Tamil Star |
- HTC டிசயர் ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்!!!
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் நடால் அதிர்ச்சி தோல்வி!
- இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டிஸ் அபார வெற்றி!
- பிரான்ஸ் எழுத்தாளர் பாட்ரிக் மொதியானோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு!!!
- இரட்டை பெண் குழந்தைகள் பிறக்கப் போகுதாம் இளவரசி கேட் மிடில்டனுக்கு!
- மக்களுக்கு அழுத்தங்களை கொடுக்கும் அரசாங்கம்! – விக்ரமபாகு குற்றச்சாட்டு
- தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் ஜனாதிபதி அரசாங்கம்!
- தனது வாழ்வை முடித்துக்கொள்ள இருக்கும் 29-வயது இறுதிக்கட்ட மூளை புற்று நோயாளி: தனது உயிரை தானே போக்கும் துயர் நிகழ்வு?
| HTC டிசயர் ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்!!! Posted: 09 Oct 2014 08:43 AM PDT
HTC நிறுவனம் சந்தையில் பிரபலமான செலஃபி ட்ரென்டு ஸ்மார்ட்போனான டிசயர் ஐ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் பற்றிய தகவல்களை இதுவரை அறிவிக்கப்படவில்லை. HTC டிசயர் ஐ ஸ்மார்ட்போன், முன் எதிர்கொள்ளும் கேமராவில் செலஃபி போகஸ்டுக்காக அமைக்கப்பட்டுள்ளது. முன் மற்றும் பின்புற கேமரா இரண்டிலுமே டூயல் எல்இடி ஃப்ளாஷ் உடன் இணைந்து 13 மெகாபிக்சல் சென்சார்கள் கொண்டிருக்கிறது. முன் எதிர்கொள்ளும் கேமராவில் ஹய் ரெசல்யூசன் கொண்ட ஒரே ஸ்மார்ட்போன் HTC டிசயர் ஐ ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் கொண்டுள்ளது. முன் மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டுமே 1080p @ 30fps வீடியோக்கள் படம் பிடிக்க முடியும். பின்புற கேமரா அம்சங்கள் a f/2.0 aperture மற்றும் ஒரு 28mm லென்ஸ் உள்ளது. முன் எதிர்கொள்ளும் கேமரா அம்சங்கள் a f/2.2 aperture மற்றும் ஒரு 20mm லென்ஸ் உள்ளது. இரண்டு கேமரா சென்ட்ரிக் அப்ளிக்கேஷன் அதாவது ஐ எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் சமீபத்திய பதிப்பான HTC ஸோ, ஒரு வீடியோ எடிட்டிங் டூல் போன்றவை HTC டிசயர் ஐ ஸ்மார்ட்போனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில கேமரா அம்சங்களான ஸ்ப்லிட் கேப்ச்சர், Crop-Me-In போன்றவை HTC டிசயர் ஐ ஸ்மார்ட்போனில் கிடைக்கின்றன. HTC டிசயர் ஐ மற்ற குறிப்புகள், இதில் 5.2 இன்ச் முழு HD LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் 2GB RAM உடன் இணைந்து குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 801 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. HTC டிசயர் ஐ ஸ்மார்ட்போனில் microSD அட்டை வழியாக 128GB வரை விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, வருகிறது. மேலும் இதில் 2400mAh லி-போ பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. முன் எதிர்கொள்ளும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களில் HTC பூம் சவுண்டு தொழில்நுட்பம் மூலம் இயக்கப்படுகிறது. கைபேசியில் 151.7x73.8x8.5mm மெஷர்ஸ் அளவிடுகிறது. HTC டிசயர் ஐ ஸ்மார்ட்போன் குறிப்புகள்: 5.2 இன்ச் முழு HD LCD டிஸ்ப்ளே, 2GB RAM, குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 801 ப்ராசசர், microSD அட்டை வழியாக 128GB வரை விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, 13 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, 13 மெகாபிக்சல் பின்புற கேமரா, ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட், 2400mAh லி-போ பேட்டரி.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் நடால் அதிர்ச்சி தோல்வி! Posted: 09 Oct 2014 08:36 AM PDT
