மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- தெலுங்கு மாத கார்த்திகை முதல் நாள்: காளஹஸ்தி கோவிலில் பக்தர்கள் வழிபாடு
- மகாராஷ்ட்டிரம், அரியானா தேர்தல் வெற்றி எதிரொலி: டெல்லி தேர்தலை சந்திக்க பா.ஜ.க. முடிவு
- 6 வங்கிகளின் தலைவர்கள் அதிரடியாக நீக்கம்: நியமனத்தில் முறைகேடு என மத்திய அரசு நடவடிக்கை
- பிரதமர் அலுவலக இண்டர்நெட் இணைப்பின் வேகம்: 34 எம்பிபிஎஸ்
- கேரளாவுக்கு சுற்றுலா வந்த குஜராத்திப் பெண் யானை மிதித்து பலி
- 7 படகுகளுடன் 42 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை சிறைபிடித்தது
- மராட்டியத்தில் புதிய அரசு 31-ந் தேதி பதவி ஏற்கிறது: பா.ஜனதா சார்பில் முதல்-மந்திரி இன்று தேர்வு
- சென்னை-விசாகப்பட்டினம் இடையே கப்பல் போக்குவரத்து: ஆந்திர அரசு முடிவு
- நளினியின் மனுவை இறுதி விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மின்சாரம் தாக்கி தாய்-மகன் பலி
- திட்ட கமிஷனுக்கு பதிலாக புதிய அமைப்பு விரைவில் ஏற்படுத்த மத்திய அரசு திட்டம்
- ரஜினிகாந்தை நம்பி கட்சி நடத்தவில்லை: டெல்லியில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
- இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்க மாட்டோம்: இலங்கை கடற்படை தளபதி உறுதி
- கங்கை கரையில் அஸ்தி கரைக்க அனுமதி இல்லை: உமா பாரதி
- சத்தீஸ்கரில் பிரசாதம் சாப்பிட்ட 3 பேர் பலி; 31 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
- மகாராஷ்டிரா, அரியானா வெற்றியைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் தனித்து போட்டி- பா.ஜனதா
- கறுப்பு பணம் விவகாரம்: தேர்ந்தெடுத்து பெயர்களை வெளியிடுவதாக மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் புகார்
- மேற்கு வங்கத்தில் அரசியல் மோதல்: இருவர் படுகொலை
- ராஜஸ்தான் மாநில மந்திரிசபையில் புதிதாக 14 மந்திரிகள் இன்று பதவியேற்பு
- இந்துக்கள் 10 குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும்: சிவசேனா தலைவரின் கருத்தால் சர்ச்சை
| தெலுங்கு மாத கார்த்திகை முதல் நாள்: காளஹஸ்தி கோவிலில் பக்தர்கள் வழிபாடு Posted: 27 Oct 2014 11:08 PM PDT தெலுங்கு காலண்டர்படி கார்த்திகை மாதம் நேற்று பிறந்தது. கார்த்திகை முதல் நாள் திங்கட்கிழமை என்பதால் அங்குள்ள சிவன் கோவில்களில் பக்தர்கள் பெருமளவு திரண்டு வழிபட்டனர். வாயு தலமான காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் |
| மகாராஷ்ட்டிரம், அரியானா தேர்தல் வெற்றி எதிரொலி: டெல்லி தேர்தலை சந்திக்க பா.ஜ.க. முடிவு Posted: 27 Oct 2014 10:47 PM PDT மகாராஷ்ட்டிரம் மற்றும் அரியானா மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதன் எதிரொலியாக முடங்கிக் கிடக்கும் டெல்லி சட்டசபையை கலைத்துவிட்டு, பொதுத் தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. தயாராகி வருவதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் கணித்துள்ளன. டெல்லி முதல் மந்திரியாக பொறுப்பேற்ற 49 நாட்களில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டதால் அந்த பதவியை ராஜினாமா செய்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் |
| 6 வங்கிகளின் தலைவர்கள் அதிரடியாக நீக்கம்: நியமனத்தில் முறைகேடு என மத்திய அரசு நடவடிக்கை Posted: 27 Oct 2014 10:15 PM PDT தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு தலைவர்கள் நியமிப்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் தலைமையிலான குழு மத்திய அரசுக்கு சிபாரிசு செய்கிறது. அதன் பிறகு மத்திய அரசு பரிசீலித்து வங்கி தலைவர்களை நியமனம் செய்கிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில் 6 |
| பிரதமர் அலுவலக இண்டர்நெட் இணைப்பின் வேகம்: 34 எம்பிபிஎஸ் Posted: 27 Oct 2014 10:05 PM PDT தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களில், இந்திய பிரதமர் அலுவலக இண்டர்நெட் இணைப்பின் வேகம் 34 எம்பிபிஎஸ் (Mbps) எனத் தெரியவந்துள்ளது. ஆன்லைன்ஆர்டிஐ.காம் (onlinerti.com) என்ற இணையதளத்தின் துணை |
| கேரளாவுக்கு சுற்றுலா வந்த குஜராத்திப் பெண் யானை மிதித்து பலி Posted: 27 Oct 2014 08:52 PM PDT குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர், கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான மூனாறு உள்ளிட்ட பகுதிகளை கண்டுகளித்துச் செல்ல ஒரு குழுவாக வந்திருந்தனர். இருட்டுக்காணம் என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் பொழுதுப்போக்கு பூங்காவில் யானை மீது ஏறி சவாரி செய்தபடி, அந்தக் குழுவினர் ஒருவரையொருவர் புகைப்படம் எடுத்து, மகிழ்ந்துக் கொண்டிருந்தபோது, அவர்களில் டிபாலி |
| 7 படகுகளுடன் 42 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை சிறைபிடித்தது Posted: 27 Oct 2014 08:36 PM PDT பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக 7 படகுகளுடன் 42 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை சிறைபிடித்துள்ளனர். அரபிக் கடலோரம் குஜராத் மாநிலத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே அந்தப் படகுகளில் நேற்று மீனவர்கள் வலைவிரித்து காத்திருந்தபோது, 'நிலோபர்' புயலின் தாக்கத்தால் அந்தப் படகுகள் நிலைதடுமாறி கடலின் உள்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டன. |
| மராட்டியத்தில் புதிய அரசு 31-ந் தேதி பதவி ஏற்கிறது: பா.ஜனதா சார்பில் முதல்-மந்திரி இன்று தேர்வு Posted: 27 Oct 2014 05:18 PM PDT மராட்டிய சட்டசபையின் 288 தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில், தனித்து ஆட்சி அமைக்க போதுமான அளவுக்கு எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆனால் பா.ஜனதா 122 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது. |
| சென்னை-விசாகப்பட்டினம் இடையே கப்பல் போக்குவரத்து: ஆந்திர அரசு முடிவு Posted: 27 Oct 2014 04:45 PM PDT சுற்றுலா வளர்ச்சிக்காகவும், சரக்கு போக்குவரத்து மேம்பாட்டுக்காகவும் விசாகப்பட்டினம்-சென்னை இடையே கடல் வழிப்பாதை அமைக்க ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தேவையான ஆரம்ப திட்டங்களை ஆசிய வளர்ச்சி வங்கி தயாரித்து உள்ளது. 2015-ம் ஆண்டு ஏப்ரல் முதல் தொடக்கப்பணிகள் நடைபெறும் என்றும், இதற்காக சுற்றுலா திட்டங்கள், |
| நளினியின் மனுவை இறுதி விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு Posted: 27 Oct 2014 04:22 PM PDT முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் ஆண்கள் மத்திய ஜெயிலிலும், ஆயுள் தண்டனை பெற்ற நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். |
| திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மின்சாரம் தாக்கி தாய்-மகன் பலி Posted: 27 Oct 2014 02:16 PM PDT திருவள்ளூரை சேர்ந்த லட்சுமி(வயது 35) தனது கணவர், மற்றும் ஒன்றரை வயது மகன் மகேஷ் ஆகியோருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அங்கு கோவிலின் தர்மதரிசன வரிசையில் அவர்கள் நின்று கொண்டு இருந்தனர். |
| திட்ட கமிஷனுக்கு பதிலாக புதிய அமைப்பு விரைவில் ஏற்படுத்த மத்திய அரசு திட்டம் Posted: 27 Oct 2014 01:42 PM PDT சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து திட்ட கமிஷன் செயல்பட்டு வருகிறது. அது, முதலாவது பிரதமர் ஜவகர்லால் நேருவின் சிந்தனையில் உதித்த அமைப்பு ஆகும். மத்திய அமைச்சகங்களும், மாநில அரசுகளும் தங்களது ஆண்டு திட்ட யோசனைகளை திட்ட கமிஷனுக்கு அனுப்பி வைத்து ஒப்புதல் கோருவது வழக்கம். அவற்றை ஆய்வு செய்து, ஆண்டு திட்ட நிதி |
| ரஜினிகாந்தை நம்பி கட்சி நடத்தவில்லை: டெல்லியில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி Posted: 27 Oct 2014 12:34 PM PDT தமிழிசை சவுந்தரராஜன் நேற்று டெல்லியில், தமிழக பாரதீய ஜனதா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜீவ் பிரதாப் ரூடியை கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- |
| இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்க மாட்டோம்: இலங்கை கடற்படை தளபதி உறுதி Posted: 27 Oct 2014 11:18 AM PDT காஷ்மீரின் லடாக் பகுதிக்கு கிழக்கே சுமர் பகுதியில் கடந்த மாதம் சீனப்படைகள் ஊடுருவி பல நாட்களாக கூடாரம் அமைத்து தங்கியிருந்தன. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வந்தது. இது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், சீனப்படைகள் திரும்பி சென்றன. இதற்கிடையே சீனப்படைகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவியிருந்த |
| கங்கை கரையில் அஸ்தி கரைக்க அனுமதி இல்லை: உமா பாரதி Posted: 27 Oct 2014 09:21 AM PDT புனித நதியான கங்கை நதியின் மாசுபாட்டை குறைக்கும் பணியின் ஒரு பகுதியாக, ஆற்றின் கரையோரம் அஸ்தியை கரைக்க அனுமதி இல்லை என்று மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி தெரிவித்துள்ளார். மாற்றியமைக்கப்பட்ட தேசிய கங்கை ஆற்று வடிநில ஆணையத்தின் முதல் கூட்டத்தில் பங்கேற்ற உமா பாரதி பேசியதாவது:- |
| சத்தீஸ்கரில் பிரசாதம் சாப்பிட்ட 3 பேர் பலி; 31 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி Posted: 27 Oct 2014 08:00 AM PDT சத்தீஸ்கரில் ஆன்மிக நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிரசாதம் சாப்பிட்ட 3 பேர் பலியானார்கள். 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் பலோடாபஜார்- படாபரா மாவட்டத்தில் உள்ள போடா கிராமத்தில் நேற்று மத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பிரசாதத்தை சாப்பிட்ட பல பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்கள் மருத்துமனைக்கு |
| மகாராஷ்டிரா, அரியானா வெற்றியைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் தனித்து போட்டி- பா.ஜனதா Posted: 27 Oct 2014 06:32 AM PDT பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது 'காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்று பகிரங்கமாக பிரசாரம் செய்தார். அத்துடன் தேர்தலில் அபார வெற்றி பெற்ற பா.ஜனதா, காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை அகற்றியது. அதன்பின், மகாராஷ்டிரா, அரியானாவில் தற்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜனதா அபார வெற்றி பெற்றது. இந்த தொடர் வெற்றியைத் தொடர்ந்து வரும் டிசம்பர் |
| கறுப்பு பணம் விவகாரம்: தேர்ந்தெடுத்து பெயர்களை வெளியிடுவதாக மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் புகார் Posted: 27 Oct 2014 05:39 AM PDT வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் மூவர் பற்றிய விவரங்களை மத்திய அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இப்பட்டியலில் 800 பேர் இடம்பிடித்திருந்த நிலையில் 136 பேர் கொண்ட பட்டியலை மத்திய அரசு இன்று அளிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் மூன்று பேர் கொண்ட பட்டியலை மட்டும் இன்று மத்திய அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதற்கு காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மத்திய அரசு தேர்ந்தெடுத்து பெயர்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக அக்கட்சிகள் குற்றம் |
| மேற்கு வங்கத்தில் அரசியல் மோதல்: இருவர் படுகொலை Posted: 27 Oct 2014 04:48 AM PDT மேற்கு வங்கத்தின் பிர்பம் மாவட்டத்தில் இன்று பா.ஜ.க. மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகொலை செய்யப்பட்டனர். அம்மாவட்டத்தில் உள்ள மக்ரா கிராமத்தில் ஏற்பட்ட இந்த மோதலில் காவல்துறை வாகனங்கள் மீதும் வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அங்கு |
| ராஜஸ்தான் மாநில மந்திரிசபையில் புதிதாக 14 மந்திரிகள் இன்று பதவியேற்பு Posted: 27 Oct 2014 04:40 AM PDT ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா தனது மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய தீர்மானித்தார். அதன் படி இன்று மாலை மூன்று மணி அளவில் 14 புதிய மந்திரிகளுக்கு அம்மாநில ஆளுநர் கல்யாண் சிங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். |
| இந்துக்கள் 10 குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும்: சிவசேனா தலைவரின் கருத்தால் சர்ச்சை Posted: 27 Oct 2014 03:45 AM PDT இந்துக்கள் பெரும்பான்மையினர் தகுதியை தக்க வைத்துக்கொள்ள இந்து குடும்பங்கள் 10 குழந்தைகளுக்கும் மேல் பெற்றெடுக்க வேண்டும் என உத்தரப்பிரதேச சிவசேனா தலைவர் அனில் சிங் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "இந்துக்கள் பெரும்பான்மையினர் என்ற தகுதியை தக்க வைத்துக்கொள்ள இந்து குடும்பங்கள் 10 குழந்தைகளுக்கும் மேல் பெற்றெடுக்க வேண்டும். அவ்வாறு பத்து அல்லது பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |