Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


காற்றாலை மோசடி வழக்கு: சரிதா நாயருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது

Posted: 11 Oct 2014 11:28 PM PDT

கேரள மாநிலம் ஆலப்புழை செங்கனூரைச் சேர்ந்தவர் சரிதாநயார். அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் நாயர். இவர்கள் கோவை வடவள்ளியை தலைமையிடமாகக் கொண்டு சர்வதேச ஆலோசனை மற்றும் மேலாண்மை சேவை என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தனர்.

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1 சி செயற்கைகோளை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் நாளை தொடங்குகிறது

Posted: 11 Oct 2014 11:06 PM PDT

புவி இருப்பிட அமைப்பை அறிந்து கொள்வதற்காக 'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1 சி' செயற்கைகோளை விண்ணில் ஏவுவதற்கான 67 மணி நேர 'கவுண்ட் டவுன்' நாளை காலை 6.32 மணிக்கு தொடங்கும் என இந்திய விண்வெளி ஆய்வு மையமான 'இஸ்ரோ' அறிவித்துள்ளது. இந்திய கடற்பகுதிகளை கண்காணிக்கும் வகையிலும், இந்திய கப்பல் படைக்கு உதவிடும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1 சி செயற்கைகோள் முன்னதாக வரும் 13-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது.

கேரளாவில் 3 பள்ளி சிறுவர்கள் குட்டையில் மூழ்கி பலி

Posted: 11 Oct 2014 10:44 PM PDT

கேரள மாநிலம் வடகறை ஓஞ்சியம் பகுதியை சேர்ந்தவர் அஷரப். இவரது மகன் சகல் (வயது10). 5–ம் வகுப்பு மாணவன். நாவத் என்ற இடத்தை சேர்ந்தவர் முஸ்தபா இவரது மகன் அஜ்மல் (8) 4–ம் வகுப்பு மாணவன். அதே பகுதியை சேர்ந்த முகமது ரபீக்கின் மகன் முகமது ரிஸ்வான் (11) 6–ம் வகுப்பு மாணவன்.

புரட்டாசி கடைசி சனிக்கிழமை: திருப்பதியில் 1 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

Posted: 11 Oct 2014 10:35 PM PDT

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான நேற்று திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இன்று விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தில் இருந்து சென்ற பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். பக்தர்கள் அதிகரிப்பை தொடர்ந்து நடைபயண பக்தர்களுக்கான நேரடி தரிசன டோக்கன் வழங்குவது நேற்று நிறுத்தப்பட்டது. அதே போல் 300 ரூபாய் சிறப்பு கட்டண டிக்கெட் கவுன்டரும் மூடப்பட்டது.

தேசிய மகளிர் ஆணையத்துக்கு கைது செய்யும் அதிகாரம் அளிக்க மத்திய அரசு மறுப்பு

Posted: 11 Oct 2014 10:35 PM PDT

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரையும், மேற்படி புகார்களின் பேரில் விசாரணைக்கு ஆஜராகாமல் வேண்டுமென்றே இழுத்தடிப்பவர்களையும் கைது செய்யும் அதிகாரத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் ஆணையம் கோரிக்கை விடுத்திருந்தது. மகளிருக்கு எதிரான குற்றங்கள், அவர்களின் பாதுகாப்புக்கு தேவையான வழிமுறைகள் ஆகியவற்றை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் இந்த ஆணையத்துக்கு சர்வதேச நாடுகளில்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: தாக்குதலில் ஒருவர் காயம்

Posted: 11 Oct 2014 10:12 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தந்தை மீறி தாக்குதல் நடத்துவதை அந்நாடு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்தியா எச்சரித்துள்ள நிலையில் மீண்டும் வாலாட்டியுள்ளது பாகிஸ்தான்.

விசாகப்பட்டினத்தை நெருங்கும் ஹுட் ஹுட் புயல்: 125 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது

Posted: 11 Oct 2014 09:44 PM PDT

வங்க கடலில் அந்தமான் அருகே மையம் கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியது. ஹுட் ஹுட் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் தற்போது விசாப்பட்டினத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. விசாகப்பட்டினத்திலிருந்து 45 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள புயலால் கடற்கரையோர பகுதிகளில் மணிக்கு 125 கி.மீ வேகத்தில் காற்று வீசிக்கொண்டிருக்கிறது.

நோபல் பரிசு வென்ற கைலாஷ் சத்யார்த்தி பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றார்

Posted: 11 Oct 2014 09:17 PM PDT

சுவீடன் நாட்டைச் சேர்ந்த வேதியியல் ஆராய்ச்சியாளரும் தொழிலதிபருமான ஆல்ஃபிரட் நோபெல் என்பரின் நினைவாக உருவாக்கப்பட்ட அறக்கட்டளையால் 1901-ம் ஆண்டு முதல் அமைதி, மருத்துவம், இயற்பியல், வேதியல், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது. ஆல்ஃபிரட் நோபல் எழுதி வைத்த உயிலின்படி, நாடுகளினிடையே சகோதரத்துவத்தை வளர்க்க சிறந்த முயற்சி எடுப்பவர்களுக்கும், இராணுவ தாக்குதல்களை நிறுத்தவோ அல்லது குறைக்கவோ

பெங்களூரில் ஜெயலலிதா இருக்கும் சிறை முன்பு பாதுகாப்பு தளர்த்தப்பட்டது

Posted: 11 Oct 2014 05:08 PM PDT

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த 15 நாட்களாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவை பார்க்க தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், நடிகர்-நடிகைகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

அரியானா முன்னாள் முதல்-மந்திரி ஓம் பிரகாஷ் சவுதாலா திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்

Posted: 11 Oct 2014 04:59 PM PDT

ஆசிரியர் தேர்வு ஊழல் வழக்கில் சிக்கிய அரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரி ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை கிடைத்தது. 75 வயதாகும் அவர், தனது உடல்நிலையை குறிப்பிட்டு ஜாமீன் பெற்றார். ஆனால் அரியானா மாநில சட்டசபைக்கான தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட சவுதாலா தீவிர சுற்றுப்பயணம் செய்தார்.

பெண் குழந்தைகளை பாதுகாப்போம்: பிரதமர் மோடி வேண்டுகோள்

Posted: 11 Oct 2014 03:21 PM PDT

பெண் குழந்தைகள் கருவிலேயே கொல்லப்படுவது மிகவும் வெட்கக்கேடானது, கவலை அளிக்கக்கூடியது என்றும், பாலின பாகுபாடுகளுக்கு முடிவு கட்டுவதோடு, பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டு உள்ளா

தேர்தல் விதிமுறை மீறல்: மத்திய மந்திரி நிதின் கட்காரியின் விளக்கத்தை நிராகரித்தது தேர்தல் கமிஷன்

Posted: 11 Oct 2014 02:40 PM PDT

மராட்டிய மாநிலத்தில் வருகிற 15-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 5-ந் தேதி லத்தூர் தொகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பாரதீய ஜனதா முன்னாள் தலைவரும், மத்திய மந்திரியுமான நிதின் கட்காரி கலந்து கொண்டு பேசினார்.

மோடி குஜராத்துக்கு மட்டும் தான் பிரதமர்: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

Posted: 11 Oct 2014 11:18 AM PDT

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மும்பையில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– நரேந்திர மோடி தற்போது குஜராத் முதல்–மந்திரி அல்ல. அவர் பிரதமராக உள்ளார். ஆனால் அவரால் இன்னமும் குஜராத்தை விட்டு வெளிவர முடியவில்லை. குஜராத்துக்கு மட்டும் தான் பிரதமர் என்ற மனநிலையில்

பா.ஜனதா மராட்டியத்தை உடைக்க துடிக்கிறது: அஜித்பவார் குற்றச்சாட்டு

Posted: 11 Oct 2014 10:42 AM PDT

முன்னாள் துணை முதல்–மந்திரி அஜித்பவார் கோலாப்பூரில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:– மராட்டியத்தை 2 ஆக உடைத்து விதர்பா தனி மாநிலத்தை உருவாக்க பா.ஜனதா விரும்புகிறது. இந்த பிரச்சினையில் பா.ஜனதா மாநில தலைவர்கள் எப்போதுமே உறுதியாக உள்ளனர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அதை மறுத்து உள்ளார். இதில் எது உண்மை, எது பொய் என்பதை

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்-இந்தியா ஆவேச பதிலடி

Posted: 11 Oct 2014 03:46 AM PDT

இந்திய வீரர்கள் தொடுத்த அதிரடி தாக்குதலால் ஜம்மு-காஷ்மீரில் உள்ள இந்திய எல்லைப் பகுதியில் கடந்த 24 மணி நேரமாக வாலை சுருட்டிக் கொண்டு அமைதியாக இருந்த பாகிஸ்தான் வீரர்கள் தற்போது மீண்டும் இந்திய நிலைகளின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 1–ந்தேதி முதல் 35-க்கும் மேற்பட்ட முறை அத்துமீறி வந்து இந்திய ராணுவ நிலைகள் மீதும், கிராமங்கள் மீதும் மோர்ட்டார் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், எல்லையோர

சுனந்தாவின் மரணம் தொடர்பாக போலீஸ் அறிக்கைக்காக காத்திருக்கிறேன்: சசி தரூர்

Posted: 11 Oct 2014 03:31 AM PDT

மத்திய முன்னாள் மந்திரி சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள ஒரு 5 நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக மறு பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த 3 டாக்டர்கள் கொண்ட குழு சுனந்தா புஷ்கரின் பிராதத்தை மறுபரிசோதனை செயதது. தற்போது அறிக்கை வெளியிட்டுள்ள டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனை, 'சுனந்தாவின் உடலின் பல உறுப்புகளில் விஷம்

சுத்தமான கேரளா திட்ட தொடக்க விழா: உம்மன்சாண்டியுடன் மம்முட்டி பங்கேற்பு

Posted: 11 Oct 2014 02:24 AM PDT

கேரளாவில் மது விலக்கை முழுமையாக அமல்படுத்த உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக மாநிலத்தில் உள்ள 300–க்கும் மேற்பட்ட மதுபான பார்கள் மூடப்பட்டன. அரசு மதுக்கடைகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் அடைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுத்தமான கேரளா, பாதுகாப்பான கேரளா என்ற திட்டமும் அறிவிக்கப்பட்டது. இதற்கான விளம்பர தூதராக பிரபல நடிகர் மம்முட்டி

ரெயில்வே மந்திரி சதானந்த கவுடாவின் தாயார் மரணம்

Posted: 11 Oct 2014 01:16 AM PDT

ரெயில்வே மந்திரி சதானந்த கவுடாவின் தாயார் கமலா மரணம் அடைந்தார். கர்நாடக மாநிலம் மங்களூர் மாவட்டத்தில் உள்ள தேவர்குண்டா பகுதியில் உள்ள தனது வீட்டில் கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த கமலா, தனது 92-வது வயதில் இன்று காலமானார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சதானந்த கவுடாவின் தங்கை சாவித்திரி சிவராம் கவுடா கடந்த

விசாகப்பட்டினம் அருகே ஹுட்ஹுட் புயல்: 4½ லட்சம் மக்கள் வெளியேற்றம்

Posted: 11 Oct 2014 12:26 AM PDT

வங்க கடலில் அந்தமான் அருகே மையம் கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி உள்ளது. இந்த புயலுக்கு 'ஹுட் ஹுட்' என பெயரிடப்பட்டு உள்ளது. நேற்று இந்த புயல் அதி தீவிர புயலாக மாறி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து 460 கிலோ மீட்டர் தொலைவில் மையம்

எம்.பி.க்கள் கிராமங்களை தத்தெடுக்கும் திட்டம்: மோடி தொடங்கி வைத்தார்

Posted: 11 Oct 2014 12:14 AM PDT

எம்.பி.க்களின் கிராம வளர்ச்சி திட்டமான ''சன்சாத் ஆதர்ஷ், சிராம் யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:– நாடு சுதந்திரம் பெற்ற பின் அமைக்கப்பட்ட ஒவ்வொரு அரசும் கிராமபுறமேம்பாட்டுக்கான திட்டங்களை செயல்படுத்தியது. இது தொடர்ந்து செயல்படுத்தப்படும். அதே நேரத்தில் காலத்துக்கு ஏற்ப மாற்றங்கள்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™