்கை எதிரொலி: எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது

Posted: 09 Oct 2014 10:24 PM PDT

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 1–ந்தேதி முதல் அத்துமீறி வந்து இந்திய ராணுவ நிலைகள் மீதும், கிராமங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இந்திய எல்லையோர கிராமத்தைச் சேர்ந்த 8 பேர் பலியானார்கள். 60–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகமானதால் எல்லையோர கிராம மக்கள் பதற்றம் அடைந்தனர். அவர்களில் சுமார் 30

அமைச்சர்களை சந்திக்க ஜெயலலிதா மறுப்பு

Posted: 09 Oct 2014 10:13 PM PDT

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு கடந்த 27–ந் தேதி பெங்களூர் தனி கோர்ட்டில் தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து, ஜெயலலிதாவும், அவருடன் தண்டனை பெற்ற சசிகலா, சுதாகர், இளவரசி ஆகியோரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருப்பதியில் அனைத்து தரிசனங்களும் ஆன்லைனில் பதிவு: 3 மணி நேரத்தில் சாமி தரிசனம்

Posted: 09 Oct 2014 10:09 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அதிக பக்தர்கள் வருவதால் அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காயம் அடைந்து ஆஸ்பத்திரிக்கு செல்லும் நிலையும் ஏற்படுகிறது. சாமி தரிசனம் செய்வதற்காக 5 கி.மீ. தூரத்துக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள். கடந்த வாரம் தொடர்ந்து விடுமுறை தினங்கள் வந்ததால் தர்ம

கேரளாவில் ஓய்வு பெற்ற பெண் தாசில்தார் வெட்டிக் கொலை

Posted: 09 Oct 2014 10:06 PM PDT

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கிளிமானூர் பழையன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 61). இவர் வீட்டிலேயே நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சைலஷா (57). ஓய்வு பெற்ற தாசில்தார். இருவர் மட்டுமே பழையன்தோப்பில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். நேற்று மாலை இவர்களது உறவினர் அய்யப்பன் பிள்ளை என்பவர் திருமண பத்திரிகை கொடுக்க மோகன்குமார் வீட்டுக்கு சென்றார்.

பங்குச்சந்தை சரிவு: பி.எஸ்.இ 294 புள்ளிகளும், நிப்டி 97 புள்ளிகளும் சரிந்தது

Posted: 09 Oct 2014 09:37 PM PDT

பங்குச்சந்தை வர்த்தகம் இன்று காலை தொடங்கியது முதலே கடும் சரிவை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை 294 புள்ளிகள் சரிந்து 26,341 புள்ளிகளாக இருந்தது. அதே போல் நிப்டியும் 97 புள்ளிகள் சரிந்து 7863 புள்ளிகளாக இருந்தது. கெய்ர்ன், டாடா ஸ்டீல், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹிண்டால்கோ, ஹெச்.டி.எப்.சி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை கடும் சரிவை சந்தித்தன.

ஜெயலலிதாவை தமிழ்நாட்டுக்கு மாற்றக்கோரி மனு: கர்நாடக ஐகோர்ட்டில் இன்று விசாரணை

Posted: 09 Oct 2014 08:16 PM PDT

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டால் ஜெயலலிதாவை தமிழ்நாட்டுக்கு இடமாற்றம் செய்ய கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று சட்ட

அன்னிய முதலீடு: மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஒரே அணியாக செயல்பட பிரதமர் மோடி அழைப்பு

Posted: 09 Oct 2014 05:27 PM PDT

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நேற்று நடந்தது. தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, டாடா குழுமத்தின் தலைவர் சைரஸ் மிஸ்திரி உள்ளிட்ட தொழில் அதிபர்கள், 28 நாடுகளின் தூதர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சமுதாயத்தில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பா.ஜனதாவின் சூழ்ச்சி வலை: சோனியா காந்தி பேச்சு

Posted: 09 Oct 2014 04:15 PM PDT

மராட்டிய சட்டசபைக்கு வருகிற 15-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் பிரசாரம் ஓய இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன. இதனால் அரசியல் தலைவர்கள் மராட்டியத்தை முற்றுகையிட்டு பிரசாரம் செய்து வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரசாரம் செய்ய நேற்று முதல் தடவையாக மராட்டியம் வந்தார்.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் விற்பனை கண்காணிக்கப்படுகிறது:நிர்மலா சீதாராமன் பேட்டி

Posted: 09 Oct 2014 03:58 PM PDT

ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பிளிப்கார்ட் கடந்த 6-ந் தேதி அதிரடி தள்ளுபடி சலுகைகளை அறிவித்து நாடே அதிசயிக்கும் வகையில் ஒரே நாளில் 600 கோடி ரூபாய்க்கு (10 கோடி டாலர்) பல்வேறு பொருள்களை விற்பனை செய்தது. சுமார் 15 லட்சம் வாடிக்கையாளர்கள் மூலம் இந்த பம்பர் விற்பனை நடந்தது.

காஷ்மீர் எல்லையில் தாக்குதல்: பிரதமர் மோடி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

Posted: 09 Oct 2014 02:03 PM PDT

காஷ்மீர் எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இல்லாமல் அரியானா, மராட்டிய மாநிலங்களுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய போய்விட்டதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா குற்றம்சாட்டி உள்ளார்.

இந்தியா-பாக். எல்லையில் பதற்றத்தை தணிக்க ஐ.நா.சபை உதவ முடியும்: அமெரிக்கா கருத்து

Posted: 09 Oct 2014 01:26 PM PDT

காஷ்மீர் எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடந்து வரும் ராணுவ தாக்குதல்கள் குறித்து, தெற்கு மற்றும் மத்திய ஆசியா விவகாரங்களுக்கான அமெரிக்க செனட் சபை துணைக்குழுவின் தலைவர் திமோதி எம்.கைனே கவலை தெரிவித்து உள்ளார்.

எல்லையில் அத்துமீறி தாக்குதல்: பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

Posted: 09 Oct 2014 12:49 PM PDT

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக காஷ்மீர் மாநிலத்தில் எல்லையோரத்தில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீதும், கிராமங்கள் மீதும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. 192 கிலோ மீட்டர் நீள எல்லைப்பகுதியில் இந்த தாக்குதல் நீடிக்கிறது. இந்த தாக்குதலால் சர்வதேச எல்லையையொட்டி அமைந்துள்ள ராநகர், ராம்கார், அர்னியா, ஆர்.எஸ்.புரா, கனாசக், பர்வால் ஆகிய பகுதிகள் பெரிதும்

இந்தியாவிலேயே முதல்முறையாக அகமதாபாத்தில் அறிமுகமாகும் இன்டலிஜென்ட் டிராபிக் சிஸ்டம்

Posted: 09 Oct 2014 12:24 PM PDT

வெளிநாடுகளில் இருப்பது போன்ற 'இன்டலிஜென்ட் டிராபிக் சிஸ்டம்' இந்தியாவிலேயே முதல்முறையாக அகமதாபாத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐ.டி.எஸ். எனப்படும் இந்த டிராபிக் கன்ட்ரோலில் சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களுக்கு ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்ட போர்டுகள் போக்குவரத்து நிலைமையை


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™