சீனாவில் நடக்கும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில், நட்சத்திர வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். சக ஸ்பெயின் வீரர் பெலிசியானோ லோபசுடன் நேற்று மோதிய நடால் 3&6, 6&7 (6&8) என்ற நேர் செட்களில் போராடி தோற்றார். காயம் காரணமாக நீண்ட ஓய்வுக்குப் பிறகு களமிறங்கிய இந்த தொடரில், அவர் 2வது சுற்றிலேயே வெளியேறியது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. மற்றொரு 2வது சுற்று ஆட்டத்தில் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 6&3, 6&4 என்ற நேர் செட்களில் ஆஸ்ட்ரியாவின் டொமினிக் தியமை வீழ்த்தினார். சுவிஸ் வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா 7&5, 5&7, 4&6 என்ற செட் கணக்கில் கில்லஸ் சைமனிடம் (பிரான்ஸ்) வீழ்ந்தார். ஜப்பானின் கெய் நிஷிகோரியும் 6&7 (5&7), 4&6 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஜாக் சாக்கிடம் தோற்றார். இங்கிலாந்து வீரர் ஆண்டி மர்ரே 7&5, 6&2 என்ற நேர் செட்களில் ஜெர்சி ஜானோவிக்சை (போலந்து) வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். டேவிட் பெர்ரர் (ஸ்பெயின்), தாமஸ் பெர்டிச் (செக்.) ஆகியோரும் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். போபண்ணா ஜோடி முன்னேற்றம்: ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா & புளோரின் மெர்ஜியா (போலந்து) ஜோடி 2&6, 6&3, 11&9 என்ற செட் கணக்கில் வாசெக் பாஸ்பிசில் (கனடா) & ஜாக் சாக் (அமெரிக்கா) ஜோடியை வீழ்த்தியது.மற்றொரு 2வது சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் & மார்சின் மட்கோவ்ஸ்கி (போலந்து) ஜோடி 2&6, 4&6 என்ற நேர் செட்களில் பிரான்சின் ஜூலியன் பென்னட்டியூ & ரோஜர் வாசலின் ஜோடியிடம் தோற்று வெளியேறியது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டிஸ் அபார வெற்றி! Posted: 09 Oct 2014 08:32 AM PDT
கொச்சியில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், மேற்கு இந்திய தீவுகள் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்கள் குவித்தது. மே.இ.தீவுகள் அணியில் அபாரமாக விளையாடி சதமடித்த சாமுவேல்ஸ் 126 ரன்கள் எடுத்து அசத்தினார். பின்னர் 322 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணியில் தவானை தவிர பிற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தவாறு இருந்தனர். தவான் 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து இந்திய அணி 41 ஓவர்களில் 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரான்ஸ் எழுத்தாளர் பாட்ரிக் மொதியானோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு!!! Posted: 09 Oct 2014 08:23 AM PDT
2014ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரான்ஸ் எழுத்தாளர் பாட்ரிக் மொதியானோவுக்கு கிடைத்துள்ளது. 2014ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த பரிசு பிரான்ஸை சேர்ந்த எழுத்தாளர் பாட்ரிக் மொதியானோவுக்கு கிடைத்துள்ளது. பாட்ரிக் கடந்த 1945ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி பாரிஸில் பிறந்தார். இரண்டாம் உலகப் போர் முடிந்த 2வது மாதத்தில் அவர் பிறந்தார். அவர் எழுதிய முதல் நாவலான லா பிளேஸ் டெல் எடியோல் 1968ம் ஆண்டு வெளியானது. அவர் கென்ய எழுத்தாளர் நுகி வா தியோங்கோ, ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முரகாமி, பெலுருசியாவைச் சேர்ந்த பத்திரிக்காயளரும், எழுத்தாளருமான ஸ்வெட்லானா அலெக்சிவிச் மற்றும் சிரியாவைச் சேர்ந்த கவிஞர் அடோனிஸ் ஆகியோரை தோற்கடித்து நோபல் பரிசை வென்றுள்ளார். பாட்ரிக்கிற்கு பதக்கமும், ரூ.6 கோடியே 85 லட்சத்து 37 ஆயிரம் ரொக்கமும் கிடைக்கும். முன்னதாக கடந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை கனடாவை சேர்ந்த எழுத்தாளர் ஆலிஸ் மன்ரோ பெற்றார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இரட்டை பெண் குழந்தைகள் பிறக்கப் போகுதாம் இளவரசி கேட் மிடில்டனுக்கு! Posted: 09 Oct 2014 08:06 AM PDT
இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டனுக்கு இரட்டை குழந்தைகள் அதுவும் பெண் குழந்தைகள் பிறக்கப் போகிறது என்று ஸ்டார் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசர் வில்லயிம், கேட் மிடில்டன் தம்பதிக்கு ஜார்ஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கேட் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். அவர் கர்ப்பமான செய்தியை அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததில் இருந்து பிறக்கப் போவது ஆணா, பெண்ணா என்று இங்கிலாந்து மக்கள் பந்தயம் கட்டி வருகிறார்கள். இந்நிலையில் ஸ்டார் பத்திரிக்கை தனது அக்டோபர் மாத பதிப்பில் கேட் குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. தனக்கு இரட்டைக் குழந்தைகள் அதுவும் பெண் குழந்தைகள் பிறக்கப் போவதாக கேட் அரண்மனைவாசிகளிடம் தெரிவித்துள்ளதாக ஸ்டார் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. முதல் குழந்தை ஆணாக பிறந்ததால் அடுத்தது பெண்ணாக பிறக்க வேண்டும் என்று கேட் விரும்பினார். கேட் தனக்கு பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு என்ன பெயர் வைப்பார் என்று ஏற்கனவே ஒரு கூட்டம் பந்தயம் கட்ட துவங்கிவிட்டது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மக்களுக்கு அழுத்தங்களை கொடுக்கும் அரசாங்கம்! – விக்ரமபாகு குற்றச்சாட்டு Posted: 09 Oct 2014 06:53 AM PDT
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக அரசாங்கம் பல்வேறு சக்திகளை உருவாக்கி வருவதாக நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அரசாங்கம் எந்த வழியில் பயணிக்கின்றது என கேள்வி எழுப்பியுள்ள அவர், அரசாங்கம் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி மக்களின் அமைதியான நிலைப்பாடுகளுக்கு அழுத்தங்களை கொடுத்து வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் ஜனாதிபதி அரசாங்கம்! Posted: 09 Oct 2014 06:50 AM PDT
ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சார பணிகளை அடுத்த வாரத்தில் இருந்து ஆரம்பிக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது. இது தொடர்பான செயற்பாட்டு திட்டம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதுடன் அது பற்றிய விசேட கூட்டம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரான அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் வீட்டில் நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷ, பொருளாரான அமைச்சர் டலஸ் அழகபெரும ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்பாட்டு திட்டம் குறித்து முதலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருடன் ஆலோசித்து விட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெளி அணியினர் தொடர்பான இணைப்பு பணிகள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 09 Oct 2014 03:24 AM PDT
அமெரிக்கா- 29-வயதுடைய பெண் ஒருவர் நவம்பர் மாதம் 1-ந்திகதிக்கு முன்னர் இறந்துவிட எதிர்பார்க்கின்றார். இப்பெண்ணை வருத்திக்கொண்டிருக்கும் மூளை புற்று நோய் ஒக்டோபர் மாதத்தில் அவரை கொல்லாது விட்டால் தனது வாழ்க்கையை தானே முடித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளார். தனது கணவனின் 30-வது பிறந்த நாள் முடிந்து சில நாட்களில் நவம்பர் மாதம் 1-ந்திகதி உயிரை விட தீர்மானித்துள்ளார். கலிபோர்னியாவை சேர்ந்த Brittany Maynard இவரும் இவரது கணவர் Dan Diaz-ம் கலிபோர்னியாவை விட்டு Oregon சென்றுள்ளனர். ஏனெனில் அங்கு முடிவு கட்டத்தில் இருக்கும் நோயாளிகள் வைத்தியர் ஒருவரால் பரிந்துரைக்கப்படும் உயிர் நீக்கும் மருந்துகள் மூலம் தங்களது உயிரை போக்கி கொள்ள அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 1997-ல் யு.எஸ்சில் Oregon மாநிலம் வைத்தியர் ஒருவர் இறுதிக்கட்ட நோயாளி ஒருவர் வேண்டும் பட்சத்தில் உயிர் போக்கும் மருந்தை பரிந்துரைக்கலாம் என அனுமதி வழங்கிய முதலாவது மாநிலமாக வந்துள்ளது. இந்த மருந்தை வைத்தியர் ஒருவர் நிர்வகிப்பது சட்ட விரோதம். நோயாளியே உதவி எதுவும் இன்றி விழுங்க வேண்டும். Maynard தானும் தனது கணவரும் திருமணம் செய்து வாழ்க்கை ஆரம்பித்த சமயம் புது வருட தினத்தன்று தனக்கு மூளை புற்று நோய் கண்டிருப்பதை அறிந்ததாக கூறியுள்ளார். கடந்த இலை துளிர் காலத்தில் 6-மாதங்கள் தான் உயிர்வாழ முடியும் என்ற காலக்கெடு கொடுக்கப்பட்டது. நவம்பர் மாதம் 1-ந்திகதி படத்தில் காட்டப்பட்டிருக்கும் அவரது கலியாண படுக்கையில் குடும்பத்தினர், நெருங்கிய சினேகிதர்கள் சூழ்ந்து நிற்க குளிசையை எடுத்து தனது வேதனையை முடிவுக்கு கொண்டுவர உள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |










