Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சத்யம் நிறுவன மோசடி வழக்கு: 30-இல் தீர்ப்புத் தேதி அறிவிப்பு?

Posted: 27 Oct 2014 01:25 PM PDT

 சத்யம் கணினி நிறுவன மோசடி வழக்கின் தீர்ப்புத் தேதியை இந்த மாதம் 30-இல் ஹைதராபாத் நீதிமன்றம் அறிவிக்கக்கூடும் எனத் தெரிகிறது.

சீன உறவை மேம்படுத்த இந்தியாவுக்கு எதிராகச் செயல்படமாட்டோம்: இலங்கைக் கடற்படை துணைத் தலைமை தளபதி

Posted: 27 Oct 2014 01:25 PM PDT

சீனாவுடனான ராணுவ உறவை வளர்த்துக் கொள்ள, இந்திய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைளை எந்த நிலையிலும் இலங்கை

பிரேசில் அதிபருக்கு மோடி வாழ்த்து

Posted: 27 Oct 2014 01:23 PM PDT

பிரேசில் நாட்டின் அதிபராக 2ஆவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள டில்மா ரூஸஃபுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு

Posted: 27 Oct 2014 01:22 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலம், முசாஃபர்நகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கலவரத்தின்போது பாலியல்

ராஜ்நாத் சிங் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்: காங்கிரஸ்

Posted: 27 Oct 2014 01:22 PM PDT

கிழக்கு தில்லியின் திரிலோக்புரி பகுதியில் தீபாவளி பண்டிகையின் போது இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட

தீவிரப் புயலாக மாறிய "நிலோஃபர்'

Posted: 27 Oct 2014 01:21 PM PDT

அரபிக் கடலில் உருவான நிலோஃபர் புயல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்தப் புயல், குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள

மோகத்தைக் கொன்றுவிடு!

Posted: 27 Oct 2014 01:10 PM PDT

தாம் வாழும் சூழல், பிறந்த குடியின் மரபுகள், வாழ்க்கைத் தேவை போன்றவற்றால் மனிதர்களுக்கு விருப்பும், வெறுப்பும் தாமாகவே உண்டாகும். வசதிக்காகச் சிலவற்றைச்

காத்திருக்கிறார்கள்...

Posted: 27 Oct 2014 01:09 PM PDT

பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த நாடுகளில் பெண் குழந்தைகள் கல்வி கற்கச் செல்வது என்பது மிகப்பெரிய

இந்த நாளில் அன்று (27.10.1983); ""ராணுவத்தை அனுப்புமாறு இலங்கைத் தலைவர்கள் கோரவில்லை'' சட்டசபையில் எம்.ஜி.ஆர். பதில்

Posted: 27 Oct 2014 01:06 PM PDT

இந்த நாளில் அன்று (27.10.1983); ""ராணுவத்தை அனுப்புமாறு இலங்கைத் தலைவர்கள் கோரவில்லை'' சட்டசபையில் எம்.ஜி.ஆர். பதில்

அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்னொரு புஷ் போட்டி?

Posted: 27 Oct 2014 01:01 PM PDT

அமெரிக்க அதிபர்களாக இருந்த புஷ் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புஷ் 2016-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள

உக்ரைன்: வாக்கு எண்ணிக்கையில் ஐரோப்பிய யூனியன் ஆதரவு அணி முன்னிலை

Posted: 27 Oct 2014 01:00 PM PDT

உக்ரைன் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், கிளர்ச்சியாளர்கள்

சிரியா ராணுவச் சாவடிகள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: 19 பேர் பலி

Posted: 27 Oct 2014 12:56 PM PDT

சிரியா ராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே திங்கள்கிழமை நடைபெற்ற மோதலில் 9 கிளர்ச்சியாளர்களும்

எபோலா பாதிப்புள்ள இடங்களிலிருந்து நியூயார்க் வருவோருக்குக் கட்டுப்பாடு

Posted: 27 Oct 2014 12:55 PM PDT

எபோலா நோய் பாதிப்புள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து நியூயார்க் வருபவர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை

இராக்: தற்கொலை தாக்குதலில் 24 பேர் பலி

Posted: 27 Oct 2014 12:54 PM PDT

இராக் தலைநகர் பாக்தாதுக்கு அருகே திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 24 பேர் பலியாகினர்.

பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 33 பயங்கரவாதிகள் சாவு

Posted: 27 Oct 2014 12:53 PM PDT

பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் விமானப் படையினர் திங்கள்கிழமை நடத்திய அதிரடித் தாக்குதலில்

அமெரிக்கா செல்கிறார் பாகிஸ்தான் ராணுவத் தளபதி

Posted: 27 Oct 2014 12:52 PM PDT

பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ரஹீல் ஷரீப், அமெரிக்காவுக்கு அடுத்த மாதம் பயணம் மேற்கொள்கிறார்.

தினசரி ரூ.250 கோடி வீட்டு வசதிக் கடன்: பாரத ஸ்டேட் வங்கி இலக்கு

Posted: 27 Oct 2014 12:49 PM PDT

நாட்டில் பண்டிகைக் காலமாக உள்ள நிலையில், நாளொன்றுக்கு ரூ. 250 கோடி மதிப்பிலான வீட்டு வசதிக் கடனை அளிக்க பாரத ஸ்டேட் வங்கி இலக்கு

யுனைடெட் இந்தியா: அரையாண்டு நிகர லாபம் ரூ. 376 கோடி

Posted: 27 Oct 2014 12:47 PM PDT

யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் முதலாம் அரையாண்டில் ரூ. 376 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரட்டை சிம் வசதியுடன் "நோக்கியா-130' விற்பனை தொடக்கம்

Posted: 27 Oct 2014 12:43 PM PDT

இரட்டை சிம் கார்டு வசதியுடன் "நோக்கியா-130' மாடலை மைக்ரோஸாஃப்ட் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய நோக்கியா-130

மெர்ஸிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ...

Posted: 27 Oct 2014 12:37 PM PDT

மெர்ஸிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ஜி.எல்.ஏ. 45 ஏஎம்ஜி 4-மேடிக் காரை மும்பையில் திங்கள்கிழமை

மாணவி கொலை வழக்கில் 13 பேரிடம் விசாரணை

Posted: 27 Oct 2014 12:36 PM PDT

பிச்சம்பட்டி மாணவி கொலை வழக்கில் 13 பேரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பிச்சம்பட்டியைச் சேர்ந்த வினிதா ஜூன் 23-ல்

கரூரில் நாளை திமுக செயற்குழுக் கூட்டம்

Posted: 27 Oct 2014 12:36 PM PDT

கரூரில் வரும் 29-ம் தேதி மாவட்ட திமுக செயற்குழுக்கூட்டம் நடைபெற உள்ளது. வரும் நவ.3-ம் தேதி நடைபெறவுள்ள அறப்போர் ஆர்ப்பாட்டம் குறித்து ஆலோசிக்கும் வகையில் நடைபெறும் கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் டி. ராஜேந்திரன் தலைமை வகிக்கிறார்.

பள்ளபட்டி பள்ளியில் கூடுதல் கட்டடம் திறப்பு

Posted: 27 Oct 2014 12:36 PM PDT

பள்ளபட்டி உஸ்வத்துன் ஹசனா அரபிக் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தை அரவக்குறிச்சி எம்எல்ஏ கே.சி. பழனிசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

சீர்காழி அருகேதடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

Posted: 27 Oct 2014 12:36 PM PDT

சீர்காழி அருகே தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். சீர்காழியை அடுத்த வேட்டங்குடி பிள்ளையார்கோயில் தெருவை சேர்ந்தவர் சு. தமிழரசன் (47). சாராயம் விற்றதாக தமிழரசனை புதுப்பட்டினம் போலீஸார் கடந்த 10-ம் தேதி கைது செய்து திருச்சி மத்த

குளத்தில் தவறி விழுந்த மீனவர் சாவு

Posted: 27 Oct 2014 12:35 PM PDT

வேதாரண்யத்தில் குளத்தில் தவறி விழுந்த மீனவர் தண்ணீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். ஆறுகாட்டுத்துறை சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த குசலவன் மகன் பழனிநாதன் (35). மீனவர். இவர், தோப்புத்துறை, பனையங்காடு பகுதியில் உள்ள குளத்தில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச்

