Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ரஜினிகாந்துக்கு பாஜக விடும் அழைப்புக்களை வெறும் செய்தியாகவே பார்க்கிறேன்:ஞானதேசிகன்

Posted:

நடிகர் ரஜினாந்துக்கு பாஜக தங்களது கட்சியில் இணைய விடும் அழைப்புக்களை வெறும் செய்தியாகவே தாம் பார்ப்பதாக  காங்கிரஸ் தமிழக மாநில கட்சித் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.


Read more ...

ஜெயலலிதாவை கர்நாடக சிறையில்தான் அடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தவில்லை:புதிய மனு

Posted:

ஜெயலலிதாவை கர்நாடக சிறையில்தான் அடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தவில்லை என்று புதிய மனு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கலாகி உள்ளது.


Read more ...

எபோலா மற்றும் ஒரு எய்ட்ஸ் நோயாக உருவாக அனுமதித்துவிடக் கூடாது:தாமஸ்

Posted:

எபோலா எனும் நோய் மற்றுமொரு எய்ட்ஸ் நோயாக உருவாக அனுமதித்துவிடக் கூடாது என்று, நியூயார்க் நோய் கட்டுப்பாடு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரியான டாக்டர் தாமஸ் கூறியுள்ளார்.


Read more ...

மத்திய அரசு கும்பகர்ணனைப் போல செயல்பட்டுக்கொண்டு உள்ளது;:உச்ச நீதிமன்றம்

Posted:

மத்திய அரசு கும்பகர்ணனைப் போல செயல்பட்டுக்கொண்டு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.


Read more ...

த்ரிஷா ட்விட், எரிச்சலில் ரசிகர்கள்

Posted:

நடிகை த்ரிஷாவும் வரவர ஒரு சின்ன குஷ்பு போலாகிவிட்டார்.


Read more ...

எதிர்க்கட்சியாக இருந்தபோது பாகிஸ்தான் விஷயத்தில் ஆவேசமாகப் பேசிய நரேந்திர மோடி எங்கே?:சமாஜ்வாதி

Posted:

முன்பு எதிர்க்கட்சியாக இருந்தபோது பாகிஸ்தான் விஷயத்தில் ஆவேசமாகப் பேசிய நரேந்திர மோடி இப்போது எங்கே?, வீராவேசமாகப் பேசிய பாஜகவினர் எங்கே என்று சமாஜ்வாதிக் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் நரேஷ் அகர்வால் கேள்வி எழுப்பியுள்ளார்.


Read more ...

உயிர்காக்கும் மருந்துகளின் கட்டுப்பாடுகளை நீக்ககோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு!

Posted:

உயிர்காக்கும் மருதுகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய பொதுநல மனு ஒன்றுத் தாக்கலாகி உள்ளது.


Read more ...

சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் - இந்தியர்கள் பட்டியலைத் தருவது குறித்து ஆலோசனை

Posted:

சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்கள் பட்டியலைத் தருவதுக் குறித்து விரைவில் இந்திய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தத் தயாராக உள்ளதாக சுவிஸ் அரசு அறிவித்துள்ளது.


Read more ...

ஜனாதிபதித் தேர்தலை ஜனவரி 9 ஆம் திகதி நடத்த தீர்மானம்(?)

Posted:

அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக அரசாங்க முக்கியஸ்தர்களை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. 


Read more ...

மோடி எச்சரிக்கையின் எதிரொலி - பாகிஸ்தானின் பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம்

Posted:

பிரதமர் நரேந்திர மோடி நேற்று கடும் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, இன்று பாகிஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் அவசரமாகக் கூடுகிறது.


Read more ...

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2016ஆம் ஆண்டே நடத்தப்பட வேண்டும்: சரத் என் சில்வா

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலம் 2016ஆம் ஆண்டே நிறைவுக்கு வருகின்றது. ஆகவே, அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2016ஆம் ஆண்டே நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். 


Read more ...

மஹிந்த ராஜபக்ஷவின் வடக்கு விஜயத்தை த.தே.கூ புறக்கணிப்பு(?)

Posted:

வடக்கு மாகாணத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள்ளவுள்ள விஜயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. 


Read more ...

எபோலா அபாயத்தால் லைபீரியாவில் தேர்தல் திகதி ஒத்தி வைப்பு!

Posted:

மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் விரைவாகவும் ஏனைய நாடுகளில் மெல்ல மெல்லவும் பரவி வரும் எபோலா ஆட்கொல்லி வைரஸினால் பலர் பலியாவது அதிகரித்து வரும் நிலையில் எபோலாவால் அதிகளவு பேர் தாக்கப் பட்ட நாடுகளில் ஒன்றான லைபீரியாவில் நாடு முழுதும் நடைபெறவிருந்த செனட் சபைக்கான தேர்தல் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.


Read more ...

யேமெனில் இரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 70 பேர் வரை பலி

Posted:

யேமெனில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற இரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 70 பொதுமக்கள் கொல்லப் பட்டிருப்பதாக யேமென் அதிகாரிகள் உறுதிப் படுத்தியுள்ளனர்.


Read more ...

இவ்வருடத்தின் இலக்கியத் துறைக்கான நோபல் பரிசை வென்றார் பிரெஞ்சு நாவலாசிரியர் பேட்ரிக் மோடியானோ

Posted:

இவ்வருடம் (2014) இலக்கியத் துறைக்கான நோபல் பரிசை 69 வயதாகும் பிரெஞ்சு நாவலாசிரியர் பேட்ரிக் மோடியானோ வென்றுள்ளார் என சுவீடனின் நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.


Read more ...

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருமா?

Posted:

கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் ஜாமீன் மனுவை நிராகரித்த நிலையில், அதிமுக வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.


Read more ...

காஷ்மீர் மாநிலத்தின் எண்பது கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் தொடர்கிறது!

Posted:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இந்திய பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறியத் தாக்குதலைத் தொடர்ந்து வரும் பாகிஸ்தான் ராணுவம், இந்திய கிராமங்களில் 80 கிராமங்களை குறிவைத்துத் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.

சிறிய ரக பீரங்கிகள் மூலம் காஷ்மீர் மாநில கிராம மக்களின் குடியிருப்புக்கள் மீது அத்துமீறியத் தாக்குதலைத் தொடர்ந்து வரும் பாகிஸ்தான் ராணுவம் கிட்டத்தட்ட 80 கிராமங்களைக் குறிவைத்து தமது தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. இந்திய வீரர்களும் பதிலுக்கு பீரங்கித் தாக்குதலைத் தொடர்ந்துள்ளனர் என்றும், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கக் கூடும் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலைத் தொடர்ந்து வரும் கிராமங்களில் வசிக்கும் மக்கள் ஊரைக் காலி செய்து வருகின்றனர். இவர்களுக்கு தங்கும் படியான முகாம்களை பாகிஸ்தான் ராணுவம் ஏற்பாடு செய்து தந்து கொண்டு இருப்பதாகவும் தெரிய வருகிறது. ஊரைக் காலி செய்து போகும் போதும் தாக்குதலுக்கு ஆளாகி காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களும் சுமார் 50 பேருக்கும் மேல் இருப்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவம் தீவிரத் தாக்குதலில் இறங்கியுள்ளதால் இந்திய வீரர்களும் சரியான பதிலடியைக் கொடுக்கத் துவங்கி உள்ளனர். அதோடு எல்லையில் கூடுதலாக ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டு உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

ஸ்ரீரங்கத்தை காலியான தொகுதி என்று அறிவிக்க வேண்டும்:க.அன்பழகன்

Posted:

ஸ்ரீரங்கத்தை காலியான தொகுதி என்று அறிவிக்க வேண்டும் என்று திமுக பொது செயலாளர் க.அன்பழகன், தமிழகத் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.


Read more ...

67,000 ஏக்கர் காணிகள் இராணுவ ஆக்கிரமிப்பில்; வெளியேறக்கோரி வடக்கு மாகாண சபையில் தீர்மானம்!

Posted:

வடக்கு மாகாணத்தில் இலங்கை அரச படைகளின் ஆக்கிரமிப்பில் 67,000 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் இருப்பதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 


Read more ...

விஜய் சேதுபதியில் திடீர் முடிவு

Posted:

விஜய் சேதுபதியின் பேச்சு எப்பவும் ‘வழ வழா கொழ கொழா’ டைப்பாக இருக்கவே இருக்காது.


Read more ...

மறக்க இயலா கானங்கள்: " நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி கண்ணம்மா "

Posted:

என் வாழ்வில் மறக்கவே இயலாத மறற்றுமொரு கானம்தான் இது, அவ்வளவு பசுமையாய் இன்னமும் இப்பாடல் இருக்கிறதென்றால் அதற்கு காரணம் இது அறிமுகமான தினம்தான், நான் அப்போது என் கிராமத்து பள்ளியிலிருந்து கோவையின் மையப்பகுதியில் உள்ள ஒரு கிறித்துவ பள்ளியில் ஆறாவது சேர்க்கப்பட்டேன். மைக்கேல்ஸ் என்ற புதுப்பள்ளிக்கூடம்.


Read more ...

பெண்களின் திருமண வயதை உயர்த்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரை!

Posted:

பெண்களின் திருமண வயதை 18லிருந்து 20 ஆக உயர்த்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரை செய்துள்ளது.


Read more ...

பள்ளிக் கல்வி சுற்றுலாத்துறையில் புதிய பாதுகாப்பு விதிமுறைகள்!: சுற்றறிக்கை

Posted:

பள்ளிக்கல்வி சுற்றுலாத்துறை புதிய பாதுகாப்பு விதிமுறைகளை அமல்ப்படுத்த பள்ளிக் கல்வித் துறைக்கு சுற்றுலாத்துறை சுற்றறிக்கை அனுப்ப உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

ஆந்திராவின் தலைநகர் குண்டூர்:சந்திரபாபு நாயுடு

Posted:

ஆந்திராவின் தலைநகராக குண்டூர் மாற்றம் பெறும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.


Read more ...

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதன் மூலமே இந்தியாவை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும்:பிரதமர்

Posted:

நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அவரவர்க்கு ஏற்றவாறு வேலைவாய்ப்பு வழங்குவதன் மூலமே இந்தயாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™