Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பெடரர் வெற்றி! சுவிஸ் டென்னிஸ் போட்டி

Posted: 27 Oct 2014 08:33 AM PDT

Roger-Federer

Roger-Federerசுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் போட்டித் தொடரின் ஆண்கள்  ஒற்றையர் பிரிவு பைனலில், நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் சாம்பியன்  பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் டேவிட் காபினுடன் (பெல்ஜியம்)  நேற்று மோதிய பெடரர் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்று  கோப்பையை கைப்பற்றினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

புற்று நோயை எதிர்க்கும் ஸ்டெம் செல் கண்டுபிடிப்பு: இந்திய டாக்டர் சாதனை!

Posted: 27 Oct 2014 04:17 AM PDT

kaalith sha

kaalith shaஉலகில் பல்வேறு புதிய நோய்கள் தோன்றினாலும் மற்றோரு புறம் அதற்கான‌ மாற்று மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் பல்வேறு மூளையில் ஏற்படும் புற்றுநோய் கட்டியை குணப்படுத்த, விஞ்ஞானி டாக்டர் காலித் ஷா என்பவர், ஸ்டெம் செல்களை கண்டறிந்து உள்ளார். அமெரிக்கா ஹார்வர்டு ஸ்டெம் செல் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், அங்குள்ள மாசேசூசெட்ஸ் தலைமை மருத்துவமனையில் டாக்டர் காலித் ஷா தலைமையில் மேற்கொண்ட ஆய்வு மற்றும் பரிசோதனைகளில், புற்றுநோய் செல்களை கொல்லும், நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த ஸ்டெம் செல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்டெம் செல், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை கொல்வதுடன், நல்ல நிலையில் உள்ள செல்களை பாதிக்காத வகையில் உள்ளது. புற்று நோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவத்தில், இந்த ஆராய்ச்சி முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் காலித் ஷா, ஜம்மு காஷ்மீரை பூர்வீகமாக கொண்டவர். ஸ்டெம் செல் ஆராய்ச்சி என்பது, தொப்புள் கொடியில் உள்ள செல்களை அடிப்படையாக வைத்து, புதிய செல்களை தயாரிக்கும் அதிநவீன தொழில்நுட்பம். புற்றுநோய்க்கு செல்கள் மூலம் தீர்வு காண்பதில் இது ஒரு முக்கிய தொடக்கமாக அமையும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிக்கியுள்ள அமைச்சர்களின் ரகசியங்கள்: ரணிலின் பேச்சுவார்த்தை தோல்வி!

Posted: 27 Oct 2014 04:03 AM PDT

Rannil

Rannilமுக்கிய அமைச்சர்கள் சிலர் தொடர்பான இரகசிய புலனாய்வு அறிக்கைகள் அடங்கிய கோப்புகள் எதிர்க்கட்சி வசம் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அமைச்சர்களின் இரகசிய செயற்பாடுகள் மற்றும் ஊழல், மோசடிகள் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதற்கு தலா இரண்டு பேர் வீதம் புலனாய்வுப் பிரிவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாரம் தோறும் அமைச்சர்களின் செயற்பாடுகள் தொடர்பான இரகசிய அறிக்கையொன்றை தயாரித்து, புலனாய்வுப் பிரிவின் மூலமாக ஜனாதிபதிக்கு சமர்பிப்பது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் முக்கிய அமைச்சர்கள் சிலரின் மோசடிகள் தொடர்பான கோப்புகள் ஐக்கிய தேசிய கட்சியின் வசம் கிடைத்துள்ளதாக நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின் போது அவற்றை வெளியிட ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. குறித்த அறிக்கைகள் வெளியே கசிந்துள்ள விபரம் தற்போது ஆளுங்கட்சிக்கும் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அமைச்சர்கள் சிலருக்கு உள்ளூர நடுக்கம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெகுஜன அமைப்புகள் மற்றும் ரணில் இடையிலான பேச்சுக்கள் இணக்கமின்றி முடிந்தது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சில வெகுஜன அமைப்புகளுக்கு இடையில் கோட்டே நாக விகாரையில் நேற்றிரவு இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக நீதிக்கான தேசிய அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். நாக விகாரையில் நேற்றிரவு 9 மணியளவில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் மாதுளுவாவே சோபித தேரரின் நீதிக்கான தேசிய அமைப்பு மற்றும் அத்துரலியே ரத்ன தேரரின் தூய்மையான நாளை அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த அமைப்பின் பிரதிநிதிகளை தவிர மனோ கணேசன், அசாத் சாலி ஆகிய அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கலந்துரையாடலை ஆரம்பித்த குறித்த அமைப்புகள், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாது பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரிடம் கோரிக்கை விடுத்தன. அவ்வாறான பொது வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டால், ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளின் ஆதரவை பெற முடியும் என அமைப்பின் பிரதிநிதிகள், ரணில் விக்ரமசிங்கவிடம் விளக்கியுள்ளனர். இந்த கோரிக்கையை நிராகரித்த ரணில், எதிர்க்கட்சிகளின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவதன் அவசியத்தை தெளிவுப்படுத்தியதுடன் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தான் தீர்மானித்திருப்பதாகவும் தேர்தலில் போட்டியிட போவதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து இந்த பேச்சுவார்த்தைகள் எவ்வித இணக்கப்பாடுகளும் இன்றி முடிவடைந்துள்ளன. பொது வேட்பாளர் தொடர்பாக சரியான முடிவு எட்டப்படும் வரை ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள யோசனைகளுக்கு இணங்குவதில்லை என சந்திப்பில் கலந்து கொண்ட அமைப்புகள் ஏகமனதாக தீர்மானித்துள்ளன. இந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படுவதற்கு சற்று முன்னதாக ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் நாக விகாரைக்கு வந்து மாதுளுவாவே சோபித தேரரை சந்தித்து விட்டு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

கமலேஷ் சர்மா ஜனாதிபதி மகிந்தவை சந்தித்தார் !

Posted: 27 Oct 2014 03:55 AM PDT

RAJABAKSA

RAJABAKSAஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இன்று அலரிமாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் கமலேஷ் சர்மாவுடன் வருகைதந்திருந்த ஐந்து பிரதிதிகளும் பங்கேற்றனர். மேலும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், வெளிவிவகார அமைச்சு செயலாளர் சேனுகா செனவிரத்தின ஆகியோரும் உடனிருந்தனர். இதேவேளை, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை, சர்மா தலைமையிலான குழுவினர் ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று மாலை 3 மணியளவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு வருகை தந்த சர்மா, நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ததுடன், வடமாகாண ஆளுநர் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வாகனத்திற்குள் அகப்பட்ட மனிதன்! வீதி முழுவதும் சிந்தி வழிந்த பார்வையாளர்கள்!

Posted: 27 Oct 2014 03:40 AM PDT

accident

accidentஒன்ராறியோவில் மிக அரிதான வாகன மோதலும் தலைகீழாக உருண்ட சம்பவம் ஏற்பட்டுள்ளது. SUV ஒன்று தலைகீழாக புரள வாகனத்தின் சாரதி வாகனத்தின் உள்ளே அகப்பட்டுக்கொண்டார். இந்த பயங்கர விபத்து ஞாயிற்றுக்கிழமை காலை 11-மணியளவில் நடந்தது. விளையாட்டு பயன்பாட்டு வாகனமான SUV மெயிட்லன்ட் வீதி தெற்கில் பயணித்து கொண்டிருக்கையில் பிக்அப் டிரக் ஒன்றுடன் மோதியது. இந்த மோதலால் எஸ்யுவி தலைகீழாக புரண்டுள்ளது. வாகனத்திற்குள் இருந்த தனி ஒரு மனிதன் உள்ளே அகப்பட்டுக்கொண்டார். அவசர சேவை பிரிவினர் சாரதியின் பக்க கதவை வெட்டி இடிபாடுகளிற்குள் இருந்த மனிதரை வெளியே எடுத்துள்ளனர். காயங்கள் எதுவும் தெரியாத நிலையில் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். வாகனம் புரண்ட போது அதற்குள்ளிருந்து ஒரு சிறிய வெள்ளை நிற நாய் பாய்ந்து ஒடியதை கண்டதாக சாட்சியங்கள் தெரிவித்துள்ளனர். நாய் கண்டுபிடிக்கப்படவில்லை. விபத்து சம்பந்தமாக விசாரனை நடைபெறுகின்றது. அப்பகுதியில் இது ஒரு வழக்கத்திற்கு மாறான சம்பவம் என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™