சமையலின்போதுதீக்காயமடைந்த பெண் சாவு

Posted: 27 Oct 2014 12:35 PM PDT

தஞ்சாவூர் அருகே சமையல் செய்யும்போது தீக்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

முதியோர் உதவித்தொகை, மனைப் பட்டா வழங்க கோரிக்கை

Posted: 27 Oct 2014 12:35 PM PDT

மூன்று மாதங்களாக வழங்கப்படாத முதியோர் உதவித் தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெருமத்தூர் கிராம பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

பேரிடர் மேலாண்மை கருத்தரங்கம்

Posted: 27 Oct 2014 12:34 PM PDT

பெரம்பலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா, குரூர் ஸ்டார் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் குரூர் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் துய்மை இந்தியா, பெண்கள் மேம்பாடு மற்றும் பேரிடர் மேலாண்மை கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அஸ்ஸாமில் 1,000 மணி நேர "பந்த்'

Posted: 27 Oct 2014 12:34 PM PDT

அஸ்ஸாம் மாநிலம், "கார்பி ஆங்லாங்' மாவட்டத்தை தனி மாநிலமாக உருவாக்க வலியுறுத்தி, தனி மாநிலத்துக்கான கூட்டு நடவடிக்கை குழு (ஜாகாஸ்)

வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் ஆய்வு

Posted: 27 Oct 2014 12:34 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் ஒன்றியம், குந்தவெளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமை மாநில சிறுபான்மையினர் நலத் துறை ஆணையர் மற்றும் அரியலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஏ. முகமது அஸ்லாம் ஆய்வு செய்தார்.

டெங்கு தடுப்பு பணியில் மகளிர் சுய உதவிக்குழுவினர்

Posted: 27 Oct 2014 12:34 PM PDT

அறந்தாங்கி நகராட்சிப் பகுதியில், டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பணியில் மகளிர் சுய உதவிக்குழுவினர் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

குவைத் மாணவிக்கு பிரதமர் மோடி பாராட்டு

Posted: 27 Oct 2014 12:33 PM PDT

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாதிப்படைந்தவர்களுக்காக, ரூ.2.15 லட்சம் நிதி திரட்டி பிரதமர் நிவாரண

தனியார் பள்ளிகளுக்கு தாமதமின்றிசுகாதாரச் சான்று வழங்கக் கோரி மனு

Posted: 27 Oct 2014 12:33 PM PDT

தனியார் பள்ளிகளுக்கு சுகாதாரச் சான்று வழங்குவதில் தாமதம் நீடிப்பதாக புதுககோட்டை மாவட்ட நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், சிபிஎஸ்இ- பள்ளிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்துள்ளனர்.

புதுகையில் அரசின் திட்டங்கள், சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சி தொடக்கம்

Posted: 27 Oct 2014 12:33 PM PDT

புதுக்கோட்டை நகர் அரங்கில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

உ.பி.: 10 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு நவ. 20-இல் தேர்தல்

Posted: 27 Oct 2014 12:33 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 10 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடைவதைத் தொடர்ந்து, அடுத்த மாதம் 20ஆம் தேதி

அக்டோபர் 28 மின் தடை

Posted: 27 Oct 2014 12:33 PM PDT

அன்னவாசல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக். 28) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இலுப்பூர் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் உதவி செயற்பொறியாளர் க. ஆறுமுகம் வெயிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நலவாரிய உறுப்பினர்கள் 1079 பேருக்கு ரூ. 18.80 லட்சம் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

Posted: 27 Oct 2014 12:32 PM PDT

புதுக்கோட்டையில் தொழிலாளர் நலத் துறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் நலவாரிய உறுப்பினர்கள் 1079 பேருக்கு ரூ. 18.80 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை

தாஞ்சூரில் மருதுபாண்டியர் குருபூஜை விழா

Posted: 27 Oct 2014 12:32 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகேயுள்ள தாஞ்சூர் கிராமத்தில் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஒரத்தநாட்டில் மூமுகவினர் மறியல்

Posted: 27 Oct 2014 12:32 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் தேவர் குருபூஜையையொட்டி வைக்கப்பட்டிருந்த பதாகைகளை அகற்றிய போலீஸாரைக் கண்டித்து மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சீன எல்லையில் காவல் பணி: புதிதாக 12,000 வீரர்களை நியமிக்க அனுமதி

Posted: 27 Oct 2014 12:32 PM PDT

சீன எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், இந்தோ- திபெத் எல்லைக் காவல் படையில் புதிதாக

"ஜெயகாந்தனின் படைப்புகளை படித்தால் மனம் விசாலமடையும்'

Posted: 27 Oct 2014 12:32 PM PDT

எழுத்தாளர் ஜெயகாந்தனின் படைப்புகளைப் படித்தால் மனம் விசாலமடையும் என அமுதசுரபி இதழின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் தெரிவித்தார்.

சமையலின்போது தீக்காயமடைந்த பெண் சாவு

Posted: 27 Oct 2014 12:31 PM PDT

தஞ்சாவூர் அருகே சமையல் செய்யும்போது தீக்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

"குருபூஜைக்கு செல்லும் வாகனங்களுக்கு முன் அனுமதி தேவை'

Posted: 27 Oct 2014 12:31 PM PDT

தேவர் குரு பூஜையில் பங்கேற்பதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் போலீஸாரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கு. தர்மராஜன் தெரிவித்துள்ளார்.

திமுகவினர் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்: ஸ்டாலின்

Posted: 27 Oct 2014 12:31 PM PDT

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்க, கட்சியினர் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம் என்றார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்.

நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத் திட்ட உதவி

Posted: 27 Oct 2014 12:31 PM PDT

திருவாரூரில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு அண்மையில் ரூ. 15 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கருப்புப் பணம்: அனைவரது பெயர்களையும் வெளியிட இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

Posted: 27 Oct 2014 12:30 PM PDT

வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்கள் அனைவரது பெயர்களையும் மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று

கருவேலங்கடை கடுவையாற்றில்வெங்காயத் தாமரை அகற்றும் பணி

Posted: 27 Oct 2014 12:30 PM PDT

நாகை மாவட்டம், கருவேலங்கடை கடுவையாற்றில் வெங்காயத் தாமரை செடிகளை அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது

தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

Posted: 27 Oct 2014 12:30 PM PDT

சீர்காழியை அடுத்த வேட்டங்குடி பிள்ளையார்கோயில் தெருவை சேர்ந்தவர் சு. தமிழரசன் (47). சாராயம் விற்றதாக தமிழரசனை புதுப்பட்டினம் போலீஸார் கடந்த 10-ம் தேதி கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரை தடுப்புக் காவல் சட்டத்தில்

மஞ்சக்குடியில் இன்றுதொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா

Posted: 27 Oct 2014 12:29 PM PDT

திருவாரூர் அருகே மஞ்சக்குடியில் புதிய தொழில் பயிற்சி நிலையத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை (அக். 28) நடைபெறுகிறது.

அக்.30-ல் முத்திரை கட்டண வசூல் முகாம்

Posted: 27 Oct 2014 12:29 PM PDT

வரும் 30-ம் தேதி வேலாயுதம்பாளையத்தில் முத்திரைக் கட்டண வசூல் முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கரூர் வட்டாட்சியர் அலுவலக முத்திரைக்கட்டண தனி வட்டாட்சியர் ஆர். முனியப்பன்

ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் கூட்டணி இல்லை: பாஜக திட்டவட்டம்

Posted: 27 Oct 2014 12:29 PM PDT

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்தே போட்டியிடப்போவதாக பாஜக அறிவித்துள்ளது.

இந்து முன்னணி முற்றுகைப் போராட்டம்

Posted: 27 Oct 2014 12:29 PM PDT

கோயில் நிலங்கள் தொடர்பாக கரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 47 பேரை போலீஸார் கைது

ராஜஸ்தான் மாநில அமைச்சரவை விரிவாக்கம்

Posted: 27 Oct 2014 12:28 PM PDT

ராஜஸ்தான் மாநில அமைச்சரவை திங்கள்கிழமை விரிவுபடுத்தப்பட்டது. 4 கேபினட் அமைச்சர்கள் உள்பட 14 பேர், புதிய அமைச்சர்களாகப்

ஆட்டோமீது கார் மோதல்:மாணவி சாவு, 4 பேர் காயம்

Posted: 27 Oct 2014 12:28 PM PDT

கரூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் பிளஸ் 1 மாணவி இறந்தார். 4 பேர் காயமடைந்தனர்.

நொய்யலாற்று நீரை ஆத்துப்பாளையம் அணைக்கு திருப்பக் கோரி மனு

Posted: 27 Oct 2014 12:28 PM PDT

நொய்யலாற்றில் வரும் மழைத் தண்ணீரை ஆத்துப்பாளையம் அணைக்குத் திருப்பிவிட வேண்டும் என நொய்யல் அத்தப்பகவுண்டன்வலசு பிரதான கால்வாய் பாசன விவசாயிகள் சங்கத்தினர்

வாக்காளர் பட்டியலில் சேர விண்ணப்பிக்கலாம்

Posted: 27 Oct 2014 12:28 PM PDT

18 வயது முடிந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குறைதீர் முகாமில் 22 பேருக்கு உதவி

Posted: 27 Oct 2014 12:28 PM PDT

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 22 பயனாளிகளுக்கு ரூ. 5.28 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி வழங்கினார்.

அமராவதி கரையோரப் பகுதி மக்களுக்கு அறிவுறுத்தல்

Posted: 27 Oct 2014 12:28 PM PDT

அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் ஆற்றின் கரையோரம் வசிப்பவர்கள் மேடான பகுதிக்குச் செல்ல வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி அறிவுறுத்தியுள்ளார்.

கர்நாடகம்: 2,296 அரசு மருத்துவர்கள் ராஜிநாமா

Posted: 27 Oct 2014 12:27 PM PDT

ஊதிய உயர்வு உள்ளிட்ட 14 கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்றத் தவறியதாகக் கூறி,  கர்நாடக அரசு மருத்துவர்கள் 2,296 பேர்

தொழிற்கல்வி கணினி பயிற்றுநர்பணியிடம் : பதிவைச் சரிபார்க்கலாம்

Posted: 27 Oct 2014 12:27 PM PDT

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொழிற்கல்வி கணினி பயிற்றுநர் பணியிடத்துக்கு தங்களது பதிவு மூப்பைச் சரிபார்க்கலாம்.

ரூ. 4.41 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

Posted: 27 Oct 2014 12:27 PM PDT

அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ. 4 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வழங்கினார்.

திருமானூர் டாஸ்மாக் கடையை இட மாற்ற வலியுறுத்தல்

Posted: 27 Oct 2014 12:27 PM PDT

திருமானூரில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடை மற்றும் மது அருந்தும் கூடத்தை மூட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கார் மோதி மூதாட்டி சாவு

Posted: 27 Oct 2014 12:26 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள கூவத்தூர் அருளாநந்தபுரத்தைச் சேர்ந்தவர் மரிய ஆரோக்கியதாஸ் மனைவி தனபாக்கியம் (65). இவரது வீடு ஜயங்கொண்டம் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ளது.

தமிழகத்தில் நவ.1 முதல் பாஜக புதிய உறுப்பினர் சேர்ப்பு: தமிழிசை செளந்தரராஜன் தகவல்

Posted: 27 Oct 2014 12:26 PM PDT

தமிழகத்தில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒரு கோடியாக உயர்த்தும் நோக்குடன், வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் புதிய உறுப்பினர்கள்

தனித் தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் தொடக்கம்

Posted: 27 Oct 2014 12:26 PM PDT

பிளஸ் 2 துணைத் தேர்வெழுதிய தனித் தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.

தீக்குளித்த இளைஞர் சாவு

Posted: 27 Oct 2014 12:25 PM PDT

பெரம்பலூர் அருகே உள்ள அய்யலூர் கிராமத்தை சேர்ந்தவர் மொட்டையன் மகன் அண்ணாதுரை (35). மனநலன் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 25-ம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரது பெற்றோர், அண்ணாதுரையை பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில்

பள்ளி ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்பு பயிற்சி

Posted: 27 Oct 2014 12:25 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூரில் உள்ள ஹிதாயத் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்பு பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ரூ. 36 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Posted: 27 Oct 2014 12:25 PM PDT

மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் ரூ. 36 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அக்டோபர் 28 மின் தடை

Posted: 27 Oct 2014 12:24 PM PDT

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (அக். 28) மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

அறந்தாங்கியில் திமுக ஆர்ப்பாட்டம்

Posted: 27 Oct 2014 12:24 PM PDT

அறந்தாங்கி அண்ணாசிலை அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நகர, ஒன்றிய திமுக சார்பில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி அதிகமானோர் மனு

Posted: 27 Oct 2014 12:24 PM PDT

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான குறைகேட்பு முகாமில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி அதிகமானோர், ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

குடிநீர்த் தட்டுப்பாடு:திருமலைராயசமுத்திரம் பகுதி பெண்கள் ஆட்சியரிடம் மனு

Posted: 27 Oct 2014 12:23 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், திருமலைராயசமுத்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட இந்திரா நகரில் நீடிக்கும் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியர் செ. மனோகரனிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு சிவசேனை ஆதரவு

Posted: 27 Oct 2014 12:23 PM PDT

மகாராஷ்டிரத்தில் பாஜக ஆட்சியமைப்பதற்கு சிவசேனை திங்கள்கிழமை ஆதரவு தெரிவித்தது.

கந்தர்வகோட்டையில் தேசிய நெடுஞ்சாலைக்குநிலமெடுப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

Posted: 27 Oct 2014 12:23 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் எடுப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆகியோர் பங்கேற்

துப்புரவுப் பணியாளர்களை கூடுதலாக நியமிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

Posted: 27 Oct 2014 12:23 PM PDT

மக்கள் தொகைக்கு ஏற்ப துப்புரவுப் பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி, புதுக்கோட்டையில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் செ. மனோகரனிடம் சிஐடியு உள்ளாட்சித் தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர். இதுகுறித்து ஆட்சியரிடம், சிஐடியு மாவட்டத் த

பொன்னமராவதி ஒன்றியத்தில் வாக்காளர் சேர்க்கை முகாம்

Posted: 27 Oct 2014 12:23 PM PDT

பொன்னமராவதி ஒன்றியத்தில் நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை முகாமில் 813 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

டாஸ்மாக் கடையை குடியிருப்புக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மறியல்

Posted: 27 Oct 2014 12:22 PM PDT

கும்பகோணத்தில் டாஸ்மாக் கடையை குடியிருப்பு பகுதிக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 26 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

"சைவ சமயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் வள்ளலார்'

Posted: 27 Oct 2014 12:22 PM PDT

சைவ சமயத்தில் மறுமலர்ச்சியையும், சீர்திருத்தத்தையும் ஏற்படுத்தியவர் வள்ளலார் என்றார் வடலூர் சமரச சுத்த சன்மார்க்க நிலைய நிறுவனர் ஊரன் அடிகளார்.

குடந்தையில் தேசிய கேரம் போட்டி தொடக்கம்

Posted: 27 Oct 2014 12:22 PM PDT

கும்பகோணம் அருகே சோழன்மாளிகையில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான கேரம் போட்டி திங்கள்கிழமை தொடங்கின.

நேரு குடும்பம் குறித்து விமர்சனம்: ப.சிதம்பரத்துக்கு ஜி.கே.வாசன் எதிர்ப்பு

Posted: 27 Oct 2014 12:22 PM PDT

நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை ஏற்கும் காலம் வரும் என்ற ப.சிதம்பரத்தின் கருத்துக்கு 

அக்டோபர் 28 மின் தடை

Posted: 27 Oct 2014 12:22 PM PDT

தஞ்சாவூர் நகரப்பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக். 28) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேயரைக் கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு

Posted: 27 Oct 2014 12:21 PM PDT

தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டத்தில் ஜெயலலிதாவை மக்கள் முதல்வர் என்று மேயர் பேசியதைக் கண்டித்து, திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தஞ்சையில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வலியுறுத்தல்

Posted: 27 Oct 2014 12:21 PM PDT

தஞ்சாவூர் மாநகரில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்தனர்.

ரூ. 16.61 லட்சம் நலத் திட்ட உதவிகள்

Posted: 27 Oct 2014 12:21 PM PDT

தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 2,920 பயனாளிகளுக்கு ரூ. 16.61 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள்

மழை சேதம்: கீழையூர் ஊராட்சியில் அமைச்சர் ஆய்வு

Posted: 27 Oct 2014 12:20 PM PDT

நாகை மாவட்டம், கீழையூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மழை நீர் தேங்கிய பகுதிகளை மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேதாரண்யத்தில்குளத்தில் தவறி விழுந்த மீனவர் சாவு

Posted: 27 Oct 2014 12:20 PM PDT

வேதாரண்யத்தில் குளத்தில் தவறி விழுந்த மீனவர் தண்ணீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். ஆறுகாட்டுத்துறை சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த குசலவன் மகன் பழனிநாதன் (35). மீனவர். இவர், தோப்புத்துறை, பனையங்காடு பகுதியில் உள்ள குளத்தில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச்

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு: விசாரணை ஜனவரி 12-க்கு ஒத்திவைப்பு

Posted: 27 Oct 2014 12:20 PM PDT

பணி நீக்கம் செய்யப்பட்ட சுமார் 13,500 மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்று

அக்டோபர் 28 மின் தடை

Posted: 27 Oct 2014 12:19 PM PDT

மன்னார்குடியை அடுத்துள்ள திருமக்கோட்டை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 28) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும்

சீர்காழி அடகுக் கடைகளில் காவல் அதிகாரி ஆய்வு

Posted: 27 Oct 2014 12:19 PM PDT

சீர்காழியில் உள்ள நகை மற்றும் அடகுக் கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

ரூ. 2.68 லட்சத்தில் நலத் திட்ட உதவி

Posted: 27 Oct 2014 12:19 PM PDT

 நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில், 22 பயனாளிகளுக்கு ரூ. 2.68 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு: பொன். ராதாகிருஷ்ணன்

Posted: 27 Oct 2014 12:19 PM PDT

தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.

அக். 31-ல் விவசாயிகள்குறைதீர்க் கூட்டம்

Posted: 27 Oct 2014 12:19 PM PDT

நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க் கூட்டம், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் அக். 31-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி ஆய்வு

Posted: 27 Oct 2014 12:18 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ப. அண்ணாமலை ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்

Posted: 27 Oct 2014 12:18 PM PDT

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவம்பர் 2-இல் மீண்டும் சிறப்பு முகாம்

Posted: 27 Oct 2014 12:17 PM PDT

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவம்பர் 2-ஆம் தேதி மீண்டும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

நளினியின் மனுவைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

Posted: 27 Oct 2014 12:16 PM PDT

குற்றவியல் தண்டனைச் சட்டம் 435 (1) பிரிவை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில்

பிரவீண் சந்தித்த சர்ச்சைகளும், தேர்தல்களும்

Posted: 27 Oct 2014 12:14 PM PDT

தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியான பிரவீண்குமார், தேர்தலின்போது பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்தார். குறிப்பாக, நடந்து முடிந்த மக்களவைத்

50 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ்கோடியில் புதிய சாலை அமைக்கும் பணி தொடக்கம்

Posted: 27 Oct 2014 12:11 PM PDT

மத்திய அரசு 50 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ்கோடி பகுதியில் புதிய சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.   இதையடுத்து, திங்கள்கிழமை

முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி விழா: குருபூஜை இன்று தொடக்கம்

Posted: 27 Oct 2014 12:09 PM PDT

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிட மண்டப வளாகத்தில் தேவரின் 107ஆவது ஜயந்தி விழா, 52ஆவது குருபூஜை

மகப்பேறு உதவித் தொகை வழங்குவதில் குளறுபடி

Posted: 27 Oct 2014 12:07 PM PDT

தேனி அருகே பூமலைக்குண்டு கிராமத்தில் அரசு திட்டத்தின் கீழ் மகப்பேறு உதவித் தொகை வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியிடம் மனு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™